1 00:00:14,680 --> 00:00:17,440 டெட்ராயிட் - யுனைடெட் ஸ்டேட்ஸ் 2 00:00:18,080 --> 00:00:19,520 லாஸ் வேகஸ் - லாஸ் ஏஞ்சலீஸ் 3 00:00:20,240 --> 00:00:22,000 கரீபியன் கடல் - வெனிசுயேலா- கயானா- பொகோட்டா - கொலம்பியா- பெரு 4 00:00:22,640 --> 00:00:24,800 பீஜிங் - சீனா - ட்ஷாங்கிங் 5 00:00:25,320 --> 00:00:27,960 உலன்படார் - மங்கோலியா 6 00:00:28,480 --> 00:00:31,040 காஸ்பியன் கடல் -ஜார்ஜியா - டிபிலீசி - அஸர்பெய்ஜான் - பாகு 7 00:00:31,280 --> 00:00:33,720 பாரிஸ் - ஃப்ரான்ஸ் - போர்க் சென்ட் மாரிஸ் 8 00:00:34,040 --> 00:00:36,360 யுனைடெட் கிங்டம் - ஆக்ஸ்ஃபோர்ட்ஷைர் - லண்டன் 9 00:00:36,440 --> 00:00:38,320 ஜி டி தி க்ராண்ட் டூர் 10 00:00:38,400 --> 00:00:40,360 வேல்ஸ் லண்டன் 11 00:00:41,760 --> 00:00:44,600 லிங்கன் 12 00:00:44,880 --> 00:00:47,440 ஸ்காட்லாண்ட் 13 00:00:47,880 --> 00:00:50,680 ஸ்வீடன் - ஆஸ்லோ - ஸ்டாக்ஹோம் 14 00:00:51,960 --> 00:00:54,760 தி க்ராண்ட் டூர் 15 00:00:58,800 --> 00:01:00,600 -ஹேய்! -ஹலோ, அனைவருக்கும்! 16 00:01:01,120 --> 00:01:01,960 ஹலோ. ஹலோ. 17 00:01:02,040 --> 00:01:03,600 -நல்லா இருக்கீங்களா? -நாங்க நலம். 18 00:01:03,680 --> 00:01:05,240 என்ன ஒரு வியப்பு. 19 00:01:07,600 --> 00:01:10,680 ரொம்ப நன்றி. மிக்க நன்றி. 20 00:01:10,760 --> 00:01:12,760 -அதே. நன்றி. -நன்றி. 21 00:01:14,640 --> 00:01:16,680 ரொம்ப நன்றி. 22 00:01:16,760 --> 00:01:20,120 வரவேற்கிறோம், இந்த வார காட்சியில் வருவது... 23 00:01:22,000 --> 00:01:24,920 அப்பி பனியில் ஒருக்களித்து, ஒரு 911 டர்போவில். 24 00:01:25,880 --> 00:01:29,400 ரிச்சர்ட் ஜிம் கிளார்க்கின் அழகான லோட்டஸ் 25ஐ ஓட்டுகிறான். 25 00:01:30,640 --> 00:01:32,840 விழுந்தே இருப்பேன். 26 00:01:35,720 --> 00:01:38,480 அது பார்க்க நல்ல காட்சியாகவே இருக்கு. 27 00:01:38,560 --> 00:01:39,880 ஆமாம். 28 00:01:40,640 --> 00:01:43,200 இவை எல்லாம்தான் வரப் போகின்றன. இப்போ... 29 00:01:43,280 --> 00:01:46,240 கொஞ்சம் பொறு, அதாவது ஹொவ்வர்டும், ஏட்ரியனும் வரவில்லை என அர்த்தமா? 30 00:01:46,320 --> 00:01:47,160 இல்லை. 31 00:01:48,080 --> 00:01:48,920 நேரம் இல்லை. 32 00:01:49,320 --> 00:01:51,800 நாம் நிஜத்தில் ஃபிரெஞ்சுடன் ஆரம்பிக்கிறோம். 33 00:01:51,880 --> 00:01:55,160 அவங்க அடிக்கடி பந்தயக் காரை உருவாக்குவதில்லை. ஆனா, 34 00:01:55,240 --> 00:01:57,200 அப்படி அவங்க செய்தால், யாருமே வாங்குவதில்லை. 35 00:01:58,000 --> 00:02:01,280 முதலில் வெஞ்சுரி அட்லாண்டிக் 36 00:02:01,360 --> 00:02:04,640 அதுக்கு அப்புறம் மேட்ரா முரேனா 37 00:02:04,720 --> 00:02:07,280 அதன் பிறகு சிம்கா ஸ்போர்ட் வந்தது. 38 00:02:07,400 --> 00:02:11,760 அவை எல்லாமே இப்போ பழங்கதை. 39 00:02:11,840 --> 00:02:14,600 ஆமாம், ஆமாம், ஆனால், நீ வசதியா, 40 00:02:14,720 --> 00:02:16,800 மிகச் சிறந்த ஃபிரெஞ்ச் கார் தயாரிப்பாளரை மறந்து விட்டாய். 41 00:02:16,880 --> 00:02:18,880 அதாவது, காற்றில் பரவும் பிளேக் நோயில் சிறப்பானதை சொல்வது போல. 42 00:02:19,440 --> 00:02:21,520 -அதில் எது சிறப்பானது? -வேண்டாம். 43 00:02:21,600 --> 00:02:24,080 அதெல்லாம் இல்லை. ஒரு ஃபிரெஞ்ச் தயாரிப்பாளர் தொடர்ந்து 44 00:02:24,160 --> 00:02:25,520 நல்ல காரைத் தயாரித்து வருகிறார். 45 00:02:25,600 --> 00:02:28,880 அவர்கள் ஒரு புதிய ஒன்றை தயாரித்து, அதை நான் சோதித்துக் கொண்டிருக்கேன். 46 00:02:39,720 --> 00:02:42,360 அதுதான் ஏ110 என்று அழைக்கப் படுவது. 47 00:02:42,440 --> 00:02:46,400 அது, தேவையானதை குறி பார்த்து அடிக்கத் தெரிந்த 48 00:02:46,440 --> 00:02:49,240 ஃபிரெஞ்சு கார் நிறுவனம் ஆல்பைன் தயாரித்ததாகும். 49 00:02:51,320 --> 00:02:57,280 அசல் ஏ110, 1973 உலக ராலி பந்தய சாதனையாளர் போட்டியில் வென்றது ஒரு உதாரணம். 50 00:02:58,280 --> 00:03:01,480 இந்தக் கார்தான் புதிய காருக்கு, அதன் பெயரை மட்டுமல்ல, 51 00:03:02,120 --> 00:03:04,480 அதன் உருவத்தையும் தந்திருக்கிறது. 52 00:03:14,760 --> 00:03:20,000 எனவே நமக்குக் கிடைத்திருப்பது போர்ஸே கேமேன் மற்றும் ஆடி டிடிஐ 53 00:03:20,080 --> 00:03:23,800 இலக்காக வைத்த ஓர் அப்பழுக்கில்லாத பந்தயக் கார். 54 00:03:25,320 --> 00:03:29,640 ஆனால், இதில்தான் பிரச்சினையே ஆரம்பிக்குது. 55 00:03:31,160 --> 00:03:36,520 அதாவது, இந்த ஆல்பைன் அறிமுக வடிவத்தின் விலை, 51,000 பவுண்ட். 56 00:03:36,640 --> 00:03:40,080 ஐம்பத்து ஓராயிரம் பவுண்ட். இன்னொரு ஆயிரம் பவுண்ட் போட்டால், 57 00:03:40,160 --> 00:03:42,640 நீங்க டிடி ஆர் எஸ்ஐ வாங்கலாம். 58 00:03:42,720 --> 00:03:45,040 சென்ற பருவத்தில் கிளார்க்சன் ஓட்டியது அதைத்தான், 59 00:03:46,680 --> 00:03:49,360 அது சக்தி வாய்ந்தது, வேகமானது. 60 00:03:50,800 --> 00:03:54,680 நீங்க 51,000 பவுண்ட் கொடுத்து வாங்கக் கூடிய போர்ஸே கேமேன், 61 00:03:54,760 --> 00:03:57,040 அதுவும் மிகவும் சக்தி வாய்ந்தது, அதல்லாமல் அது போர்ஸே, 62 00:03:57,120 --> 00:03:59,120 இதுவோ, ஆல்பைன். 63 00:03:59,680 --> 00:04:02,320 குடித்துக் கொண்டு பேசும் போது இதை விளக்க வேண்டி இருக்கும். 64 00:04:06,320 --> 00:04:09,040 இதன் என்ஜினும் கூட கொஞ்சம் மந்தம்தான். 65 00:04:10,520 --> 00:04:13,400 அதன் சத்தத்தை சொல்லவில்லை, அதாவது யாராவது 66 00:04:13,480 --> 00:04:16,520 "இதில் என்ன இருக்கு, திருவாளரே," என்று கேட்டுவிட்டால், 67 00:04:16,600 --> 00:04:20,080 "நாலு சிலிண்டர் 1.8 லிட்டர் டர்போ, நண்பா," என்று சொல்ல வேண்டி இருக்கும். 68 00:04:20,840 --> 00:04:23,800 அதுக்கு, 50,000 பவுண்டுக்கு மேலா? என்ன? அப்படியா? 69 00:04:28,600 --> 00:04:32,160 அதன் தோற்றம் பற்றி உறுதியா சொல்வதற்கில்லை. 70 00:04:32,240 --> 00:04:36,160 இதன் 1960 அசல் வடிவம் நேர்த்தியானது, 71 00:04:37,360 --> 00:04:41,000 அதன் இன்றைய வடிவம் அப்படிச் சொல்வதற்கில்லை என்பேன். 72 00:04:46,360 --> 00:04:48,760 பிரச்சினை என்னன்னா, நவீன கார்களில் முன் விளக்குகள் 73 00:04:48,800 --> 00:04:52,480 எந்த அளவு உயரத்தில் அமைக்கப் பட வேண்டும், நடந்து செல்பவரை இடித்து விட்டால் 74 00:04:52,560 --> 00:04:55,360 காரின் முன்புறம் எவ்வளவு தாங்கும் என்பதற்கு எல்லாம் விதிகள் உண்டு. 75 00:04:55,480 --> 00:05:00,560 நவீன விதிகள், 1960களின் வடிவமைப்பு வழக்காறுகளுக்கு நீடிக்கப் படுமானால், 76 00:05:00,640 --> 00:05:04,040 நமக்குக் கிடைப்பது கொஞ்சம் மந்தமான தன்மை, 77 00:05:05,720 --> 00:05:07,920 அப்போ சொல்றபடி இதில் நல்லது ஏதும் இருக்கா? 78 00:05:09,080 --> 00:05:11,720 ஆம், உண்மையில், இருக்கு. 79 00:05:13,600 --> 00:05:16,720 முதலாவதாக, ஆல்பைன், ரெனால்டின் உரிமையில் உள்ள நிறுவனம் எனினும், 80 00:05:16,800 --> 00:05:21,040 இந்தக் கார் ஏதோ மெகேன் காருக்கு நவீன உடை அணிவித்த வடிவம் அல்ல. 81 00:05:23,080 --> 00:05:27,360 ஏ110 உண்மையில் புத்தம் புதிதாக அடியில் இருந்து வடிவமைக்கப் பட்ட 82 00:05:27,480 --> 00:05:30,920 இடை என்ஜின், பின் இயக்க பந்தயக் கார் ஆகும். 83 00:05:35,640 --> 00:05:38,520 இதன் உடலும் சேசிசும் முழுதும் அலுமினியத்தால் ஆனவை. 84 00:05:38,600 --> 00:05:41,360 அதற்குக் காரணம், எளிது, அது லேசானது என்பதே. 85 00:05:41,440 --> 00:05:44,600 இந்த புள்ளியிலிருந்து ஆரம்பித்த அதன் பொறியாளர்கள், தங்கள் அறிவை குழைத்து 86 00:05:44,680 --> 00:05:49,240 காரின் தேவையில்லாத ஒவ்வொரு துளியையும் மழித்துத் தள்ளினார்கள். 87 00:05:51,480 --> 00:05:54,320 உதாரணத்துக்கு, இருக்கைகள், மற்ற எந்த 88 00:05:54,400 --> 00:05:56,560 கவர்ச்சிகரமான ரெனால்ட்ஐ விட, பாதி எடையே. 89 00:05:57,640 --> 00:06:01,560 கை பிரேக், தனியாக இல்லாமல், முக்கிய பிடியிலேயே இணைக்கப் பட்டுள்ளது. 90 00:06:02,280 --> 00:06:05,240 அதனால், இரண்டரை கிலோ குறைவு. 91 00:06:06,000 --> 00:06:10,240 ஸ்டீரியோ கூட வரையறுக்கப்பட்ட எடை லேசான வடிவம். 92 00:06:12,640 --> 00:06:15,440 இதன் முன் புறம் அமைந்த டிக்கியில் இந்த மாதிரி 93 00:06:15,520 --> 00:06:18,000 சின்ன துணிப் பெட்டியை வைத்துக் கொள்ளலாம். 94 00:06:18,080 --> 00:06:20,360 ஆனால், நான் நினைப்பது துணிப் பெட்டியை இங்கே வைப்பது 95 00:06:20,440 --> 00:06:21,640 எடையை அதிகமாக்குமே. 96 00:06:21,880 --> 00:06:25,520 எனவே, இரவு உடையை மட்டும் இதில் வைப்பேன். 97 00:06:26,000 --> 00:06:27,680 ஒரே குறை என்னன்னா, 98 00:06:27,760 --> 00:06:30,120 புதிய கால்சட்டை அணிய வேண்டுமானால், நான் வெளியே வர வேண்டும். 99 00:06:34,560 --> 00:06:37,840 ஆல்பைனின் எடைக் குறைப்பு கெடுபிடிகளால், 100 00:06:37,920 --> 00:06:43,400 இந்தக் கார் கேமேன் அல்லது ஆடி டிடியை விட 300 கிலோ குறைந்து, 101 00:06:44,760 --> 00:06:48,040 அதன் விளைவு ஆழ்ந்த ஒன்றாகிவிட்டது. 102 00:06:50,880 --> 00:06:54,960 சட்டென்று, இதன் 1.8 லிட்டர் அளவோ, 248 குதிரை சக்தியோ 103 00:06:55,040 --> 00:06:56,960 உறுத்தாத நிலை வந்து விடுகிறது. 104 00:06:57,040 --> 00:06:59,960 இது அற்புதமாக விரைந்து பாய்கிறது. 105 00:07:03,120 --> 00:07:04,960 பூஜ்யத்தில் இருந்து தொண்ணூறு போக, நாலரை வினாடிகளே. 106 00:07:07,200 --> 00:07:10,720 அதிக பட்ச வேகம், மணிக்கு 250 கி.மீ. 107 00:07:15,520 --> 00:07:17,760 ஒரு மூலை வரும்போது, 108 00:07:20,800 --> 00:07:24,080 இது எவ்வளவு திறமையானது என தெரிய வரும். 109 00:07:33,680 --> 00:07:35,040 ஒரு இறக்கை ஓட்டற மாதிரி இருக்கு. 110 00:07:45,280 --> 00:07:47,000 கார்ட்டூன் காரைப் போல. 111 00:07:47,080 --> 00:07:48,400 சில குமிழிகளுடன் வெளி வந்து சொல்லும்... 112 00:07:48,640 --> 00:07:49,480 பித்!!! 113 00:07:49,560 --> 00:07:50,440 போவ்!!! 114 00:07:50,520 --> 00:07:51,360 பாம்!!! 115 00:07:56,800 --> 00:08:00,120 ஏ110 என்னதான் எல்லாத்தையும் குறைத்து விட்டாலும், 116 00:08:00,200 --> 00:08:04,120 நீங்கள் மொட்டையான பழங்கால காரில் இருப்பதாக உணர மாட்டீர்கள். 117 00:08:05,880 --> 00:08:09,520 குளிர் பதனம், துணைக் கோள் வழிகாட்டி, தொலைபேசி இணைப்பு, 118 00:08:10,840 --> 00:08:12,480 போன்ற நவீன வசதிகள் உண்டு. 119 00:08:15,520 --> 00:08:18,040 இதன் லேசான தன்மையும், கச்சிதமான அளவும், 120 00:08:18,600 --> 00:08:22,440 உங்களை ஓர் அருவி போல குஷிப் படுத்தும். 121 00:08:23,800 --> 00:08:26,120 குறைந்த எடை என்பதால், பெரிய டயர் வாங்க வேண்டியதில்லை, 122 00:08:26,200 --> 00:08:30,120 நல்ல பிடிப்பு தேவையில்லை, அது காருக்கு ஒரு உயிர்ப்பைத் தருது. 123 00:08:30,800 --> 00:08:34,680 குறைந்த எடை என்றால், குறைந்த எண்ணெய், குறைந்த மாசு. 124 00:08:35,440 --> 00:08:38,320 இது, முழுதுமே வெற்றி-வெற்றி நிலைமை. 125 00:08:39,760 --> 00:08:43,840 பல ஆண்டுகளில் நான் ஓட்டிய கார்களில், இது புத்திசாலித் தனமானது. 126 00:08:45,480 --> 00:08:48,000 அதனால் இதை நான் ரொம்பவும் நேசிக்கிறேன். 127 00:09:03,000 --> 00:09:03,960 நன்றி. 128 00:09:07,760 --> 00:09:12,000 சாதாரண என்ஜின் இருந்த போதும், 129 00:09:12,080 --> 00:09:16,400 அதன் அதிக விலை மற்றும் அதன் சுமாரான பார்வை இருந்தும் உனக்கு பிடித்திருக்கா? 130 00:09:16,520 --> 00:09:18,240 அதை நேசித்தேன். நேசித்தேன். 131 00:09:18,360 --> 00:09:19,760 உண்மை. ஆனால் அதை வாங்குவாயா? 132 00:09:19,960 --> 00:09:20,760 வாங்கி இருக்கேன். 133 00:09:23,040 --> 00:09:24,400 வாங்கி இருக்காயா என்ன? 134 00:09:24,520 --> 00:09:26,640 ஆமாம், கார்டன் மர்ரேயும் கூட ஒன்றை வாங்கி இருக்கார். 135 00:09:26,760 --> 00:09:28,400 அவரது படத்தை அதனுடன் கொண்டு வந்திருக்கேன். 136 00:09:28,480 --> 00:09:31,280 இவர் மெக்லாரென் எஃப்1ஐ வடிவமைத்தவர், எனவே இவருக்குத் தெரியும். 137 00:09:31,400 --> 00:09:35,600 ஆக, இது கேவலமான சட்டை அணிந்த பெரிய ஆளின் பந்தயக் கார் தேர்வு. பார். 138 00:09:35,880 --> 00:09:37,040 அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். 139 00:09:37,120 --> 00:09:42,160 இது எபோலா ட்ரோமில் எவ்வளவு வேகமா போகுதுன்னு இப்போ பார்ப்போமா? 140 00:09:43,640 --> 00:09:45,240 இதோ கிளம்பிவிட்டது. 141 00:09:45,360 --> 00:09:49,080 வேகமான துவக்கம், வெளியேற்ற குழாயில் இருந்து ஒரு வெடிப்பு உறுமலுடன். 142 00:09:49,240 --> 00:09:54,240 உடனே இசன்ட் ஸ்ட்ரேய்ட்ல நுழைந்ததும், தயங்காமல் தொடர்கிறது. 143 00:09:55,600 --> 00:10:00,320 ஒரு வேளை ஜேம்ஸ் இதன் பலன்கள் பத்தி சொன்னது சரியா இருக்கலாம். 144 00:10:01,160 --> 00:10:04,880 இசன்ட் ஸ்ட்ரேய்ட்ன் கடைசி வளைவில் உறுமிப் பாய்கிறது. 145 00:10:05,000 --> 00:10:09,160 இப்போது யுவர் நேம் ஹியர்ல நுழைந்து, 146 00:10:09,640 --> 00:10:11,520 டயர்களை வருத்தி, வேகமாக தேய்த்து 147 00:10:11,600 --> 00:10:14,760 ரொம்ப சுறுசுறுப்புடன் விரைகிறது. 148 00:10:16,120 --> 00:10:18,160 மறுபடி, இசன்ட் ஸ்ட்ரேய்ட் திரும்பி ஒரு குதிரைப் பாய்ச்சல். 149 00:10:18,640 --> 00:10:20,200 வேகம் அடைகிறது, 150 00:10:21,480 --> 00:10:24,280 அப்பப்போ மத்தியில் சில பிரேக்குகளுடன், 151 00:10:26,120 --> 00:10:27,520 இப்போது பிரேக் போடுவது அதிகமாகிறது. 152 00:10:27,640 --> 00:10:32,360 ஏழு வேக பெட்டியை ஓல்ட் லேடிஸ் ஹௌஸ் நோக்கி விரைய சொடுக்கம். ஏதும் குறுகிய திருப்பமா? 153 00:10:32,960 --> 00:10:37,200 முன் முனையில் பளு இல்லாத இடை என்ஜின் வண்டிக்கு இது பிரச்சினை இல்லை. 154 00:10:37,360 --> 00:10:41,080 இதன் வடிவமைப்பை நேசிக்கிறேன், நான் சொல்வது சரி. 155 00:10:41,160 --> 00:10:44,520 இப்போது கடக்க வேண்டியது, ஃபீல்ட் ஆஃப் ஷீப் மட்டுமே. 156 00:10:44,640 --> 00:10:45,960 இதோ வந்து விட்டோம். 157 00:10:46,280 --> 00:10:50,200 ஆம், அது முடிப்பதற்கு குறுக்கே ஒரு செழிப்பான சறுக்கல், 158 00:10:51,960 --> 00:10:54,280 -அது நல்லா இருந்தது, அருமை. -ஆமாம், பார்ப்போம். 159 00:10:54,360 --> 00:10:56,600 -நல்லா ஓட்டம். நல்ல ஊக்கம். -ஆம். 160 00:10:57,320 --> 00:10:58,280 சரி. 161 00:10:59,760 --> 00:11:02,720 நமது சுற்று அட்டவணையில் எங்கு வருதுன்னு பார்ப்போம். 162 00:11:02,840 --> 00:11:04,680 முதல் பத்து பட்டியலில் வருமா? 163 00:11:04,760 --> 00:11:05,800 சுற்று அட்டவணை 164 00:11:05,880 --> 00:11:07,800 அய்யோ, வரலையே. 165 00:11:08,240 --> 00:11:10,840 மன்னியுங்க நண்பரே, அது ஒரு இடை என்ஜின் காருக்கு பரிதாபம். 166 00:11:11,200 --> 00:11:12,880 -அப்படித்தான். -பாருங்க, இது சுற்று விஷயங்களுக்கு 167 00:11:12,960 --> 00:11:15,000 உகந்த ஒரு வகை அல்ல. ஏற்கனவே சொல்லி இருக்கேன். 168 00:11:15,120 --> 00:11:17,280 முதலில் வருபவன் கடைசி ஆவான். 169 00:11:17,400 --> 00:11:19,400 கடைசியில் வருபவன் முதலாமவன் ஆவான். 170 00:11:19,480 --> 00:11:21,160 -ஆனால், இது 15ஆம் இடம். -சரியே. 171 00:11:21,320 --> 00:11:22,360 அப்படித்தான். அப்படித்தான். 172 00:11:23,120 --> 00:11:24,080 அதனால்? 173 00:11:24,200 --> 00:11:27,000 இது கார்களின் ரோமன் குரோஷீன். அதே. 174 00:11:27,600 --> 00:11:28,920 -எந்த ரோமன்? -குரோஷீன். 175 00:11:29,000 --> 00:11:30,760 -யார் அது? -அவர் ஒரு ஃபிரெஞ்சு பந்தய ஓட்டுனர், 176 00:11:30,880 --> 00:11:34,640 உலகின் 15ஆவது சிறந்த ஃபார்முலா ஒன் ஓட்டுனர். உனக்குப் பிடிக்கும். 177 00:11:35,400 --> 00:11:36,440 -பிடித்துவிட்டது. -நல்லது. 178 00:11:36,520 --> 00:11:38,000 நல்லது, அது ஒழுங்காகிவிட்டது. 179 00:11:38,080 --> 00:11:41,000 இப்போ, உரையாடல் தெருவெனும் இனிய பழச் சோலையில் புகுந்து, 180 00:11:41,120 --> 00:11:44,280 ஆப்பிள்களை, இஷ்டப்படி 181 00:11:45,080 --> 00:11:48,880 எடுத்துத் தின்னும் அருமையான 182 00:11:48,960 --> 00:11:50,680 தருணம் வந்து விட்டது. 183 00:11:51,920 --> 00:11:56,560 உரையாடல் தெரு. 184 00:11:57,440 --> 00:11:59,760 -ஆம், நீங்க வரவேற்பீர்கள், தெரியும். -எனக்கு அது பிடிக்கும். ரொம்ப. 185 00:11:59,840 --> 00:12:01,320 அது உங்கள் தெரு வரை. 186 00:12:03,560 --> 00:12:07,160 இப்போதெல்லாம், பலர் பழைய கார்களை வாங்குகிறார்கள், 187 00:12:07,320 --> 00:12:09,400 அது ஏன்னு நமக்குத் தெரியும். 188 00:12:09,480 --> 00:12:13,400 பழைய ஜாகுவார் இ-டைப் அல்லது ஆல்ஃபா ஸ்பைடர் போன்றவை, 189 00:12:13,520 --> 00:12:16,720 நவீன கார்களை விட சுவாரசியமானவை, அவற்றுக்கு மதிப்புக் குறைவே இல்லை. 190 00:12:16,800 --> 00:12:18,400 உண்மையில் அவை உங்களுக்குப் பணம் தரும். 191 00:12:18,600 --> 00:12:21,760 ஆமாம், இருந்தாலும் நீங்க பழைய காரில் உட்கார்ந்தால்... 192 00:12:22,000 --> 00:12:23,560 -அது குப்பை. -ஆமாம். 193 00:12:23,680 --> 00:12:25,640 ஆம், இவன் சொல்வது அப்பட்டமான உண்மை. 194 00:12:25,760 --> 00:12:28,360 அதாவது, பழைய கார்கள் எவ்வளவு மோசமானவை என்பதை நாம் மறக்கிறோம். 195 00:12:28,440 --> 00:12:30,240 அதில் 60 கி.மீ வேகத்துக்கு மேல் போனாலே, 196 00:12:30,320 --> 00:12:33,000 கண்ணாடித் துடைப்பான் கண்ணாடியில் இருந்து கழன்று விழுந்து விடும். 197 00:12:33,120 --> 00:12:33,960 ஆமாம். 198 00:12:34,040 --> 00:12:36,320 முன் விளக்குகளோ கண்ணாடி ஜாடியில் உள்ள மெழுகு வர்த்தி போல் எரியும்... 199 00:12:36,400 --> 00:12:38,800 -ஆமாம், நீர்திவலை நீக்கி வேலை செய்வதில்லை. -ஆம், செய்யாது. 200 00:12:38,880 --> 00:12:40,160 -ஹீட்டரும் வேலை செய்வதில்லை. -ஆமாம். 201 00:12:40,240 --> 00:12:42,680 எல்லாம் ஆட்டம் கொடுக்கும், பிரேக்குகள் வேலை செய்வதில்லை. 202 00:12:42,760 --> 00:12:44,520 -சரியே. -அவைதான் பழைய கார்கள். அவை... 203 00:12:44,600 --> 00:12:46,920 அனுபவத்திலிருந்து பேசறேன். என்னிடம் 40 வருட ஃபெர்ராரி ஒண்ணு இருக்கு. 204 00:12:47,000 --> 00:12:49,920 ஏ308. அது, இவை எல்லாம் தவிர, 205 00:12:50,000 --> 00:12:52,400 பயங்கரமா மெதுவாக போகும். நம்பவே முடியாது. 206 00:12:52,480 --> 00:12:54,800 வீட்டில் இருந்து சாலை வந்ததும், பின்னாலிருப்பவங்க ஹார்ன் அடிப்பாங்க 207 00:12:54,880 --> 00:12:57,280 -ஏன்னா, "இது ஃபெர்ராரி, ஆக... -ஆம். ஹார்ன் அடிப்பாங்க. 208 00:12:57,360 --> 00:12:59,080 நீ ஓட்டும் எந்த காருக்கும் இது நிகழ்வதில்லையா ஜேம்ஸ்? 209 00:12:59,160 --> 00:13:00,160 -ஆமாம். -இல்லை, இல்லை, அது-- 210 00:13:00,240 --> 00:13:01,280 வழி விட்டு விலகு. 211 00:13:01,360 --> 00:13:02,320 ரொம்ப. நீ-- 212 00:13:02,400 --> 00:13:03,440 ஆனால், அது நம்ப முடியாதது. 213 00:13:03,520 --> 00:13:05,240 -எவ்வளவு மோசம் பார். -இது ரொம்ப மெதுவானது. 214 00:13:05,320 --> 00:13:07,800 இல்லை, நாம் சொல்ல வரும் குறிப்பிட்ட விஷயம் அதுதான். 215 00:13:07,920 --> 00:13:09,400 பழைய கார்களை எடுத்து அவற்றை மென்மையாக 216 00:13:09,480 --> 00:13:13,360 நவீனப் படுத்தும் பல நிறுவனங்கள் தோன்றிவிட்டன. 217 00:13:13,480 --> 00:13:15,840 நாம் பேசப் போவதன் உதாரணங்கள் சில இங்கே உள்ளன. 218 00:13:15,920 --> 00:13:19,600 இதோ இந்த சிங்கர் போர்ஸே. எனக்கு உண்மையில் இதன் மேல் நாட்டம் இல்லை. 219 00:13:19,680 --> 00:13:21,680 இவங்க இருவரும் விரும்பலாம், அதைப் பத்தி கவலை இல்லை. 220 00:13:21,760 --> 00:13:25,360 அதற்கப்புறம், இந்த ஈகிள் இ-டைப் ஸ்பீட்ஸ்டர், 221 00:13:25,440 --> 00:13:27,320 நான் பார்த்ததில் மிக அழகான கார்களுள் ஒன்று. 222 00:13:27,400 --> 00:13:29,920 அது ஒரு அசல் இ-டைப், ஓட்டுவதற்கு மிக அழகானவற்றில் ஒன்று. 223 00:13:30,000 --> 00:13:31,360 -ஆமாம். -அற்புதமானது. 224 00:13:31,440 --> 00:13:34,720 ஜெர்மனியில் ஒரு நிறுவனம் இருக்கு, அவர்கள் நவீனப் படுத்துவது... 225 00:13:34,800 --> 00:13:36,920 பழைய மெர்சிடஸ் பகோடா எஸ்எல்கள் நினைவு இருக்கா? 226 00:13:37,000 --> 00:13:39,320 -ஓ, இருக்கே. -அதில் ஏஎம்ஜி என்ஜினை பொருத்தினார்கள். 227 00:13:40,080 --> 00:13:41,800 -ஆமாம். -அதில் நவீன ஏஎம்ஜி என்ஜின் உள்ளதல்லவா? 228 00:13:41,880 --> 00:13:43,400 அது ஒரு ஏஎம்ஜி என்ஜின். அதை பார்க்கிறாயா? 229 00:13:43,480 --> 00:13:44,520 -சரி. -இதோ அடுத்த படம். 230 00:13:44,600 --> 00:13:47,440 பொறு. இதோ, பார், இது ஒரு கார். 231 00:13:47,520 --> 00:13:49,600 -உனக்கு இது புடிக்குதுன்னு தெரியுது. -சரிதான். 232 00:13:49,680 --> 00:13:51,960 -நீ இன்னும் விரும்பும் ஒன்று இருக்கு. -இன்னுமா? 233 00:13:53,320 --> 00:13:55,080 ஓ, கடவுளே. 234 00:13:55,160 --> 00:13:57,320 அது பழைய 1968 மாடல் டாட்ஜ் சார்ஜர். 235 00:13:57,400 --> 00:13:58,840 -நீ ஒண்ணு வைத்திருந்தாய் அல்லவா? -ஆமாம். 236 00:13:58,920 --> 00:14:01,520 அதில் யாரோ, 237 00:14:01,600 --> 00:14:04,920 ஆயிரம் குதிரைத் சக்தி நவீன ஹெல்கேட் என்ஜினைப் பொருத்தினார்கள். 238 00:14:06,120 --> 00:14:07,120 அதாவது, 239 00:14:07,200 --> 00:14:09,160 எனக்கு அந்தப் படத்துடன் 240 00:14:11,160 --> 00:14:12,120 தனியாக கொஞ்ச நேரம் வேண்டும். 241 00:14:12,200 --> 00:14:15,720 அது ஒரு நல்ல யோசனை என நினைக்கிறேன். 242 00:14:15,800 --> 00:14:17,280 உண்மையில் இது ஒரு முக்கிய விஷயம், ஏன்னா 243 00:14:17,360 --> 00:14:20,600 நாம் எல்லோரும் ஒரு ஜென்சன் இன்டர்செப்டரை விரும்புவோம். 244 00:14:20,680 --> 00:14:22,760 -ஆமாம். -அல்லவா? ஆனால், உண்மையில் அது நடக்காது. 245 00:14:22,840 --> 00:14:24,560 அப்படிப் போனால், அது நிற்காது. 246 00:14:24,640 --> 00:14:26,760 பிரேக்குகள் வேலை செய்யாது, மற்ற எல்லாமும் கூட, பயங்கரம். 247 00:14:26,880 --> 00:14:30,560 ஆனால், ஒரு ஜென்சன் இன்டர்செப்டர் நவீன பிரேக்குகள் கொண்டது, 248 00:14:30,640 --> 00:14:34,560 நவீன குளிர்விக்கும் அமைப்பு உள்ளது, அதன் என்ஜின், கோர்வெட் தயாரிப்பு. 249 00:14:34,640 --> 00:14:37,600 அப்படித்தான். அந்தக் காரை உண்மையில் ஓட்டியிருக்கேன், அது அற்புதம். 250 00:14:37,680 --> 00:14:38,880 அது இனியும் இல்லை, ஏன்னா, 251 00:14:38,960 --> 00:14:41,120 யாரோ அதை குட்உட் வேலியில் மோதி விட்டார். 252 00:14:41,200 --> 00:14:43,840 அதற்கு முன் ஓர் அற்புதமான கார் அது. அருமையானது. 253 00:14:43,920 --> 00:14:44,800 நிஜமாகத்தான். 254 00:14:44,880 --> 00:14:48,160 அந்த பீய்ச்சும் சப்தம் ஜேம்ஸின் சிந்தனை அல்ல என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். 255 00:14:48,240 --> 00:14:49,560 அது... 256 00:14:50,520 --> 00:14:53,560 -காற்று. இன்று காற்று நன்றாக வீசுகிறது. -இன்று நன்றாக வீசுகிறது. 257 00:14:53,640 --> 00:14:57,320 எங்க கிறுக்குத் தனத்தின் காரணமாக, கூடாரத்திலேயே தங்கிவிட முடிவு செய்தோம். 258 00:14:57,400 --> 00:14:58,800 -ஒரு மலையில். -ஒரு மலையில். 259 00:14:58,880 --> 00:15:02,240 ஆம், ஆனால், இந்த புதுமையாக்கப் பட்ட கார்கள் எல்லாமே, 260 00:15:02,320 --> 00:15:04,320 மிகவும் செலவு பிடிப்பவை என நினைக்கிறோம். உச்ச பட்ச செலவு. 261 00:15:04,400 --> 00:15:06,400 -ஆமாம். -அந்த மெர்சிடஸ் பகோடா எஸ்எல், 262 00:15:06,480 --> 00:15:07,800 அதன் விலை, 3,00,000 பவுண்ட். 263 00:15:07,880 --> 00:15:10,040 அந்த சிங்கர் போர்ஸே, 4,00,000 பவுண்ட். 264 00:15:10,120 --> 00:15:13,160 இ-டைப் ஸ்பீட்ஸ்டர், 6,50,000 பவுண்ட். பைத்தியக்காரத்தனம். 265 00:15:13,240 --> 00:15:16,240 இதில் பிரச்சினை என்னன்னா, இத்தகைய வேலை செய்யும் நிறுவனங்களை நாடுபவர்கள், 266 00:15:16,760 --> 00:15:19,000 அநேகமாக தங்களது உக்ரேனிய பெண் நட்புக்களுடன், 267 00:15:19,080 --> 00:15:21,200 லூயிஸ் ஹேமில்டன் கைக்கடிகாரம் அணிந்து, ஒரு ஹெலிகாப்டரில் வந்து 268 00:15:21,280 --> 00:15:23,920 இறங்குபவர்களாக இருப்பதால், அந்த நிறுவனங்கள் 269 00:15:24,000 --> 00:15:28,200 கண்ட படி விலைகளை நிர்ணயிக்கின்றன. 270 00:15:28,880 --> 00:15:31,240 உண்மையில், அந்த மாதிரி உடை அணிந்து, அவ்வாறு நடந்து கொண்டால், 271 00:15:31,320 --> 00:15:33,120 உங்களை அவங்க போண்டி ஆக்கிவிடுவார்கள். 272 00:15:33,200 --> 00:15:35,400 -இதுதான் நடப்பது. -தகுந்தாற்போல் வசூலிக்கிறார்கள் இல்லையா? 273 00:15:35,480 --> 00:15:37,680 அது நம்மைக் காட்டிக் கொடுத்துக் கொள்வதாகும். என்ன செய்யணும்னா, 274 00:15:37,760 --> 00:15:40,080 தொலைபேசியில் அழைத்து "என்னை வந்து கூட்டிப் போங்களேன்?" என கேட்கணும். 275 00:15:40,160 --> 00:15:41,160 -இல்லை. -அதுதான் பரவாயில்லை. 276 00:15:41,240 --> 00:15:42,320 இல்லை, பஸ் நிறுத்தம். 277 00:15:42,400 --> 00:15:43,400 -இல்ல, பஸ் நிறுத்தம். -"பஸ் நிறுத்ததில் இருந்து கூட்டிப் போங்க. 278 00:15:43,480 --> 00:15:44,800 "நான் நீங்க தயாரிக்கும் கார்களைப் பார்க்க வந்திருக்கேன்." 279 00:15:44,880 --> 00:15:47,520 சும்மா நினைத்துப் பார்த்தேன். இதை உருவகித்துப் பாருங்க. 280 00:15:47,600 --> 00:15:49,240 ஒரு அசல் ஓபல் மேன்டா ஏ, 281 00:15:49,320 --> 00:15:50,160 -அது நினைவிருக்கா? -ஆம். 282 00:15:50,240 --> 00:15:51,880 -வட்ட பின் விளக்குகள். -கறுப்பு முகப்பு மூடி. 283 00:15:51,960 --> 00:15:55,560 ஆனால், நவீன வாக்ஸ்ஹால் விஎக்ஸ்ஆர் உடன், 284 00:15:55,640 --> 00:15:57,720 தயாரித்துத் தர ஒப்புக் கொள்பவரை கண்டறிவேன். 285 00:15:57,800 --> 00:16:02,120 அதை அவர்களுடன் தொலைபேசியில் பேசி, தளர் உடையுடன், பஸ்ஸில் இறங்கி போவேன். 286 00:16:03,160 --> 00:16:04,840 -அப்போ, அவங்க... -ஐம்பது பவுண்ட் வசூலிப்பாங்க. 287 00:16:04,920 --> 00:16:07,640 அதை நாற்பதா குறைப்பேன், ஏன்னா திரும்பிப் போக பஸ்சுக்கு பத்து பவுண்ட் வேண்டுமே. 288 00:16:09,280 --> 00:16:12,360 இப்போ ஒரு புதிய மின்சார கார், 289 00:16:12,440 --> 00:16:14,400 யாரிடமிருந்து என்பதை உங்களால் நம்ப முடியாது... 290 00:16:14,480 --> 00:16:15,960 -சொல்லு. -கலாஷ்நிக்கோவ். 291 00:16:16,040 --> 00:16:16,880 -உண்மையாகவா? -ஆமாம். 292 00:16:16,960 --> 00:16:20,560 ஏகே 47 துப்பாக்கி தயாரிப்பாளர்கள், மின்சார கார்களைத் தயாரிக்கிறார்கள். 293 00:16:20,640 --> 00:16:21,840 -அந்த சப்தம் பிடிக்கும். -தெரியும். 294 00:16:21,920 --> 00:16:23,560 -அதன் படத்தைப் பார்க்கிறாயா? -ஆமாம். 295 00:16:23,640 --> 00:16:24,600 இதோ அது. 296 00:16:26,760 --> 00:16:27,960 -கடவுளே. -வேண்டாம், சிரிக்காதீங்க. 297 00:16:28,040 --> 00:16:30,120 ஏன்னா, பின்னால், இது உண்மையில் இன்னும் மோசம். 298 00:16:30,200 --> 00:16:31,160 இதோ கிளம்பறோம். 299 00:16:31,240 --> 00:16:32,800 ஓ, நீ சொன்னது சரி. அப்படித்தான் இருக்கு. 300 00:16:32,880 --> 00:16:36,480 நான் இதில் எட்டு அசையும் பாகங்கள் இருக்கும்னு யூகித்தேன். 301 00:16:36,560 --> 00:16:39,280 நீங்க இதை புதை குழியில். மூணு மாதத்துக்கு புதைக்கலாம் 302 00:16:39,360 --> 00:16:41,360 அதை ரிச்சர்ட் ஹாம்மொண்ட் பயன் படுத்தினால் மட்டுமே சிக்கும். 303 00:16:41,440 --> 00:16:42,680 ஆமாம். நீ சொல்வது சரி. 304 00:16:42,760 --> 00:16:46,560 ஆனால் இது புரட்சிகர தொழில் நுட்பம் உள்ளதென சொல்கிறார்கள். 305 00:16:46,640 --> 00:16:49,640 அப்படியா? அது மத்திய பூட்டு, மற்றும் செலுத்தும் அமைப்பு உள்ளதா? 306 00:16:49,920 --> 00:16:52,520 திருமணங்களில் வானை நோக்கி சுட முடியுமா? 307 00:16:52,600 --> 00:16:53,680 உன்னால் முடியலாம். 308 00:16:53,760 --> 00:16:55,840 தேர்வு முடிவுகளில், குழந்தைகள் வெளியில் அப்படி செய்வார்கள். 309 00:16:55,920 --> 00:16:58,920 ஆனால், கலாஷ்நிக்கோவ் பெயருள்ள ஒரு காரை ஓட்டும் எண்ணமே... 310 00:16:59,000 --> 00:17:01,640 -பிரகாசமான யோசனையா தோணுது. -ஆமாம், அது அருமை. 311 00:17:01,720 --> 00:17:03,920 சரி, சொல். இப்போது ஓட்டுவது எதை, செல்வந்தரே? 312 00:17:04,000 --> 00:17:06,440 -அது ஒரு கலாஷ்நிக்கோவ். -அப்படிப் போடு. 313 00:17:06,520 --> 00:17:07,920 -அப்படிப் போடு. -பிரச்சினை என்னன்னா, 314 00:17:08,000 --> 00:17:10,000 நான் புரிந்து கொள்வது, அவர்கள் டி-ஷர்ட்டுகளை, 315 00:17:10,080 --> 00:17:12,240 குவளைகளை, தொப்பிக்களை, இந்த பெயர்களை அச்சிட்டு விற்பனை செய்வாங்க, 316 00:17:12,320 --> 00:17:14,080 ஆனால் அதிக கார் விற்க மாட்டார். 317 00:17:14,200 --> 00:17:15,560 ஃபெர்ராரியைப் போலவே. 318 00:17:15,640 --> 00:17:16,720 அடிப்படையில், ஃபெர்ராரி, ஆமாம். 319 00:17:17,280 --> 00:17:21,160 இந்தக் கதையை நான் டார்ஸட் எக்கோவில் படித்தேன். 320 00:17:21,240 --> 00:17:23,640 டார்ஸட்டின் உள்ளூர் பத்திரிகை அது. 321 00:17:23,760 --> 00:17:27,640 அது தேவை இல்லாத செய்தியை பதிப்பித்ததற்கு பரிசு வாங்குகிறது. 322 00:17:27,720 --> 00:17:32,280 அது ஒரு மோட்டார் சைக்கிள்காரனுக்கும், டேங்குக்கும் ஏற்பட்ட விபத்தை வெளியிட்டது. 323 00:17:32,320 --> 00:17:35,200 நடந்ததுதான். இங்கே இராணுவ தளத்துக்கு அருகே நடந்ததுதான். 324 00:17:35,280 --> 00:17:38,680 அது சொல்வது, "மோட்டார் சைக்கிள்காரன் கை கால் எலும்பு முறிந்திருக்கக் கூடும்," 325 00:17:38,760 --> 00:17:41,720 அதற்கடுத்த வரி, எழுதியிருக்கவே வேண்டியதில்லை. 326 00:17:41,800 --> 00:17:43,440 "டேங்கின் ஓட்டுனருக்கு காயமில்லை." 327 00:17:43,520 --> 00:17:44,800 -அடி பட்டதா என்ன? -இல்லை. 328 00:17:44,880 --> 00:17:46,520 பரவாயில்லையே, அதிர்ஷ்டக்காரன்தான். 329 00:17:46,560 --> 00:17:47,920 -அதிலிருந்து தப்பியது? இல்லையா? -ஆமாம். 330 00:17:49,240 --> 00:17:50,320 உண்மையில் அதிர்ஷ்டகாரனா? 331 00:17:50,440 --> 00:17:53,040 அனேகமா அவன் தனது தளம் சென்று "நான் எதை இடித்தேன்?" என கேட்டிருக்கணும். 332 00:17:53,080 --> 00:17:54,080 "நான் இடித்தேனா?" 333 00:17:55,080 --> 00:17:57,800 இது ஒரு நல்ல உரையாடல், ரொம்ப நல்ல உரையாடல். 334 00:17:57,920 --> 00:18:00,960 ஏன்னா ஒரு புதிய மோட்டார் சாதனையாளர் பந்தயத்தை அறிவித்துள்ளனர், 335 00:18:01,040 --> 00:18:03,760 அது பெண்களுக்கானது. அதை டபிள்யூ தொடர் என்கிறார்கள், சரியா? 336 00:18:03,800 --> 00:18:08,160 இதன் பின் உள்ள யோசனை, பெண் பந்தயக் கார் ஓட்டுனர்கள் 337 00:18:08,240 --> 00:18:12,680 இந்தத் தொடரில் பங்கெடுக்கலாம். கார்கள் ஒரே மாதிரியானவைதான். 338 00:18:12,760 --> 00:18:17,280 உங்களைப் பங்கு கொள்ள அழைக்கிறோம், பரிசுத் தொகை, 11 லட்சம் பவுண்ட். 339 00:18:17,400 --> 00:18:19,720 -ஆமாம். -ஆக, இது ஒரு வகை ஊக்குவிப்பு. 340 00:18:19,800 --> 00:18:22,800 இதைப் பத்தி ஏராளமான உரையாடல்கள் உருவாயின, உண்மையில் அவற்றை விவாதம் என்றே சொல்லணும். 341 00:18:22,880 --> 00:18:25,320 ஏன்னா, சிலர் பெண் சாதனையாளர் மட்டும் என்பதை, 342 00:18:25,400 --> 00:18:27,760 பாலியல் பாகுபாடு என சொல்லக் கூடும் ஆனால், நினைத்துப் பார்த்தால், 343 00:18:27,800 --> 00:18:30,080 பெண்களுக்கு மட்டுமான கால் பந்தாட்டம், ரக்பி, ஹாக்கி 344 00:18:30,160 --> 00:18:33,320 என ஒலிம்பிக் போட்டிகளே ஆண்கள் பெண்களை பிரிக்கின்றன, 345 00:18:33,440 --> 00:18:35,160 அப்போ மோட்டார் பந்தயம் மட்டும் என்ன விதிவிலக்கு. 346 00:18:35,240 --> 00:18:36,080 எல்லா பந்தயமும் அல்ல. 347 00:18:36,160 --> 00:18:39,320 ஆண்களும், பெண்களும் குதிரையேற்றத்தில் ஒன்றாகப் பங்கு கொள்கின்றனர். 348 00:18:39,440 --> 00:18:41,800 -ஆம், அது பந்தயம் அல்ல. அப்படி அல்ல. -அப்படியா? 349 00:18:41,880 --> 00:18:44,680 அது கம்பீரமாக நிற்பதாகக் காட்டிக் கொள்ளும் குதிரையின் மீது உட்காருவதுதான். 350 00:18:46,920 --> 00:18:48,720 அது சரி, அவங்க... 351 00:18:48,800 --> 00:18:50,640 -அவன் சொல்வது சரி. -ஆம், அதில் ஏதும்... 352 00:18:52,280 --> 00:18:53,800 -அது, அப்படித்தான். -நிஜத்தில் நீ சொல்வது சரி. 353 00:18:53,880 --> 00:18:56,640 பாய்மரப் படகு செலுத்தலில் ஆண் பெண் பாகுபாடு இல்லை, 354 00:18:56,720 --> 00:18:59,160 -அவர்களுக்குள் போட்டியிடுகிறார்கள். -அதுவும் ஒரு பந்தயம் அல்லவே? 355 00:18:59,240 --> 00:19:00,680 பாய் மரப் படகு செலுத்துவது ஒரு தொழில். 356 00:19:01,440 --> 00:19:03,200 கயிறுகளை இழுத்துப் பிடித்து, பின்னர்... 357 00:19:03,280 --> 00:19:05,680 -அதுவும் சரிதான். -அது உடல் உழைப்புத்தான். 358 00:19:05,760 --> 00:19:06,800 பந்தயமல்ல அது. 359 00:19:06,920 --> 00:19:08,760 இல்லை, நேர்மையா சொன்னா, அப்படிப் பட்டவைக்கும் 360 00:19:08,800 --> 00:19:11,560 ஒற்றை இருக்கை கார் பந்தயத்துக்கும் பெரும் வேறுபாடு இருக்கு. 361 00:19:11,680 --> 00:19:15,920 ஏன் அப்படி? அதாவது, "அதைச் செய்ய ஆண் பலம் வேண்டும்" என்பதலா 362 00:19:16,000 --> 00:19:18,000 ஆனால், இப்போது அப்படியல்ல, எஃப்1ல் கூட 363 00:19:18,080 --> 00:19:19,040 பவர்ஸ்டியரிங் வந்துவிட்டது. 364 00:19:19,080 --> 00:19:21,440 தெரியும், ஆனால் அன்றொரு நாள் ஒரு ஒற்றை இருக்கை பந்தயக் காரை ஓட்டும் போது, 365 00:19:21,520 --> 00:19:23,760 எப்போ, எங்கேன்னு நினைவில்லை, ஆனால் வழுக்கை டயர்கள் இருந்தது, 366 00:19:23,800 --> 00:19:26,800 மூணு சுற்றுக்கு அப்புறம், என் கழுத்து நரம்புகள்... இப்படி ஆகிவிட்டது. 367 00:19:26,880 --> 00:19:28,560 என் தலையைத் தூக்கவே முடியவில்லை. 368 00:19:28,680 --> 00:19:32,080 அடுத்த மூலைக்காகக் காத்திருப்பேன், அதில் தலை வேறு பக்கம் திரும்பும். 369 00:19:32,160 --> 00:19:34,320 அப்புறம், இந்த நவரத்திலோவா, வில்லியம்ஸ் பெண்ணைப் பாருங்க, 370 00:19:34,440 --> 00:19:36,160 அவர்களோடு மல்லுக் கட்ட முடியுமா. 371 00:19:36,240 --> 00:19:37,920 -பொறு... -பெண்கள் தங்கள் தசைகளை வலுவாக்கிக்கலாம், 372 00:19:38,000 --> 00:19:39,080 அதற்கு ஈடு கட்ட, ஆனால்... 373 00:19:39,200 --> 00:19:42,080 அப்போ, பொறு, அதாவது ஆண் பெண் பாகுபாடு 374 00:19:42,160 --> 00:19:43,880 மோட்டார் பந்தயத்தில் இருக்க வேண்டும்னு சொல்கிறாயா? 375 00:19:43,960 --> 00:19:47,560 நான் என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமே இல்லை. 376 00:19:47,640 --> 00:19:50,440 ஃபார்முலா ஒன் பந்தயத்தில் ஒரு பெண் பங்கு கொண்டு 43 வருடம் ஆகிறது. 377 00:19:50,520 --> 00:19:51,560 நாற்பத்து மூன்று வருடங்கள், 378 00:19:51,680 --> 00:19:53,080 ஆக, ஏதோ தவறு நடக்கிறது. ஏன்னா அவர்கள் அடைவதில்லை. 379 00:19:53,160 --> 00:19:55,520 அது துவக்க மட்டத்தில் அப்படி என நினைக்கிறேன். தொடக்கத்திலேயே உருவாவது. 380 00:19:55,560 --> 00:19:59,040 பல தாய்மார்கள் தங்கள் பெண்களை மட்டக் குதிரைகளில் ஏற்றுகிறார்கள், 381 00:19:59,080 --> 00:20:00,480 கோ-கார்ட் வண்டிகளில் இல்லை. 382 00:20:00,560 --> 00:20:01,760 ஆமாம், அவ்வாறு செய்வதில்லை... 383 00:20:01,800 --> 00:20:05,240 சில பெண்கள் கார்ட்டிங் போகிறார்கள், உதாரணமா, நமது ஓட்டுனர் அப்பி, 384 00:20:05,320 --> 00:20:07,080 சின்ன குட்டி பருவத்தில் இருந்தே கார்டிங்க் செய்கிறாள். 385 00:20:07,200 --> 00:20:09,560 நான் நினைப்பது, இந்தத் தொடர், எதைப் பத்தின்னா, 386 00:20:09,640 --> 00:20:11,680 இது பாகுபாடு பத்தி அல்ல. இது பெண்களை கார் பந்தயத்தில் 387 00:20:11,760 --> 00:20:13,320 பங்கு கொள்ள ஊக்குவிக்கும் விஷயம், அது சிறப்பு. 388 00:20:13,440 --> 00:20:16,080 ஆமாம், சரியே, ஆனால், இது முன்னாலேயே ஆரம்பிக்க வேண்டிய விஷயம். 389 00:20:16,200 --> 00:20:19,480 ஆகவே, இளம் பெண்களே, மட்டக் குதிரையிலிருந்து இறங்கி வந்து, 390 00:20:19,560 --> 00:20:21,520 கோ-கார்ட் சென்று ஓட்டுங்க. 391 00:20:21,560 --> 00:20:25,440 குதிரைகளிடம் இருந்து பெற்ற அனுபவத்தில் சொல்கிறேன், 392 00:20:25,880 --> 00:20:28,440 இதில் நல்ல விஷயம் என்ன என்றால், காலையில் நடந்து போகும்போது, 393 00:20:28,520 --> 00:20:32,800 உங்க கோ-கார்ட் சுருண்டு விழுந்து இறந்து போகாது. 394 00:20:33,560 --> 00:20:35,720 எனவே, அது உங்க குதிரையை விட பரவாயில்லை. 395 00:20:35,800 --> 00:20:39,160 அதுவும், கோ-கார்ட்கள் குதிரை சவாரியை விட குஷியானது. 396 00:20:39,240 --> 00:20:40,920 -அவர்கள், அப்படித்தான். -ஆமாம், நீங்களே பார்க்கலாம். 397 00:20:41,000 --> 00:20:45,880 கோ-கார்ட், தனது கழுத்தை லாயக் கதவுகளுக்கு வெளியில் நீட்டி எட்டிப் பார்க்காது. 398 00:20:45,960 --> 00:20:48,880 உங்களுக்குத் தெரியும் அது, 399 00:20:48,960 --> 00:20:53,040 "உன் மனைவி இங்கே என்னுடன் இருந்தாள், 400 00:20:53,800 --> 00:20:56,520 "காலை உணவை படுக்கையிலே கொடுத்தாள், நேற்றிரவு கழிந்து விட்டேன், 401 00:20:56,560 --> 00:20:59,240 "ஆனால் அதை அவள் ஒரு தோட்ட துரவியால் சுத்தப் படுத்தினாள்." என சொல்லும். 402 00:21:00,200 --> 00:21:02,520 "பின்னர் அது சொல்லும், என் உறுப்பு கூட அழுக்காக இருக்கு. 403 00:21:02,560 --> 00:21:04,720 "அந்தப் பிரச்சினையை பிறகு பார்த்துக் கொள்வாள்." 404 00:21:05,680 --> 00:21:08,320 அதன் பிறகு உன் மனைவி லாயக் கதவுக்கு வெளியே எட்டிப் பார்த்து, 405 00:21:08,440 --> 00:21:11,080 "அவனை அப்படிப் பார்க்காதே. 406 00:21:11,160 --> 00:21:13,560 "எனக்கு அவனை பிடிக்கவில்லைன்னு நினைப்பான்." என்பாள்."தெரியும்" என்பாய். 407 00:21:14,440 --> 00:21:18,400 "நான் குதிரையுடன் பேச முடிந்தால், நான் சொல்வேன், "நான் உன்னை வெறுக்கிறேன், 408 00:21:18,480 --> 00:21:21,560 "நீ என் மனைவியையும், பணத்தையும் கவுரவத்தையும் 409 00:21:21,680 --> 00:21:23,680 "திருடும் விதத்தை, வெறுக்கிறேன்." 410 00:21:24,280 --> 00:21:26,640 பின்னர் ஒரு நாள் உன் மனைவியுடன் உரையாடலில், 411 00:21:26,720 --> 00:21:30,800 சொல்வாள், "அன்பே, எனது செல்ல குதிரையை அருமையான இடங்களுக்கு அழைத்துச் செல்ல 412 00:21:30,880 --> 00:21:34,080 ஒரு டிரெயிலர் வேண்டும். இந்த வயல்கள் அவன் பயிற்சி செய்வதற்கு சிறியவை. 413 00:21:34,160 --> 00:21:35,720 "அவனது அற்புதமான சதைத் திரட்சி மிக்க கால்கள்." 414 00:21:35,800 --> 00:21:37,960 அப்புறம் நீ சொல்வாய், "சரி, உனக்கு ஒரு டிரெயிலர் வாங்கறேன்" 415 00:21:38,040 --> 00:21:40,800 பின்னர் அவள், "அந்த டிரெயிலரில் குதிரையை வைத்து இழுத்துச் செல்ல 416 00:21:40,880 --> 00:21:43,800 "ஒரு சிறப்பு கார் வாங்க வேண்டும்." என கேட்பாள் அதையும் நீ வாங்குவாய், 417 00:21:43,880 --> 00:21:47,240 பின் அவள், "எனது பெரிய. அருமையான குதிரையை நாட்டில் சுமந்து செல்ல, 418 00:21:47,320 --> 00:21:51,520 "எனக்கு ஒரு லாரி வேண்டும், ஒரு பெரிய லாரி வேண்டும், 419 00:21:51,560 --> 00:21:55,960 "அதில் சமையலறை, படுக்கை இருக்கணும். உன்னை விட நெருக்கமாக 420 00:21:56,040 --> 00:21:58,120 "என் குதிரைக்கு அருகில், தூங்குவேன்," எனவும் கேட்பாள். 421 00:21:58,200 --> 00:22:00,560 அந்த தருணத்தில் உன் தலை தொங்கி, இதயம் உடைந்து விடும். 422 00:22:00,640 --> 00:22:04,400 அதாவது நீ தோற்றாய், குதிரை வென்றது. 423 00:22:05,440 --> 00:22:06,800 ரொம்ப நல்லா இருந்தது. 424 00:22:08,920 --> 00:22:10,240 அது... 425 00:22:13,920 --> 00:22:15,080 கொஞ்சம் கழண்டு விட்டது. 426 00:22:15,160 --> 00:22:16,800 நாம் "கு" குண்டு மேல் நடமாடுறோம் இல்லையா? 427 00:22:16,880 --> 00:22:20,640 ஒவ்வொரு முறை இந்த குதிரை வார்த்தையை சொன்னதும்...அவன் மீண்டும் இப்படி ஆவான். 428 00:22:20,720 --> 00:22:23,080 இதை இதோடு முடிப்போம். இது உரையாடல் தெரு அல்ல. 429 00:22:23,160 --> 00:22:24,600 இது ஹாம்மொண்டின் புலம்பல் தெரு. 430 00:22:24,680 --> 00:22:27,320 -அதுக்கு மன்னிக்கணும். -சரி, நாம் தொடருவோமா? 431 00:22:27,400 --> 00:22:30,400 சரி, இப்போது, சாலைக்கு வெளியே, நான்கு சக்கர இயக்க லம்பார்கீனீ இருக்கு. 432 00:22:30,480 --> 00:22:33,320 அது யூரஸ் என்று அழைக்கப் படுகிறது, அது நல்லா இருக்கிறதா என அறிய, 433 00:22:33,400 --> 00:22:37,960 நான் தி க்ராண்ட் டூரை சில கேள்விகளோடு ஸ்வீடனுக்கு எடுத்து சென்றேன். 434 00:22:49,440 --> 00:22:51,720 இதுதான் என் முதல் பெரிய கேள்வி. 435 00:22:52,000 --> 00:22:55,360 இந்த மாதிரி நிலப் பரப்பை சமாளிக்க ஒரு காரை நீங்க வடிவமைத்தால், 436 00:22:55,640 --> 00:22:58,160 அது ஒரு அசல் லம்பார்கீனீயா இருக்குமா? 437 00:22:58,880 --> 00:22:59,720 லம்பார்கீனீ 438 00:23:07,520 --> 00:23:11,480 யூரஸ் நிச்சயமா உபகரணம் நிறைந்த சூப்பர் காராகவே தோணுது. 439 00:23:14,880 --> 00:23:19,280 இதன் கண்ணைச் சுழற்றும் பாங்கு, இதை ஒவ்வொரு அங்கமும் லம்பார்கீனீ என்கிறது. 440 00:23:21,440 --> 00:23:22,920 ஆனால், அப்படித்தானா? 441 00:23:25,240 --> 00:23:29,240 இந்தக் காரை உருவாக்க, லம்பார்கீனீ பொறியியலாளர்கள், 442 00:23:29,320 --> 00:23:31,240 வோக்ஸ்வேகனின் உதிரி பாகங்களின் குப்பையையும் அலசி விட்டனர். 443 00:23:31,320 --> 00:23:35,280 எனவே, என்ஜின், ஒரு முழு நாலு லிட்டர் வி8 போர்ஸே பனமேரா. 444 00:23:35,960 --> 00:23:40,560 பின் அச்சும், வாயு சஸ்பென்ஷனும் பென்ட்லி பென்டேகா தயாரிப்பு. 445 00:23:40,640 --> 00:23:44,320 இது அமரும் அடித்தட்டும், ஓட்டுனர் முகப்பின் பெரும் பகுதியும், 446 00:23:44,400 --> 00:23:47,080 ஆடி எஸ்க்யூ7 இடமிருந்து பெற்றது. 447 00:23:47,320 --> 00:23:51,920 அப்போ அதை லம்பார்கீனீ இல்லை என்றே சொல்ல முடியுமா? 448 00:24:09,800 --> 00:24:14,200 சரி, இது பூஜ்யத்தில் இருந்து தொண்ணூறுக்கு 3.6 நொடியில் வேகம் எடுக்கிறது. 449 00:24:16,120 --> 00:24:19,520 இதன் உச்ச வேகம், 300 கி.மீ. 450 00:24:24,760 --> 00:24:27,560 எனவே நீங்க எதிர்பார்க்கும் அம்சங்கள் இதில் உண்டு, 451 00:24:28,560 --> 00:24:31,320 அதோடு எதிர்பாராத அம்சங்களும் உண்டு. 452 00:24:32,920 --> 00:24:35,640 இதுதான் டர்போ சார்ஜ் கொண்ட முதல் லம்பார்கீனீ. 453 00:24:35,720 --> 00:24:38,760 முதல் தானியங்கி கியர் பாக்ஸும் கொண்டது. 454 00:24:38,840 --> 00:24:41,960 இந்தக் கலவையின் அர்த்தம், உங்கள் காலை அழுத்தி ஓட்டும் விதத்தில், 455 00:24:42,040 --> 00:24:46,160 மெல்லிய லம்பார்கீனீ தனமற்ற 456 00:24:46,560 --> 00:24:48,240 ஒரு வித்தியாசம் இருக்கு என்பது. 457 00:24:51,880 --> 00:24:55,880 அது ஓட ஆரம்பிக்கும் போது, கிறீச்சிடும் கத்தல்கள் இல்லை. 458 00:24:57,000 --> 00:24:59,760 கொஞ்சம் படபடப்பு சத்தமும், இடித்தலும் இருக்கத்தான் செய்கிறது. 459 00:25:03,240 --> 00:25:07,720 ஆனால், எல்லாம் அமைதியாக்கப் பட்டு மெருகூட்டிய உள் பக்கத்தில் அது கேட்காது. 460 00:25:08,640 --> 00:25:12,280 அதனால்தான் இங்கே சொல்வது எல்லாம் லதீன் ஆக இருக்கும். 461 00:25:12,600 --> 00:25:15,280 இது முதிய பேராசியர்களுக்கான லம்பார்கீனீ. 462 00:25:17,640 --> 00:25:19,520 இதில் நான் போப்பையே கூட பார்ப்பேன். 463 00:25:25,040 --> 00:25:30,040 இது அமைதியானது, கொஞ்சம் தயக்கம் காட்டும் நவீன தேட்டை 464 00:25:30,120 --> 00:25:32,400 அதோடு புத்திசாலித் தனமான பாட்டை கட்டுப்பாட்டு அமைப்பு. 465 00:25:32,560 --> 00:25:37,160 சாலை கார்களுக்கு பொருத்தப் பட்ட ஆகப் பெரிய கார்பன் பிரேக்குடன். 466 00:25:37,240 --> 00:25:38,240 எனவே, இது பாதுகாப்பானதும் கூட. 467 00:25:38,320 --> 00:25:39,440 லம்பார்கீனீ கார்போசெராமிக் 468 00:25:40,880 --> 00:25:44,600 ஆனால், நான் இப்போது பனிப் பொதியில் காரை 469 00:25:44,920 --> 00:25:47,320 ஓட்டிக் கொண்டிருக்கேன் என்பதை மறுக்க இயலாது. 470 00:25:47,400 --> 00:25:51,560 அது 641 குதிரைத் சக்தி கொண்டது, 471 00:25:51,640 --> 00:25:54,960 அதன் முகப்பு மூடியின் கீழ் ஒரு வன்மையான போராட்டமே நடந்து கொண்டிருக்கு. 472 00:25:58,680 --> 00:26:02,320 அதாவது, அது பாதுகாப்பானதே அல்ல. 473 00:26:04,400 --> 00:26:05,560 கடவுளே. 474 00:26:08,640 --> 00:26:09,680 ஒருமைப் படுத்துகிறேன். 475 00:26:11,920 --> 00:26:13,880 இது துடிப்பது பயங்கரம். 476 00:26:18,600 --> 00:26:21,920 இது நான் ஒரு குளவிகள் நிறைந்த தொலைபேசி பூத்தில் இருந்து கொண்டு, 477 00:26:22,000 --> 00:26:24,320 உலகின் அனைத்து இயற்பியலையும் கட்டுப் படுத்துவது போல. 478 00:26:26,160 --> 00:26:30,480 என்னை தனியா விடுங்க, நான் அலையேற்றம், புவி ஈர்ப்பு, பூமியை கட்டுப் படுத்தணும். 479 00:26:32,560 --> 00:26:35,520 அப்போது இந்தக் கார் பொருத்தமானமான தருணத்தில் இருக்கும், 480 00:26:35,600 --> 00:26:39,520 அங்கு உற்சாகம் குறைந்து பயம் அதிகரிக்கும். 481 00:26:40,440 --> 00:26:43,000 அதுதான் லம்பார்கீனீ நாடு. இதுதான். 482 00:26:43,440 --> 00:26:44,400 அடச்சே. 483 00:26:52,400 --> 00:26:56,520 ஆக, யூரஸ் பார்க்கவும் அனுபவிக்கவும் லம்பார்கீனீ போலிருக்கும். 484 00:26:58,360 --> 00:27:01,120 இது செயல் ரீதியானது, டிக்கி மிகப் பெரியது. 485 00:27:02,600 --> 00:27:06,440 அதனுள், ஐந்து ஆறடி உயரமுள்ளவர்கள் அடங்கிக் கொள்ளலாம். 486 00:27:08,320 --> 00:27:10,120 அது நல்ல இடம் கூட. 487 00:27:11,320 --> 00:27:12,760 இவை எல்லாமே அருமை. 488 00:27:15,240 --> 00:27:17,160 ஆனால் இது சாலையற்ற இடத்தில் வேலை செய்யுமா? 489 00:27:19,920 --> 00:27:22,720 அதைக் கண்டு பிடிக்க, நான் இதை ஒரு ஸ்கீ விடுதியின் 490 00:27:22,920 --> 00:27:24,640 உச்சப் பகுதியில் சோதனை செய்யப் போகிறேன். 491 00:27:25,280 --> 00:27:29,720 இப்போது இது அணிந்திருப்பது, குமிழ்களோ, கூர் முனைகளோ இல்லாத டயர்கள். 492 00:27:29,800 --> 00:27:35,760 நான் அணிந்திருப்பது, மென்மையான இத்தாலிய ஓட்டுனர் ஷூக்கள் அல்ல. 493 00:27:37,080 --> 00:27:39,200 இது சரியா போகுமா தெரியலே. 494 00:27:40,600 --> 00:27:43,880 இதில் உள்ளே வந்ததும், பிரச்சினைகள் மோசமாகும், ஏன்னா, 495 00:27:43,960 --> 00:27:48,280 ஓட்டுனர் மாற்றமுடியாத டிஃபரென்சியல் உள்ளது சக்தி குறைந்த கியர் பெட்டியும் கிடையாது. 496 00:27:48,480 --> 00:27:51,400 நீங்க செய்யக் கூடியது எல்லாமே, அதை ஓட விட்டு, 497 00:27:51,720 --> 00:27:55,040 இயக்கத்தை பனிப் பொதி வகைக்கு கொண்டு வருவது மட்டுமே. 498 00:27:57,440 --> 00:28:00,160 இது பனிப் பொதியா? "நெவே" என்றால் லாதீனில் பனிப் பொதியா? 499 00:28:01,840 --> 00:28:04,240 அப்படித்தான் இருக்கணும். வேலை செய்யுதா பார்க்கலாம். 500 00:28:04,640 --> 00:28:05,760 இதோ கிளம்பறோம். 501 00:28:06,640 --> 00:28:09,400 இதன் கியரை மாற்றிக் கொள்ளக் கூடாது. ஓ, நகருதே. 502 00:28:14,160 --> 00:28:18,040 இந்த 1,65,000 பவுண்ட் விலையுள்ள லம்பார்கீனீ 503 00:28:18,640 --> 00:28:21,160 ஸ்கீ விடுதியின் சரிவில் ஓடுகிறது. 504 00:28:24,440 --> 00:28:27,360 இந்த டர்போ சார்ஜர்கள், சாலையில் தொந்தரவாக இருக்கலாம், 505 00:28:27,440 --> 00:28:30,120 ஆனால், அது எனக்கு கீழ் மட்ட முடுக்கத்தை கொடுத்து, 506 00:28:30,200 --> 00:28:32,560 இந்த மலையின் மேல் ஏற வைக்கிறது. 507 00:28:34,920 --> 00:28:39,000 இதில் பழைய மிட்ஸுபிஷி ஷோகனில் உள்ளது போன்ற சாய்மான அளவி இருக்கு. 508 00:28:43,240 --> 00:28:46,640 இது உண்மையில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துது. முதல் கியருக்கு வந்துவிட்டது. 509 00:28:59,360 --> 00:29:01,520 ஹலோ, அதிர்ந்து போன ஸ்கீ நேயர்களே. 510 00:29:05,320 --> 00:29:10,320 இது ஒரு 2.4 டன் கார் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை. 511 00:29:10,720 --> 00:29:13,480 சாதாரண சாலை டயர்களில் இது இப்படி வேலை செய்கிறது. 512 00:29:16,240 --> 00:29:18,680 போ, போ, உன்னால் முடியும். 513 00:29:19,000 --> 00:29:21,160 போ. போ. 514 00:29:25,280 --> 00:29:26,600 ஓ, கொஞ்சம் பொறு. 515 00:29:29,200 --> 00:29:31,000 ஆமாம், அதே. 516 00:29:31,080 --> 00:29:34,400 இப்போது இது சாதாரண டயர்கள் உள்ள 2.4 டன் வண்டி என தெரிந்துவிட்டது. 517 00:29:34,480 --> 00:29:36,040 ஏன்னா இது பழுதாகி நின்றது. 518 00:29:38,200 --> 00:29:40,760 இல்லை, இல்லை. 519 00:29:42,680 --> 00:29:43,800 சரி. 520 00:29:44,480 --> 00:29:47,120 அப்போ, இதுவரை நாம் நிரூபித்து இருப்பது, 521 00:29:47,400 --> 00:29:51,600 ஆம், இது லம்பார்கீனீ, லம்பார்கீனீ போல உற்சாக உணர்வு தருது, 522 00:29:52,600 --> 00:29:55,520 அப்படித்தான்...நான் சொன்னது. 523 00:29:55,600 --> 00:29:59,000 சாலைக்கு வெளியே இது நல்ல வண்டிதான், ஆனால், 524 00:29:59,080 --> 00:30:00,640 ரேஞ்ச் ரோவர் அளவுக்கு அல்ல. 525 00:30:01,000 --> 00:30:02,360 லம்பார்கீனீ 526 00:30:03,280 --> 00:30:06,280 நாம் இன்னொரு கேள்விக்கு விடை அளிக்கணும். 527 00:30:06,360 --> 00:30:08,120 ஓட்டிச் செல்வது என்பது குஷியான விஷயமா? 528 00:30:10,240 --> 00:30:14,280 நாங்க செய்தது என்னன்னா, பனி ஏரைக் கொண்டு 529 00:30:14,360 --> 00:30:16,080 இந்த உறைந்த ஏரியில் ஒரு பந்தயத் தடத்தை அமைத்தது. 530 00:30:21,240 --> 00:30:23,640 இதுதான் எங்க திட்டம். 531 00:30:24,760 --> 00:30:30,400 நான் இந்த நாலு சக்கர இயக்க போர்ஸே 911 டர்போவை, முந்த முயற்சிக்கப் போகிறேன். 532 00:30:30,480 --> 00:30:32,000 அதை ஓட்டுபவர் 533 00:30:32,080 --> 00:30:34,720 தி க்ராண்ட் டூரின் பந்தய ஓட்டுனர், அப்பி ஈடன். 534 00:30:36,320 --> 00:30:37,680 இந்த ஓட்டையைப் பார்த்தாயா? 535 00:30:37,760 --> 00:30:39,280 இதை இதற்கு முன் பார்க்கவில்லை. 536 00:30:39,360 --> 00:30:41,120 இந்த நிலைமையைப் பார்! 537 00:30:41,200 --> 00:30:43,120 உன் கார்தான் எடை அதிகம், அல்லவா? 538 00:30:43,200 --> 00:30:46,640 அது 2.4 டன். நான் அரை டன் கணம். 539 00:30:47,440 --> 00:30:48,680 அதைப் பத்தி கவலையா இல்லையா? 540 00:30:49,440 --> 00:30:51,640 நான் சீட் பெல்டை அணியவில்லை. ஒரு வேளை முழுகினால், 541 00:30:51,720 --> 00:30:52,840 அப்படியே வெளியே வந்துவிடுவேன். 542 00:30:52,920 --> 00:30:53,800 நிஜமாவா சொல்கிறாய்? 543 00:30:53,880 --> 00:30:54,720 ஆமாம். 544 00:30:56,080 --> 00:30:58,080 இந்த சண்டை துவங்கும் முன், 545 00:30:58,560 --> 00:31:01,560 நான் சில பயிற்சி சுற்றுக்கள் செய்தேன். 546 00:31:05,760 --> 00:31:06,880 ஓ, தெய்வமே! 547 00:31:07,720 --> 00:31:09,120 போ. போ. 548 00:31:11,960 --> 00:31:13,640 நான் கொஞ்சம் விலகிப் போறேன். 549 00:31:19,080 --> 00:31:21,720 ஓ, எனது யூரஸ் கொஞ்சம் படபடப்பாகிறது. 550 00:31:22,600 --> 00:31:24,360 டாக்டர்களிடம் நாம் சொல்வது போல. 551 00:31:26,840 --> 00:31:28,040 சரி. அதை அங்கே செலுத்துவோம். 552 00:31:30,320 --> 00:31:31,920 இப்போ, அடுத்ததா வேக முடுக்கம். 553 00:31:35,120 --> 00:31:36,160 அப்படித்தான். 554 00:31:39,720 --> 00:31:41,480 ஊர்க்குருவி பருந்தாகாது. 555 00:31:42,920 --> 00:31:44,280 ஸ்வீடனில் அப்படிதான் சொல்வார்கள். 556 00:31:48,000 --> 00:31:50,320 நானே எனக்கு பனி மூட்டத்தை உண்டாக்கிக் கொள்கிறேன். 557 00:31:52,240 --> 00:31:55,760 ஒரு ரேஞ்ச் ரோவரில் போவது போல் ஸ்கீ சரிவை அடைய முடியாது, 558 00:31:55,840 --> 00:31:58,560 ஆனால் இப்படிச் செய்ய, 559 00:31:59,840 --> 00:32:01,120 இது தான் மேல். 560 00:32:06,680 --> 00:32:10,880 ஆனால், இது போர்ஸேவில் வரும் அப்பியை தாண்ட முடியுமா? 561 00:32:13,760 --> 00:32:17,560 அதோ போர்ஸே! அதோ போர்ஸே! 562 00:32:22,120 --> 00:32:24,920 மணி அடிக்கப் பட்டது. பந்தயம் துவங்குது. 563 00:32:28,120 --> 00:32:32,760 இப்போது சிறப்பாக உருவாக்கப் பட்ட பந்தயப் பாதையின் நுணுக்கங்களை கண்டறியும் தருணம். 564 00:32:34,680 --> 00:32:36,960 அந்த வட்ட வளைவைச் சுற்றி... 565 00:32:40,480 --> 00:32:41,960 இப்போது தண்டுப் பகுதி. 566 00:32:43,640 --> 00:32:46,240 இதை "நீள்வட்டம்" என்போம். 567 00:32:51,600 --> 00:32:54,240 அசிங்கங்களுக்கு எதிரா ஓட்டியிருக்கேன், ஆனால் அசிங்கத்தின் மேல் அல்ல. 568 00:32:59,160 --> 00:33:01,520 அதைப் பிடிக்க முடியும், கடவுள் கட்டளை! போ! 569 00:33:03,920 --> 00:33:07,080 அதற்கு நாலு சக்கர இயக்கம் இருக்கு, எனக்கு இருப்பதைப் போல். 570 00:33:10,680 --> 00:33:13,160 ஆனால், அதில் பிரேக் அமைப்பு இதைவிட நல்லா இருக்கும். 571 00:33:15,000 --> 00:33:18,040 இப்போ, எனக்கு 641 குதிரை சக்தி தா! 572 00:33:22,160 --> 00:33:23,080 ஆஹா. 573 00:33:24,240 --> 00:33:28,000 இது கொஞ்சம் தயங்கும் என்று ஏற்கனவே சொன்னேன். 574 00:33:29,520 --> 00:33:31,240 கார்ஸா வகையில் அப்படி இல்லை. 575 00:33:35,960 --> 00:33:38,320 இது பிரமாதம், பிரமாதம்! 576 00:33:41,160 --> 00:33:43,600 அது அகலமா போய்விட்டதே. அது ஒரு வாய்ப்பா? 577 00:33:43,680 --> 00:33:44,720 போ! 578 00:33:47,720 --> 00:33:50,000 இப்போ! இப்போ! 579 00:33:52,520 --> 00:33:53,720 அடடே! 580 00:33:54,800 --> 00:33:56,040 போ, ஜெர்மி. 581 00:34:02,400 --> 00:34:03,320 போ! 582 00:34:04,600 --> 00:34:06,040 போ, உன்னால் அதை முந்த முடியும்! 583 00:34:08,760 --> 00:34:09,680 போ! 584 00:34:18,920 --> 00:34:23,920 ஒவ்வொரு சுற்றுக்கு பிறகும், பெரிய பளுவான யூரஸ், 585 00:34:24,000 --> 00:34:25,680 911 டர்போவின் பின்னால் தொற்றிக் கொண்டு சென்றது. 586 00:34:25,800 --> 00:34:27,440 அய்யோ! 587 00:34:27,520 --> 00:34:29,640 அப்படியா? இல்லை! 588 00:34:31,840 --> 00:34:34,800 ஆனால், இறுதியில் நான் தோல்வியை ஒப்புக்கொள்ள நேரிட்டது. 589 00:34:35,480 --> 00:34:38,360 நான் அந்த 911ஐ முந்த முடியவில்லை, அதுதான் கதையின் முடிவு. 590 00:34:38,480 --> 00:34:40,880 ஆனால் நான் தொடர்ந்து முயற்சி செய்யலாம். 591 00:34:40,960 --> 00:34:45,320 சாலையை மீறிய காரில், அது திகைப்பைத் தருவது. 592 00:34:47,040 --> 00:34:48,320 உண்மையில் அப்படித்தான். 593 00:34:52,920 --> 00:34:55,960 லம்பார்கீனீதான் உலகின் சாலை மீறிய வேகமான கார் 594 00:34:56,040 --> 00:35:01,040 என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். 595 00:35:09,000 --> 00:35:11,280 -அது அருமையான நேரம். -உனக்கு நல்ல நாளா அமைந்தது. 596 00:35:11,360 --> 00:35:12,920 -எனக்கு அதற்குப் பணம் தந்தனர். -அது உன் பணி. 597 00:35:13,000 --> 00:35:14,160 -இதுவல்லவோ பணி. -சரியே. 598 00:35:14,200 --> 00:35:15,480 அதை செய்வது எனது வேலைதான். 599 00:35:17,320 --> 00:35:20,680 சாலை மீறிய காரில் இது மிக வேகமானது என்பது 600 00:35:20,800 --> 00:35:23,360 ரொம்ப நாள் நிலைக்காது, ஏன்னா, ஆஸ்டன் மார்டினும், ஃபெர்ராரியும், 601 00:35:23,440 --> 00:35:25,320 -பயனுறு பந்தய கார்ளை கொண்டுவருகிறார்கள். -ஆமாம். 602 00:35:25,400 --> 00:35:26,880 -இந்த வருடம்! -ஆம், எதுவானாலும். 603 00:35:26,960 --> 00:35:30,560 விஷயம் என்னவெனில், யூரஸ் வைத்திருப்பதை மக்களிடம் சொல்லிக் கொள்ளலாமா? 604 00:35:31,000 --> 00:35:34,520 ஏன்னா அது ஸ்டார் ட்ரெக்கின் உதிரி அயலனைப் போல. 605 00:35:34,600 --> 00:35:36,680 ஆமாம், ஆனால் அது ஒரு லம்பார்கீனீ போல வேலை செய்கிறது. 606 00:35:36,800 --> 00:35:38,480 ஆமாம். ஆனால் இல்லை. 607 00:35:39,880 --> 00:35:41,480 இதுதான் அருமையான வாடிக்கையாளர் அறிவுரை. 608 00:35:41,600 --> 00:35:43,760 ஆமாம், தெளிவானது, மிகத் தெளிவானது. 609 00:35:43,840 --> 00:35:47,600 விஷயம் என்னன்னா, இந்தப் படத்தை தயாரித்த பிறகு, 610 00:35:47,640 --> 00:35:50,160 வீட்டுக்கு வந்து யோசித்துப் பார்த்தேன், 611 00:35:50,280 --> 00:35:52,640 அது இன்னும் கொஞ்சம் அவென்டடோர்தனமாக இருக்கலாம். 612 00:35:52,760 --> 00:35:55,440 இன்னும் கொஞ்சம் வேகமாக செய்திருக்கலாம். 613 00:35:55,520 --> 00:35:57,080 உன் முடிவை மாற்றிக் கொண்டதாகவா சொல்கிறாய்? 614 00:35:57,160 --> 00:35:58,640 -ஆமாம். -ஓ, இது அருமை! 615 00:35:58,760 --> 00:36:02,960 பிரதமர் கிளார்க்சன் உச்சி மாநாட்டிலிருந்து திரும்பி "போரை பிரகடனம் செய்கிறேன்! 616 00:36:03,040 --> 00:36:04,640 "ஆனால், திரும்பும் போது, மறு பரிசீலனை செய்தேன், 617 00:36:04,760 --> 00:36:06,280 "இப்போது அவ்வளவு உறுதியா தெரியலே, நான் மனத்தை மாற்றிக் கொண்டேன்." 618 00:36:06,360 --> 00:36:07,760 சரியே. அதைத்தான் செய்தேன். 619 00:36:07,880 --> 00:36:10,080 நல்லது. இப்போ இத்தகைய அறிவார்ந்த சூழலில் நாம் இருப்பதால், 620 00:36:10,160 --> 00:36:14,160 நான் ஒரு சின்ன வரலாற்றுப் பாடத்துக்கு போக விரும்புகிறேன். 621 00:36:28,080 --> 00:36:32,800 ஏப்ரல் 7, 1968ல் ஜெர்மனியின் ஹாக்கென்ஹெய்ம் 622 00:36:32,880 --> 00:36:35,800 ஃபார்முலா டூ பந்தயத்தில் ஒரு பந்தயக் கார் ஓட்டுனர் கொல்லப் பட்டார். 623 00:36:37,800 --> 00:36:42,120 பரிதாபமா, ஓட்டுனரின் மரணம் ஒரு சாதாரண நிகழ்வாக இருந்தது, 624 00:36:42,840 --> 00:36:45,520 ஏன்னா. அன்றைய பந்தயத்தின் ஆபத்து அப்படித்தான் இருந்தது. 625 00:36:46,400 --> 00:36:50,560 அவர், அந்த வருடத்தில் மட்டும் 626 00:36:50,840 --> 00:36:54,160 இறந்த 127 ஓட்டுனர்களில் ஒருவர். 627 00:36:56,280 --> 00:37:00,480 ஆனால், இந்த முறை, இந்த மரணம் அதிர்ச்சி அலைகளை மோட்டார் பந்தய உலகில் பரவவிட்டது. 628 00:37:00,560 --> 00:37:03,960 ஏன்னா, இப்போது அது ஒப்புமை அற்ற 629 00:37:04,040 --> 00:37:06,840 ஒரு பந்தயக் கார் ஓட்டுனரை இழந்தது, 630 00:37:06,920 --> 00:37:11,280 பலர் அவரை அனைத்து காலத்திலும் சிறப்பானவர் என இன்றும் சொல்கிறார்கள். 631 00:37:13,160 --> 00:37:16,040 ஜிம் கிளார்க், ஆர்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர், தோற்றம் 4.3.36 மறைவு 7.4.68 632 00:37:17,000 --> 00:37:21,920 ஜிம் கிளார்க் மேற்கு ஜெர்மனியில் நடை பெற்ற ஒரு ஃபார்முலா டூ பந்தயத்தில் இறந்தார். 633 00:37:22,440 --> 00:37:23,360 அந்தக் கார் 270 கி.மீ வேகத்தில் போகும்போது பாதையில் சறுக்கி ஜிம் கிளார்க் இறந்தார். 634 00:37:23,440 --> 00:37:25,080 அது அனைவருக்கும் பெரிய அதிர்ச்சி. 635 00:37:25,200 --> 00:37:26,760 அது நம் எல்லோரையும் ஒரு உலுக்கு உலுக்கியது. 636 00:37:26,840 --> 00:37:28,040 கிளார்க் விபத்தில் மரணம் 637 00:37:28,120 --> 00:37:31,120 எந்த ஓட்டுனருக்காவது மரண விபத்து ஏற்படாது என்றால், 638 00:37:31,160 --> 00:37:32,440 அவர் ஜிம் கிளார்க்காகத்தான் 639 00:37:32,880 --> 00:37:38,160 இருக்க வேண்டும், ஏனெனில், மற்ற ஓட்டுனர்கள் போல் தவறு செய்வதில்லை, 640 00:37:38,200 --> 00:37:39,640 அவ்வளவு எச்சரிக்கையா தவறில்லாம ஓட்டுவார். 641 00:37:42,040 --> 00:37:46,800 கலிஃபோர்னியாவில் ஒரு ரேடியோ அறிவிப்பாளர், 642 00:37:46,880 --> 00:37:50,560 ஜிம் கிளார்க்கின் மரண செய்தி அறிவிக்கும் போது, அவருக்கு மரியாதை செலுத்த 643 00:37:50,640 --> 00:37:55,080 அனைவரையும் முன் விளக்குகளை எரிய வைக்கச் சொன்னார். நெடுஞ் சாலைகளே ஒளிர்ந்தன. 644 00:37:58,160 --> 00:38:03,440 அத்தகைய உலகளாவிய கூக்குரல் தன் திறமையை தம்பட்டமே அடித்துக் கொள்ளத் தெரியாத 645 00:38:03,520 --> 00:38:08,120 ஒரு ஆட்டு விவசாயியின் மகன், 646 00:38:08,160 --> 00:38:11,120 ஒதுங்கி அடக்கமாக இருக்கும் கிளார்க்குக்கு, அவ்வளவு எளிதில் பொருந்தி வரவில்லை. 647 00:38:13,080 --> 00:38:18,080 நான் பொழுது போக்காகத்தான் துவங்கினேன், உலக சாதனை எல்லாம் நினைத்துப் பார்க்கலே. 648 00:38:18,160 --> 00:38:24,160 ஆனால், ஒரு குறிப்பிட்ட பாதையில், ஒரு குறிப்பிட்ட காரை வேகமாக ஓட்டுவது 649 00:38:24,200 --> 00:38:27,600 எப்படி இருக்கும் என்பதை அறிய ஆர்வம் இருந்தது, 650 00:38:29,200 --> 00:38:33,320 பந்தயக் கார் பந்தயத்தில் 1950ன் பின் பகுதிகளில் நன்கு தேர்ந்த 651 00:38:33,400 --> 00:38:38,080 கிளார்க்கின் வேகமும் திறமையும், லோட்டஸ் நிறுவனர் காலின் சாப்மேன் கண்டறிந்ததால், 652 00:38:38,160 --> 00:38:41,960 அவரை ஃபார்முலா ஒன் பந்தயம் 1960க்கு ஒப்பந்தம் செய்தார். 653 00:38:45,400 --> 00:38:48,880 கிளார்க், விரைவில் மோட்டார் பந்தய உலகையே ஒரு கலக்கு கலக்கினார். 654 00:38:49,960 --> 00:38:52,320 குறிப்பாக இந்தக் காரில். 655 00:38:55,000 --> 00:38:56,400 தி லோட்டஸ் 25, 656 00:38:58,640 --> 00:39:00,680 இதில், 1963ல், 657 00:39:02,560 --> 00:39:05,680 அவர் தனது முதல் எஃப்1 சாதனையாளர் பட்டத்தைப் பெற்றார். 658 00:39:10,080 --> 00:39:14,960 ஆஹா! நான் ஜிம் கிளார்க் அமர்ந்த இடத்தில் அமர்ந்திருக்கேன்! 659 00:39:19,040 --> 00:39:21,120 இது கிளர்ச்சியூட்டுகிறது! 660 00:39:25,840 --> 00:39:28,400 இவை சக்தி மிக்க கார்கள் அல்ல. 661 00:39:30,040 --> 00:39:34,600 ஒன்றரை லிட்டருக்கு 210 பிரேக் குதிரைத் சக்தியே அவைகளின் சாத்தியம். 662 00:39:35,160 --> 00:39:38,280 இருப்பினும், அவை 290 கி.மீ. வேகத்திலும் நன்கு வேலை செய்தன. 663 00:39:44,360 --> 00:39:47,320 அதன் புரட்சிகரமான மோனோகாக் சேசிஸ் காரணமாக, 664 00:39:47,400 --> 00:39:51,960 இந்த 25, மற்ற எந்த எஃப்1 காரை விட திடமாகவும், லேசாகவும் இருந்தது. 665 00:39:52,360 --> 00:39:54,960 அதாவது, அது வேகமாக இருந்தது நேர்ப் பாதைகளில் மட்டும் அல்ல, 666 00:39:55,920 --> 00:39:58,160 மூலைகளிலும் கூடத்தான். 667 00:39:59,640 --> 00:40:03,040 கிளார்க் இதை 1963ல் பயன்படுத்தி, 668 00:40:03,120 --> 00:40:06,680 கிராண்ட் பிரிக்ஸின் பத்தில் ஏழு வெற்றிகளைக் கண்ட சாதனை படைத்தார். 669 00:40:07,280 --> 00:40:11,120 ஜிம் கிளார்க்தான் ஜெயிப்பார். வேறு யாரும் அவரை நெருங்க முடியவில்லை. 670 00:40:14,800 --> 00:40:19,520 ஆனால், 1963 வரப் போவதற்கு ஒரு தயாரிப்பு மட்டுமே. 671 00:40:20,080 --> 00:40:22,640 கிளார்க்கின் உண்மையான திறனை அறிய, 672 00:40:22,760 --> 00:40:24,960 நாம் இன்னொரு ஆண்டுக்குச் செல்ல வேண்டும். 673 00:40:25,360 --> 00:40:29,000 அவரது 1965 சாதனைகள், 674 00:40:29,080 --> 00:40:33,400 எந்த ஓட்டுனராலும், அதுவரையோ, அல்லது பிறகோ மிஞ்சப் படவில்லை. 675 00:40:36,880 --> 00:40:40,480 நவீன ஃபார்முலா ஒன் பந்தய ஓட்டுனர், சாதாரணமா, ஆண்டுக்கு 21 பந்தயம் ஓட்டுவார். 676 00:40:40,560 --> 00:40:42,640 அதுவே அதிகம் என்ற முணுமுணுப்பு இருக்கும். 677 00:40:42,680 --> 00:40:47,400 ஜிம் கிளார்க்கோ, 1965ல் 63 பந்தயங்களில் பங்கேற்றார். 678 00:40:48,000 --> 00:40:50,640 சில கார்கள் பார்க்க ஒரே மாதிரி இருந்தன, ஆனால் உண்மையில் அவை வேறு வேறு. 679 00:40:50,680 --> 00:40:53,880 இந்த மாதிரி ஒரு காரில், அவர் ஃபார்முலா ஒன் பந்தயம் போவார். 680 00:40:53,960 --> 00:40:56,760 இதே காரில் பிரிட்டிஷ் ஃபார்முலா டூ சாதனைப் போட்டியிலும், 681 00:40:56,840 --> 00:40:59,840 ஃபிரெஞ்சு ஃபார்முலா டூ சாதனைப் போட்டியிலும் கலந்து கொண்டார். 682 00:40:59,920 --> 00:41:03,360 அவர் டாஸ்மான் தொடர் என்ற ஆஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில், 683 00:41:03,440 --> 00:41:07,440 ஆஸ்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் ஓட்டினார், 684 00:41:07,520 --> 00:41:09,920 பின்னர் பயணக் கார்களில் போட்டியிட விரும்பி, லோட்டஸ் கார்டினா ஓட்டினார். 685 00:41:10,000 --> 00:41:12,040 இதெல்லாம் போதாதென்று, 686 00:41:12,120 --> 00:41:14,960 அவர் இந்தியானாபோலிஸ் 500 ஐயும் தேர்ந்தெடுத்தார். 687 00:41:17,080 --> 00:41:17,920 டாஸ்மான் தொடர் 688 00:41:18,000 --> 00:41:20,960 முதலில் வந்தது, ஆஸ்திரேலியாவின் டாஸ்மான் தொடர். 689 00:41:21,880 --> 00:41:27,000 அதில் 15 பந்தயங்களில், கிளார்க் 11ல் முடி சூடினார். 690 00:41:28,440 --> 00:41:31,560 பின்னர், ஐரோப்பாவுக்குத் திரும்பி, பிரிட்டிஷ் ஃபிரெஞ்ச் 691 00:41:31,640 --> 00:41:36,200 ஃபார்முலா டூ சாதனைப் போட்டிகள் இரண்டிலும் பங்கு கொண்டு, இரண்டையுமே வென்றார். 692 00:41:37,080 --> 00:41:38,640 ஜிம் கிளார்க் முதலில் இருந்தே முன்னிலையில்! 693 00:41:39,600 --> 00:41:41,400 வென்றவர், ஜிம் கிளார்க்! 694 00:41:41,520 --> 00:41:46,120 எஃப்2 பந்தயங்களுக்கு இடையில், அவரது லோட்டஸ் கார்டினாவுக்கு தாவி, 695 00:41:46,160 --> 00:41:48,800 அதிலும் வெற்றிகளை குவித்தார். 696 00:41:50,280 --> 00:41:53,440 இது எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல, அமெரிக்கா. 697 00:41:54,440 --> 00:41:56,200 இண்டியானாபொலிஸ் 698 00:41:58,000 --> 00:42:02,120 இந்த இண்டியானாபொலிஸ் 500 மிகப் பெரிய கண் கொள்ளா காட்சியாகும். 699 00:42:03,560 --> 00:42:08,280 அமெரிக்காவின் மிக மதிக்கப் படும் போட்டி கடுமையான போட்டியாக இருக்கும். 700 00:42:08,360 --> 00:42:12,040 இண்டியானாபொலிஸ் வீரர்கள் பங்கு ஏற்கும் நீள்வட்ட பாதை பந்தயம் 701 00:42:12,160 --> 00:42:14,640 அவருக்குப் பழக்கப்பட்ட சராசரிக்கு மிக அதிகமான வேகம், 702 00:42:17,320 --> 00:42:20,960 இண்டியானாபொலிஸ்-500க்கு, கிளார்க், அதற்கென வடிவமைத்த லோட்டஸில் பயிற்சி செய்தார், 703 00:42:21,040 --> 00:42:24,320 அது வெறும் 500 குதிரைத் சக்திதான். 704 00:42:24,440 --> 00:42:29,080 இருந்தாலும், இவரிடம் ஏற்கனவே ஃபார்முலா ஒன் பட்டம் இருந்த போதும், 705 00:42:29,160 --> 00:42:33,800 அட்லாண்டிக்குக்கு அந்தப் பக்கம் இருந்து வரும் இந்த தான்தோன்றித்தன 706 00:42:33,880 --> 00:42:38,200 ஸ்காட்லாண்ட்காரரின் சாதனைகளை புறக்கணித்து, போட்டிக்கு முன் கத்துக்குட்டி நிலை 707 00:42:38,360 --> 00:42:39,840 தேர்வு வைத்தது இண்டியானாபொலிஸ் நிர்வாகம். 708 00:42:43,160 --> 00:42:44,640 இண்டியானாபொலிஸ் வார இறுதியில், 709 00:42:45,280 --> 00:42:49,520 அட்லாண்டிக்குக்கு அப்புறம் இருந்து வந்த தான்தோன்றி முதல் வரிசையில் தகுதி பெற்றார். 710 00:42:51,040 --> 00:42:54,800 அதன் பிறகு, அந்த பந்தயத்திலேயே, 711 00:42:56,280 --> 00:42:59,920 அமெரிக்காவின் தேர்ந்த நீள்வட்ட பந்தயக்காரர்களுக்கு எதிராக, 712 00:43:00,560 --> 00:43:03,840 இரண்டு நிமிடத்துக்கும் அதிகமான வித்தியாசத்தில் வென்றார். 713 00:43:11,080 --> 00:43:15,000 ஜிம் கிளார்க்தான் 1916க்குப் பின் இண்டியானாபொலிஸில் வென்ற ஐரோப்பியர். 714 00:43:15,440 --> 00:43:18,760 புதிய சாதனையாக 243 கி.மீ. வேகம் பதிவு செய்தார். 715 00:43:18,840 --> 00:43:19,880 ஜிம் கிளார்க் 500ஐ வென்றார் 716 00:43:19,960 --> 00:43:23,680 இந்த அளவுக்கு கிளார்க்கை சிறப்பாக்கியது எது? 717 00:43:23,800 --> 00:43:28,320 எந்த வகை காராக இருந்தாலும் அவரை வெற்றி பெறச் செய்தது எது? 718 00:43:30,560 --> 00:43:35,160 ஜிம்மி அப்பட்டமான பிறவி ஓட்டுனர், அவர் எதையுமே நினைப்பதில்லை, 719 00:43:35,280 --> 00:43:36,760 அந்தப் பாணியில் ஏன் ஓட்டுகிறார் என்று... 720 00:43:36,840 --> 00:43:37,880 செட்ரிக் செல்சர் பந்தயக் குழு பொறியியலாளர் 721 00:43:37,960 --> 00:43:39,160 அவருக்கே தெரியாது. 722 00:43:42,960 --> 00:43:46,640 நாம் பேசும் அந்தக் கால கட்டத்தில், ஒன்றரை லிட்டர் கார்களே இருந்தன, 723 00:43:46,720 --> 00:43:50,120 குதிரைத் சக்தியோ, இருநூறுதான், காரை கொஞ்சம் முரட்டுத் தனமா ஓட்டினா, 724 00:43:50,200 --> 00:43:51,600 நீங்கள் வேகத்தை இழப்பீர்கள். 725 00:43:52,160 --> 00:43:55,120 கொஞ்சம் வேகம் இழந்தாலும், 726 00:43:55,240 --> 00:43:57,560 அதைச் சரிக்கட்டுவது நிஜத்தில் மிகக் கடினமான காரியம். 727 00:43:57,640 --> 00:44:02,080 அதில்தான், கார் ஓட்டத்தை நிர்ணயிக்கும் நெளிவு சுளிவு தெரிந்தவர் ஜிம்மி. 728 00:44:02,160 --> 00:44:06,840 எந்த நவீன ஓட்டுனரும் காரை, ஜிம்மி ஓட்டுவதற்கு 729 00:44:07,080 --> 00:44:09,440 கிட்ட கூட நெருங்கி ஓட்டமுடியாது என்று நினைக்கிறேன். 730 00:44:10,040 --> 00:44:12,120 ஏன்னா, அவர் அவ்வளவு துல்லியம். 731 00:44:16,960 --> 00:44:21,760 காரின் வேகத்தை வெளிக் கொணரும் இயற்கை மீறிய சக்தியுடன், 732 00:44:21,880 --> 00:44:25,120 கிளார்க்குக்கு இன்னொரு இன்றியமையா திறமையும் இருந்தது. 733 00:44:26,120 --> 00:44:29,320 பல நல்ல ஓட்டுனர்கள் லோட்டஸில் இறந்திருக்கிறார்கள், 734 00:44:29,400 --> 00:44:30,480 ஜாக்கி ஸ்டீவர்ட், மூன்று முறை எஃப்1 சாதனையாளர் 1969, 1971, 1973 735 00:44:30,560 --> 00:44:32,960 ஏன்னா லோட்டஸ் வெகு மென்மையான் கார். 736 00:44:34,200 --> 00:44:36,920 ஆனால், ஜிம் கிளார்க் அதை இலகுவாக செலுத்தினார், 737 00:44:37,000 --> 00:44:40,160 எப்போதும் அதை பாதிக்கும் எந்த அம்சத்திலும் 738 00:44:40,280 --> 00:44:43,200 அதிக நெருக்கடி கொடுத்ததில்லை. 739 00:44:44,000 --> 00:44:45,400 பார்சிலோனாவில் ஒரு பயிற்சியின் போது, 740 00:44:46,440 --> 00:44:47,280 டேவ் சிம்ஸ், லோட்டஸ் அணி இயந்திர வல்லுனர் 741 00:44:47,360 --> 00:44:50,040 பத்து சுற்றுக்குப் பின் வந்து சொல்கிறார், 742 00:44:50,120 --> 00:44:51,800 "இடது சக்கரத்தில் ஏதோ பிரச்சினை. 743 00:44:52,560 --> 00:44:56,720 "இடது சக்கரத்தில் ஏதோ சரியில்லை என எனக்குத் தோணுது." 744 00:44:56,800 --> 00:45:00,840 நாங்கள் எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்தோம், எல்லாம் நன்றாகவே இருந்தது, 745 00:45:00,920 --> 00:45:02,560 அப்போதும் அவர் சொன்னார், "இல்லை, ஏதோ சரியில்லை." 746 00:45:02,640 --> 00:45:08,480 எனவே, அன்றிரவு, இடது பின் சஸ்பென்ஷனை பிரித்துப் போட்டு, 747 00:45:08,560 --> 00:45:13,040 பார்த்த போது, அய்யகோ, ஒரே ஒரு சக்கர பேரிங்க் தேய ஆரம்பித்திருப்பது தெரிந்தது. 748 00:45:14,480 --> 00:45:18,080 எவருக்கும் அது எப்படித் தெரியும் என்று தெரியவில்லை, ஆனா அவருக்கு தெரிந்திருந்தது. 749 00:45:18,800 --> 00:45:21,360 பந்தயத்துக்குப் பின், அவரது காரைப் பிரித்துப் போட்டு 750 00:45:21,920 --> 00:45:24,800 பக்கத்தில் கூட ஓட்டியவரின் காரைப் பிரித்துப் போட்டால், 751 00:45:24,880 --> 00:45:27,280 ஜிம்மியின் கார் பாகங்கள் எவை என்றும், 752 00:45:27,360 --> 00:45:28,240 பில்லி கோவீ லோட்டஸ் அணி இயந்திர வல்லுனர் 753 00:45:28,320 --> 00:45:31,240 மற்ற ஓட்டுனர் பாகங்கள் எது என்றும் சொல்லிவிட முடியும், 754 00:45:31,320 --> 00:45:35,600 அவை அவ்வளவு தூய்மையாக இருக்கும். 755 00:45:37,960 --> 00:45:41,600 ஆனால், துல்லியமான காரில் மட்டும்தான் 756 00:45:41,680 --> 00:45:44,200 கிளார்க் வெல்வார் என நினைக்காதீங்க. 757 00:45:46,240 --> 00:45:48,560 உதாரணமாக, ஸ்பாவில் ஒரு ஆண்டு, 758 00:45:48,640 --> 00:45:52,640 அவர் பந்தயத்தில் முந்திக் கொண்டிருந்த போது கியர் பெட்டி பழுதானது. 759 00:45:54,480 --> 00:45:55,800 அவர் விட்டு விட்டாரா? 760 00:45:55,880 --> 00:45:58,440 இல்லை, அவர் மீதமிருந்த பந்தயத்தை தொடர்ந்து, 761 00:45:58,560 --> 00:46:01,640 அதாவது, நாம் கவனிக்க வேண்டியது, ஒரு ஈரமான பாதையில், 250 கி.மீ. வேகத்தில், 762 00:46:02,840 --> 00:46:07,680 ஒரு கை ஸ்டியரிங்கிலும், இன்னொரு கை கியர் லீவரை அசையாமல் பிடித்தும் ஓட்டினாரே, அதை. 763 00:46:13,960 --> 00:46:15,440 அதிலும் அவர் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் 764 00:46:18,000 --> 00:46:20,080 முன்னதாக வந்து வென்றார். 765 00:46:36,560 --> 00:46:39,480 1965ன் பருவம் தொடங்கிய போது, 766 00:46:39,560 --> 00:46:42,960 கிளார்க், டாஸ்மான் தொடர் மற்றும் இண்டியானாபொலிஸ் 500 767 00:46:43,520 --> 00:46:47,400 இரண்டு ஃபார்முலா டூ சாதனைகளையும் வென்றிருந்தார், 768 00:46:47,520 --> 00:46:50,360 இன்னும் ஒன்றுதான் பாக்கி. 769 00:46:51,960 --> 00:46:55,320 மிகப் பெரிய சவாலான ஃபார்முலா ஒன் உலகப் பட்டம். 770 00:47:00,040 --> 00:47:01,440 எஃப்1 பந்தயங்களில், 771 00:47:01,560 --> 00:47:05,320 கிளார்க், திருத்தி அமைக்கப் பட்ட லோட்டஸ் 25 ஐ ஓட்டுவார். 772 00:47:05,440 --> 00:47:09,440 அவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன் உலக சாதனையாளர் பட்டத்தை வாங்கித் தந்த கார். 773 00:47:12,120 --> 00:47:15,280 ஆனால், அந்த பிரமிப்பான லோட்டஸ் 25, 774 00:47:15,360 --> 00:47:19,320 1965 வாக்கில் மூன்று வருடம் பழமையாகிவிட்டது என்பதும், 775 00:47:19,440 --> 00:47:23,320 புதிதாக அதில் மிகச் சிறிய திருத்தங்களே செய்யப் பட்டிருந்தன 776 00:47:23,400 --> 00:47:25,240 என்பதையும் மறுப்பதற்கில்லை. 777 00:47:25,880 --> 00:47:27,360 ஆக, ஜிம் இதை எப்படி சமாளிப்பார்? 778 00:47:31,640 --> 00:47:34,760 தென் ஆஃப்ரிக்காவில், தொடரின் துவக்க பந்தயத்தில், 779 00:47:34,840 --> 00:47:37,680 ஜாக் பிராஹ்ம், கிரஹாம் ஹில், மற்றும் உலக சாதனையாளர் ஜான் சர்டீஸ் 780 00:47:37,760 --> 00:47:42,080 போன்ற ஜாம்பவான்களிடம் மோத வேண்டியிருந்த அந்தப் பந்தயத்தில், 781 00:47:42,840 --> 00:47:45,960 கிளார்க் அரை நிமிடம் முன்னதாக வந்து வென்றார். 782 00:47:46,040 --> 00:47:49,680 அதுவும் முதுகு எலும்பு பிசகி அவரை பாதித்த நிலையில். 783 00:47:51,960 --> 00:47:56,200 அடுத்தது, ஸ்பாவும் ஃபிரெஞ்ச் கிராண்ட் பிரிக்ஸும். 784 00:47:56,680 --> 00:47:59,240 இரண்டையுமே அவரே வென்றார். 785 00:48:01,200 --> 00:48:03,600 லோட்டஸ் பழைய என்ஜின் கொண்டதாக இருக்கலாம், 786 00:48:03,680 --> 00:48:07,440 ஆனால், அதற்கான எல்லா எதிர்ப்புகளையும் பொறுத்த வரை, அது விஞ்சி நின்றது. 787 00:48:08,680 --> 00:48:11,960 ஸ்டியரிங் பின்னால் உள்ள கிளார்க் தோற்கடிக்க முடியாதவர் ஆனார். 788 00:48:14,960 --> 00:48:17,600 ஜிம்மி, பயிற்சி ஓட்டத்தின் துவக்கத்தின் போது 789 00:48:17,680 --> 00:48:20,480 அனைத்து சுற்றுக்களையுமே விரைவாக ஓட்டிப் பார்ப்பார். 790 00:48:21,080 --> 00:48:22,640 திரும்பி வந்து சுவற்றின் மேல் உட்கார்ந்துவிடுவார், 791 00:48:22,720 --> 00:48:25,320 அதற்கு மேல் காரை தேய்மானத்துக்கு உட்படுத்த அவசியம் இல்லை. 792 00:48:25,440 --> 00:48:28,000 அதன் பிறகு, பொறுமையாக, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பார், 793 00:48:28,080 --> 00:48:29,440 அதன் பிறகு இறங்கி வெற்றிக் களமாக்குவார். 794 00:48:31,680 --> 00:48:34,560 அவர் துவக்க நிலையில் முந்தவில்லை என்றால், காரில்தான் பிரச்சினை என்று அர்த்தம். 795 00:48:35,360 --> 00:48:36,320 அடுத்து வந்தது சில்வர்ஸ்டோன். 796 00:48:36,400 --> 00:48:37,240 சில்வர்ஸ்டோன். 797 00:48:37,560 --> 00:48:40,320 கிளார்க் குழுவை முந்திக் கொண்டு 798 00:48:41,240 --> 00:48:43,560 இங்கு இது வழக்கமான ஒன்றாகத் தோன்றியது, 799 00:48:44,000 --> 00:48:46,760 ஆனால், முடிவுறும் கட்டங்களில், 800 00:48:46,920 --> 00:48:50,200 இவரது என்ஜின் எண்ணெய் அழுத்தத்தை இழக்க ஆரம்பித்தது 801 00:48:50,280 --> 00:48:54,040 அதன் விளைவான நெருக்கடி தரும் ஜி-ஃ போர்ஸ் காரணமாக, வெடித்துவிடும் அபாயம் வேறு. 802 00:48:54,560 --> 00:48:57,120 கிளார்க் எண்ணெய் அழுத்தமே இல்லாமல் ஓட்டிக் கொண்டிருந்த போது, 803 00:48:57,200 --> 00:49:00,960 ஹில் பின்னால் பாய்ந்து வந்து, முந்தும் முனைப்பில், சுற்று சாதனையை படைக்கிறார். 804 00:49:01,080 --> 00:49:03,960 எனவே, மூலையில் ஓட்டுவதற்குப் பதிலாக, 805 00:49:04,120 --> 00:49:06,880 என்ஜினை அணைத்து, சக்கரங்களை அப்படியே மூலையில் உருள விட்டு, 806 00:49:06,960 --> 00:49:09,280 மூலையைக் கடக்கும் போது, என்ஜினை மீண்டும் இயக்கி ஓட்டி, 807 00:49:09,360 --> 00:49:11,840 மற்ற சுற்றுக்களை முடித்து, பந்தயத்தை வென்றார். 808 00:49:15,320 --> 00:49:16,240 நர்பர்கிரிங்க் 809 00:49:16,320 --> 00:49:19,640 இறுதியாக, எஃப்1 வித்தை கிளார்க் இதுவரை 810 00:49:19,720 --> 00:49:22,440 வென்றிராத பாதையான நர்பர்கிரிங்கை எட்டியது. 811 00:49:23,200 --> 00:49:25,520 இந்தப் பறக்கும் ஸ்காட்லாண்ட்காரருக்கு, துவக்கத்தின் முன் இறுக்கமான தருணங்கள். 812 00:49:25,600 --> 00:49:28,760 ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸில் வென்றால், அவர் உலக சாதனையாளர் ஆவார். 813 00:49:36,000 --> 00:49:40,360 துவக்கத்திலேயே முந்திய கிளார்க், நர்பர்கிரிங்க் கெட்ட சகுனத்தை முறியடித்து, 814 00:49:40,960 --> 00:49:44,920 அதில் வெற்றி கண்டது, ஃபார்முலா ஒன் உலக பட்டமாகும். 815 00:49:55,200 --> 00:49:59,400 ஆக, கிளார்க்கின் 1965 தொடர்களை தொகுப்போம். 816 00:49:59,480 --> 00:50:01,680 அவர் பங்கு கொண்ட 63 பந்தயங்களில், 817 00:50:01,760 --> 00:50:04,760 மலைப்பான விதத்தில் 31 பந்தயங்களில் வென்றார் 818 00:50:04,840 --> 00:50:07,640 அதோடு வெற்றி மேடையில் எட்டு முறை மீண்டும் தோன்றினார். 819 00:50:07,720 --> 00:50:11,320 இப்போ, அவரை, இதுவரையான எல்லா ஓட்டுனர்களில் மிகச் சிறப்பானவரென பார்க்க முனைந்தனர், 820 00:50:11,400 --> 00:50:13,520 உலகம் முழுவதும் அவர் விரும்பப் பட்டார். 821 00:50:13,640 --> 00:50:17,880 இருப்பினும் கூச்ச குணம் உள்ள அந்த ஸ்காட் வருடத்தின் சாதனைகளை 822 00:50:18,000 --> 00:50:19,640 ஆரவாரம் ஏதுமில்லாமல் ... 823 00:50:19,720 --> 00:50:20,800 ஜிம் கிளார்க் உலக சாதனையாளர் 1963- இண்டியானாபொலிஸ் -1965 824 00:50:20,880 --> 00:50:22,440 ...ஸ்காட்லண்டில், பிறந்த ஊரில் கொண்டாடினார். 825 00:50:23,280 --> 00:50:25,840 சிறப்பாகச் செய்தீர்கள் ஜிம் உலக சாதனையாளர் 826 00:50:34,720 --> 00:50:39,400 மாறாக, அடுத்த இரண்டு வருடங்களும், பல்வேறு இயநதிர இயல் பிரச்சினைகள் உண்டாகி, 827 00:50:39,480 --> 00:50:43,760 வெற்றியை நழுவ விடும் நாசமான தோல்வி அனுபவங்கள் கண்ட ஆண்டுகளாக ஆயின. 828 00:50:51,320 --> 00:50:56,120 இருப்பினும், காலின் சாப்மேன் மாற்றி அமைத்த, 829 00:50:56,240 --> 00:50:58,560 நிலைமைகள் காரணமாக 1968ல், லோட்டஸ் 49ஐ ஓட்டி, 830 00:50:58,640 --> 00:51:01,840 கிளார்க் அந்த ஆண்டின் முதல் வெற்றியை தென் ஆப்ரிக்காவில் கண்டார். 831 00:51:02,800 --> 00:51:06,000 அடுத்த இன்னொரு ஆதிக்கம் செலுத்தும் பருவத்துக்குத் தயாரானார். 832 00:51:07,120 --> 00:51:09,800 பாராட்டுக்கள், ஜிம், இது ஒரு தீர்க்கமான அபாரமான் முயற்சி. 833 00:51:09,880 --> 00:51:11,000 மிகவும் நன்றி. 834 00:51:11,080 --> 00:51:13,760 பின்னர், வார இறுதி ஏப்ரல் 7ம் நாளன்று, 835 00:51:13,880 --> 00:51:17,080 கிளார்க்குக்கு, இரண்டு போட்டிகளில் பங்கு பெறும் வாய்ப்பு வந்தது. 836 00:51:17,160 --> 00:51:21,280 பிராண்ட்ஸ் ஹேட்சில் ஒன்று, மற்றது ஃபார்முலா டூ ஹாக்கென்ஹெய்ம்ல். 837 00:51:21,720 --> 00:51:24,680 விதிவசமாக, அவர் ஜெர்மன் போட்டியில் நுழைந்தார். 838 00:51:30,840 --> 00:51:33,600 ஏப்ரல் 7 எனக்கு ஒரு கெட்ட நாள். 839 00:51:34,320 --> 00:51:38,960 அவர் மகிழ்ச்சியாக இல்லை. உறைய வைக்கும் ஈரமான பனி மூட்டம் வேறு. 840 00:51:39,160 --> 00:51:42,920 நாங்க டயர்களுக்கு சூடேற்ற முடியவில்லை. 841 00:51:43,080 --> 00:51:46,480 எதைச் செய்த போதும் அதை வெப்பப் படுத்த முடியவில்லை. 842 00:51:46,960 --> 00:51:50,400 ஜிம்மி சொன்னது, "இன்று என்னிடம் எதையும் எதிர்பார்க்காதீங்க, 843 00:51:50,480 --> 00:51:52,320 "அப்பப்போ எனது நிலை, எங்கே இருக்கேன், 844 00:51:52,840 --> 00:51:55,320 "எத்தனை சுற்று மீதம் இருக்கு என தெரிவித்தால் போதும்." 845 00:51:57,400 --> 00:51:59,040 இவைதான் அவரது கடைசி வார்த்தைகள். 846 00:52:11,840 --> 00:52:15,000 ஐந்தாவது சுற்றில், கிளார்க்கின் கார் திடீரென்று 847 00:52:15,080 --> 00:52:18,680 பாதையை விட்டு, விலகிப் பாய்ந்துவிட்டது, வேகமோ, மணிக்கு 270 கி.மீ. 848 00:52:23,280 --> 00:52:26,320 அந்த இடத்துக்குப் போய் பார்த்தேன், புதர் நிறைந்த இடம் 849 00:52:26,400 --> 00:52:27,920 பாதுகாப்புச் சுவர் ஏதுமில்லை, 850 00:52:28,000 --> 00:52:30,920 தார்ப்பாதை, மரங்கள் மட்டுமே, வேறில்லை. 851 00:52:31,400 --> 00:52:35,760 கார் என்ன ஆனது என்று அறிய நான் பாதையைப் பார்க்கிறேன்... 852 00:52:39,760 --> 00:52:41,320 அங்கே பார்க்க எதுவுமே இல்லை. 853 00:52:41,440 --> 00:52:45,040 "என்ஜின் கியர் பெட்டி எங்கே? என்ன நடக்கிறது? என்ன ஆச்சு?" என்று கேட்டேன். 854 00:52:45,160 --> 00:52:48,760 அவங்க சொன்னாங்க, "அது 35 மீட்டருக்கு அப்பால் இருக்கிறது, 855 00:52:48,880 --> 00:52:52,120 "மரக் கன்றுகளை வெட்டிவிட்ட படி இருக்கு" 856 00:52:53,040 --> 00:52:54,880 பின் நான் கேட்டேன், "எங்கே ஓட்டுனர்? ஜிம்மி எங்கே?" 857 00:52:55,000 --> 00:52:56,040 அவர் சொன்னார், "இல்லை." 858 00:52:58,640 --> 00:53:01,720 அவ்வளவுதான், உலகின் மிகச்சிறந்த 859 00:53:03,000 --> 00:53:04,560 ஓட்டுனரை இழந்து விட்டோம். 860 00:53:04,680 --> 00:53:06,000 நாம் என்னதான் செய்ய முடியும்? 861 00:53:08,080 --> 00:53:10,120 ஜிம் கிளார்க், அவர் ஒரு தெய்வம். 862 00:53:10,440 --> 00:53:13,480 நான் அவரை முதலில் பார்த்த போது நினைத்தது, "கடவுளே, நம்பவே முடியலே." 863 00:53:13,560 --> 00:53:15,280 பின் அவருடன் உண்மையில் பேசும் போது, 864 00:53:15,360 --> 00:53:17,720 அது சொல்லொணா ஊக்கமாக இருந்தது. 865 00:53:17,800 --> 00:53:19,880 வாழ்க்கை அர்த்தமுள்ளது. 866 00:53:23,040 --> 00:53:23,920 அது... 867 00:53:25,640 --> 00:53:26,840 எனக்கு கண்ணீர் தளும்பியதாகிவிட்டது. 868 00:53:29,520 --> 00:53:30,480 வருந்தறேன். 869 00:53:35,320 --> 00:53:37,440 மருத்துவ அறிக்கையின் படி, 870 00:53:37,520 --> 00:53:40,600 கிளார்க் கழுத்து முறிவால் உடனடியாக மரணம் அடைந்திருக்கார், 871 00:53:40,760 --> 00:53:44,600 விபத்துக்குக் காரணம், காற்றுப் போன டயர் என்பதும் தெரிந்தது. 872 00:53:45,200 --> 00:53:48,520 அவர் இறந்த போது அவரது வயது வெறும் 32. 873 00:53:49,080 --> 00:53:50,800 ஆனால் அந்தக் குறுகிய வாழ்வில், 874 00:53:50,880 --> 00:53:54,680 அவர் நம்புவதற்கரிய சாதனைகளை உண்மையில் நிகழ்த்திவிட்டார். 875 00:53:56,000 --> 00:54:01,600 ஃபார்முலா ஒன் பந்தயத்தில், அவர் பங்கேற்ற 73 பந்தயங்களில், 25ல் வென்றிருக்கார், 876 00:54:01,680 --> 00:54:05,400 சதவீதக் கணக்கில் அவர் ஹேமில்டன், வெட்டல், ஏன், ஷூமேக்கரையும் கூட விஞ்சி நின்றார். 877 00:54:05,480 --> 00:54:09,080 துவக்க நிலையை எடுத்துக் கொண்டால், 33ல் முந்தினார், இதுவும், சதவீதக் கணக்கில், 878 00:54:09,200 --> 00:54:11,640 அவரை அனைத்து வரலாற்றின் இரண்டாவது சிறப்பானவராக காட்டுகிறது, 879 00:54:11,720 --> 00:54:13,480 ஃபேங்கியோக்கு கொஞ்சம் பின்னால். 880 00:54:14,200 --> 00:54:18,280 அப்புறம் ஓட்டுனர் முதலில் முந்துதல், வேகமான சுற்றுக்கள், 881 00:54:18,360 --> 00:54:22,600 எல்லா சுற்றுக்களிலும் பந்தயத்தில் முன்னிலை வெற்றி, இவை கொண்ட கிராண்ட் ஸ்லாம்கள், 882 00:54:22,680 --> 00:54:27,200 ஷூமேக்கருக்கு தனது பெயரில் ஐந்து கிராண்ட் ஸ்லாம்கள், சென்னாவுக்கு நான்கு. 883 00:54:27,280 --> 00:54:29,440 ஜிம் கிளார்க்குக்கோ எட்டு. 884 00:54:29,960 --> 00:54:32,360 வரலாற்றிலேயே அது எந்த ஓட்டுனரையும் விட அதிகம். 885 00:54:35,040 --> 00:54:38,160 அத்தகைய திறமையுள்ள ஓட்டுனர், 886 00:54:38,240 --> 00:54:40,760 மற்ற பெரிய ஓட்டுனர்களால் மதிக்கப் படுவாரே 887 00:54:41,360 --> 00:54:42,920 என நீங்க நினைத்தால், அது சரியே. 888 00:54:43,360 --> 00:54:47,840 என்னை ஃபேங்கியோ அழைத்த ஒரு காக்டெயில் விருந்தில் சொன்னது, 889 00:54:48,600 --> 00:54:52,760 "என் கருத்தில், ஜிம்மி கிளார்க்தான் ஆகப் பெரிய பந்தயக் கார் ஓட்டுனர்." 890 00:54:53,240 --> 00:54:54,680 அதுவும் ஃபேங்கியோவே இதைச் சொல்லும் போது, 891 00:54:55,400 --> 00:54:57,400 அதைவிட வேறு புகழுரையே இருக்க முடியாது. 892 00:54:58,600 --> 00:55:02,600 இந்த ஐந்து முறை தென் அமெரிக்க உலக சாதனையாளர் மட்டுமல்ல 893 00:55:02,720 --> 00:55:04,600 இந்த ஸ்காட்லண்ட்காரரை பூஜிப்பது. 894 00:55:06,640 --> 00:55:08,800 எடின்பர்ரோவில் கிளார்க்கின் பழைய பள்ளியில், 895 00:55:09,040 --> 00:55:11,800 அவரது சாதனைப் பட்டியல் கொண்ட பலகை ஒன்று பொருத்தப் பட்டுள்ளது. 896 00:55:11,880 --> 00:55:12,920 ஜிம் கிளார்க், ஆர்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் லொரேட்டோ 1949 - 52 897 00:55:13,000 --> 00:55:16,800 பின்னர் 1991ல், அப்போதைய உலக சாதனையாளர் 898 00:55:16,880 --> 00:55:19,240 தனது மரியாதையை செலுத்த, அந்தப் பள்ளிக்கு சென்றார். 899 00:55:19,320 --> 00:55:20,240 இந்தப் பள்ளியிலிருந்து வந்த புகழுரை உலகம் முழுதும் எதிரொலித்தது. 900 00:55:20,360 --> 00:55:21,520 ஒரு சிறப்பு யாத்திரை மேற்கொண்டார். 901 00:55:23,120 --> 00:55:25,200 கிளார்க்கைப் பற்றி, சென்னா, எளிமையாகச் சொல்லிவிட்டார், 902 00:55:25,360 --> 00:55:27,360 "அவர் எனது இளவயது கதாநாயகர். 903 00:55:27,480 --> 00:55:30,080 "அவர் சிறப்பிலும் சிறப்பானவர்." 904 00:55:31,000 --> 00:55:36,200 சென்னாவைப் போலவே, கிளார்க்கும் தனது வெற்றி உச்சத்தில் இருக்கும் போது மரணமடைந்தார். 905 00:55:36,840 --> 00:55:42,520 சென்னாவைப் போல, எத்தனை முறை சாதனையாளர் ஆகி இருக்க முடியுமென யாரால் சொல்ல முடியும்? 906 00:55:48,080 --> 00:55:49,400 அவர்தான் இலக்கை நிர்ணயித்தவர். 907 00:55:50,640 --> 00:55:51,640 அதுதான் விஷயம். 908 00:55:53,040 --> 00:55:56,080 என்னால் மோட்டார் பந்தயத்தில் சாதிக்க முடிந்தது எல்லாமே, 909 00:55:57,400 --> 00:55:59,760 ஜிம் கிளார்க் ஓட்டிய முறையை பின்னொற்றியதுதான். 910 00:56:00,160 --> 00:56:02,360 அவரை அப்படியே பின்பற்றினேன். 911 00:56:03,640 --> 00:56:05,000 அவர் ஒரு கண்ணியமான மனிதர். 912 00:56:05,960 --> 00:56:08,200 அவர் கண்ணியமான மென்மையான மனிதர். 913 00:56:08,360 --> 00:56:09,360 லோட்டஸ் அணி 914 00:56:09,440 --> 00:56:11,240 அவர் இப்போது இல்லாதது பரிதாபகரமானது, ஏனெனில் 915 00:56:13,800 --> 00:56:15,000 அவர் இருந்தால் அருமையாக இருக்கும். 916 00:56:23,560 --> 00:56:27,400 ஆம், அவர் ஒரு அற்புதமான மனிதர், நம்புதற்கரியவர். 917 00:56:27,880 --> 00:56:28,920 அவரைப் பற்றிய எல்லாமே அபாரம். 918 00:56:29,080 --> 00:56:30,120 ஆமாம். 919 00:56:30,480 --> 00:56:34,920 எனக்கு பிரமிப்பை ஏற்படுத்துவது, அவர் எத்தனை சாதனைகளில் பங்கேற்றார் என்பது. 920 00:56:35,040 --> 00:56:37,680 அதாவது, லூயிஸ் ஹேமில்டன் 921 00:56:37,760 --> 00:56:39,680 தனது ஃபார்முலா ஒன் காரில் இருந்து இறங்கி, 922 00:56:39,760 --> 00:56:41,800 "எந்த நேர்காணலும் இப்போது இல்லை, நான் பயணக் கார் பந்தயம் 923 00:56:41,880 --> 00:56:43,560 போக வேண்டும்" என்று சொல்வாரா? மாட்டார். 924 00:56:43,680 --> 00:56:44,640 ஆம், கிளார்க் அப்படிதான் செய்தார். 925 00:56:44,720 --> 00:56:46,960 1960கள் பற்றி நினைவில் கொள்ளக் கூடிய முக்கிய விஷயம் என்ன என்றால், 926 00:56:47,080 --> 00:56:50,720 ஆஸ்திரேலியா போக வேண்டுமெனில், விமானத்தில் எட்டு நிறுத்தங்கள். 927 00:56:51,000 --> 00:56:53,480 அப்போதெல்லாம், சாய் படுக்கை, சினிமா என்பதெல்லாம் இல்லை. 928 00:56:53,560 --> 00:56:54,720 -சும்மா உட்காரணும், -மறக்காதீங்க, 929 00:56:54,840 --> 00:56:58,520 அந்த விமானத்தில் இருந்து இறங்கி, பந்தயம் போய், வென்று விடுவார். 930 00:56:58,640 --> 00:57:01,360 பிறகு, இன்னொரு விமானத்தில் ஏறி ஃபிரான்ஸ் போவார், 931 00:57:01,480 --> 00:57:02,640 அங்கே இன்னொரு பந்தயத்தை வெல்ல. 932 00:57:02,880 --> 00:57:05,880 இது திகைப்பூட்டுவது. ஒவ்வொருவருக்கும் ஓர் அபிமான ஓட்டுனர் இருப்பார், 933 00:57:05,960 --> 00:57:08,080 எல்லோருக்குமே அப்படி ஒருவர் இருப்பார் என்பது நிச்சயம். 934 00:57:08,200 --> 00:57:11,120 உங்களுக்குத் தெரியும், சென்னா, ஷூமேக்கர், வில்நூவு, 935 00:57:11,200 --> 00:57:14,520 ரோமன் குரோஷீன், ஃபேங்கியோ இப்படி. 936 00:57:14,640 --> 00:57:18,360 ஆனால் ஒரு ஓட்டுனரின் பெருமையை கணக்கீட்டளவில் கணித்தால், 937 00:57:18,440 --> 00:57:21,280 சிறந்தவர் ஜிம் கிளார்க்தான் என முடிவு செய்ய வேண்டி இருக்கும். 938 00:57:22,000 --> 00:57:22,920 நல்லிரவு.