1 00:00:05,090 --> 00:00:07,092 பதிவுக்காக, உங்களுடைய பெயர்களைக் குறிப்பிடுங்கள். 2 00:00:08,050 --> 00:00:09,469 ஹாங்க் கில்லிஸ், சோதனை விமானி. 3 00:00:10,303 --> 00:00:12,556 ஆர்தர் கான்வே, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு டவர். 4 00:00:13,390 --> 00:00:16,601 இங்கு பயன்படுத்தப்பட்ட ஒருவகை ரசாயனப் பொருள் மோசமான உடல்நல பாதிப்புகளை 5 00:00:16,685 --> 00:00:19,229 ஏற்படுத்துகிறது என்பது உங்கள் நம்பிக்கை. 6 00:00:19,312 --> 00:00:21,273 ஆம். அதனால் தான் நாங்கள் இங்கிருக்கிறோம். 7 00:00:26,111 --> 00:00:27,737 அவர்கள் ரகசியத்தை வெளியிடுபவர்கள். 8 00:00:27,821 --> 00:00:30,824 ஸ்ட்ராடாவின் நடவடிக்கைகள் பற்றி அவர்கள் மக்களை எச்சரிக்க விரும்பினார்கள். 9 00:00:30,907 --> 00:00:33,159 நம்மைப் போலவா? 10 00:00:33,952 --> 00:00:36,705 அதனால் தான் ஸ்ட்ராடா அவர்களை கண்காணித்தது என்று நினைக்கிறேன். 11 00:00:36,788 --> 00:00:39,040 அதனால் தான் ஹாங்கின் விமானத்தை சேதப்படுத்தியிருக்க வேண்டும். 12 00:00:39,124 --> 00:00:41,877 இரு, சாமுடைய அப்பாவை அவர்கள் தான் கொன்றதாக நினைக்கிறீர்களா? 13 00:00:44,212 --> 00:00:47,799 இங்கே வெப்பமாக இருக்கிறது. எனக்கு வியர்க்கிறது. உங்களுக்கு? 14 00:00:48,383 --> 00:00:49,801 நம்மால் இதை நிரூபிக்க முடியாது. 15 00:00:49,885 --> 00:00:52,137 ஆமாம், ஏனென்றால் இது சூழ்நிலைகளை பொறுத்தது. 16 00:00:52,220 --> 00:00:55,056 நல்ல வார்த்தை. உங்களுக்கு நட்சத்திரங்கள் தெரிகின்றனவா? எனக்கு தெரிகின்றன. 17 00:00:56,266 --> 00:00:59,185 ஆனால் கேட்மியம் பற்றி ஸ்ட்ராடாவிற்கு தெரிந்திருந்தது என நிரூபிக்க முடியும். 18 00:01:01,021 --> 00:01:04,398 ஆக அது ஆபத்தானது என்று தெரிந்ததால், அதை அவர்கள் மூடி மறைக்கப் பார்த்தார்கள். 19 00:01:04,481 --> 00:01:07,819 இப்போது என்னுடைய தாத்தா போன்ற, அவர்களுடைய ஊழியர்கள், 20 00:01:07,903 --> 00:01:09,988 அவர்களால் உடல்நலம் குன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். 21 00:01:11,239 --> 00:01:12,449 அது தான் நம் கதை. 22 00:01:13,241 --> 00:01:16,411 நீ சொல்வது சரிதான். இதை நாம் வெளி உலகத்திற்கு கொண்டு வருவோம். 23 00:01:16,494 --> 00:01:18,413 நடக்கப் போவது அவர்களுக்கு கண்டிப்பாக தெரியாது. 24 00:01:22,000 --> 00:01:24,753 த மேஜிக் ஹவர் கிரானிக்கல் ஈரி ஹார்பரின் நம்பகமான செய்தித்தாள் 25 00:01:28,006 --> 00:01:30,759 பிரத்தியேகமாக: ஸ்ட்ராடா டெக் இண்டஸ்ட்ரீஸ் தங்களது ஆலை ஊழியர்களின் உயிருக்கு 26 00:01:30,842 --> 00:01:33,303 ஆபத்து ஏற்படுத்துவதை காட்டும் காணொலி 27 00:01:41,228 --> 00:01:42,229 ஆலை ஐந்து 28 00:01:48,652 --> 00:01:51,821 இன்னும் முடியவில்லை வேறு யார்? 29 00:01:58,078 --> 00:02:00,705 -ஹேய். வந்ததற்கு நன்றி. -ஹேய். 30 00:02:00,789 --> 00:02:02,540 உனக்கும் அந்த மின்னஞ்சல் வந்தது தெரியும், அன்பே. 31 00:02:02,624 --> 00:02:04,876 ஆமாம். அந்த காணொளி பயங்கரமாக இருந்தது. 32 00:02:04,960 --> 00:02:07,003 ஆமாம். அது அவர்களுக்கு நேரடியான தண்டனையை... 33 00:02:07,087 --> 00:02:08,879 -அப்பா. -சரி. 34 00:02:09,713 --> 00:02:12,050 -நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா? -உட்காருங்கள். 35 00:02:12,133 --> 00:02:14,803 அதை வைத்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் என நினைக்கிறீர்களா? 36 00:02:14,886 --> 00:02:16,137 ஆமாம், அப்படித்தான் நினைக்கிறோம். 37 00:02:16,221 --> 00:02:19,015 அதாவது, சில்லோடு மீன்பிடிக்கச் சென்ற நண்பர்கள், எல்லோரும்... 38 00:02:19,099 --> 00:02:20,267 இறந்து விட்டார்கள். 39 00:02:20,350 --> 00:02:22,394 -இறந்தவர்கள் சாட்சி சொல்ல முடியாது. -ஆமாம். 40 00:02:22,477 --> 00:02:25,939 ஆலையில் சில்லோடு வேலை பார்த்த ஒருவரையாவது கண்டுபிடிக்க மாட் முயற்சிக்கிறார். 41 00:02:26,022 --> 00:02:27,357 போதிய அளவு மக்கள் ஆதரவு தந்தால், 42 00:02:27,440 --> 00:02:29,651 நாம் ஸ்ட்ராடாவை எதிர்த்து வழக்கு பதிவு செய்யலாம். 43 00:02:29,734 --> 00:02:33,363 தனிப்பட்ட வகையில், உங்களுடைய அல்லது என்னுடைய குடும்பத்தை அவர்கள் தாக்கலாம்... 44 00:02:33,446 --> 00:02:35,490 ஆனால் இந்த முழு சமுதாயமும் அவர்களை எதிர்த்து நின்றால்... 45 00:02:35,574 --> 00:02:37,117 அவர்கள் வீழ்ந்துவிடுவார்கள். 46 00:02:37,200 --> 00:02:40,120 ஆமாம், டெர்ரி வீவர் சில வருடங்களுக்கு முன்பு மாநிலத்தை விட்டு வெளியேறினான். 47 00:02:40,203 --> 00:02:41,955 அவனுடைய புது முகவரியை என்னால் பெற முடியும். 48 00:02:44,124 --> 00:02:46,585 அப்பா, உங்களை எதிர்த்த போது ஸ்ட்ராடா ஒரு மிகப் பெரிய எதிரியை, 49 00:02:46,668 --> 00:02:47,669 சம்பாதித்து விட்டனர், இல்லையா? 50 00:02:48,211 --> 00:02:51,256 அவர்களைப் போலவே, நமது குடும்பமும் இங்கே நெடுங்காலமாக இருக்கிறது. 51 00:02:51,339 --> 00:02:52,340 ஆமாம். 52 00:02:52,924 --> 00:02:56,094 பார், நானும் ஃப்ராங்கும் கூட, இதைப் பற்றி, காவல் நிலையத்தில் விசாரிக்கிறோம். 53 00:02:56,177 --> 00:02:59,639 -எனக்கு தெரிந்தால், உனக்கு சொல்கிறேன். -நன்றி, ஷெரிஃப். 54 00:02:59,723 --> 00:03:00,724 நான் பார்த்துக்கொள்கிறேன், அன்பே. 55 00:03:02,475 --> 00:03:05,478 நான் இந்த அழைப்பை ஏற்க வேண்டும். எனவே வெளியே போகிறேன். 56 00:03:10,358 --> 00:03:11,735 ஸ்ட்ராடா டெக் இண்டஸ்ட்ரீஸ் தங்களது ஆலை ஊழியர்களின் உயிருக்கு 57 00:03:11,818 --> 00:03:12,903 ஆபத்து ஏற்படுத்துவதை காட்டும் காணொலி 58 00:03:29,085 --> 00:03:30,086 ஹேய், அப்பா? 59 00:03:31,504 --> 00:03:34,591 உங்களுக்கு ஒரு ஆச்சரியம் இருக்கிறது. 60 00:03:36,176 --> 00:03:39,262 ஆமாம், இது முட்டாள்தனமானது, ஆனால் உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன். 61 00:03:39,346 --> 00:03:40,388 முதல் நண்பன் 62 00:03:44,893 --> 00:03:45,894 ஹேய், அப்பா? 63 00:04:15,215 --> 00:04:16,423 சரி. 64 00:04:19,302 --> 00:04:21,304 சரி. 65 00:04:27,352 --> 00:04:31,565 சரி. பரவாயில்லை. 66 00:04:34,150 --> 00:04:35,777 நான் இங்கே தான் இருக்கிறேன். 67 00:04:37,737 --> 00:04:39,781 த லிஸ்கோ குடும்பம் 68 00:04:45,078 --> 00:04:47,539 ஆம்புலன்ஸ் 69 00:04:53,461 --> 00:04:54,462 அப்பா. 70 00:04:55,213 --> 00:04:57,632 ஹேய், ஹில்டி. இங்கே வா. என்னைப் பார். 71 00:04:58,800 --> 00:05:00,343 சரி, என்னைப் பார். 72 00:05:00,427 --> 00:05:01,720 -சரி, தாத்தா... -சரி. 73 00:05:02,304 --> 00:05:04,014 வந்து, அவர் இறந்துவிட்டார். 74 00:05:04,097 --> 00:05:06,933 -ஆமாம். அவர் இறந்துவிட்டார். -இல்லை, இல்லை. 75 00:05:07,017 --> 00:05:09,936 -இல்லை, இல்லை! -சரியா? ஹில்டி. 76 00:05:10,020 --> 00:05:11,438 என்னைப் பார். என்ன தெரியுமா? 77 00:05:11,521 --> 00:05:16,109 அவர் ஆழ்ந்து தூங்கினார், பிறகு, அமைதியாக இறந்துவிட்டார், புரிகிறதா? 78 00:05:17,694 --> 00:05:20,530 சரி, அவர் போய்விட்டார். இறந்துவிட்டார். 79 00:05:20,614 --> 00:05:24,576 பரவாயில்லை. சரி, புரிகிறது. பரவாயில்லை. 80 00:05:28,580 --> 00:05:30,373 பரவாயில்லை. 81 00:05:31,124 --> 00:05:32,334 பரவாயில்லை. 82 00:05:35,587 --> 00:05:37,756 தெரியும், எனக்குப் புரிகிறது. 83 00:05:57,776 --> 00:05:58,777 ஹாய். 84 00:06:00,487 --> 00:06:01,821 அவ்வளவு தானா? 85 00:06:02,822 --> 00:06:06,368 அவர்... இறந்துவிட்டாரா? 86 00:06:08,286 --> 00:06:09,412 வா, போகலாம். 87 00:06:14,042 --> 00:06:16,419 ஹேய். இங்கே வா. 88 00:06:20,173 --> 00:06:23,301 சரி. அவர்... 89 00:06:24,844 --> 00:06:27,013 அவர் மகிழ்ச்சியாக இருந்தார். 90 00:06:27,597 --> 00:06:28,598 மேலும்... 91 00:06:32,018 --> 00:06:33,019 வருந்துகிறேன். 92 00:06:33,645 --> 00:06:35,855 அவர் உன்னை நேசித்தார். உங்கள் இருவரையும் நேசித்தார். 93 00:06:35,939 --> 00:06:38,191 செல்லங்களாகிய உங்களை மிகவும் நேசித்தார். 94 00:06:39,442 --> 00:06:40,443 உனக்கே தெரியும். 95 00:06:41,945 --> 00:06:43,780 உங்களை நேசிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 96 00:06:45,865 --> 00:06:49,995 அவருக்கு இனி மேல் வலிக்காது. அது தான் அவருக்கு சிறந்தது. 97 00:06:52,706 --> 00:06:55,500 ஆனால் அவருக்கு பிரியாவிடை சொல்ல கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 98 00:06:56,084 --> 00:06:57,752 எனக்குத் தெரியும், செல்லமே. 99 00:06:58,920 --> 00:07:02,674 பரவாயில்லை. அவர் தனியாக இல்லை. சொர்க்கத்தில் வால்டரோடு இருக்கிறார். 100 00:07:02,757 --> 00:07:04,676 ஞாபகம் இருக்கிறதா, ஹில்டி? 101 00:07:07,554 --> 00:07:08,555 புரிகிறது. 102 00:07:09,764 --> 00:07:11,182 ஆமாம். 103 00:08:39,020 --> 00:08:41,565 பிரத்தியேகமாக: ஸ்ட்ராடா டெக் இண்டஸ்ட்ரீஸ் தங்களது ஆலை ஊழியர்களின் உயிருக்கு 104 00:08:41,648 --> 00:08:42,941 ஆபத்து ஏற்படுத்துவதை காட்டும் காணொலி 105 00:08:43,733 --> 00:08:45,151 மன்னித்துவிடுங்கள், தாத்தா. 106 00:08:46,403 --> 00:08:47,404 ரொம்ப தாமதமாகிவிட்டது. 107 00:08:52,826 --> 00:08:53,827 சரி, நானே திறக்கிறேன். 108 00:08:56,997 --> 00:08:58,206 -ஹேய். -நீங்கள் தானே 109 00:08:58,290 --> 00:09:00,250 மாத்யூ லிஸ்கோ மற்றும் ப்ரிஜெட் ஜென்ஸன்? 110 00:09:00,333 --> 00:09:02,794 -ஹாய். -நான் ஹில்டி லிஸ்கோவை தேடி வந்துள்ளேன். 111 00:09:04,087 --> 00:09:05,297 எதற்காக என தெரிந்து கொள்ளலாமா? 112 00:09:05,380 --> 00:09:07,966 -நீதிமன்ற சம்மன் வந்திருக்கு. -ஐயோ, கடவுளே. 113 00:09:08,049 --> 00:09:12,053 அவளுக்கு நீதிமன்ற சம்மன் வந்திருக்கிறதா? என்ன சொல்கிறீர்கள்? அவள் ஒரு குழந்தை. 114 00:09:12,762 --> 00:09:13,930 கொடு, நான் பார்க்கிறேன். 115 00:09:14,806 --> 00:09:18,602 "மிஸ் ஹில்டி லிஸ்கோவின் கட்டுரையை வெளியிடுவதற்கும் படிப்பதற்கும் 116 00:09:18,685 --> 00:09:23,773 இடைக்கால தடையை ஸ்ட்ராடா டெக் இண்டஸ்ட்ரீஸ் அவசரமாக பெறுகிறது" என்ன இது... 117 00:09:23,857 --> 00:09:25,191 என்ன நடக்கிறது? 118 00:09:27,360 --> 00:09:31,948 மன்னித்துவிடு, செல்லமே. நீ கட்டுரை வெளியிடுவதை நீதிமன்றம் தடை செய்துள்ளது. 119 00:09:32,532 --> 00:09:34,534 -என்ன? -ஆமாம், அது ஒரு தடை உத்தரவு. 120 00:09:35,118 --> 00:09:38,580 அந்த தகவல் சொல்லும் காணொளியை வேறு யாரும் பார்ப்பதை ஸ்ட்ராடா விரும்பவில்லை. 121 00:09:38,663 --> 00:09:40,206 ஆனால் கவலைப்படாதே, சரியா? 122 00:09:40,290 --> 00:09:42,542 அவர்களுடைய வழக்கறிஞர்களை நான் சந்திக்கும் வரை தான். 123 00:09:42,626 --> 00:09:45,754 -நாம் இதை சரி செய்வோம். -ஆக, இனி ஸ்ட்ராடாவை பற்றி எழுதக் கூடாதா? 124 00:09:45,837 --> 00:09:48,882 இப்போதைக்கு, எதைப்பற்றியும் எந்த கட்டுரையும் எழுத வேண்டாம். 125 00:09:49,507 --> 00:09:51,426 சரி, அவர்களால் அப்படி செய்ய முடியுமா? 126 00:09:54,971 --> 00:09:57,182 -எனக்குப் புரிகிறது, அன்பே. -செல்லம்... 127 00:10:01,645 --> 00:10:02,771 ஹேய். 128 00:10:03,813 --> 00:10:04,814 நான் பார்த்துக்கொள்கிறேன். 129 00:10:04,898 --> 00:10:05,899 ஹில்டி. 130 00:10:24,209 --> 00:10:28,547 ஏதாவது பிரச்சனையா? நீ இப்போதே இப்படி சந்திக்க விரும்ப மாட்டாய், ஏனென்றால்... 131 00:10:28,630 --> 00:10:32,092 உன்னுடைய தாத்தா இப்போது தான் இறந்து போயிருக்கிறார். 132 00:10:32,717 --> 00:10:35,095 அதைப்பற்றி பேச வேண்டாம். நாம் வேலை மட்டும் செய்யலாமா? 133 00:10:44,854 --> 00:10:47,774 அத்துமீறி நுழையக்கூடாது 134 00:10:48,275 --> 00:10:49,276 வேண்டாம். 135 00:10:58,702 --> 00:11:00,912 அடக் கடவுளே. அங்கே பார். 136 00:11:08,420 --> 00:11:11,423 ஸ்ட்ராடா தான் செய்திருப்பார்கள். எல்லாவற்றையும் நாசமாக்கி விட்டார்கள். 137 00:11:12,716 --> 00:11:14,217 அவர்கள் தான் என உறுதியாகத் தெரியுமா? 138 00:11:14,301 --> 00:11:17,596 ஆமாம். நாம் எப்போதும் கதவை பூட்ட மாட்டோம். நம்மால் அதை நிரூபிக்க முடியாது. 139 00:11:17,679 --> 00:11:21,057 டானி, உன்னுடைய கைபேசியில் நீ இதை படம் எடுக்க வேண்டும். 140 00:11:21,641 --> 00:11:24,477 நமது வாடிக்கையாளர்களுக்கு நாம் மின்னஞ்சல் அனுப்பப் போகிறோம். 141 00:11:30,066 --> 00:11:31,610 த மேஜிக் ஹவர் கிரானிக்கல் 142 00:11:33,320 --> 00:11:35,322 பிழை குறியீடு 451 சட்ட காரணங்களினால் அனுமதியில்லை 143 00:11:35,405 --> 00:11:36,948 என்னது இது? என்ன நடக்கிறது? 144 00:11:38,867 --> 00:11:40,493 வை-ஃபை வேலை செய்யவில்லையோ என்னவோ. 145 00:11:40,577 --> 00:11:43,747 இல்லை, அது வை-ஃபை பிரச்சனை இல்லை. நமது இணையதளத்தை முடக்கியிருக்கிறார்கள். 146 00:11:43,830 --> 00:11:46,374 -சட்ட காரணங்களுக்காக. -அவை எல்லாம் போய்விட்டன. 147 00:11:47,584 --> 00:11:49,628 நாம் முயற்சி செய்த அனைத்தும் போய்விட்டன. 148 00:12:03,558 --> 00:12:05,060 நண்பர்களே, வருத்தப்படாதீர்கள். 149 00:12:07,771 --> 00:12:12,192 என்னால் எல்லாவற்றையும் சரிசெய்ய முடியாது. ஆனால் இதை சரிசெய்ய முடியும். 150 00:12:12,275 --> 00:12:15,028 ஆமாம், இந்த இடத்தை சுத்தம் செய்ய நான் பல நாட்களாக காத்திருந்தேன். 151 00:12:15,111 --> 00:12:16,446 நான் போய் குப்பை தொட்டிகள் கொண்டு வருகிறேன். 152 00:12:16,529 --> 00:12:18,782 -அவை என்னுடைய... -வேலைக்கான பையில் இருக்கின்றன. தெரியும். 153 00:12:21,326 --> 00:12:22,744 என்னைப்பற்றி புரிந்து வைத்திருக்கிறாய். 154 00:12:43,014 --> 00:12:46,726 ஹேய், மாட். இதை நீ இப்போதே செய்ய வேண்டியதில்லை. 155 00:12:48,353 --> 00:12:52,816 ப்ரிஜ், அவர் தன்னுடைய முழு வாழ்க்கையையும் இந்த நகரத்தில் தான் வாழ்ந்தார். 156 00:12:54,734 --> 00:12:56,861 இந்த வீட்டில் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தார். 157 00:12:59,406 --> 00:13:02,701 நாற்பது ஆண்டுகள். நம்ப முடிகிறதா? 158 00:13:03,660 --> 00:13:06,538 -ஆமாம். -முதன்முதலாக உடம்பு சரியில்லாமல் போன போது, 159 00:13:06,621 --> 00:13:09,666 நம்மோடு வந்து நியூயார்க்கில் தங்க அவரை சம்மதிக்க வைக்க முயற்சித்தது ஞாபகமிருக்கா? 160 00:13:11,001 --> 00:13:14,421 அதற்கு அவர் முற்றிலுமாக மறுத்து விட்டார். 161 00:13:15,755 --> 00:13:17,465 ஆமாம், அவர் அதை நினைத்து பார்க்கக்கூட விரும்பவில்லை. 162 00:13:17,549 --> 00:13:21,970 அவர் இந்த ஊரை மிகவும் நேசித்தார். 163 00:13:25,056 --> 00:13:28,435 இந்த ஊர் தான் அவருக்கு விஷத்தை கொடுத்தது, ப்ரிஜ். 164 00:13:28,518 --> 00:13:30,729 ஓ, அன்பே. 165 00:13:32,606 --> 00:13:36,735 இந்த ஊர், என் சிறு வயதில் என் அப்பாவை என்னிடமிருந்து பிரித்தது 166 00:13:36,818 --> 00:13:40,363 மற்றும் இப்போது இந்த ஊர் மீண்டும் அவரை என்னிடம் இருந்து பிரித்துவிட்டது, 167 00:13:40,447 --> 00:13:43,074 அதாவது, அவரது 69 வயதில். இது எப்படி நியாயம் ஆகும்? 168 00:13:44,284 --> 00:13:45,285 அது நியாயம் இல்லை. 169 00:13:45,368 --> 00:13:47,454 அந்த தெளிப்பானில் இருந்த விஷம் தான் காரணம். 170 00:13:47,537 --> 00:13:50,540 அதனால் தான் ஒரு நிமிடம் குழப்பத்தோடும் அடுத்த நிமிடமே தெளிவாகவும் அவர் இருந்தார். 171 00:13:50,624 --> 00:13:52,542 கடவுளே. அவர் இப்போது இங்கே உயிரோடு இருந்திருக்க வேண்டும். 172 00:13:52,626 --> 00:13:54,628 ஆமாம். அவர் இங்கே இருந்திருக்க வேண்டும். 173 00:13:54,711 --> 00:13:57,130 இந்த நகரத்து மக்கள் ஸ்ட்ராடா என்ன செய்கிறது என்பதைப் பற்றி, 174 00:13:57,214 --> 00:14:01,176 சிறிது கவனத்தோடு இருந்திருந்தால் அவர் இன்னும் உயிரோடு இருந்திருப்பார். 175 00:14:01,259 --> 00:14:03,094 -அவர் உயிரோடு இருந்திருப்பார். -அன்பே. 176 00:14:03,178 --> 00:14:06,264 -பரவாயில்லை, அப்பா. -இல்லை, இது சரியில்லை! 177 00:14:06,348 --> 00:14:08,141 கண்டிப்பாக சரியில்லை. 178 00:14:08,225 --> 00:14:10,393 அவர்களிடமிருந்து, நான் உங்களை பாதுகாத்திருக்க வேண்டும். 179 00:14:10,477 --> 00:14:13,230 இல்லையா? ஆமாம். நான் அவரையும் பாதுகாத்திருக்க வேண்டும்! 180 00:14:20,111 --> 00:14:21,488 விடு. 181 00:14:22,113 --> 00:14:26,034 மன்னித்துவிடு, அன்பே. என்னை மன்னித்துவிடு, சரியா? 182 00:14:26,117 --> 00:14:28,203 நிறைய விஷயங்கள் நடக்கின்றன. 183 00:14:33,124 --> 00:14:36,169 என் வாழ்க்கையின் மிக முக்கியமான கதையை 184 00:14:36,253 --> 00:14:38,505 நான் எழுதிவிட்டதாக நினைத்தேன், 185 00:14:38,588 --> 00:14:40,215 ஆனால், இது அதைவிடப் பெரியது. 186 00:14:42,050 --> 00:14:44,928 என்னுடைய அப்பாவினால் தான் நான் ஒரு நிருபர் ஆனேன். 187 00:14:45,011 --> 00:14:48,598 ஏனென்றால் கதையின் சக்தியைப்பற்றி அவர் எனக்கு கற்றுத் தந்தார். 188 00:14:58,024 --> 00:15:03,071 நாம் கருத்துக்களை பரிமாறினால், நம்மிடையே ஒரு நட்பை உருவாக்கும் என்று நம்புகிறேன். 189 00:15:03,655 --> 00:15:07,659 நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால், அவை இந்த உலகத்தையே மாற்றி அமைக்கலாம். 190 00:15:08,702 --> 00:15:12,831 இந்த கதைகள் உண்மையை பார்ப்பதற்கும், நாம் நினைவில் வைத்துக்கொள்வதற்கும் உதவுகின்றன. 191 00:15:13,957 --> 00:15:16,084 நாம் தனியாக இல்லை என்று இவை உணர வைக்கின்றன. 192 00:15:17,252 --> 00:15:21,423 தன்னுடைய கதை முக்கியமானதாக இல்லாதால், அது வெளியே வராமல் இருந்துவிட கூடும் என்று 193 00:15:21,506 --> 00:15:25,010 கவலைப்பட்ட ஒரு சிறந்த மனிதரை எனக்குத் தெரியும். 194 00:15:27,679 --> 00:15:30,098 ஆனால் அவரது கதை எனக்கு முக்கியமானதாக இருந்தது. 195 00:15:32,267 --> 00:15:35,020 சில்வெஸ்டர் லிஸ்கோ தான் என் தாத்தா. 196 00:15:35,103 --> 00:15:36,313 சில்-இன் சைக்கிள்கள் 197 00:15:36,396 --> 00:15:40,567 அவர் ஒரு நல்ல கணவராக, நல்ல தந்தையாக, ஒரு நல்ல நண்பராக இருந்தார், 198 00:15:40,650 --> 00:15:43,153 அவர் இந்த சமூகத்தைப்பற்றி அக்கறைக் கொண்டிருந்தார். 199 00:15:43,737 --> 00:15:47,240 அவர் ஒரு சாஃப்ட்பால் பயிற்சியாளர் என்பது, 200 00:15:47,324 --> 00:15:49,159 நமக்கு தெரியாத இன்னொரு விஷயம். 201 00:15:49,826 --> 00:15:52,454 அவர் செய்தவற்றை இந்த உண்மைகள் சொல்கின்றன. 202 00:15:54,706 --> 00:15:58,627 ஆனால் அவர் எப்படிப்பட்டவராக இருக்க விரும்பினார் என்பதை அது சொல்லாது. 203 00:16:07,010 --> 00:16:09,346 என் தாத்தா பிடிவாதமாக இருந்திருக்கலாம். 204 00:16:09,930 --> 00:16:15,060 அவரிடமிருந்து அக்குணம் எனக்கு வந்துள்ளது, ஆனால் தவறு செய்தால் ஒத்துக்கொள்வார். 205 00:16:16,019 --> 00:16:19,522 எப்போது கவனிப்பது, எப்படி வேலை செய்வது என்பதும் 206 00:16:19,606 --> 00:16:22,359 ஆபத்தில் எப்படி உதவ வேண்டும் என்றும் அவருக்கு தெரிந்திருந்தது. 207 00:16:23,818 --> 00:16:27,197 நாம் பிறந்ததாலேயே நமக்கு ஒரு குடும்பம் கிடைப்பதில்லை என புரிந்துகொள்ள உதவினார். 208 00:16:28,949 --> 00:16:30,951 நாம் தேர்ந்து எடுக்கும் நண்பர்கள்... 209 00:16:33,036 --> 00:16:35,330 முழு வாழ்க்கையை கழிக்க விரும்பும் மக்களாக இருக்கிறார்கள் என புரிய வைத்தார். 210 00:16:38,917 --> 00:16:40,669 ஒரே விஷயத்தை நம்புவதாலும் 211 00:16:40,752 --> 00:16:43,380 ஒரே போராட்டங்களை எதிர்கொள்ளுவதாலும், 212 00:16:44,381 --> 00:16:46,216 நாம் அந்த நண்பர்களை தேர்வு செய்கிறோம். 213 00:16:48,134 --> 00:16:50,220 என் தாத்தா என்னை தைரியமாக உணரச் செய்தார். 214 00:16:51,638 --> 00:16:54,683 தைரியமாக இருந்து சரியான விஷயங்களை செய்வதற்கு அவர் சொல்லி கொடுத்தார். 215 00:16:57,352 --> 00:17:01,565 என் தாத்தாவைப்பற்றி தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. 216 00:17:02,440 --> 00:17:06,652 நாங்கள் இறுதியாக வீட்டிற்கு வந்தபோது, அவர் எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டார். 217 00:17:12,409 --> 00:17:16,161 அவருக்கு ஞாபகங்கள் மறைய தொடங்கியதால் இப்படி நடந்து கொண்டாரோ என்னவோ, ஆனால்... 218 00:17:18,081 --> 00:17:21,626 நாங்கள் நீண்ட காலம் அவரை பிரிந்து இருந்ததை அவர் மன்னித்திருப்பார் என விரும்புகிறேன். 219 00:17:26,756 --> 00:17:31,261 ஆம், நாங்கள் இங்கே ஒன்றாக இருப்பது பற்றி என் அப்பா மகிழ்ச்சி அடைவார், 220 00:17:31,344 --> 00:17:33,096 அதற்காக உங்களுக்கு நன்றி சொல்கிறேன். 221 00:17:33,179 --> 00:17:38,101 எல்லாவற்றையும் விட, அவர் இதைத்தான் விரும்பி இருப்பார் என்று நம்புகிறேன். 222 00:17:38,184 --> 00:17:41,855 எனவே, அதற்காக மீண்டும் நன்றி சொல்கிறேன். 223 00:17:57,078 --> 00:17:59,122 உங்களுடைய வாழ்க்கை மிகவும் முக்கியமானது. 224 00:18:19,267 --> 00:18:21,478 தாங்கள் செய்த தவறுகளுக்காக ஸ்ட்ராடா தண்டனை பெறுவார்களா? 225 00:18:23,980 --> 00:18:29,611 எனக்கு... உண்மையாகவே தெரியவில்லை, செல்லமே. 226 00:18:30,362 --> 00:18:32,489 ஹேய், ஆனால் எனக்கு என்ன தெரியும் என்று தெரியுமா? 227 00:18:32,572 --> 00:18:35,784 நாம் இதற்காக போராடாமல் விடப்போவதில்லை, சரியா? 228 00:18:38,995 --> 00:18:41,373 என்னால் தாத்தாவை காப்பாற்ற முடியவில்லை, ஆனால்... 229 00:18:42,749 --> 00:18:46,211 அவருக்கும் ஸ்ட்ராடாவின் மற்ற பணியாளர்களுக்கும் என்ன நேர்ந்தது என்பதை 230 00:18:46,294 --> 00:18:47,963 இந்த உலகம் அறிய வேண்டும் என நினைத்தேன். 231 00:18:48,547 --> 00:18:50,715 அவருக்காக நான் இதை செய்ய விரும்புகிறேன். 232 00:18:52,759 --> 00:18:53,760 சரி. 233 00:18:55,428 --> 00:18:59,766 பார், உன்னுடைய கட்டுரை இருக்கிறது. அதாவது, இப்போது இல்லை என்றாலும்... 234 00:19:01,226 --> 00:19:04,104 நீ எழுதுவதை யாரும் நிறுத்தச் சொல்ல முடியாது, சரியா? 235 00:19:05,689 --> 00:19:07,232 ஆம், நாம் ஏதோ ஒரு வழி கண்டுபிடிப்போம். 236 00:19:08,233 --> 00:19:09,234 எப்படி? 237 00:19:09,317 --> 00:19:14,114 வந்து, எப்போதும் செய்வதைப் போல. அதாவது, குடும்பமாக இணைந்து செய்வோம். 238 00:19:18,451 --> 00:19:21,705 ஒவ்வொரு புது வருடத்திலும் அனுப்புவதற்காக நான் தாத்தாவிற்கு எழுதக் கூடிய 239 00:19:21,788 --> 00:19:23,206 அந்த குடும்ப செய்தி மடல்கள் நினைவிருக்கா? 240 00:19:23,915 --> 00:19:25,292 ஆமாம், கண்டிப்பாக நினைவிருக்கிறது. 241 00:19:25,375 --> 00:19:28,879 அதனை வடிவமைப்பதற்காக நீ நிறைய நேரம் யோசித்தாய். 242 00:19:28,962 --> 00:19:34,676 சரி, என் இணைய தளத்தை உபயோகிக்க முடியாது, அதனால் நான் ஒரு செய்தி மடல் தயாரிக்கலாமே? 243 00:19:34,759 --> 00:19:37,345 இந்த கதைக்காக, ஒரு பிரத்தியேக வெளியீடு செய்யலாம். 244 00:19:37,429 --> 00:19:41,308 நீதிமன்றம் 'த மேஜிக் ஹவர் கிரானிக்கல்' பற்றிய மட்டும் தான் உத்தரவு தந்துள்ளது, 245 00:19:41,391 --> 00:19:45,770 எனவே அந்தப் பெயரில் எழுதாத வரை, 246 00:19:45,854 --> 00:19:49,816 உன் கட்டுரையின் பதிப்புகள், அப்படியே, மெதுவாக பொது வெளியில் கிடைக்கச் செய்யலாம். 247 00:19:51,234 --> 00:19:53,987 என்ன? நான் உங்களுடைய உதவியாளர் தானே. 248 00:19:54,070 --> 00:19:55,155 எனக்கும் விஷயங்கள் தெரியும். 249 00:19:55,238 --> 00:19:58,700 உதவியாளர். நான் உனக்கு சம்பள உயர்வு தர வேண்டும். 250 00:19:59,451 --> 00:20:02,787 பெண்கள் பணியிடத்தில் தங்களையே குறைத்து மதிப்பிடுவதாக சொன்னீர்கள்... 251 00:20:03,538 --> 00:20:07,042 இல்லை. என்ன தெரியுமா? இது அருமை. அதாவது, இது தான் சரி. 252 00:20:07,751 --> 00:20:11,588 உண்மையாகவே. இதை செய்ய வேண்டும், சரியா? போய் உன் மடிக்கணினியை கொண்டு வா, ஹில்டி. 253 00:20:11,671 --> 00:20:14,507 இஸ்ஸி, நீ சென்று நமக்காக காகிதங்கள் மற்றும் பேனாக்கள் கொண்டு வருகிறாயா? 254 00:20:15,342 --> 00:20:18,011 ஜின்னி, உன் க்ரேயான்களை கொண்டு வருகிறாயா? சரி, ஏதாவது கொண்டு வருகிறாயா? 255 00:20:18,094 --> 00:20:20,513 நாம் பிரிண்டரை தயாராக வைப்போம். இந்த விஷயத்தை ஆரம்பிப்போம். 256 00:20:20,597 --> 00:20:22,474 வாருங்கள். முழுவதுமாக படியுங்கள். 257 00:20:22,557 --> 00:20:26,228 ஸ்ட்ராடாவால் ஈரி ஹார்பருக்கு ஆபத்து, உங்களுடைய குடும்பதிற்கு அபாயம் ஏற்படலாம். 258 00:20:26,311 --> 00:20:29,147 உங்களுக்கு பிடிக்கும் என்றால் 2ஆம் பக்கத்தில் ஜோதிட குறிப்புகள் இருக்கின்றன. 259 00:20:30,440 --> 00:20:32,651 என்ன? நான் மக்களின் கவனத்தை ஈர்க்கப் பார்க்கிறேன். 260 00:20:32,734 --> 00:20:33,735 -ஹேய், இஸ்ஸி. -ஹேய். 261 00:20:33,818 --> 00:20:35,028 நீ இதை படிக்க வேண்டும். 262 00:20:35,111 --> 00:20:37,072 மற்றவர்களையும் படிக்கச் சொல். 263 00:20:37,155 --> 00:20:39,491 சரி. இரு, இவற்றை நீ இப்படி தருவது சரிதானா? 264 00:20:39,574 --> 00:20:42,494 உங்கள் குடும்பத்திடம் இருப்பவற்றிற்காக ஸ்ட்ராடா உங்களுக்கு தொந்தரவு தருகிறார்களே? 265 00:20:42,577 --> 00:20:45,121 ஆமாம், சரிதான், ஆனால், நாங்கள் அதைப் பற்றி பேசினோம், 266 00:20:45,205 --> 00:20:47,082 எங்கள் தாத்தாவை இழந்தது பற்றி மட்டும்தான் 267 00:20:47,165 --> 00:20:48,458 நாங்கள் இப்போது யோசிக்கிறோம். 268 00:20:49,042 --> 00:20:52,170 அவர் இப்போது இறந்து விட்டதால், கண்டிப்பாக, அவர் இதைத்தான் விரும்பியிருப்பார். 269 00:20:52,254 --> 00:20:54,631 -அவரது கதை நிச்சயம் வெளியே சொல்லப்படணும். -இரு, என்ன சொல்கிறாய்? 270 00:20:54,714 --> 00:20:56,424 உன்னுடைய பெற்றோர்கள் உன்னோடு உட்கார்ந்து 271 00:20:56,508 --> 00:20:59,511 ஒரு கொடிய நிறுவனத்தோடு சண்டை போட வேண்டுமா இல்லையா என உன்னிடம் விவாதித்தார்களா? 272 00:21:00,011 --> 00:21:02,305 அதாவது, ஆமாம். 273 00:21:02,389 --> 00:21:04,641 அன்பே, என் பெற்றோர்களும் உன் பெற்றோர் போல இருந்தால் நன்றாக இருக்கும். 274 00:21:04,724 --> 00:21:07,644 இந்த உலகிற்கு எதாவது நன்மை செய்ய அவர்கள் நினைத்தால் நன்றாக இருக்கும். 275 00:21:07,727 --> 00:21:08,728 சரி, எனக்கு, 276 00:21:08,812 --> 00:21:12,649 தன்னுடைய பைத்தியக்காரத்தனமான முறையில், ஹில்டி கற்றுக் கொடுத்தது என்னவென்றால்... 277 00:21:14,150 --> 00:21:16,194 பெரியவர்கள் ஏதாவது செய்வார்கள் என நாம் காத்திருக்கக்கூடாது. 278 00:21:17,696 --> 00:21:20,156 அதை என்னிடம் முழுமையாக கொடு. நன்றி. 279 00:21:30,584 --> 00:21:34,713 இந்த இடைக்கால தடை உத்தரவு ஸ்ட்ராடாவை எதிர்ப்பவர்களை கண்டித்து, 280 00:21:34,796 --> 00:21:38,633 பயமுறுத்தி அமைதியாக வைப்பதற்கான ஒரு முயற்சி தான். 281 00:21:43,263 --> 00:21:44,514 ஆமாம். 282 00:21:46,099 --> 00:21:48,560 இந்த இடைக்கால தடை உத்தரவு ஸ்ட்ராடாவை எதிர்ப்பவர்களை 283 00:21:48,643 --> 00:21:52,814 க-கண்டித்து, பயமுறுத்தி அமைதியாக வைப்பதற்கான ஒரு முயற்சி தான். 284 00:21:52,898 --> 00:21:55,108 ஸ்ட்ராடா டெக் இண்டஸ்ட்ரீஸ் 285 00:22:14,628 --> 00:22:15,629 திருமதி. ஜென்ஸன். 286 00:22:16,546 --> 00:22:17,631 உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 287 00:22:20,175 --> 00:22:22,260 ஈரி ஹார்பர் பள்ளிக்கூடம் 288 00:22:29,059 --> 00:22:31,144 லிஸ்கோ குடும்பம் எழுதிய கட்டுரையை படித்தாயா? ரொம்ப மோசம். 289 00:22:31,228 --> 00:22:33,313 2 மணிக்கு இஸ்ஸி வெளிநடப்பு செய்கிறாள், அதில் நாம் கலந்து கொள்ளணும் 290 00:22:35,190 --> 00:22:37,025 உனக்கே தெரிந்தது தான்! அங்கே சந்திப்போம் 291 00:22:37,108 --> 00:22:38,401 எதிர்வினை என்றால் என்ன? 292 00:22:38,485 --> 00:22:41,363 ஒரு தூண்டுதலுக்கு பதிலாக ஏற்படக்கூடிய தன்னிச்சையான அசைவுகள் 293 00:22:41,446 --> 00:22:43,615 அல்லது நடவடிக்கைகள் என்பது தான் அர்த்தம். 294 00:22:43,698 --> 00:22:45,533 டேவிட் நாம் இன்று வெளிநடப்பு செய்ய வேண்டும் 295 00:22:45,617 --> 00:22:46,868 எனவே நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும் போது... 296 00:22:48,495 --> 00:22:52,040 2:00 மணிக்கு ஸ்ட்ராடா டெக் இண்டஸ்ட்ரீஸை எதிர்த்து வெளிநடப்பு! 297 00:22:54,417 --> 00:22:57,420 -2:00 மணிக்கு வெளிநடப்பிற்கு நாம் செல்வோம் -ஆமாம்! அங்கே உன்னை சந்திக்கிறேன்! 298 00:22:57,504 --> 00:22:59,172 ஹே! 2:00 மணிக்கு நீ வெளிநடப்பிற்கு செல்லப் போகிறாயா? 299 00:22:59,256 --> 00:23:00,549 கண்டிப்பாக!! நாம் ஒன்றாக செல்வோம் 300 00:23:00,632 --> 00:23:01,466 புது பருவத்தை வரவேற்கிறோம் 301 00:23:01,550 --> 00:23:04,135 -இன்று எதுவும் விசித்திரமாக நடக்காது. -இது உண்மையா? 302 00:23:04,719 --> 00:23:07,055 ஆமாம். ஸ்ட்ராடா தங்கள் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்து விளைவித்திருக்கிறார்கள். 303 00:23:07,138 --> 00:23:10,183 என் தாத்தா அதனால் தான் இறந்திருப்பார் என நாங்கள் நினைக்கிறோம். 304 00:23:10,267 --> 00:23:11,810 அது மிகவும் மோசமான விஷயம். 305 00:23:12,686 --> 00:23:14,729 நீதான் அந்த வெளிநடப்பிற்கு தலைமை தாங்கி நடத்துகிறாய், இல்லையா? 306 00:23:15,397 --> 00:23:19,067 இஸ்ஸி லிஸ்கோ, முதல்வர் காலின்ஸின் அலுவலகத்திற்கு வரவும். 307 00:23:22,612 --> 00:23:23,613 அது எதைப் பற்றியது? 308 00:23:24,239 --> 00:23:28,326 இது பேச்சு உரிமை. அவள் தனது தகவலைச் சொல்கிறாள். உங்களைப் பற்றிய தகவல். 309 00:23:28,410 --> 00:23:30,870 அந்த வாக்குமூல காணொலி தான் அந்த ஆதாரமே. 310 00:23:30,954 --> 00:23:32,956 அந்த காணொலி முற்றிலுமாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கு. 311 00:23:33,039 --> 00:23:35,166 ஆனால் அதை உபயோகித்து தன்னுடைய வலைதள பதிவுகளுக்கு 312 00:23:35,250 --> 00:23:37,794 ஆதரவு பெறுவதை உங்கள் மகள் நிறுத்தவில்லை. 313 00:23:37,878 --> 00:23:41,131 மன்னிக்கவும், என் மகளின் மேல் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப் போகிறீர்களா? 314 00:23:41,214 --> 00:23:43,592 எதற்காக? அவதூறு செய்ததற்காகவா? மானக்கேடு உண்டாக்கியதற்காகவா? 315 00:23:44,175 --> 00:23:47,012 அவள் தான் ஒரு நிருபர் என்று எல்லோரும் நினைக்க விரும்புகிறாள். 316 00:23:48,471 --> 00:23:51,892 பாருங்கள், நாம் எல்லோரும் இங்கே ஏன் வந்திருக்கிறோம் என்பதை விவரிக்கலாம். 317 00:23:52,976 --> 00:23:54,936 இதை சுலபமாகவும் விரைவாகவும் முடிக்க நினைக்கிறோம். 318 00:23:55,896 --> 00:24:01,526 ரகசியமான இழப்பீடு.தேவையான பணத்தை கேளுங்கள். எல்லாவற்றையும் மறைந்துவிடலாம். 319 00:24:13,163 --> 00:24:14,998 அது "விளைவு", "பாதிப்பு" இல்லை. 320 00:24:15,081 --> 00:24:16,082 த லிஸ்கோ ஹெரால்ட் 321 00:24:18,209 --> 00:24:20,921 இது பள்ளி வெளிநடப்பு பற்றியதா? நாங்கள் பிரச்சினையில் மாட்டி இருக்கிறோமா? 322 00:24:21,004 --> 00:24:24,007 எனக்கு சில அழைப்புகள் வந்தன. 323 00:24:24,090 --> 00:24:27,344 இங்கு விஷயங்கள் விரைவாக பரவும். உட்கார். 324 00:24:31,264 --> 00:24:34,643 மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தால், நான் அவர்களை நெறிமுறை படுத்த வேண்டும். 325 00:24:34,726 --> 00:24:35,727 அது பள்ளியின் வரைமுறை. 326 00:24:35,810 --> 00:24:38,188 ஸ்ட்ராடாவிற்கு பாதகமாக இருக்கிறது என்று தான் மக்கள் கவலைப்படுகிறார்கள். 327 00:24:38,271 --> 00:24:40,023 இந்த ஊரை பொருத்தவரை அவர்கள் பெரிய புள்ளிகள். 328 00:24:41,066 --> 00:24:46,154 மக்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். எல்லாம் அப்படியே இருக்க விரும்புகிறார்கள். 329 00:24:46,238 --> 00:24:48,531 சரி, வந்து, அது எனக்குப் புரியவில்லை, சரியா? 330 00:24:48,615 --> 00:24:50,784 சிறப்பான விஷயங்களை அவர்கள் விரும்ப வேண்டும். இது மோசம். 331 00:24:54,037 --> 00:24:55,038 இது தவறு. 332 00:24:57,207 --> 00:24:58,750 நீ சொல்வதை நானும் ஆதரிக்கிறேன். 333 00:24:59,709 --> 00:25:01,294 ஆனால் விதிகள் எப்போதும் விதிகள் தான். 334 00:25:07,300 --> 00:25:10,178 ஆனால், ஒரே நேரத்தில் பல மாணவர்கள் வெளி நடப்பு செய்தால், 335 00:25:11,346 --> 00:25:13,473 நான் எல்லோரையும் தண்டிக்க முடியாது, இல்லையா? 336 00:25:16,101 --> 00:25:17,352 நன்றி, முதல்வர் காலின்ஸ். 337 00:25:18,770 --> 00:25:19,980 எதற்காக? 338 00:25:26,361 --> 00:25:30,490 எனவே, 1873ஆம் வருட நிதிநிலை நெருக்கடிகள் போன்ற பீதி நிலைகள், 339 00:25:30,574 --> 00:25:33,618 விவசாய பொருட்களின் விலைகளை அடி மட்டத்திற்கு குறைத்தன. 340 00:25:33,702 --> 00:25:37,455 எனவே பொருளாதார நெருக்கடியில் இருந்த விவசாயிகள் சேர்ந்து 341 00:25:37,539 --> 00:25:41,459 தங்களது ஒன்றிணைந்த நலனுக்காக ஜனரஞ்சகக் கட்சி என்ற ஒன்றை 342 00:25:41,543 --> 00:25:43,336 துவங்குவது அவசியம் என்று நினைத்தார்கள். 343 00:25:43,420 --> 00:25:46,089 உங்கள் புத்தகத்தில் 78வது பக்கத்தை பார்த்தீர்கள் என்றால், 344 00:25:46,172 --> 00:25:49,134 சமத்துவமில்லாத சொத்துக்கள் பரவலாக நிறைந்திருந்த அந்த காலகட்டத்தில் 345 00:25:49,217 --> 00:25:52,178 பல சமூக போராட்டங்கள் பற்றிய விவரங்களை நீங்கள் பார்க்கலாம். 346 00:25:53,346 --> 00:25:58,351 உண்மையில், அதற்கு முற்போக்கான காலகட்டம் என்ற ஒரு பெயரும் வழங்கப்பட்டது. 347 00:26:02,814 --> 00:26:04,232 மிஸ். லிஸ்கோ? 348 00:26:05,358 --> 00:26:06,359 ஏதாவது பிரச்சனையா? 349 00:26:07,777 --> 00:26:08,820 உன்னால் முடியும். 350 00:26:13,617 --> 00:26:15,827 ஆமாம். ஏதோ ஒன்று மிகவும் தவறாக இருக்கிறது. 351 00:26:18,747 --> 00:26:19,998 இரு. 352 00:26:20,957 --> 00:26:23,877 பொறுங்கள். என்ன நடக்கிறது? எங்கே போகிறீர்கள்? 353 00:26:24,628 --> 00:26:27,339 இன்னும் வகுப்பு முடியவில்லை. உட்காருங்கள், சார். 354 00:26:28,798 --> 00:26:29,799 உண்மையாகவா? 355 00:26:56,660 --> 00:26:59,037 -நீ ஏதாவது சொல்ல வேண்டும். -என்ன? முடியாது. 356 00:26:59,621 --> 00:27:02,040 -நிச்சயம் சொல்ல வேண்டுமா? -ஆமாம். 357 00:27:02,123 --> 00:27:05,335 இங்கே, பள்ளிக்கூடம் மொத்தமும் உனக்காகத் தான் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். 358 00:27:10,799 --> 00:27:13,718 ஹேய். நீ எப்படிப்பட்ட பெண்ணாக விரும்புகிறாய்? 359 00:27:30,902 --> 00:27:31,903 ஹாய். 360 00:27:33,280 --> 00:27:36,908 சரி, இதை செய்ததற்கு அனைவருக்கும் நன்றி. 361 00:27:37,867 --> 00:27:38,868 எனக்குத் தெரியும்... 362 00:27:40,620 --> 00:27:44,666 வகுப்பைவிட்டு வெளியே செல்வது உங்கள் அனைவருக்கும் ஆபத்தானது என எனக்கு தெரியும். 363 00:27:45,250 --> 00:27:47,294 -சரி... -நீ ஏதாவது சொல்லப் போகிறாயா? 364 00:27:47,377 --> 00:27:50,005 -...வந்து... -இல்லை. இது இஸ்ஸியின் பொறுப்பு. 365 00:27:50,088 --> 00:27:54,134 ...நாளின் நடுவிலும் மற்றும் முற்றிலுமாக, எனவே அதற்காக உங்களுக்கு நன்றி. 366 00:27:55,886 --> 00:28:00,473 நான் ஏற்கனவே நன்றி கூறிவிட்டேனா? ஆம், அதனால்... 367 00:28:08,356 --> 00:28:14,362 பெரியவர்களால் பொய் சொல்லப்படுவது யாருக்கு அலுப்பாக உள்ளது? 368 00:28:17,240 --> 00:28:18,617 எனக்கு. 369 00:28:20,076 --> 00:28:23,163 குறைத்துப் பேசப்படுவதால் யாருக்கு அலுப்பாக இருக்கிறது, ஏனெனில் நாம்... 370 00:28:24,164 --> 00:28:26,374 நமக்கு புரிந்துகொள்வதற்கான வயது இல்லையா? 371 00:28:28,960 --> 00:28:33,006 யாருக்கெல்லாம் நீ தெரியாமல் பேசுகிறாய் என சொல்லப்படுவதை கேட்டு அலுப்பாக இருக்கிறது? 372 00:28:33,089 --> 00:28:35,091 அவர்கள், 373 00:28:35,175 --> 00:28:39,554 "காலநிலை மாற்றம் அல்லது அநியாயத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?" என்பார்கள். 374 00:28:40,680 --> 00:28:45,018 சரி, நமக்கு என்ன தெரியும் என சொல்கிறேன். நாம் பார்ப்பது நமக்குத் தெரியும். 375 00:28:45,769 --> 00:28:49,606 நாங்கள் சிறுவர்கள் தான் ஆனால் முட்டாளகள் அல்ல. நடப்பவற்றை நாங்கள் கவனிக்கிறோம். 376 00:28:51,399 --> 00:28:52,817 ஆமாம், இஸ்ஸி! 377 00:28:54,611 --> 00:28:56,238 இந்த கட்டுரையைப் பாருங்கள், 378 00:28:56,821 --> 00:29:01,034 எரிச்சலூட்டும் என் சகோதரி, ஹில்டி லிஸ்கோ ஆராய்ச்சி செய்து எழுதிய கட்டுரை இது. 379 00:29:04,704 --> 00:29:06,581 அவளுடைய இணையத்தளத்தை ஸ்ட்ராடா முடக்கிவிட்டது, 380 00:29:06,665 --> 00:29:09,834 அவள் உண்மையைச் சொல்வதை அவர்களால் தடுக்க முடியாது. 381 00:29:09,918 --> 00:29:12,212 எனவே எனக்காக ஒரு உதவி செய்யுங்கள், சரியா? 382 00:29:12,295 --> 00:29:14,881 இந்த கட்டுரையை எடுத்துக்கொள்ளுங்கள், அதை படமெடுத்துக்கொள்ளுங்கள் 383 00:29:14,965 --> 00:29:20,053 அதை உங்கள் பெற்றோர், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் ஆகியோருக்கு அனுப்புங்கள், சரியா? 384 00:29:20,136 --> 00:29:22,681 ஏனெனில் நீண்ட காலத்திற்கு முன்பே 385 00:29:22,764 --> 00:29:26,851 அதாவது மக்களைவிட லாபம்தான் முக்கியம் என்று ஸ்ட்ராடா முடிவெடுத்துவிட்டது 386 00:29:26,935 --> 00:29:30,313 இந்த ஊரில் உள்ள அனைவரின் பாதுகாப்பையும் அவர்கள் ஆபத்தில் ஆழ்த்தினர்! 387 00:29:30,397 --> 00:29:32,566 நாம் எதுவும் செய்யாவிட்டால், அவர்கள் அதை மீண்டும் செய்வார்கள். 388 00:29:34,526 --> 00:29:37,320 இனிமேல் பொய் சொல்லக் கூடாது! 389 00:29:37,404 --> 00:29:38,530 -இனிமேல் பொய் கிடையாது! -ஆம். 390 00:29:38,613 --> 00:29:39,739 இனிமேல் பொய் கிடையாது! 391 00:29:39,823 --> 00:29:44,035 இனிமேல் பொய் சொல்லக் கூடாது! 392 00:29:50,667 --> 00:29:54,212 இனிமேல் பொய் சொல்லக் கூடாது! இனிமேல் பொய் சொல்லக் கூடாது! 393 00:30:06,391 --> 00:30:07,392 ஹேய். 394 00:30:07,475 --> 00:30:10,061 ஸ்ட்ராடாவின் பேச்சுவார்த்தை செய்பவரை நான் நாள் முழுவதும் பின்தொடர்கிறேன். 395 00:30:10,145 --> 00:30:11,730 இதுவரை எந்த தவறும் செய்யவில்லை. 396 00:30:11,813 --> 00:30:15,775 தொடர்ந்து கண்காணி. என் அப்பாவை துன்புறுத்தியிருப்பார் என தோன்றுகிறது. 397 00:30:15,859 --> 00:30:17,277 என்னிடம் ஆதாரம் இல்லை. 398 00:30:17,360 --> 00:30:20,322 குற்றம்சாட்ட வேண்டுமென்றால் எனக்கு வலுவான ஆதாரம் ஏதாவது வேண்டும். 399 00:30:20,405 --> 00:30:23,533 இதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி ஏனெனில் நாம் விசாரிப்பது ஸ்ட்ராடாவிற்கு 400 00:30:23,617 --> 00:30:27,871 தெரிந்துவிட்டால், அவரைப் பயன்படுத்தாமல், சட்டவிரோத வேலைக்கு வேறொருவரை தேடுவார்கள். 401 00:30:27,954 --> 00:30:29,664 அப்படியே செய்கிறேன், ஷெரிப். 402 00:30:29,748 --> 00:30:31,666 நீ மீண்டும் வந்ததில் சந்தோஷம், ஃப்ராங்க். 403 00:30:32,167 --> 00:30:33,793 மீண்டும் வருவது எனக்கும் சந்தோஷம், ட்ரிப். 404 00:30:51,645 --> 00:30:53,980 சரி. ஆகட்டும். 405 00:31:11,706 --> 00:31:14,292 துரோகி ரூதர்ஃபோர்ட். 406 00:31:24,386 --> 00:31:25,387 ஹேய், என்னவாயிற்று? 407 00:31:32,310 --> 00:31:38,608 சரி, என் அம்மாவின் கணினியில் நான் செய்ததை பற்றி ஸ்ட்ராடா தெரிந்து கொண்டபோது, 408 00:31:39,401 --> 00:31:41,736 அவர்கள், அவரை, 409 00:31:43,029 --> 00:31:44,239 பணி நீக்கம் செய்ததாக சொன்னார்கள். 410 00:31:45,240 --> 00:31:46,741 வேலையில் இருந்து நீக்கிவிட்டார்கள், ஆனால்... 411 00:31:48,785 --> 00:31:50,370 அந்த கோப்புகளை நான் அனுப்பியிருக்கக்கூடாது. 412 00:31:50,453 --> 00:31:52,956 -என் அம்மா மனமுடைந்துவிட்டார், இஸ். -ஆனால்... 413 00:31:54,457 --> 00:31:56,251 நம்முடன் அவர் உடன்படுவார் என நீ சொன்னாயே. 414 00:31:56,960 --> 00:31:58,628 அது, எனக்குத் தெரியவில்லை, 415 00:31:58,712 --> 00:32:00,797 மக்கள் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம். 416 00:32:02,173 --> 00:32:03,174 ஹலோ, இஸ்ஸி. 417 00:32:04,926 --> 00:32:06,928 உங்களுக்கு நடந்த விஷயத்திற்காக நான் வருந்துகிறேன். 418 00:32:07,971 --> 00:32:09,806 அந்த விஷயத்தில் அவர்கள் நல்லவிதமாக நடந்துகொண்டார்கள். 419 00:32:10,974 --> 00:32:12,642 என்னைப் பற்றி நல்லவிதமாக சொல்லப் போகிறார்கள். 420 00:32:14,436 --> 00:32:16,938 இங்கு மீண்டும் அது போன்ற நல்ல வேலையைத் தேடிப்பிடிப்பது கஷ்டம். 421 00:32:18,398 --> 00:32:20,442 சரி, ஆனால் அவர்கள் நல்லவிதமாக இல்லை. 422 00:32:20,525 --> 00:32:23,612 அதாவது, ஸ்ட்ராடாதான் மக்களைக் கஷ்டப்படுத்தியது, நீங்களோ, ஈதனோ அல்ல. 423 00:32:25,614 --> 00:32:28,825 இங்கு நான் நீண்டகாலமாக வாழ்ந்துள்ளேன், இஸ்ஸி. 424 00:32:29,409 --> 00:32:32,662 இது நியூயார்க் நகரத்திலிருந்து வருவது போல் இல்லை. தெரியுமா? 425 00:32:32,746 --> 00:32:34,581 ஈரி ஹார்பர் பற்றி இதற்கு முன் யாரும் கேள்விப்பட்டதில்லை. 426 00:32:34,664 --> 00:32:39,002 பெருமைப்படக்கூடிய அளவிற்கு பெரிய வானளாவிய கட்டிடங்கள் இல்லை, ஆனால் ஸ்ட்ராடா உள்ளது. 427 00:32:39,085 --> 00:32:42,923 "அந்த நிறுவனத்தில் நான் வேலை செய்கிறேன்" என எங்கு சென்றாலும் சொல்லிக்கொள்ளலாம், 428 00:32:43,715 --> 00:32:47,886 அதாவது மக்களுக்கு அது கௌரவமாக இருந்தது. அதற்காக நான் எப்போதும் பெருமைப்பட்டேன். 429 00:32:47,969 --> 00:32:49,221 அம்மா. 430 00:32:53,725 --> 00:32:55,727 தெரியவில்லை. நான் அதை அப்படி நினைத்ததே இல்லை. 431 00:32:56,436 --> 00:33:00,023 உன் சகோதரி தனது கதையை ஏன் வெளியிட விரும்பினாள் என்பது எனக்குப் புரிகிறது. 432 00:33:00,857 --> 00:33:03,068 ஆனால் இந்த சமூகத்தை ஸ்ட்ராடா உருவாக்கியது. 433 00:33:03,151 --> 00:33:04,736 அவர்களுடைய பெயரை உங்கள் குடும்பம் 434 00:33:04,819 --> 00:33:07,322 அசிங்கப்படுத்துவதைப் பார்க்க எங்களில் பெரும்பாலானோருக்கு கஷ்டமாக உள்ளது. 435 00:33:17,457 --> 00:33:18,708 நீயும் அப்படித்தான் நினைக்கிறாயா? 436 00:33:21,002 --> 00:33:22,546 எனக்குத் தெரியாது, இஸ்ஸி. எனக்கு... 437 00:33:24,506 --> 00:33:26,216 என் அம்மாவைப் பற்றி கவலைப்படுகிறேன். 438 00:33:38,228 --> 00:33:39,563 பத்திரமாக இருங்கள். 439 00:33:48,405 --> 00:33:52,867 உங்களுடன் வேலை செய்தது உண்மையிலேயே மகிழ்ச்சியானது. வாழ்த்துகள். ஷெரிப். 440 00:33:53,577 --> 00:33:56,746 நான் ஏற்கனவே எனது அறிக்கையை தாக்கல் செய்ததை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். 441 00:33:58,498 --> 00:34:00,250 அதைப் பார்க்க வேண்டுமா? 442 00:34:07,382 --> 00:34:08,383 அது துரதிர்ஷ்டம். 443 00:34:08,465 --> 00:34:11,219 என்னுடைய அறிவுரை நீங்கள் இன்னும் கொஞ்சம் மதித்திருக்க வேண்டும். 444 00:34:11,303 --> 00:34:12,387 உங்களுடைய அறிவுரையா? 445 00:34:13,471 --> 00:34:15,472 ஆமாம், உங்களுடைய அறிவுரை. 446 00:34:17,099 --> 00:34:21,229 எனக்கு முன்பிருந்த அதிகாரிகள் 35 ஆண்டுகளில் சமாளித்ததைவிட 447 00:34:21,313 --> 00:34:23,940 ஒரு வருடத்தில் இந்த வேலையில் நான் அதிக சோதனைகளைச் சந்தித்தேன். 448 00:34:24,024 --> 00:34:27,360 இன்னும் நான் அதற்காக போராடுகிறேன். 449 00:34:27,861 --> 00:34:31,323 ஆனால் முதலில் இருந்தே, நீங்கள் எனக்கு ஆதரவாக இல்லை. 450 00:34:31,405 --> 00:34:34,367 ஒரு கறுப்பின பெண் இந்த ஊரில் ஷெரீப்பாக இருக்கக் கூடாது என்பதால். 451 00:34:34,451 --> 00:34:36,244 கொஞ்சம் பொறுங்கள். நான் அப்படி சொன்னதில்லை... 452 00:34:36,327 --> 00:34:37,621 அப்போது என்ன சொன்னீர்கள்? 453 00:34:37,704 --> 00:34:40,916 நான் வேறு எங்காவது, மிகவும் முற்போக்கான நகரத்தில் 454 00:34:40,999 --> 00:34:42,959 மிகவும் சௌகரியமாக இருப்பேன் என சொன்னீர்கள். 455 00:34:43,043 --> 00:34:45,045 நான் சௌகரியமாக இருப்பதில் உங்களுக்கு விருப்பமில்லை. 456 00:34:45,128 --> 00:34:48,840 இங்குள்ள அனைவரும் அசௌகரியமாக இல்லை என்பதை உறுதிப்படுத்த விரும்பினீர்கள். 457 00:34:48,923 --> 00:34:52,135 இந்த ஊரில் உள்ள இனவெறியைத் ஒழிக்க எனக்கு உதவ முயற்சிப்பதற்குப் பதிலாக, 458 00:34:52,219 --> 00:34:55,555 அனைவரும் உங்களுடைய வேலையை பார்ப்பதற்காக என்னை உங்கள் வழியிலிருந்து விலக்கினீர்கள். 459 00:34:55,639 --> 00:34:57,015 ஆனால் என்னவென்று தெரியுமா? 460 00:35:00,435 --> 00:35:02,646 நீங்கள் வியாபாரம் செய்யும் முறை எனக்குப் பிடிக்கவில்லை. 461 00:35:03,438 --> 00:35:06,358 மேலும் உங்களுடைய முதலாளியான, சட்டத்துறையின் தலைவர், 462 00:35:06,441 --> 00:35:08,860 இதைப் பார்க்கும்போது நான் சொல்வதை ஒத்துக்கொள்வார் என நினைக்கிறேன். 463 00:35:38,682 --> 00:35:42,644 அருமை. இஸ்ஸி எதிலும் இந்தளவுக்கு ஈடுபட்டு நான் பார்த்ததில்லை. 464 00:35:42,727 --> 00:35:45,188 அவள் தன்னம்பிக்கையோடு தெரிந்தாள். 465 00:35:45,272 --> 00:35:47,566 மற்ற சிறுவர்கள் அவளிடம் நடந்துகொண்ட விதத்தை கவனித்தாயா? 466 00:35:47,649 --> 00:35:50,277 அதைப் பார்த்தாயா? இந்த ஊரில் அது சாத்தியம் என்பது எனக்குக்கூட தெரியாது. 467 00:35:50,360 --> 00:35:51,361 எனக்குத் தெரியாது 468 00:35:51,444 --> 00:35:53,363 அது அருமையாக இருந்தது. அவள் அற்புதமானவள். 469 00:35:54,155 --> 00:35:55,156 என்ன? 470 00:35:55,740 --> 00:35:57,325 எனக்கு... கவலையாக உள்ளது. 471 00:35:57,409 --> 00:36:00,036 ஹில்டிக்கு எதிராக அவர்கள் மிரட்டும் இந்த வழக்கு. 472 00:36:00,120 --> 00:36:03,540 ஸ்-ஸ்ட்ராடா இதை ரொம்ப இழுத்தடிக்கும். நம்மிடம் ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள். 473 00:36:03,623 --> 00:36:05,667 ஆமாம். எனக்குத் தெரியும். 474 00:36:09,546 --> 00:36:11,214 ஆஹா, நான் அதை நம்பமாட்டேன். 475 00:36:11,715 --> 00:36:13,675 ஹேய், ஹில்டி? 476 00:36:13,758 --> 00:36:14,759 என்னது? 477 00:36:15,260 --> 00:36:19,014 ஹேய், இறுதி சடங்கில், நான் பேசிய அந்த விமானப்படை நபரை உனக்கு நினைவிருக்கிறதா? 478 00:36:19,097 --> 00:36:20,724 -ஆம். -சரி, தகவல் சொல்லும் காணொளியில் இருந்த 479 00:36:20,807 --> 00:36:22,559 -மற்றொரு நபரை அவருக்குத் தெரியுமாம். -என்ன? 480 00:36:22,642 --> 00:36:24,519 ஆம், ஆர்தர் கான்வே. அவர்கள் ஒன்றாக வேலை செய்தவர்கள். 481 00:36:24,603 --> 00:36:27,439 கண்டிப்பாக ஹாங்க் கில்லிஸ் இறந்த உடனேயே ஆர்தர் நகரத்தை விட்டு போயிருப்பார். 482 00:36:27,522 --> 00:36:30,442 விபத்து நடந்த நாளின்று, அவர் கட்டுப்பாட்டு டவரில் இருந்திருப்பார். 483 00:36:30,942 --> 00:36:32,110 பார். இதைக் கொஞ்சம் பார். 484 00:36:32,193 --> 00:36:35,196 அவர் இணையத்தில் இருந்ததற்கான தடயம் எதுவும் இல்லை, ஆனால்... 485 00:36:35,280 --> 00:36:37,532 ஆர்தர் கான்வே, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு டவர். 486 00:36:38,033 --> 00:36:40,201 கருப்பு பெட்டியில் இருந்த மற்றொரு குரல் அவருடையது தான். 487 00:36:41,244 --> 00:36:42,245 நீ சொல்வது சரி. 488 00:36:43,747 --> 00:36:45,457 அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என நினைக்கிறாயா? 489 00:36:46,166 --> 00:36:48,627 அதாவது, எனக்குத் தெரியாது. எனக்கு எதுவும் தெரியாது. 490 00:36:48,710 --> 00:36:51,713 என்னுடைய, விஏ-வில் எனக்கு பழக்கமானவர்கள், இப்போது தான் சொன்னார்கள். 491 00:36:51,796 --> 00:36:53,715 அதாவது, இது இவர்தான். 492 00:36:53,798 --> 00:36:56,092 ஆம். அவருடைய ஓய்வூதிய காசோலைகளை அனுப்பியதற்கான முகவரியை 493 00:36:56,176 --> 00:36:57,219 என்னிடம் கொடுத்தார்கள். 494 00:36:57,302 --> 00:36:59,012 அவர் எங்கே இருக்கிறார் என தெரிந்துவிட்டது. 495 00:37:00,138 --> 00:37:01,139 என்ன நடக்கிறது? 496 00:37:03,558 --> 00:37:06,269 நம்முடைய முதல் சாட்சியை நான் கண்டுபிடித்திருக்கிறேன். 497 00:37:13,276 --> 00:37:14,903 என்ன செய்கிறீர்கள்? 498 00:37:14,986 --> 00:37:17,822 வந்து, தேடிக்கொண்டிருக்கிறேன், ஆம்... 499 00:37:19,950 --> 00:37:21,534 இவற்றைத் தான். 500 00:37:23,828 --> 00:37:26,206 பாஸ்போர்ட்டுகள். நாம் கனடாவிற்குப் போகிறோம். 501 00:37:34,339 --> 00:37:36,925 பொதுவிடம் 502 00:37:38,802 --> 00:37:40,178 -ஹலோ. காலை வணக்கம். -ஹேய். 503 00:37:40,262 --> 00:37:43,181 -பாஸ்போர்ட்? -ஆம், எங்களிடம் இருக்கிறது. 504 00:37:43,765 --> 00:37:46,893 -எங்கு வசிக்கிறீர்கள்? -வாஷிங்டன் நகரிலுள்ள, ஈரி ஹார்பரில். 505 00:37:46,977 --> 00:37:49,104 -எங்கு செல்கிறீர்கள்? -வான்கூவர். 506 00:37:51,648 --> 00:37:52,774 சரி, நன்றி. 507 00:38:22,804 --> 00:38:24,389 பொறு. என்ன அது? 508 00:38:24,472 --> 00:38:28,184 என் கட்டுரையின் பிரதிகள். இது அவரது நினைவுகளைத் தூண்ட உதவலாம். 509 00:38:28,268 --> 00:38:31,813 சரி, ஹில்டி, நீ இங்கேயே இருக்க வேண்டும். 510 00:38:33,356 --> 00:38:36,651 -ஆனால் நான் உங்களோடு வர விரும்புகிறேன். -சரி, ஆனால் உனக்கு நடைமுறை தெரியுமே. 511 00:38:36,735 --> 00:38:40,572 முதலில்... அது பாதுகாப்பானதா என நான் உறுதி செய்துகொள்ள வேண்டும், சரியா? 512 00:38:40,655 --> 00:38:43,533 ஆர்தரின் மனநிலை என்னவாக இருக்கும் என்பது நமக்குத் தெரியாது. 513 00:38:44,200 --> 00:38:47,913 சரி, நான் போய் என்னவென்று பார்க்கிறேன். 514 00:38:47,996 --> 00:38:48,997 சரிதான். 515 00:38:49,080 --> 00:38:51,791 ஆனால் அவர் ஒரு சாதாரண வயதானவர் என்றால், நான் உள்ளே வருவேன். 516 00:38:53,376 --> 00:38:55,337 சரி. அப்படியே செய்யலாம். 517 00:39:10,727 --> 00:39:14,773 ஹாய். நான் ஆர்தர் கான்வே-ஐ பார்க்க வேண்டும். 518 00:39:15,357 --> 00:39:17,067 அவர்... 519 00:39:17,150 --> 00:39:18,944 என்னுடைய தாத்தா கடந்த ஆண்டு இறந்துவிட்டார். 520 00:39:19,694 --> 00:39:21,780 அதறகாக மிகவும் வருந்துகிறேன். 521 00:39:21,863 --> 00:39:23,823 வேண்டுமென்றால் என் அப்பாவை அழைக்கிறேன். 522 00:39:25,575 --> 00:39:27,285 ஆம், கண்டிப்பாக. தயவுசெய்து அழை. 523 00:39:27,369 --> 00:39:30,038 -நீங்கள் இங்கேயே காத்திருங்கள். -சரி. நன்றி. 524 00:39:32,874 --> 00:39:35,418 அப்பா, உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார். 525 00:39:55,730 --> 00:39:56,731 ஹேய். 526 00:40:02,404 --> 00:40:03,405 அடக் கடவுளே. 527 00:40:08,660 --> 00:40:12,831 மாட்டி... நீயா? 528 00:40:23,633 --> 00:40:24,634 ரிச்சி? 529 00:40:27,220 --> 00:40:28,513 என்னை எப்படி கண்டுபிடித்தாய்? 530 00:40:32,309 --> 00:40:33,310 அப்பா? 531 00:40:52,412 --> 00:40:54,331 இளம் பத்திரிக்கையாளர் ஹில்டி லிஸியாக்கின் அறிக்கையால் உந்தப்பட்டது 532 00:42:02,399 --> 00:42:04,401 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்