1 00:00:12,012 --> 00:00:14,890 சாரா? சாரா! 2 00:00:16,099 --> 00:00:17,100 சாரா! 3 00:00:19,061 --> 00:00:20,896 சாரா! 4 00:00:23,148 --> 00:00:25,192 சாரா! 5 00:00:26,485 --> 00:00:28,654 சாரா! 6 00:00:43,794 --> 00:00:44,795 கண்ணு! 7 00:00:46,922 --> 00:00:48,089 செஞ்சிருக்கணும்… 8 00:00:48,090 --> 00:00:49,091 ஜென்? 9 00:00:50,759 --> 00:00:52,219 நீ இங்கே என்ன பண்ணிட்டு இருக்க? 10 00:00:52,803 --> 00:00:53,804 என்ன ஆச்சு? 11 00:00:56,139 --> 00:00:57,140 அவ போயிட்டா. 12 00:00:58,976 --> 00:01:00,978 யார் போயிட்டா? நீ எதப்பத்தி பேசுற? 13 00:01:09,027 --> 00:01:11,779 - ஹென்றி? - டான், சாராவைக் காணோம். 14 00:01:11,780 --> 00:01:14,115 நீ உடனே இங்கே வந்து, எனக்கு உதவி பண்ணணும். 15 00:01:14,116 --> 00:01:15,534 அவளைக் காணோமா? என்ன… 16 00:01:16,201 --> 00:01:19,203 நான் போயி சுத்துவட்டாரத்துல தேடிட்டு வர்ற வரைக்கும், நீ வந்து ஜென்னா கூட இருக்கணும். 17 00:01:19,204 --> 00:01:20,663 அவளைத் தனியா விட முடியாது. 18 00:01:20,664 --> 00:01:22,290 ஜென்னாவுக்கு என்ன ஆச்சு? என்ன நடக்குது… 19 00:01:22,291 --> 00:01:25,543 தயவுசெஞ்சு… உடனே வா. 20 00:01:25,544 --> 00:01:26,837 சரி, இதோ வர்றேன். 21 00:01:27,880 --> 00:01:29,130 நான் கிளம்பிட்டேன். 22 00:01:29,131 --> 00:01:30,132 நன்றி. 23 00:01:51,778 --> 00:01:54,405 என் பேர் சாரா, ஒருவேளை என் பேர் மேக்ஸா இருக்கலாம். எனக்குத் தெரியல, 24 00:01:54,406 --> 00:01:55,574 எனக்கு எதுவும் ஞாபகம் இல்ல. 25 00:01:56,158 --> 00:01:57,909 - மேகி? - சாரா? 26 00:01:57,910 --> 00:02:00,662 நீ மேகின்னு சொன்னியா? மேகி, அது நீதானா? 27 00:02:01,872 --> 00:02:05,124 ஹே. ஓ, ஒண்ணும் இல்லடா, குட்டிமா. 28 00:02:05,125 --> 00:02:07,127 ஒண்ணும் பிரச்சனை இல்லடா. நான் வந்துட்டேன். 29 00:02:07,920 --> 00:02:10,005 நான் வந்துட்டேன். சரி. 30 00:02:17,846 --> 00:02:19,014 நாம வந்தாச்சு, செல்லக் குட்டி. 31 00:02:30,067 --> 00:02:31,527 நான் அவளைப் பார்த்துக்கிறேன். நீ உள்ள போ. 32 00:02:36,490 --> 00:02:38,658 - சாரா? சாரா. - அவளுக்கு ஒண்ணும் இல்ல. அவ நல்லா இருக்காள். 33 00:02:38,659 --> 00:02:40,284 அவ குடிச்சிருக்காள். அதான் மயங்கிட்டாள். 34 00:02:40,285 --> 00:02:41,786 - ஜென்னா, அவளுக்கு ஒண்ணுமில்ல. ஜென்னா. - அவ நல்லா இருக்காள். 35 00:02:41,787 --> 00:02:43,287 - நான் அவளைத் தூக்கிட்டு வர்றேன். - அவளுக்கு ஒண்ணுமில்ல. 36 00:02:43,288 --> 00:02:44,331 சரி. 37 00:02:45,374 --> 00:02:47,459 அவ எப்படி டவுனுக்கு போனாள்? 38 00:02:48,085 --> 00:02:49,378 எனக்குத் தெரியல. 39 00:02:52,047 --> 00:02:54,174 நாம அவளை இழந்துடுவோம். 40 00:02:57,052 --> 00:02:58,637 அவங்க கண்டுபிடிச்ச அந்த சிறுமியோட சடலம். 41 00:03:01,515 --> 00:03:03,559 அந்த நோட்டீஸ்ல இருந்ததே, அது இவதானே? 42 00:03:06,812 --> 00:03:10,023 நீ அந்த கூட்டுறவு கடையில இருந்து திரும்பி வந்தப்போ, 43 00:03:10,649 --> 00:03:13,902 உனக்கு விஷயம் புரிஞ்சுதா இல்லயான்னு எனக்குத் தெரியல. 44 00:03:16,029 --> 00:03:18,031 நான் அந்த நோட்டீஸைப் பார்த்த உடனே, எனக்கு… 45 00:03:21,118 --> 00:03:22,119 எனக்கு… 46 00:03:24,663 --> 00:03:25,664 எனக்கு… 47 00:03:28,041 --> 00:03:29,543 எனக்கு என்ன தோணுச்சுன்னே தெரியல. 48 00:03:31,378 --> 00:03:33,380 ஒருவேளை எனக்கு அதை நினைச்சுப் பார்க்க இஷ்டம் இல்லயோ என்னவோ. 49 00:03:36,842 --> 00:03:39,094 நான் முழிச்சுப் பார்த்தப்போ சாரா இங்கே இல்ல… 50 00:03:42,306 --> 00:03:46,393 ஒருவேளை அவங்க வந்து அவளை மறுபடியும் கூட்டிட்டுப் போயிட்டாங்களோன்னு பயந்துட்டேன். 51 00:03:51,273 --> 00:03:52,733 அவங்க ரொம்ப மோசமானவங்க. 52 00:03:53,942 --> 00:03:56,069 அவன் ஒரு குடிகாரன், அவ ஒரு பாவி. 53 00:03:57,738 --> 00:03:59,239 இவ நம்ம கூட இருக்குறதுதான் இவளுக்கு நல்லது. 54 00:04:00,240 --> 00:04:01,950 இவளை அவங்ககிட்ட இருந்து நாமதான் காப்பாத்துனோம். 55 00:04:06,163 --> 00:04:09,166 இனியும் தொடர்ந்து காப்பாத்துவோம். எல்லாம் சரியாகிடும். 56 00:04:51,416 --> 00:04:53,502 {\an8}ரயன் டேவிட் ஜான் எழுதிய 'த டிஸ்பாட்சர்' புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 57 00:05:30,247 --> 00:05:33,666 - அதை மறுபடியும் சொல்ல முடியுமா, ப்ளீஸ்? - தெரியல. எனக்குத் தெரியல. 58 00:05:33,667 --> 00:05:36,085 ஒருவேளை மேக்ஸா இருக்கலாம். 59 00:05:36,086 --> 00:05:37,087 மேகி? 60 00:05:37,838 --> 00:05:38,921 நீ மேகின்னு சொன்னியா? 61 00:05:38,922 --> 00:05:40,506 மேகி, அது நீதானா? 62 00:05:40,507 --> 00:05:43,551 ஆமா, எனக்கு எதுவுமே ஞாபகம் வர மாட்டேங்குது. 63 00:05:43,552 --> 00:05:45,136 - மேகி, என்கிட்ட பேசுமா, ப்ளீஸ். - சரி. 64 00:05:45,137 --> 00:05:46,888 - அதை ஆஃப் பண்ணுங்க. - ப்ளீஸ் அங்கேயே இரு, சரியா 65 00:05:46,889 --> 00:05:49,265 சரி. அது அவள்தான். 66 00:05:49,266 --> 00:05:50,434 அது அவளோட குரல்தான். 67 00:05:50,976 --> 00:05:53,144 உங்களுக்கு எப்படித் தெரியும்? அவ கடைசியா பேசும்போது 68 00:05:53,145 --> 00:05:55,479 - அவளுக்கு மூணு வயசுதான் இருக்கும். - அவளே சொல்றாளே. அவளே அதச் சொல்றாளே. 69 00:05:55,480 --> 00:05:59,108 அவ ஒரு பார்ட்டிக்கு போயிருந்ததாவும் சொல்றா, கேட்குறதுக்கு போதையில இருக்குற மாதிரி இருக்கு. 70 00:05:59,109 --> 00:06:01,861 - அதனால? - நேத்து ராத்திரி அங்க ஒரே அராஜகம் நடந்திருக்கு. 71 00:06:01,862 --> 00:06:03,654 அதாவது, அந்த இடமே நேத்து தலைகீழா மாறிக் கிடந்தது. 72 00:06:03,655 --> 00:06:05,698 பெரியவங்க எல்லாரும் இந்த நினைவஞ்சலி கூட்டத்துக்குப் போயிருந்தாங்க. 73 00:06:05,699 --> 00:06:06,824 அதப் பயன்படுத்தி பசங்க ஆட்டம்போட ஆரம்பிச்சிட்டாங்க. 74 00:06:06,825 --> 00:06:10,870 காரை வச்சு ரேஸ் ஓட்டுறது, போதையில இருக்குற பசங்க சுவர்கள்ல கிறுக்குறதுன்னு ஒரே கலாட்டா. 75 00:06:10,871 --> 00:06:12,622 அதாவது, இதுல எது நடக்க அதிக வாய்ப்பிருக்கு, சொல்லு? 76 00:06:12,623 --> 00:06:15,541 11 வருஷத்துக்கு அப்புறம் மேக்ஸ் திடீர்னு எங்கிருந்தோ வந்து நிக்குறான்றதா, 77 00:06:15,542 --> 00:06:20,630 இல்ல, எல்லாரோட கவனத்தை ஈர்க்க போதையில இருக்குற ஒரு பொறுக்கிப் பையன் பண்ணுன பிராங்க் காலா? 78 00:06:20,631 --> 00:06:21,881 அப்போ, சிசிடிவி கேமராக்கள்? 79 00:06:21,882 --> 00:06:24,509 சரி, அந்த ஏரியாவுல ஏதாச்சும் ஒண்ணு கண்டிப்பா இருக்கும், பக்கத்துல இருக்குற கடையிலோ, 80 00:06:24,510 --> 00:06:26,928 - இல்ல டிராஃபிக் கேமராவோ இருக்கும். - இயன்… இருக்கு, ஆனா ஃபபோன் பூத்தை கவர் பண்ணல. 81 00:06:26,929 --> 00:06:29,472 சரி, அந்த டெலிஃபோன் பூத்தைப் பத்தி பேசுவோம். கைரேகை ஏதாச்சும் கிடைச்சதா? 82 00:06:29,473 --> 00:06:31,224 நீங்க ரொம்ப வற்புறுத்திக் கேட்டதுனால, கான்ஸ்டபிள் லூயிஸ் 83 00:06:31,225 --> 00:06:32,433 - அந்த பூத் முழுக்க சோதிச்சுப் பார்த்தார்… - சரி. 84 00:06:32,434 --> 00:06:33,809 …ஆனா அவருக்கு எதுவுமே கிடைக்கல. 85 00:06:33,810 --> 00:06:35,229 எதுவுமே கிடைக்கலையா? 86 00:06:36,772 --> 00:06:37,939 உனக்கு இது விசித்திரமாத் தெரியலையா? 87 00:06:37,940 --> 00:06:40,316 என் ஆபீசர்கள் உன் பேச்சைக் கேட்டு நடக்குறதுதான், எனக்கு விசித்திரமா தெரியுது. 88 00:06:40,317 --> 00:06:44,362 ஏன், நீ உத்தரவு போடுற வரை நான் காத்திருந்தா, இங்கே ஒரு வேலையும் நடக்காது. 89 00:06:44,363 --> 00:06:46,489 உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க, இயன்? என்ன? நீ பெரிய இவன்னு நினைப்பா? 90 00:06:46,490 --> 00:06:48,282 இங்கே எப்ப வேணா வரலாம், என்ன வேணா பண்ணிட்டு தப்பிச்சிடலாம், 91 00:06:48,283 --> 00:06:51,077 ஏன்னா நீ இந்த லோக்கல் போலீஸ் வட்டாரத்துல ஒரு செல்வாக்கான ஆளா இருந்தன்றதுனாலயா, 92 00:06:51,078 --> 00:06:52,620 இல்லை, ஒரு காலத்துல நீ இங்க பாஸா இருந்தன்றதாலயா? 93 00:06:52,621 --> 00:06:54,122 ஆனா இப்போ நீ இங்கே பாஸ் இல்ல. 94 00:07:38,333 --> 00:07:40,878 அது என் வேலை, அப்பா. என்னால செய்ய முடியும். 95 00:07:43,589 --> 00:07:45,132 - அப்பா? - என்ன? 96 00:07:47,301 --> 00:07:48,719 அப்பா, உங்களுக்கு இப்பவும் என் மேல அன்பு இருக்கா? 97 00:07:55,726 --> 00:07:56,727 எப்பவுமே இருக்கு. 98 00:07:57,352 --> 00:07:59,520 என்னை மன்னிச்சிடுங்கப்பா. 99 00:07:59,521 --> 00:08:01,273 எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு. 100 00:08:02,524 --> 00:08:05,485 இதற்குப் பரிகாரமா நான் என்ன பண்ணணும்? 101 00:08:08,822 --> 00:08:13,076 நாம எடுத்து வச்சிருந்தோமே அந்த துலிப் மலர்கள் ஞாபகம் இருக்கா? 102 00:08:15,370 --> 00:08:16,914 அதை நாம மண்ணுல நடலாம், என்ன? 103 00:08:19,833 --> 00:08:20,834 மீதியை முடிச்சிடலாம். 104 00:08:27,174 --> 00:08:30,343 உனக்கு எப்படி அங்கே போக வழி தெரிஞ்சது? 105 00:08:30,344 --> 00:08:32,095 டவுனுக்குப் போறதுக்கான வழி உனக்கு எப்படித் தெரியும்? 106 00:08:35,140 --> 00:08:36,850 நம்ம பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு ஒரு மகன் இருக்கான். 107 00:08:37,934 --> 00:08:38,936 டாமி. 108 00:08:40,229 --> 00:08:42,231 நான் அவனை ஓரிரு முறை பார்த்திருக்கேன், அப்புறம்… 109 00:08:43,857 --> 00:08:45,108 அவன்தான் என்னை அந்தப் பார்ட்டிக்கு கூட்டிட்டுப் போனான். 110 00:08:47,319 --> 00:08:48,320 பார்ட்டிக்கா? 111 00:08:50,280 --> 00:08:51,615 நீங்க கோபமா இருப்பீங்கன்னுஎனக்குத் தெரியும். 112 00:08:52,449 --> 00:08:54,535 உன்னோட அந்த நண்பன், டாமி… 113 00:08:56,078 --> 00:08:58,162 உன்னை மிகப்பெரிய ஆபத்துல தள்ளிவிட்டிருக்கான். 114 00:08:58,163 --> 00:09:01,166 நீ இனிமே அவனைப் பார்க்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன், ப்ளீஸ். 115 00:09:03,460 --> 00:09:05,461 எனக்குன்னு ஒரு நண்பனை வச்சிருக்கிறதுல என்ன தப்பு? 116 00:09:05,462 --> 00:09:06,505 உனக்கே காரணம் தெரியும். 117 00:09:07,589 --> 00:09:10,091 நாம வாழ்ற வாழ்க்கையை மத்தவங்களால புரிஞ்சுக்க முடியாது. 118 00:09:10,092 --> 00:09:12,093 அவங்க நம்மளைப் பிரிக்கத்தான் பார்ப்பாங்க. 119 00:09:12,094 --> 00:09:13,177 ஆனா ஏன்? 120 00:09:13,178 --> 00:09:16,848 ஏன்னா, கடவுளுக்கு ரொம்ப நெருக்கமா வாழ்ற நம்மளப் பார்த்து அவங்கலாம் மிரண்டு போயிருக்காங்க. 121 00:09:16,849 --> 00:09:18,267 - அப்படின்னு யார் சொன்னா? - நான் சொல்றேன். 122 00:09:25,858 --> 00:09:27,149 அப்பா. 123 00:09:27,150 --> 00:09:28,485 மேக்ஸ்-ன்றது யாரு? 124 00:09:33,490 --> 00:09:34,908 அந்தப் பேரை நீ எங்கே கேட்ட? 125 00:09:35,576 --> 00:09:37,995 நான் ஒரு பேப்பர்ல அதப் படிச்சேன். 126 00:09:38,912 --> 00:09:40,914 எனக்கு முன்னாடியே தெரிஞ்ச பேர் மாதிரி இருந்தது. 127 00:09:42,291 --> 00:09:43,917 ஆமா, உனக்கு அப்படித் தோணுறது சகஜம்தான். 128 00:09:44,668 --> 00:09:46,837 ஏன்? அவ யாரு? 129 00:09:49,756 --> 00:09:52,593 கொஞ்சக் காலத்துக்கு முன்னாடி டவுன்ல, ஒரு சின்னப் பொண்ணு காணாமப் போயிட்டாள். 130 00:09:54,136 --> 00:09:55,928 எல்லாரும் அவளைத் தேடிட்டு இருந்தாங்க. 131 00:09:55,929 --> 00:09:58,599 அந்தக் கதையைக் கேட்டு உன் அம்மாவும் நானும் கூட ரொம்பவே வருத்தப்பட்டோம். 132 00:09:59,600 --> 00:10:03,896 ஆமா, நாங்க வீட்டுல அவ பேரைப் பேசிட்டிருந்தப்போ, அது உன் மனசுல அப்படியே பதிஞ்சிருக்கும் போல. 133 00:10:05,689 --> 00:10:06,899 அவளுக்கு என்ன ஆச்சு? 134 00:10:13,947 --> 00:10:15,490 அந்தச் சின்னப் பொண்ணைக் கொலை பண்ணிட்டாங்க. 135 00:10:17,659 --> 00:10:20,454 வருத்தமாத்தான் இருக்கு, ஆனா அதுதான் உண்மை. 136 00:10:21,622 --> 00:10:23,624 வெளியே இருக்குற இந்த உலகம் ரொம்பவே கெட்டுப்போய் இருக்கு. 137 00:10:41,642 --> 00:10:42,684 நீங்க நல்லா இருக்கீங்களா? 138 00:10:44,520 --> 00:10:47,731 ஆமா. ஆமா, நேத்து ராத்திரிஅவ்வளவு சரியா அமையல. 139 00:10:49,399 --> 00:10:50,526 அவ்ளோ நல்ல ராத்திரியா அமையல. 140 00:10:51,026 --> 00:10:54,070 இங்கே குடுங்க, நான் பண்ணுறேன். உள்ளே கொண்டு வந்து வச்சிடுறேன். 141 00:10:54,071 --> 00:10:56,198 - சரி, சரி. நான்… - பரவாயில்ல, பரவாயில்ல, பரவாயில்ல. 142 00:10:57,115 --> 00:10:59,034 - வந்து… - நன்றி, பாலி. 143 00:11:10,087 --> 00:11:11,713 டிஸ்பாட்ச் அழைப்புப் பதிவு முடிவுகள்: தகவல்கள் எதுவும் இல்லை 144 00:11:14,258 --> 00:11:15,259 நன்றி, பால். 145 00:11:18,762 --> 00:11:21,764 பாலி, அந்த கால் லாக்ஸ் எதுவுமே வழக்கமா இருக்க வேண்டிய இடத்துல இல்ல. 146 00:11:21,765 --> 00:11:24,100 அது… எல்லாமே காணாமப் போயிருக்கு. 147 00:11:24,101 --> 00:11:27,271 ஆமா, ஒரு சாஃப்ட்வேர் அப்டேட் நடந்தது. 148 00:11:28,397 --> 00:11:29,439 - எனக்குத் தெரியல… - இருங்க… 149 00:11:29,982 --> 00:11:31,108 - நான் உதவுறேன். - நன்றி. 150 00:11:35,279 --> 00:11:38,115 {\an8}கடந்த 24 மணிநேர இரைச்சல் புகார்கள் 151 00:11:40,325 --> 00:11:43,369 "அதிகப்படியான இசை சத்தம், வாசலை மறைத்து நிறுத்தப்பட்ட கார்கள்." 152 00:11:43,370 --> 00:11:45,913 இது பக்கத்து வீட்டுக்காரங்க கொடுத்த புகார், அநேகமா பக்கத்து வீடுகள்ல 153 00:11:45,914 --> 00:11:47,124 - ஒண்ணாத்தான் இருக்கும். - அதுதான். 154 00:11:48,500 --> 00:11:49,501 நன்றி. 155 00:11:53,255 --> 00:11:54,256 பரவாயில்ல. 156 00:11:54,923 --> 00:11:56,133 இந்தா, ஜிம்மி. ஜிம்மி. 157 00:12:03,056 --> 00:12:05,600 இங்கே பாருங்க, தம்பிங்களா. நேத்து ராத்திரி இங்கே ஒரு பார்ட்டி நடந்ததா கேள்விப்பட்டேன். 158 00:12:05,601 --> 00:12:07,351 - ஹலோ. - அது யார் வச்ச பார்ட்டின்னு தெரியுமா? 159 00:12:07,352 --> 00:12:08,520 ஆமா, அது சார்லியோட பார்ட்டி. 160 00:12:09,438 --> 00:12:12,648 அந்த பார்ட்டியில இருந்த சில பசங்கதான் அங்கே இருக்காங்கன்னு நினைக்கிறேன், அதனால… 161 00:12:12,649 --> 00:12:13,733 - அவங்ககிட்ட கேளுங்க. - சரி. 162 00:12:13,734 --> 00:12:15,819 - ஆமா. உங்களுக்கு வேணும்னா அவங்ககிட்டயே கேளுங்க. - உங்க உதவிக்கு நன்றி. 163 00:12:17,279 --> 00:12:19,781 சார்லி, என்னை அந்த மாதிரி கிறுக்குத்தனமா பார்க்காதே. 164 00:12:20,741 --> 00:12:22,367 போடா, அறிவு கெட்டவனே. 165 00:12:24,703 --> 00:12:25,870 தம்பி, நீதான் சார்லியா? 166 00:12:25,871 --> 00:12:27,289 உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா? 167 00:12:27,789 --> 00:12:29,207 எனக்கு உங்களைத் தெரியாதே. 168 00:12:29,208 --> 00:12:31,584 தெரியாதுதான், ஆனா எனக்கு உன் பேர் தெரியும். உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா, ப்ளீஸ்? 169 00:12:31,585 --> 00:12:33,211 - என்ன இது? - ஒண்ணுமில்ல தம்பி, எழுந்து நில்லு. 170 00:12:33,212 --> 00:12:36,297 உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது. நேத்து ராத்திரி நடந்த பார்ட்டியைப் பத்திதான் உன்கிட்ட பேசணும். 171 00:12:36,298 --> 00:12:38,342 நான் 14 வயசுப் பொண்ணு ஒருத்தியைத் தேடிட்டு இருக்கேன், 172 00:12:39,009 --> 00:12:40,969 நீல நிற கண்களோடு, நல்லா வெள்ளையா இருப்பாள். 173 00:12:41,762 --> 00:12:43,095 அவ எல்லார்கிட்டயும் அவ பேரை சாரா 174 00:12:43,096 --> 00:12:45,598 - இல்ல மேக்ஸ்-னு சொல்லியிருக்கலாம். - போச்சுடா. நான் முதல்ல இங்கிருந்து கிளம்பணும். 175 00:12:45,599 --> 00:12:46,807 எனக்கு எப்படித் தெரியும்? 176 00:12:46,808 --> 00:12:49,268 உனக்குத் தெரிய வாய்ப்பிருக்கு, ஏன்னா அது உன்னோட பார்ட்டி, அதனாலதான் உன்கிட்ட கேக்குறேன். 177 00:12:49,269 --> 00:12:50,728 என் பார்ட்டியில நான் நிறைய பொண்ணுங்களைப் பார்த்தேன். 178 00:12:50,729 --> 00:12:53,272 - அது ஒரு பார்ட்டி. - நான் உன்கிட்ட கேக்குறேன். அவளுக்கு 14 வயசு. 179 00:12:53,273 --> 00:12:55,108 அவ குடிச்சிருந்தாள், ராத்திரி 10:00 மணி போல கிளம்பினாள்… 180 00:13:00,322 --> 00:13:02,823 தம்பி, சாரா இல்ல மேக்ஸ்-ன்ற இந்தப் பொண்ணை நீ பாத்தியா? 181 00:13:02,824 --> 00:13:03,991 ஏன் இப்போ விலகிப் போற? 182 00:13:03,992 --> 00:13:05,785 - உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. - இல்ல, எனக்கு இங்கிருந்து போகணும். 183 00:13:05,786 --> 00:13:07,787 - நீங்க யாரைப் பத்தி பேசுறீங்கன்னே தெரியல. - இங்கே வா, தம்பி. 184 00:13:07,788 --> 00:13:09,747 - நான் ஒரு 14 வயசுப் பொண்ணைத் தேடுறேன். - உங்களை எனக்குத் தெரியாது, அங்கிள். 185 00:13:09,748 --> 00:13:11,332 - ஹே, நான் சொல்றதைக் கேளு, தம்பி. - விடுங்க. 186 00:13:11,333 --> 00:13:13,000 என்கிட்ட வராதீங்க, அங்கிள். 187 00:13:13,001 --> 00:13:14,418 எதுக்கு இப்படி ஓடுற, ஹே? 188 00:13:14,419 --> 00:13:15,545 நீ அவளைப் பார்த்தியா? 189 00:13:15,546 --> 00:13:17,839 - யாரை? யாரை? - யாரையா? உனக்கு என்ன காது செவிடா? 190 00:13:17,840 --> 00:13:19,549 சாரா இல்ல மேக்ஸை? 191 00:13:19,550 --> 00:13:20,883 - ஆமா, அவ ஒரு மாதிரி சைக்கோ. - டேமோ, எல்லாம் ஓகேவா? 192 00:13:20,884 --> 00:13:22,426 - நான் போலீஸைக் கூப்பிடவா? - இல்ல, அதெல்லாம் வேண்டாம். 193 00:13:22,427 --> 00:13:23,511 அவதான் உன்னை காயப்படுத்தினாளா? 194 00:13:23,512 --> 00:13:26,889 - நீ அவளைக் காயப்படுத்துனியா? - நான் அவளை காயப்படுத்தல, சரியா? 195 00:13:26,890 --> 00:13:28,182 நான் அவளைக் காயப்படுத்தல. 196 00:13:28,183 --> 00:13:29,600 - அவ அந்த பார்ட்டியில இருந்தாளா? - ஆமா. 197 00:13:29,601 --> 00:13:31,269 - சரி. - நான் அவளைக் காயப்படுத்தல. 198 00:13:31,270 --> 00:13:32,895 - அவ யார் கூட இருந்தா? சரி. - எனக்குத் தெரியாது. 199 00:13:32,896 --> 00:13:34,313 - அவ யார் கூட இருந்தாள்னு தெரியாதா? - தெரியாது. 200 00:13:34,314 --> 00:13:36,399 - அவ எங்க வாழ்றான்னு உன்கிட்டசொன்னாளா? - என்கிட்ட ஏன் சொல்லப் போறாள்? 201 00:13:36,400 --> 00:13:37,651 அவ கிளம்பிப் போறதை நீ பார்த்தியா? 202 00:13:39,987 --> 00:13:42,154 - ஆமா, அவ கிளம்புறதை பார்த்தேன். - நீ என்ன பார்த்த? 203 00:13:42,155 --> 00:13:43,531 அவ அந்த மெயின் ரோடு வழியா நடந்து போனாள். 204 00:13:43,532 --> 00:13:45,700 அங்கிருந்த டெலிஃபோன் பூத்துக்குப் போனா, ஒரு வேன் வந்து அவளை கூட்டிட்டுப் போச்சு. 205 00:13:45,701 --> 00:13:47,035 அவளை யார் கூட்டிட்டுப் போனது? 206 00:13:48,203 --> 00:13:49,246 எனக்குத் தெரியாது. 207 00:13:49,955 --> 00:13:52,290 அவளை யார் கூட்டிட்டு போனதுன்னு… தெரியாது. இருட்டா இருந்தது, நானும் குடிச்சிருந்தேன்… 208 00:13:52,291 --> 00:13:54,375 அவ ஏதாச்சும் உதவி கேட்டு கத்துனாளா? இல்ல தப்பிக்கப் போராடுனாலியா? என்ன நடந்தது? 209 00:13:54,376 --> 00:13:57,254 அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல, அங்கிள். அவளாத்தான் அந்த வேன்ல ஏறிப் போனாள். 210 00:13:58,088 --> 00:13:59,423 யாரும் யாரையும் கட்டாயப்படுத்தல. 211 00:14:00,174 --> 00:14:02,466 சரி. அது என்ன வேன்? அது… என்ன… அந்த வேனைப் பத்தி கொஞ்சம் சொல்லு. 212 00:14:02,467 --> 00:14:03,926 அதன் நிறம், கம்பெனி, மாடல். 213 00:14:03,927 --> 00:14:07,680 எனக்கு தெரியல, அங்கிள். ஃபுல் போதையில இருந்தேன். நான் சரியா பார்க்கல. அங்க ரொம்ப இருட்டா இருந்தது. 214 00:14:07,681 --> 00:14:09,932 வேற ஏதாச்சும்? ஏதாச்சும் ஒரு சின்ன விவரமாவது ஞாபகம் இருக்கா? 215 00:14:09,933 --> 00:14:11,392 இது ரொம்ப, ரொம்ப முக்கியமானது. 216 00:14:11,393 --> 00:14:12,561 எனக்குத் தெரியல. 217 00:14:13,729 --> 00:14:15,146 உன் பேர் என்ன? 218 00:14:15,147 --> 00:14:17,023 - டேமியன். டேமோ. - டேமியன், முழுப் பேர் என்ன? 219 00:14:17,024 --> 00:14:18,275 - டல்லி. - டேமியன் டல்லியா? 220 00:14:18,775 --> 00:14:19,776 ஆமா. டேமோ. 221 00:14:21,820 --> 00:14:22,821 சரி. 222 00:14:52,559 --> 00:14:54,645 இது ஒழுங்கா உப்பி வரல. கேவலமா இருக்கு. 223 00:14:55,312 --> 00:14:56,647 பரவாயில்ல, நான் கொஞ்சம் சாப்பிடுறேன். 224 00:15:02,236 --> 00:15:04,029 யம்மி. ரொம்ப ருசியா இருக்கு. 225 00:15:07,241 --> 00:15:08,659 நான் ஒரு நல்ல அம்மாவா இருந்திருக்கேனா? 226 00:15:11,036 --> 00:15:12,037 ஆமா. 227 00:15:13,830 --> 00:15:14,831 எல்லாரையும் விட சிறந்த அம்மா. 228 00:15:16,250 --> 00:15:17,251 நிஜமாவா? 229 00:16:11,597 --> 00:16:13,515 மேக்ஸ் 230 00:16:18,562 --> 00:16:20,813 எண்களை அறியும் சேவை. யாருடைய பெயர் வேணும், சொல்லுங்க? 231 00:16:20,814 --> 00:16:25,444 ஹாய். எனக்கு போர்ட் மெக்கென்னாவில் இருக்குற டெபோரா ரிட்லியின் நம்பர் வேணும். 232 00:16:26,195 --> 00:16:27,779 டெபோரா ரிட்லி. 233 00:16:29,865 --> 00:16:32,450 டெபோரா ரிட்லிங்கிற பேர்ல எந்தப் பதிவும் இல்லையே. 234 00:16:32,451 --> 00:16:36,038 ஆனா 'ரிட்லிஸ் ஃப்ளவர்ஸ், ஹோம்வேர்ஸ் அண்ட் கிஃப்ட்ஸ்' அப்படின்னு ஒரு கடை இருக்கு. 235 00:16:55,724 --> 00:16:57,683 ஹாய். உங்களுக்கு அது பிடிச்சிருக்கா? 236 00:16:57,684 --> 00:16:59,101 சும்மா பார்த்தேன். 237 00:16:59,102 --> 00:17:01,145 இது எங்க அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும் தெரியுமா? 238 00:17:01,146 --> 00:17:02,396 ஆனா அவங்க எப்பவும் ஒண்ணு சொல்லுவாங்க… 239 00:17:02,397 --> 00:17:03,398 மலர்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் & பரிசுகள் 240 00:17:05,776 --> 00:17:07,235 உங்களுக்கு ஏதாச்சும் வேணும்னா என்கிட்ட கேளுங்க, சரியா? 241 00:17:07,236 --> 00:17:08,237 நன்றி. 242 00:17:17,788 --> 00:17:18,789 - அப்புறம் பார்ப்போம். - பை. 243 00:17:32,553 --> 00:17:33,554 வந்ததுக்கு நன்றி. 244 00:17:34,221 --> 00:17:35,472 பரவாயில்ல, நண்பா. 245 00:17:37,057 --> 00:17:38,140 நீ நல்லா இருக்கியா? 246 00:17:38,141 --> 00:17:39,226 இல்ல, நண்பா. 247 00:17:39,977 --> 00:17:40,978 சரி. 248 00:17:43,689 --> 00:17:47,317 நான் கிட்டத்தட்ட அங்கிருந்த ஒரு பப்புக்கு போய்… 249 00:17:51,989 --> 00:17:53,073 குடிக்கலாம்னு நினைச்சேன். 250 00:17:53,574 --> 00:17:55,450 சரி, ஆனா நீ அப்படிச் செய்யாம இருந்தது ரொம்ப நல்ல விஷயம். 251 00:17:56,952 --> 00:17:59,121 இயன், நீ குடிக்காம இருந்தது நிஜமாவே ரொம்ப நல்ல விஷயம். 252 00:18:00,455 --> 00:18:02,039 நாம ஏதாச்சும் ஒரு மீட்டிங்குக்கு போகலாமா? 253 00:18:02,040 --> 00:18:03,250 மேகி உயிரோடதான் இருக்காள். 254 00:18:04,918 --> 00:18:06,211 நீ என்ன சொல்ற, நண்பா? 255 00:18:06,795 --> 00:18:09,339 நேத்து ராத்திரி அவ ட்ரிபிள் ஜீரோவுக்கு ஃபோன் பண்ணாள்… 256 00:18:12,134 --> 00:18:13,177 அந்த ஃபோனை நான்தான் அட்டெண்ட் பண்னேன். 257 00:18:13,802 --> 00:18:17,139 சரியா ராத்திரி 11 மணிக்கு முன்னாடி. அவ பைபர் ஸ்ட்ரீட்ல இருக்குற அந்த டெலிஃபோன் பூத்ல இருந்தாள். 258 00:18:19,349 --> 00:18:22,226 அவ ரொம்ப பதட்டமா இருந்தாள். அவ… அவ குடிச்சிருந்தாள்னு தோணுது. 259 00:18:22,227 --> 00:18:25,689 அவ குழப்பத்துல இருந்தாள்… 260 00:18:26,773 --> 00:18:27,941 அவளுக்கு… 261 00:18:29,359 --> 00:18:31,069 அவ என்கிட்ட சொன்னா… 262 00:18:32,905 --> 00:18:35,574 "என் பேரு மேக்ஸ்ன்னு நினைக்கிறேன்." 263 00:18:38,368 --> 00:18:41,747 அவளை ஒரு வேனுக்குள்ள கட்டாயப்படுத்தி ஏத்துறதை நேர்ல பார்த்த ஒரு சாட்சியும் கிடைச்சிருக்கான். 264 00:18:45,375 --> 00:18:48,544 - உனக்கு… உனக்கு நிச்சயம் தெரியுமா, நண்பா? - அது அவதான், டான். அது அவளேதான். 265 00:18:48,545 --> 00:18:49,546 சரி. 266 00:18:50,214 --> 00:18:54,176 அவ இத்தனை காலமா இங்கேதான் இருந்திருக்காள். இவ்வளவு வருஷமா. 267 00:18:56,178 --> 00:18:58,180 உனக்குப் புரியுதா? அதே மாதிரி அந்த வக்கிர புடிச்சவனும்… 268 00:18:59,181 --> 00:19:02,893 அவளைக் கடத்துன அந்த ஆளும் இங்கேயேதான் இருந்திருக்கான். கடந்த 11 வருஷமா. 269 00:19:05,145 --> 00:19:06,605 அதனாலதான் என்னால குடிக்க முடியல. 270 00:19:08,607 --> 00:19:09,858 ஏன்னா, நான் அவங்களைத் தப்ப விட்டுட்டேன். 271 00:19:11,068 --> 00:19:14,070 தெரியல, நான் அவங்களைத் தப்ப விட்டது, சில நிமிஷ வித்தியாசத்துலதான் இருக்கும், 272 00:19:14,071 --> 00:19:15,322 இன்னொரு முறை என்னால அந்த தப்பை செய்ய முடியாது. 273 00:19:24,498 --> 00:19:26,958 - ஹலோ. - நாம… நாம கொஞ்சம் நேர்ல சந்திக்கலாமா? 274 00:19:26,959 --> 00:19:28,376 உன்னைப் பார்க்கணுமா, ஏன்? 275 00:19:28,377 --> 00:19:29,503 அது வந்து… 276 00:19:30,629 --> 00:19:33,465 இப்பதான் இயன் ரிட்லி அவனோட பொண்ணு மேக்ஸைப் பத்தி ரொம்ப விசித்திரமான ஒரு விஷயத்தைச் சொன்னான். 277 00:19:34,132 --> 00:19:35,633 ஓ, அப்படியா? அவன் என்ன சொன்னான்? 278 00:19:35,634 --> 00:19:38,177 அவ அவனுக்கு நேத்து ராத்திரி ஃபோன் பண்ணுனதா சொன்னான், 279 00:19:38,178 --> 00:19:42,015 நான் சாராவை அழைச்சிட்டு வந்தேனே, அதே டெலிஃபோன் பூத்ல இருந்துதான் பண்ணியிருக்காள். 280 00:19:52,901 --> 00:19:53,944 ஹலோ? 281 00:19:55,696 --> 00:19:56,947 நீ உன் போட்லதான் இருக்கியா? 282 00:19:57,614 --> 00:19:58,782 என்னால அங்கே வர முடியும். 283 00:20:00,701 --> 00:20:01,702 சரி. 284 00:20:04,454 --> 00:20:05,664 நாம அங்கே சந்திக்கலாமா? 285 00:20:10,794 --> 00:20:11,879 சாரா. 286 00:20:14,047 --> 00:20:16,340 நானும் கொஞ்சம் வெளில போக வேண்டியதிருக்கு. 287 00:20:16,341 --> 00:20:18,467 சரி. எனக்கு ஸ்கூல் ஹோம்வொர்க் பண்ண வேண்டியதிருக்கு. 288 00:20:18,468 --> 00:20:21,137 - அதை நீ மேல உன் ரூம்ல போய் பண்ணு. - ஏன்? 289 00:20:21,138 --> 00:20:23,514 ஏன்னா, நீ வீட்டை விட்டு வெளில போக மாட்டேன்னு என்னால உன்னை நம்ப முடியல, அதான். 290 00:20:23,515 --> 00:20:26,100 - இல்ல, நம்பலாம். நான் வீட்டுக்குள்ளயேதான் இருப்பேன். - சொன்னா கேளு, முதல்ல கிளம்பு. 291 00:20:26,101 --> 00:20:28,395 நீயா தேடிக்கிட்ட வினை இது. நட போலாம். உள்ளே போ, ப்ளீஸ். 292 00:20:29,229 --> 00:20:31,732 உன் அம்மா வர்ற வரைக்கும் உன் ரூம்லேயே இரு. 293 00:20:34,026 --> 00:20:36,111 வருத்தமாதான் இருக்கு, ஆனா வேற வழி இல்ல. 294 00:20:40,324 --> 00:20:41,325 நன்றி. 295 00:20:51,043 --> 00:20:52,252 அப்பா, ப்ளீஸ். 296 00:21:04,389 --> 00:21:07,558 அப்புறம் இயன் வழக்கம் போல சில கேள்விகளைக் கேட்க… 297 00:21:07,559 --> 00:21:08,726 - ம்-ம். - …ஆரம்பிச்சான், 298 00:21:08,727 --> 00:21:12,480 அந்தப் பேச்சோட கடைசியில, அவ தன் பேரு மேக்ஸ்னு சொல்லியிருக்காள். 299 00:21:12,481 --> 00:21:13,732 நீ அவனோட வார்த்தையை நம்புறியா? 300 00:21:15,150 --> 00:21:17,318 இயன் நிலைகுலைஞ்சு போயிருக்கான்றது நிஜம்தான், ஆனா அவன் பொய் சொல்ல மாட்டான். 301 00:21:17,319 --> 00:21:19,403 இப்போ இதுல நான் என்ன பண்ணணும்னு நீ எதிர்பார்க்கிற? 302 00:21:19,404 --> 00:21:20,572 எனக்குத் தெரியல… நான்… 303 00:21:21,490 --> 00:21:23,742 என்ன நடந்துச்சுன்னுதான் நான் புரிஞ்சுக்க முயற்சிக்கிறேன். 304 00:21:24,743 --> 00:21:28,454 - ட்ரிபிள் ஜீரோவுக்கு கால் பண்ணது சாராவா இருந்தா… - சரி. 305 00:21:28,455 --> 00:21:29,665 அவ ஏன் அப்படிப் பண்ணணும்? 306 00:21:31,583 --> 00:21:33,334 அப்புறம் அவ ஏன் தன் பேரு மேக்ஸுன்னு சொல்லணும்? 307 00:21:33,335 --> 00:21:34,628 அவ குடிச்சிருந்தாள். 308 00:21:35,963 --> 00:21:37,421 அவ குடிச்சிருந்தாள். 309 00:21:37,422 --> 00:21:38,924 - ஆமா. சரி. - விஷயம் அவ்வளவுதான். 310 00:21:39,842 --> 00:21:41,759 மத்த எல்லாரையும் விட உனக்கு தான் அது நல்லாவே தெரியும். 311 00:21:41,760 --> 00:21:43,345 சரி, உண்மைதான். 312 00:21:46,723 --> 00:21:51,102 ஆனா, சில பேரு இதை வச்சு ரொம்ப விபரீதமான முடிவுகளுக்கு வரவாய்ப்பிருக்கு. 313 00:21:51,103 --> 00:21:52,145 என்ன மாதிரி? 314 00:21:52,813 --> 00:21:55,274 வந்து, நானும் இதுக்கு முன்னாடி இதப் பத்தி யோசிச்சதே இல்ல. 315 00:21:56,149 --> 00:21:57,150 ஆனா… 316 00:21:58,360 --> 00:22:00,445 சாராவுக்கும், காணாமப்போன அந்தப் பொண்ணுக்கும், 317 00:22:01,738 --> 00:22:03,698 ஒரே வயசுதான் இருக்கும் போல. 318 00:22:03,699 --> 00:22:06,368 அப்புறம் மேக்ஸோட அந்த ஃபோட்டோ, 319 00:22:06,994 --> 00:22:08,953 அவ சின்னக் குழந்தையா இருந்தப்போ எடுத்த ஃபோட்டோக்கள், 320 00:22:08,954 --> 00:22:11,956 அதாவது பேப்பர்ல வந்த ஃபோட்டோக்களைப் பார்த்தா, ரெண்டு பேருக்கும் சில ஒற்றுமைகள் இருக்கு… 321 00:22:11,957 --> 00:22:13,624 சாரா என் பொண்ணுன்னு உனக்கே தெரியும். 322 00:22:13,625 --> 00:22:17,837 அவ பிறந்த அன்னைக்கே உனக்கு ஃபோன் பண்ணி நீ சித்தப்பாவாகிட்டேன்னு நான் சொன்னேனே, 323 00:22:17,838 --> 00:22:21,884 - இல்ல அதை மறக்குற அளவுக்கு போதையில இருந்தியா? - இல்லை, எனக்கு ஞாபகம் இருக்கு. 324 00:22:24,261 --> 00:22:25,637 ஆனா நான் அப்போ வடநாட்டுல இருந்தேன். 325 00:22:26,221 --> 00:22:28,055 அவ பிறக்கும்போது நான் வடநாட்டுல இருந்தேன். 326 00:22:28,056 --> 00:22:31,184 நான் அவளை முதன்முதலா பார்க்கும்போது அவளுக்கு என்ன வயசு? ஒன்பது வயசு இருக்குமா? 327 00:22:31,185 --> 00:22:33,186 இப்போ நீ என்ன சொல்ல வர்ற? நான் ஒரு கடத்தல்காரனா? 328 00:22:33,187 --> 00:22:35,980 என் சொந்தக் குழந்தையையே கடத்திட்டு வந்தேனா? என்னைப் பத்தி இதுதான் உன் எண்ணமா? 329 00:22:35,981 --> 00:22:39,610 இல்ல. நான் என்ன சொல்றேன்னா, நாம இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்திக்கணும், அவ்வளவுதான். 330 00:22:42,613 --> 00:22:43,989 நாம போலீஸ் கிட்ட போறதுதான் நல்லது. 331 00:22:44,573 --> 00:22:46,991 நேத்து ராத்திரி என்ன நடந்துச்சுன்னு அவங்ககிட்ட தெளிவா விளக்கிச் சொல்லலாம். நாம… 332 00:22:46,992 --> 00:22:49,285 இது ஒரு சின்னக் குழப்பம்தான்னு அவங்ககிட்ட சொல்லிடலாம். 333 00:22:49,286 --> 00:22:52,163 வேண்டாம். நாம அப்படி எதுவும் செய்யப் போறதில்ல. நாம போலீஸ் கிட்ட போகக் கூடாது. 334 00:22:52,164 --> 00:22:53,414 அது நடக்கவே நடக்காது. 335 00:22:53,415 --> 00:22:54,917 சரி, அப்போ நாம இத இயன் கிட்டயாவது சொல்லலாமா? 336 00:22:56,460 --> 00:22:57,461 அவன்… 337 00:22:58,879 --> 00:23:02,381 தன்னையே இழந்து நிக்கிறான். அவன் மனசு ரொம்ப உடைஞ்சு போயிருக்கான். நாம அவன்கிட்ட… 338 00:23:02,382 --> 00:23:06,093 அவனை சாரா கூட பேச வச்சா, அவனோட மனபாரம் கொஞ்சம் குறையும்ல. 339 00:23:06,094 --> 00:23:07,470 அதுவும் நடக்கப் போறது இல்ல. 340 00:23:07,471 --> 00:23:09,181 ஹென்றி, நான் உன்னை மதிக்கிறேன். 341 00:23:09,806 --> 00:23:13,268 யாருடையும் துணையில்லாம, தனியாநீ வாழணும்னு நினைக்கிற அந்த வாழ்க்கையை நான் மதிக்கிறேன். 342 00:23:14,186 --> 00:23:17,189 ஆனா இது ரொம்ப ஓவரா இருக்கு. இது ரொம்பவே ஜாஸ்தி. 343 00:23:17,773 --> 00:23:21,360 உனக்கு இயன் கிட்ட பேச விருப்பம் இல்லயா? சரி. ஆனா நான் பேசியே ஆகணும். 344 00:23:22,819 --> 00:23:24,655 இதுதான் நடக்கப் போகுது, டானல்ட். 345 00:23:28,242 --> 00:23:29,743 நீ இந்த விஷயத்தை இத்தோட விட்டுடப் போற. 346 00:23:30,577 --> 00:23:32,287 சரியா? இதப் பத்தி இனி பேசக் கூடாது. 347 00:23:34,331 --> 00:23:38,376 சாராவைப் பத்தியோ இல்ல அந்த டெலிஃபோன் பூத்தைப் பத்தியோ உனக்கு எதுவுமே தெரியாது. 348 00:23:38,377 --> 00:23:42,214 அதப்பத்தி நீ யார்கிட்டயும் மூச்சுக்கூட விடக் கூடாது. யார்கிட்டயும்! 349 00:23:42,756 --> 00:23:45,759 போலீஸ் கிட்டயும் சரி, உன் உயிர்த்தோழன் இயன் ரிட்லி கிட்டயும் சரி. 350 00:23:47,344 --> 00:23:48,345 ஏன் சொல்லக் கூடாது? 351 00:23:54,393 --> 00:23:55,894 நான் ஏன் அப்படிச் செய்யக் கூடாது, ஹென்றி? 352 00:23:59,398 --> 00:24:00,899 ஒருவேளை சாராவை நாம இழக்க வேண்டியிருந்தால், 353 00:24:02,150 --> 00:24:03,318 நாங்க செத்தே போயிடுவோம். 354 00:24:05,237 --> 00:24:06,780 எங்க குடும்பமே மொத்தமா அழிஞ்சுடும். 355 00:24:08,031 --> 00:24:09,408 ஜென்னா செத்துடுவாள். 356 00:24:13,036 --> 00:24:14,204 கடவுளே. 357 00:24:15,581 --> 00:24:18,958 நீ சொல்ற மாதிரி உனக்கு ஜென்னா மேல அக்கறை இருந்தா… எங்க மேல உனக்கு அக்கறை இருந்தா, 358 00:24:18,959 --> 00:24:20,294 அப்போ உனக்கு இந்த விஷயத்துல 359 00:24:21,879 --> 00:24:25,757 எதுவுமே தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு, நீபழையபடி இருந்துடு. 360 00:24:28,886 --> 00:24:29,887 ப்ளீஸ்? 361 00:25:00,167 --> 00:25:01,168 சாரா. 362 00:25:06,340 --> 00:25:07,965 - சாரா. - உனக்கு என்ன வேணும்? 363 00:25:07,966 --> 00:25:09,218 நான் இங்கே மேல இருக்கேன். 364 00:25:10,802 --> 00:25:12,345 நீ மர வீட்டுக்கு வரலையே. 365 00:25:12,346 --> 00:25:14,681 இங்கிருந்து போயிடு. நீ இங்கே வரக் கூடாது. 366 00:25:15,307 --> 00:25:19,227 இரண்டு காரும் வெளில போயிருக்கிறதை பார்த்தேன், இங்கே வர இதுதான் சரியான நேரம்னு நினைச்சேன். 367 00:25:19,228 --> 00:25:20,812 தயவுசெஞ்சு இங்கிருந்து கிளம்புறாயா? 368 00:25:22,689 --> 00:25:23,690 நான்… 369 00:25:25,150 --> 00:25:26,610 உனக்காகக் கொஞ்சம் எலி எலும்புகளைக் கொண்டு வந்திருக்கேன். 370 00:25:27,277 --> 00:25:28,737 இப்போ யார் விசித்திரமான ஆளு? 371 00:25:29,321 --> 00:25:32,115 சரி. அப்போ நான் இத… அப்படியே வெளில தூக்கிப் போட்டுடவா, என்ன? 372 00:25:32,991 --> 00:25:34,242 நான் என் ரூம்குள்ள பூட்டப்பட்டிருக்கேன். 373 00:25:34,243 --> 00:25:35,619 நிஜமாவா? 374 00:25:37,329 --> 00:25:38,705 நேத்து ராத்திரி நடந்த விஷயத்துனாலயா? 375 00:25:39,373 --> 00:25:40,374 வேற எதுக்காக இருக்கப் போகுது? 376 00:25:44,127 --> 00:25:45,837 சமையலறை ஜன்னல் திறந்துதான் இருக்கு. 377 00:25:45,838 --> 00:25:48,173 பின்பக்க வாசல் பக்கத்துல, ரிப்பன் கட்டிய ஒரு சாவி இருக்கும். 378 00:26:11,613 --> 00:26:15,825 இயேசுவை நம் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளும் போது, நாம் ஒரு உறவுக்குள் நுழைகிறோம். 379 00:26:15,826 --> 00:26:19,787 மற்ற எல்லா உறவுகளைப் போலவும், இதிலும் கடமைகள் இருதரப்பிற்கும் பொதுவானவை. 380 00:26:19,788 --> 00:26:21,205 சாரா? 381 00:26:21,206 --> 00:26:22,790 நீ மாடிக்கு வந்துட்டியா? 382 00:26:22,791 --> 00:26:23,958 ஆமா. 383 00:26:23,959 --> 00:26:25,711 இடது பக்கம் திரும்பு. அந்த சுவரைப் பாரு. 384 00:26:26,503 --> 00:26:28,087 இங்கே நிறைய சுவர் இருக்கு. 385 00:26:28,088 --> 00:26:29,590 ரிப்பன் கட்டியிருக்கிற அந்த இடத்தைப் பார். 386 00:26:30,299 --> 00:26:33,051 இடது பக்கத்துல, இடுப்பு உயரத்துல சாவிக்கான ஓட்டை இருக்கும். 387 00:26:39,892 --> 00:26:42,227 ஹாய். 388 00:26:42,936 --> 00:26:44,897 ரூம் நல்லா இருக்கு. 389 00:26:46,064 --> 00:26:47,149 நன்றி. 390 00:26:47,733 --> 00:26:49,400 ஏன் என்னை பார்ட்டியில தனியா விட்டுட்டுப் போன? 391 00:26:49,401 --> 00:26:50,402 நான் அப்படிப் பண்ணல. 392 00:26:51,403 --> 00:26:52,987 நீதான் டேமோ கூட கிளம்பிப் போன. 393 00:26:52,988 --> 00:26:54,238 நான் உன்னைத் தேடினேன். 394 00:26:54,239 --> 00:26:55,532 நானும் உன்னைத் தேடினேன். 395 00:26:57,201 --> 00:26:58,202 நீ உள்ளே வர்றியா? 396 00:27:05,709 --> 00:27:07,251 இதெல்லாம் என்ன? 397 00:27:07,252 --> 00:27:10,088 பூச்சிகள். தோட்டத்துல இருந்து பிடிச்சிட்டு வந்தேன். 398 00:27:11,465 --> 00:27:13,383 உன் பெத்தவங்க அடிக்கடி உன்னை இப்படிப் பூட்டி வைப்பாங்களா? 399 00:27:14,801 --> 00:27:16,136 இதுதான் முதல் முறை. 400 00:27:17,804 --> 00:27:18,805 அப்படித்தான் நினைக்கிறேன். 401 00:27:19,473 --> 00:27:20,557 நீ நினைக்கிறியா? 402 00:27:22,643 --> 00:27:23,644 என்ன? 403 00:27:25,646 --> 00:27:27,147 நீ எப்பவாச்சும் குடிச்சிருக்கியா? 404 00:27:28,732 --> 00:27:29,733 ஆமா. 405 00:27:32,444 --> 00:27:37,366 நிஜத்துல நடக்காத விஷயங்கள் ஏதாச்சும் உனக்கு ஞாபகம் வந்திருக்கா? 406 00:27:38,534 --> 00:27:41,245 என்னது? பிரமை மாதிரியா? 407 00:27:43,330 --> 00:27:44,331 இல்ல. 408 00:27:45,707 --> 00:27:47,000 ஆனா, நான் என்ன சொல்றேன்னா, 409 00:27:47,918 --> 00:27:50,212 நல்லா குடிச்சு போதையில இருந்தா, ஒருவேளை அப்படி நடக்கலாமோ? 410 00:27:52,130 --> 00:27:53,131 நேத்து ராத்திரி, 411 00:27:54,341 --> 00:27:59,346 உன்கிட்ட காட்டுன நோட்டீஸ்ல இருக்க பொண்ணைப் பத்தின சில விஷயங்கள் ஞாபகம் வந்த மாதிரி இருந்தது. 412 00:28:00,472 --> 00:28:01,473 மேக்ஸ். 413 00:28:02,599 --> 00:28:06,603 உன்னைத் தேடிட்டு இருந்த அந்தப் பெரியவர் கூட மேக்ஸ்ன்ற பேரைச் சொன்னார். 414 00:28:07,688 --> 00:28:08,939 எந்தப் பெரியவர்? 415 00:28:09,648 --> 00:28:13,526 அவர் ஸ்கேட் பார்க்ல இருந்தார். சார்லிகிட்டயும் டேமோகிட்டயும் தகராறு பண்ணிட்டு இருந்தார். 416 00:28:13,527 --> 00:28:15,320 ராத்திரி நடந்த பார்ட்டியைப் பத்தி விசாரிச்சிட்டு இருந்தார். 417 00:28:16,488 --> 00:28:20,575 அவர் சாராவைத் தேடுறதா சொன்னார். அப்புறம் மேக்ஸுன்னும் சொன்னார். 418 00:28:20,576 --> 00:28:22,619 என்னை எதுக்காக யாரோ ஒருத்தர் தேடணும்? 419 00:28:25,038 --> 00:28:27,916 மேக்ஸை எதுக்காகத் தேடணும்? அவதான் இறந்துட்டாளே. 420 00:28:28,792 --> 00:28:29,835 எனக்குத் தெரியல. 421 00:28:37,885 --> 00:28:39,636 எனக்கு அந்த நோட்டீஸை இன்னொரு முறை பார்க்கணும். 422 00:28:41,597 --> 00:28:43,140 நான் உனக்காக ஒண்ணு எடுத்துட்டு வர்றேன். 423 00:28:44,141 --> 00:28:45,850 ஆனா அதனால என்ன நிரூபணமாகப் போகுது? 424 00:28:45,851 --> 00:28:47,811 எனக்கு அவ முகத்தை ஒரு முறைப் பார்க்கணும். 425 00:28:57,821 --> 00:28:59,990 ஆனால் நம்மைப் படைத்தவருக்கு நாம் எதைக் காணிக்கையாகத் தருகிறோம்? 426 00:29:00,991 --> 00:29:04,160 முன்பெல்லாம் பலியிடுவதும், உடலை வருத்திக்கொள்வதும் வழக்கமாக இருந்தது. 427 00:29:04,161 --> 00:29:06,330 இப்போது அதெல்லாம் மறைந்துவிட்டது. 428 00:29:10,292 --> 00:29:14,420 அப்பா வந்துட்டார். போ. என்னை உள்ளே பூட்டிடு. சீக்கிரம். நாளைக்கு மர வீட்டுல வந்து பாரு, சரியா? 429 00:29:14,421 --> 00:29:15,464 சரி, சரி. 430 00:30:09,226 --> 00:30:10,227 ஜென்? 431 00:30:11,436 --> 00:30:12,437 ஜென்னா? 432 00:30:13,021 --> 00:30:14,022 ஜென்? 433 00:30:15,607 --> 00:30:16,733 வீட்டுல இருக்கியா? 434 00:30:24,992 --> 00:30:26,242 ஹேய். 435 00:30:26,243 --> 00:30:27,244 ஹாய், அப்பா. 436 00:30:31,081 --> 00:30:32,457 உன் அம்மா வந்துட்டாங்களா? 437 00:30:33,041 --> 00:30:34,042 இன்னும் இல்ல. 438 00:30:36,086 --> 00:30:37,629 நான் கிளம்புனதுல இருந்து நீ என்ன பண்ணிட்டு இருந்த? 439 00:30:38,839 --> 00:30:41,383 வந்து, என்னோட ஆங்கிலப் பாடத்தைப் படிச்சிட்டு இருந்தேன். 440 00:30:45,637 --> 00:30:46,638 நல்ல பொண்ணு. 441 00:30:53,604 --> 00:30:54,813 நான் கீழதான் இருப்பேன். 442 00:30:56,023 --> 00:30:57,107 சரி. 443 00:31:05,532 --> 00:31:09,077 எனக்குத் தெரியல. ஒருவேளை என் பேர் மேக்ஸா இருக்கலாம். எனக்கு எதுவும் ஞாபகம் இல்ல. 444 00:31:09,578 --> 00:31:11,537 - சாரா. - சாரா. 445 00:31:11,538 --> 00:31:14,833 எனக்குத் தெரியல. ஒருவேளை என் பேர் மேக்ஸா இருக்கலாம். எனக்கு ஞாபகம் இல்ல… 446 00:31:24,009 --> 00:31:25,886 அப்பா, நீங்க சுத்தி ஓடி வரணும்… 447 00:31:26,637 --> 00:31:29,598 ஆமா. 448 00:31:30,849 --> 00:31:35,062 என் பேரு மேக்ஸ், எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு "ஐ லைக் டு சிங்." "ஐ லைக்"… 449 00:31:35,687 --> 00:31:39,191 என் பேரு மேக்ஸ், எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு "ஐ லைக் டு சிங்." 450 00:31:40,400 --> 00:31:42,068 - சாரா. - சாரா. 451 00:31:42,069 --> 00:31:45,029 எனக்குத் தெரியல. ஒருவேளை என் பேர் மேக்ஸா இருக்கலாம். எனக்கு எதுவும் ஞாபகம் இல்ல. 452 00:31:45,030 --> 00:31:46,906 எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு "ஐ லைக் டு சிங்." 453 00:31:46,907 --> 00:31:49,283 - என் பேரு மேக்… என் பேரு மேக்ஸ்… - எனக்குத் தெரியல… எனக்குத் தெரியல. 454 00:31:49,284 --> 00:31:51,619 - ஒருவேளை மேக்ஸா இருக்கலாம். - …எனக்கு பிடிச்ச பாட்டு… "ஐ லைக் டு சிங்." 455 00:31:51,620 --> 00:31:53,371 - மேகி? - "ஐ லைக் டு ஸிங்க்." 456 00:31:53,372 --> 00:31:55,665 நீ மேகின்னு சொன்னியா? மேகி, அது நீதானா? 457 00:31:55,666 --> 00:31:58,125 ஆமா, எனக்கு எதுவுமே ஞாபகம் வர மாட்டேங்குது. 458 00:31:58,126 --> 00:31:59,293 மேகி? 459 00:31:59,294 --> 00:32:02,505 ஆமா, எனக்கு எதுவுமே ஞாபகம் வர மாட்டேங்குது. 460 00:32:02,506 --> 00:32:03,589 மேகி? 461 00:32:03,590 --> 00:32:04,633 நான்தான் உன் அப்பா பேசுறேன். மேகி? 462 00:32:05,551 --> 00:32:06,969 மேகி, என்கிட்ட பேசுமா, ப்ளீஸ். 463 00:32:07,553 --> 00:32:08,554 மேகி? 464 00:32:09,429 --> 00:32:10,638 மேகி, ப்ளீஸ் அங்கேயே இரு. 465 00:32:10,639 --> 00:32:13,015 அங்கேயே இரு, சரியா? இதோ நான் உன்னைத் தேடி வந்துட்டே இருக்கேன். உன் அப்பா, இதோ வந்திடுறேன். 466 00:32:13,016 --> 00:32:15,602 ஒண்ணும் இல்ல, ஒண்ணும் இல்ல. 467 00:32:23,402 --> 00:32:25,319 ஓ, ஒண்ணும் இல்லடா, குட்டிமா. 468 00:32:25,320 --> 00:32:26,530 ஒண்ணும் பிரச்சனை இல்லடா. 469 00:32:28,699 --> 00:32:30,576 ஒண்ணும் பிரச்சனை இல்லடா. ஓ, குட்டிமா… 470 00:32:32,160 --> 00:32:33,996 நான் நினைச்சது… 471 00:32:34,580 --> 00:32:38,834 என்னை மன்னிச்சிடு. உன்னை நான் கைவிட்டுட்டதா உணர்றேன், செல்லம். 472 00:32:44,882 --> 00:32:47,759 உங்க அப்பா செஞ்ச அந்தச் சின்னச் சின்ன வீட்டு கைவினைப் பொருட்கள். 473 00:32:49,011 --> 00:32:50,220 உனக்கு ஞாபகம் இருக்கா? 474 00:32:51,388 --> 00:32:52,763 நீ அப்போ ரொம்ப சின்னக் குழந்தை. 475 00:32:52,764 --> 00:32:53,765 ஜென்னா? 476 00:32:55,726 --> 00:32:56,727 ஜென்? 477 00:33:00,189 --> 00:33:02,107 - ஜென்னா. - எல்லாமே தப்பாப் போயிடுச்சு. 478 00:33:09,281 --> 00:33:10,741 எனக்குரியது எனக்கு வேணும். 479 00:33:12,451 --> 00:33:13,452 வந்து, உனக்கு… 480 00:33:14,077 --> 00:33:17,413 உனக்குத் தேவையான எல்லாமே அந்த வீட்டுல இருக்கு. எல்லாமே உனக்குரியதுதான். 481 00:33:17,414 --> 00:33:20,417 இல்ல, எனக்கு என் துக்கம் வேணும். அப்புறம், எனக்கு என் குற்ற உணர்வும் வேணும். 482 00:33:21,710 --> 00:33:22,711 சரி. 483 00:33:26,798 --> 00:33:27,799 சரி. 484 00:33:29,176 --> 00:33:32,054 நீதான் என் உயிர், ஜென்னா. நீதான் என் உயிர். 485 00:33:33,055 --> 00:33:34,723 நாம இதைப் பத்தி 486 00:33:35,891 --> 00:33:37,183 வீட்டுக்குப் போய் பேசலாமா? 487 00:33:37,184 --> 00:33:40,270 போய்… ஒரு நல்ல டீ குடிச்சிட்டே இதப் பத்திப் பேசலாமா? 488 00:33:54,159 --> 00:33:55,160 சாரா. 489 00:33:55,661 --> 00:33:57,329 - சொல்லுங்க. - நீ எங்கே போற? 490 00:33:58,413 --> 00:33:59,497 ஏன்? 491 00:33:59,498 --> 00:34:00,999 நீ ஷூ-வெல்லாம் போட்டிருக்க. எங்கே கிளம்பிட்ட? 492 00:34:02,334 --> 00:34:03,460 என்னோட மர வீட்டுக்கு. 493 00:34:05,254 --> 00:34:07,129 உன் அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, நான் அவளை கவனிச்சுக்கணும். 494 00:34:07,130 --> 00:34:09,506 அதனால நீ போய் சமையலறையை சுத்தம் பண்ணு, ப்ளீஸ். 495 00:34:09,507 --> 00:34:11,091 இல்லை, இது நியாயமே இல்ல. 496 00:34:11,092 --> 00:34:12,761 இப்போ எதுக்கு நீ மர வீட்டுக்குப் போற? 497 00:34:14,012 --> 00:34:15,472 உன் நண்பனைப் பார்க்கப் போறியா? 498 00:34:17,431 --> 00:34:19,101 நீ உன் நண்பனைப் பார்க்கத்தானே போற? 499 00:34:22,228 --> 00:34:23,480 உள்ளே போ, ப்ளீஸ். 500 00:34:26,065 --> 00:34:27,067 உள்ளே போ. 501 00:34:30,779 --> 00:34:32,864 இல்லை, அப்பா. நீங்க இப்படி… 502 00:34:40,038 --> 00:34:41,790 சாரா! சாரா, எனக்குக் கிடைச்சிருச்சு. 503 00:34:44,293 --> 00:34:45,918 ஹேய், ஹேய், ஹேய். என்னை விடுங்க! 504 00:34:49,422 --> 00:34:51,883 - நீ நேத்து எங்க வீட்டுக்கு வந்திருக்க. - என்னது? நான் வரலையே. 505 00:34:51,884 --> 00:34:53,426 - என்கிட்ட பொய் சொல்லாதே. - நான் பொய் சொல்லல. 506 00:34:53,427 --> 00:34:54,428 என்கிட்ட பொய் சொல்லாதன்னு சொன்னேன்! 507 00:34:59,933 --> 00:35:01,434 மார்கரெட் "மேக்ஸ்" ரிட்லியின் வாழ்வைப் போற்றும் 508 00:35:01,435 --> 00:35:03,061 அஞ்சலிக் கூட்டம் மாலை 6:30 மணி, வரும் சனிக்கிழமை 509 00:35:06,982 --> 00:35:08,441 சாரா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லச் சொன்னாள். 510 00:35:08,442 --> 00:35:10,735 இனிமே நீ இந்த மர வீட்டுக்கு வரக்கூடாதுன்னு அவ நினைக்கிறாள். 511 00:35:10,736 --> 00:35:12,945 உன்னோட பொய்களால அவ வெறுத்துப் போயிருக்கா, உண்மையைச் சொல்லப்போனா நானும்தான். 512 00:35:12,946 --> 00:35:15,199 அதனால மறுபடியும் இங்கே வரமாட்டேன்னு நினைக்கிறேன், சரியா? 513 00:35:15,908 --> 00:35:16,909 புரியுதா? 514 00:35:18,035 --> 00:35:19,328 ஒருவேளை மீறி வந்தேன்னா, 515 00:35:20,829 --> 00:35:22,581 அப்புறம் நீ பெரிய சிக்கல்ல மாட்டிப்ப. 516 00:35:45,229 --> 00:35:47,772 எனக்குத் தெரியல. ஒருவேளை என் பேர் மேக்ஸா இருக்கலாம். 517 00:35:47,773 --> 00:35:48,941 எனக்குத் தெரியல. 518 00:35:49,775 --> 00:35:51,484 அது அவதான்னு நான் எப்படித் தெரிஞ்சுக்கிறது? 519 00:35:51,485 --> 00:35:54,820 உனக்குக் கேக்குற அந்த சத்தத்துல மட்டும் கொஞ்சம் கவனத்தைச் செலுத்து, சரியா? 520 00:35:54,821 --> 00:35:56,280 அதுக்கப்புறம் அவ என்ன சொல்றாள்னு கவனி. 521 00:35:56,281 --> 00:35:57,866 நான்தான் உன் அப்பா பேசுறேன். மேகி. 522 00:35:59,952 --> 00:36:01,370 …அப்பா, இதோ வந்திடுறேன். 523 00:36:02,287 --> 00:36:03,621 பின்னணியில நிறைய சத்தம் கேக்குது, 524 00:36:03,622 --> 00:36:05,666 அவ அந்த ரிசீவரை சரியா வச்சுப் பேசல. 525 00:36:12,172 --> 00:36:13,382 என்னால முடிஞ்ச வரைக்கும் தெளிவுபடுத்தியிருக்கேன். 526 00:36:17,427 --> 00:36:19,262 ஓ, ஒண்ணும் இல்லடா, குட்டிமா. 527 00:36:19,263 --> 00:36:20,264 ஒண்ணும் பிரச்சனை இல்லடா. 528 00:36:20,973 --> 00:36:22,849 அவ என்ன சொல்றாள்னு என்னால இன்னும் புரிஞ்சுக்க முடியல. 529 00:36:22,850 --> 00:36:25,018 இதுக்கு மேல என்னால எதுவும் செய்ய முடியாது, அப்பா. அது… 530 00:36:25,519 --> 00:36:26,894 நிறுத்து, நிறுத்து, நிறுத்து. 531 00:36:26,895 --> 00:36:29,063 ஒரு பத்து செகண்ட் ரீவைண்ட் பண்ணி, சத்தத்தைக் கூட்டு. 532 00:36:29,064 --> 00:36:30,482 முழுசா கூட்டு. சத்தத்தை நல்லா கூட்டு. 533 00:36:37,948 --> 00:36:39,241 மறுபடியும் ப்ளே பண்ணு. 534 00:36:47,666 --> 00:36:48,792 மறுபடியும் ப்ளே பண்ணு. 535 00:37:04,683 --> 00:37:06,601 {\an8}கடத்தப்பட்டாள்! மூன்று வயது சிறுமி மார்கரெட் ரிட்லி 536 00:37:06,602 --> 00:37:08,061 {\an8}தன் வீட்டிலிருந்து கடத்தப்பட்டாள். மேகி எங்கே? 537 00:37:09,938 --> 00:37:11,023 இயன் 538 00:37:13,317 --> 00:37:15,277 அடச்சே… 539 00:37:26,496 --> 00:37:27,580 சொல்லு, நண்பா. 540 00:37:27,581 --> 00:37:28,916 ஹேய், டானி, எப்படி இருக்கா? 541 00:37:29,583 --> 00:37:31,001 நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? 542 00:37:32,085 --> 00:37:33,586 ஆமா, நான் ஒண்ணும் அவ்வளவு நல்லா இல்ல, நண்பா. 543 00:37:33,587 --> 00:37:36,381 நீ இன்னைக்கு காலையில இந்த மீட்டிங்குக்கு போறியான்னு உறுதிப்படுத்தலாம்னு ஃபோன் பண்ணேன். 544 00:37:38,759 --> 00:37:40,594 ஓ, ஆமா. 545 00:37:42,471 --> 00:37:44,348 - என்ன? - இன்னைக்கு நான்தான் தலைமை தாங்கியிருக்கணும். 546 00:37:45,724 --> 00:37:46,892 தெரியும், அதனாலதான் ஃபோன் பண்ணேன். 547 00:37:47,601 --> 00:37:51,939 எனக்கு உடம்பு சரியில்ல. அதனால… நான் இன்னைக்கு வராம விட்டுடலாம்னு இருக்கேன். 548 00:37:52,439 --> 00:37:53,941 - நிஜமாவா? - ஆமா. 549 00:37:55,150 --> 00:37:57,152 பரவாயில்ல, நண்பா, நானே உன்னை பார்க்க அங்கே வரட்டுமா, பரவாயில்லையா? 550 00:37:57,736 --> 00:37:59,154 என்னைப் பார்க்க இங்க வர்றியா? 551 00:38:00,656 --> 00:38:01,657 ஆமா. 552 00:38:03,659 --> 00:38:05,535 டானி, என் நிலைமை சரியில்ல, நண்பா. 553 00:38:05,536 --> 00:38:07,996 நான் நிஜமாவே ஒரு ஒயின் ஷாப்புக்கு எதிர்லதான் உட்கார்ந்திருக்கேன், சரியா? 554 00:38:09,331 --> 00:38:10,415 சரி. 555 00:38:13,377 --> 00:38:16,713 நான் வேணும்னா உன்னை அந்த… சர்ச் ஹால்ல வந்து பார்க்கிறேன். 556 00:38:17,256 --> 00:38:18,257 சரி. 557 00:38:19,341 --> 00:38:21,509 - சரியா? - நன்றி, நண்பா. ரொம்ப சந்தோஷம். 558 00:38:21,510 --> 00:38:23,095 பரவாயில்ல. 559 00:38:23,679 --> 00:38:25,013 - அங்கே பார்க்கலாம். - சரி. 560 00:39:17,733 --> 00:39:18,734 மேக்ஸ்? 561 00:39:56,730 --> 00:39:58,106 சரி, நன்றி. 562 00:39:58,774 --> 00:40:01,026 சரி நண்பர்களே, சூப்பர். தொடர்ந்து எல்லாரும் செய்யுங்க. 563 00:40:01,652 --> 00:40:04,154 தொடர்ந்து செய்யுங்க. தொடர்ந்து முயற்சி பண்ணுங்க. சரியா? 564 00:40:04,655 --> 00:40:05,656 நன்றி, நண்பர்களே. 565 00:40:15,666 --> 00:40:17,167 - ஹேய். - இயன், ஹேய். 566 00:40:17,876 --> 00:40:20,002 நாங்க இப்போ… இப்போதான் மீட்டிங்கை முடிக்கப் போறோம். 567 00:40:20,003 --> 00:40:21,630 நான் என் கருத்துக்களைப் பகிர்ந்துக்க ரொம்ப லேட்டா வந்துட்டேனா? 568 00:40:23,382 --> 00:40:25,050 அடுத்த முறை வரைக்கும் கொஞ்சம் காத்திருக்க முடியுமா? 569 00:40:25,676 --> 00:40:29,387 எனக்கு காத்திருக்கிறதுல பிரச்சனையில்ல. ஒருத்தர் தன் கருத்தை சொல்ல நினைச்சா, தாராளமா சொல்லலாம். 570 00:40:29,388 --> 00:40:30,888 அது பரவாயில்லையா? உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லயே? 571 00:40:30,889 --> 00:40:31,890 யாருக்கும் பிரச்சனை இல்லயே? 572 00:40:32,641 --> 00:40:34,977 - சீக்கிரம் முடிச்சிடுவேன். - சரி. இயன் இப்போ தன் கருத்துக்களை பகிர்ந்துப்பான். 573 00:40:36,228 --> 00:40:38,896 - மன்னிச்சிடு, நண்பா. நான் கிளம்பணும். - இல்ல, பரவாயில்ல. பரவாயில்ல. 574 00:40:38,897 --> 00:40:40,440 ஹேய். உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல. 575 00:40:43,026 --> 00:40:44,735 அனைவருக்கும் வணக்கம். என் பேரு இயன், நான் ஒரு குடிகாரன். 576 00:40:44,736 --> 00:40:46,113 ஹாய், இயன். 577 00:40:50,033 --> 00:40:53,036 ஆக, ஆமா. இந்தக் கூட்டமைப்புதான் என் உயிரைக் காப்பாத்துச்சு. 578 00:40:56,748 --> 00:40:59,042 அதுக்குக் காரணம் என்னன்னு நான் நினைக்கிறேன்னா… 579 00:41:02,838 --> 00:41:05,549 உங்க எல்லார் முன்னாடியும் என்னால எனக்குள்ளேயே பொய் சொல்லிக்க முடியாது… 580 00:41:07,885 --> 00:41:11,680 ஏன்னா ஒரு குடிகாரன் தனக்குத்தானே சொல்ற எல்லா பொய்களையும் நீங்க எல்லாரும் ஏற்கனவே கேட்டிருப்பீங்க. 581 00:41:12,598 --> 00:41:13,806 சரிதானே? 582 00:41:13,807 --> 00:41:15,142 கண்டிப்பா. ஆமா. 583 00:41:15,726 --> 00:41:18,144 அதனாலதான் இது இவ்வளவு நல்லா பயனளிக்குது, இல்லயா? 584 00:41:18,145 --> 00:41:19,396 அதுக்குக் காரணம்… 585 00:41:21,273 --> 00:41:22,441 நேர்மைதான். 586 00:41:23,609 --> 00:41:24,984 ஆமா, நண்பா. 587 00:41:24,985 --> 00:41:26,612 நான் உங்க எல்லாரையும் நம்புறேன். 588 00:41:28,071 --> 00:41:30,198 நண்பா, நாங்க எப்போதும் உனக்குத் துணையா இருப்போம். 589 00:41:30,199 --> 00:41:31,449 ஆமா. 590 00:41:31,450 --> 00:41:34,286 நன்றி. ஆமா, நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா… 591 00:41:36,955 --> 00:41:38,165 இன்னைக்கு வரைக்கும்… 592 00:41:40,459 --> 00:41:42,044 ஏன்னா இன்னைக்கு எனக்கு ஒரு விஷயம் தெரிய வந்துச்சு… 593 00:41:44,296 --> 00:41:47,674 நான் யாரை ரொம்ப சார்ந்து இருந்தேனோ, 594 00:41:48,842 --> 00:41:50,302 யாரை நான் ரொம்ப மதிச்சேனோ… 595 00:41:53,055 --> 00:41:54,681 அவன் என்கிட்ட பொய் சொல்லிட்டு இருந்திருக்கான். 596 00:41:56,850 --> 00:41:57,893 அப்புறம்… 597 00:41:58,644 --> 00:42:00,270 நான் எனக்குள்ளேயே தொடர்ந்து கேட்டுட்டே இருக்கேன்… 598 00:42:02,564 --> 00:42:04,942 "அவன் ஏன் அப்படிப் பண்ணுனான்?" 599 00:42:08,362 --> 00:42:12,824 நான் அவ்வளவு நேசிச்ச ஒருத்தர்… 600 00:42:16,703 --> 00:42:19,122 இவ்வளவு முக்கியமான ஒரு விஷயத்தைப் பத்தி என்கிட்ட ஏன் பொய் சொல்லணும்? 601 00:42:26,338 --> 00:42:27,965 அதத்தான் நான் தெரிஞ்சுக்க விரும்புறேன். 602 00:42:32,511 --> 00:42:34,012 அத நான் கண்டிப்பா கண்டுபிடிப்பேன். 603 00:43:41,079 --> 00:43:43,081 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்