1
00:01:24,461 --> 00:01:28,048
டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயன்
2
00:01:38,308 --> 00:01:41,478
{\an8}வியன்னா, ஆஸ்த்ரியா
3
00:02:59,348 --> 00:03:01,391
சரி, அவ மேலே வந்திட்டிருக்கா.
4
00:03:15,113 --> 00:03:19,117
உன் நண்பனுக்கு பயிற்சி போதாது.
எட்டு பிளாக்குகள் முன் பார்த்துட்டேன்.
5
00:03:20,202 --> 00:03:22,704
-அவசரத்திலிருக்கே.
-நடவடிக்கை சொதப்பிடுச்சு
6
00:03:22,704 --> 00:03:25,666
அம்பலமானது நீ மட்டுமல்ல.
7
00:03:25,666 --> 00:03:28,460
-உன் உதவி தேவை.
-எல்லாத்தையும் சொல்லிட்டேன்.
8
00:03:30,587 --> 00:03:32,714
அப்ப உன்னிடம் பொய் சொல்லியிருக்காங்க.
9
00:03:32,714 --> 00:03:34,299
அது அவங்க பாணி அல்ல.
10
00:03:35,884 --> 00:03:38,762
-எனக்கு ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்.
-முடியாது.
11
00:03:41,515 --> 00:03:42,349
சோயா...
12
00:03:44,267 --> 00:03:48,021
சோகோல் உண்மைனு, நிறைய
பேர் சாவாங்க.
13
00:03:48,021 --> 00:03:51,233
அதை நிறுத்தி இருக்கலாமேனு நினைச்சு
உன்னால வாழ முடியுமா?
14
00:03:55,195 --> 00:03:58,824
சந்திப்புக்கு ஏற்பாடு செய்யறேன். ஆனா
வியன்னாவை விட்டு போன பின்.
15
00:04:00,575 --> 00:04:01,410
நன்றி.
16
00:04:06,289 --> 00:04:07,165
ஜாக்...
17
00:04:08,125 --> 00:04:09,084
குட் லக்.
18
00:04:22,639 --> 00:04:23,849
வா, சூப்பர் உளவாளி.
19
00:04:29,563 --> 00:04:31,940
-சந்திப்பு ஏற்பாடு செய்தாளா?
-செய்றாளாம்.
20
00:04:33,650 --> 00:04:35,861
அவளை ஏன் நம்பறேன்னு சொல்லு.
21
00:04:35,861 --> 00:04:38,363
அவளுக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியமில்ல.
22
00:04:38,363 --> 00:04:40,282
அவ உண்மையை சொல்றான்னு தெரியும்.
23
00:04:40,282 --> 00:04:42,367
தெரியுமா? நல்லது.
24
00:04:43,326 --> 00:04:46,455
-வாழ்க்கையையே பணயம் வைப்பது போல அது.
-ஒண்ணு சொல்லவா?
25
00:04:46,455 --> 00:04:49,374
எனக்கு நிறைய வழி இருப்பதா தோணலை.
26
00:04:49,374 --> 00:04:50,792
நான் சொல்றதைக் கேள்.
27
00:04:50,792 --> 00:04:55,255
பாரு, நீ ஒரு எல்லையை மீறுகிறாய்,
திரும்பி வர முடியாம போயிடலாம்.
28
00:04:55,255 --> 00:04:59,342
நான் சரியானதை செய்கிறேன் என்பதால்.
இந்த சோகோல் திட்டம் உண்மை.
29
00:04:59,342 --> 00:05:00,510
நான் உன்னை நம்பறேன்.
30
00:05:00,510 --> 00:05:04,014
ஆனா, இதை நிறுத்தக் கூடியவன்
நீ மட்டுமல்லன்னும் நம்பறேன்.
31
00:05:04,014 --> 00:05:06,308
நான் யார்கிட்ட பேசணுங்கறீங்க? மில்லரா?
32
00:05:07,350 --> 00:05:10,604
அவன் மடையன். தன்னை
காப்பாத்திக்க யாரையும் கொல்வான்.
33
00:05:11,813 --> 00:05:14,399
ரைட். முரட்டு பிடிவாதக்காரி,
ஆனா நியாயமானவ.
34
00:05:14,399 --> 00:05:17,194
அவ அரசியல் மிருகம், எல்லோரையும் போல்தான்.
35
00:05:17,194 --> 00:05:20,155
அவ வழியை அவ தேர்வு செய்தா.
36
00:05:20,155 --> 00:05:21,490
கிரீயர் பத்தி என்ன?
37
00:05:23,325 --> 00:05:26,787
அவரை இன்னும் ஆபத்திலே
விடமாட்டேன். உனக்கும்தான்.
38
00:05:27,621 --> 00:05:30,999
பாரு. நீ விலகணும்னா, புரிஞ்சுப்பேன்.
39
00:05:30,999 --> 00:05:34,377
-இதை நீ நல்லா யோசிச்சிருக்கீயா?
-ஆமா.
40
00:05:34,377 --> 00:05:36,671
நானும் இருக்கேன். உனக்கு ஆதரவா.
41
00:05:37,923 --> 00:05:39,841
-நாம சாகாம இருந்தா சரி.
-எனக்கும்.
42
00:05:43,386 --> 00:05:46,598
{\an8}யுஎஸ் தூதரகம்
ரோம், இத்தாலி
43
00:05:57,734 --> 00:05:59,820
ஜாக் ரயன்
வழக்கு அதிகாரி
44
00:06:04,950 --> 00:06:08,453
எஃப்பிஐ வெளிநாட்டு
சோதனை குழு. ரயன் பத்தி மட்டும் தேடறாங்க.
45
00:06:08,453 --> 00:06:10,622
என்எஸ்டி முன்னெடுத்து நடத்துது.
46
00:06:10,622 --> 00:06:13,375
-யார் இதுக்கு பொறுப்பு?
-பெயர் ஹாரிஸ் என்றான்.
47
00:06:13,375 --> 00:06:16,545
என் அலுவலகத்தை
புரட்டிப் போடாம இருந்தா நல்லது.
48
00:06:16,545 --> 00:06:20,132
எல்லாம் அதனதன் இடத்தில வைப்போம்.
வாரன்டோட வந்திருக்கோம்,
49
00:06:20,132 --> 00:06:23,593
உளவறிதல் சட்டத்தை மீறியதா
டாக்டர் ரயன் மீது குற்றச்சாட்டு.
50
00:06:23,593 --> 00:06:26,513
ஜாக் ரயன் எப்படியோ,
ஆனா தேசத் துரோகி அல்ல.
51
00:06:26,513 --> 00:06:30,308
என் முடிவல்ல. இது தேசிய
உளவமைப்பின் இயக்குனர் வரை போகுது.
52
00:06:30,308 --> 00:06:32,310
நம் உளவாளி அங்கே இருக்கான்.
53
00:06:32,310 --> 00:06:35,772
அவனுக்கு தெரிந்தது அந்நிய
தலைவர்களுக்கு மதிப்பு மிக்கது.
54
00:06:35,772 --> 00:06:37,440
ஆக, அவனைப் பிடிக்கிறோம்.
55
00:06:43,321 --> 00:06:46,533
அவங்களுக்கு விவரம் தடுக்கணும்.
சோயா இவனோவா எங்கேனு பாரு
56
00:06:46,533 --> 00:06:48,076
ஜாக் இருக்குமிடம் தெரிந்தவ.
57
00:06:48,076 --> 00:06:49,870
-இவன் அவள தேடி போவான்.
-புரியுது.
58
00:06:59,045 --> 00:07:01,423
{\an8}ப்ராக், செக் குடியரசு
59
00:07:01,715 --> 00:07:03,550
அரசியல் நிலைமை என்ன?
60
00:07:03,550 --> 00:07:06,803
என்எஸ்டி ஜாக்கை தேடுது.
வாரன்ட் படி எஃப்பிஐ செய்யுது.
61
00:07:06,803 --> 00:07:09,389
-என்ன குற்றச் சாட்டு?
-உளவறிதல் சட்டம்.
62
00:07:09,389 --> 00:07:10,432
ஐயோ.
63
00:07:10,432 --> 00:07:14,186
-அவனை தேசத் துரோகின்றாங்களா?
-என் பேச்சை கேட்கவேயில்ல.
64
00:07:14,186 --> 00:07:17,314
இக்கட்டான நிலையில்
இருப்பது நீங்க மட்டும் அல்ல.
65
00:07:17,314 --> 00:07:20,066
ஜாக்கை முதலில் அடைய எல்லாம் செய்வேன்
66
00:07:21,568 --> 00:07:22,944
கோவாக்கை பார்த்தீங்களா?
67
00:07:22,944 --> 00:07:26,448
இல்லை. நேடோ சமாச்சாரத்தில
நமக்கு ஏதும் வேலை இல்ல.
68
00:07:26,448 --> 00:07:29,326
அவளை நிர்ப்பந்திக்க
முடியாது, சான்றை காட்டலாம்.
69
00:07:29,326 --> 00:07:31,411
நம் பக்கமாக்கி, நல்லெண்ணம் பெறலாம்.
70
00:07:31,620 --> 00:07:34,539
ரஷ்ய பிரிவு தலைவரா,
நீங்க ஆலோசனை வழங்கலாம்.
71
00:07:34,539 --> 00:07:36,249
ஐஎஸ்ல வேலை செய்திருக்கீங்க.
72
00:07:36,249 --> 00:07:39,211
-உங்க பேச்சை கேட்பாள்.
-பாத்தா தெரியும்.
73
00:07:46,384 --> 00:07:48,845
{\an8}மாஸ்கோ, ரஷ்யா
74
00:08:15,705 --> 00:08:16,665
கேப்டன்.
75
00:08:17,749 --> 00:08:19,459
உங்க இழப்புக்கு வருந்தறேன்.
76
00:08:20,377 --> 00:08:21,920
நீங்க நண்பர்கள்னு தெரியும்.
77
00:08:23,880 --> 00:08:25,131
அவருக்கு சிலர்தான்.
78
00:08:25,799 --> 00:08:26,925
உங்களை மாதிரி.
79
00:08:28,718 --> 00:08:32,764
நீங்க இன்னொரு முறை
அட்மிரல் பதவியை நிராகரிச்சதா வதந்தி.
80
00:08:33,848 --> 00:08:36,017
மேஜையில் உட்கார்ந்து என்ன பயன்?
81
00:08:37,894 --> 00:08:39,646
நம் பெருமை யாருக்குத் தெரியும்.
82
00:09:04,754 --> 00:09:05,880
என் ஆழ்ந்த அனுதாபம்.
83
00:09:06,298 --> 00:09:08,091
உங்க கணவர் மேன்மை பொருந்தியவர்
84
00:09:09,175 --> 00:09:10,427
உங்க வருகைக்கு நன்றி.
85
00:09:21,021 --> 00:09:25,191
உங்களுக்கு ஏதும் தேவைன்னா, சொல்லுங்க
நடால்யா, நான் காத்து கிடக்கிறேன்.
86
00:09:26,443 --> 00:09:27,777
யார் வேலை கண்டுபிடிங்க.
87
00:09:28,653 --> 00:09:31,114
நீங்க கண்டுபிடிக்கும்
வரை டிமிட்ரி ஓயமாட்டார்.
88
00:09:32,532 --> 00:09:33,658
நானும்தான்.
89
00:09:42,709 --> 00:09:45,170
{\an8}ப்ராக் காசில்
ப்ராக், செக் குடியரசு
90
00:10:01,936 --> 00:10:02,771
வந்திருக்காரா?
91
00:10:04,773 --> 00:10:07,817
எனக்கு அவர் வருகையை
முன்னரே சொல்லியிருக்கலாம்.
92
00:10:07,817 --> 00:10:12,238
எப்பவும் என்னிடம் நேர்மையா இருப்பவர்.
அது இப்ப குறைவு.
93
00:10:12,238 --> 00:10:15,950
அவர் சிஐஏ. அவங்க பிரதியுபகார தேவை
இல்லாம வரவே மாட்டாங்க.
94
00:10:15,950 --> 00:10:19,746
சிஐஏ எப்படி செயல்படுதுன்னு தெரியும்,
ராடெக். இவர் அந்த ரகம் இல்லை.
95
00:10:24,834 --> 00:10:26,002
அதிபர் அவர்களே.
96
00:10:26,544 --> 00:10:27,837
திரு. கிரீயர்.
97
00:10:27,837 --> 00:10:30,924
ராடெக் ப்ரேஸா, என் பாதுகாப்பு தலைவர்,
ஜேம்ஸ் கிரீயர்.
98
00:10:31,883 --> 00:10:33,843
நாம் நடந்து கொண்டே பேசலாமே, ஜேம்ஸ்?
99
00:10:45,230 --> 00:10:47,899
நமக்கு இது வெரும்
சந்திப்பல்லனு தெரியும்.
100
00:10:49,442 --> 00:10:52,737
நாம் இருவருமே ரஷ்ய அரசை
கண்காணிக்கிறோம், அவங்க
101
00:10:52,737 --> 00:10:54,030
நம்மை கண்காணிக்கிறாங்க
102
00:10:55,240 --> 00:10:59,202
என்எஸ்ஏயிடம் டிமிட்ரி போபோவின்
தொலைபேசிப் பேச்சு பதிவு இருக்கு.
103
00:10:59,202 --> 00:11:02,080
இந்த பேச்சு அதிபர் சூரிகோவுடன்,
104
00:11:02,080 --> 00:11:04,874
கிழக்கு ஐரோப்பால
மேலும் புகுந்து, செக் குடியரசை
105
00:11:04,874 --> 00:11:07,252
தனிமை படுத்தக் கூடாதென்று அறிவுறுத்தி.
106
00:11:08,503 --> 00:11:12,215
-ஆனால், டிமிட்ரி தீவிர வாதி.
-இல்ல, அதுப் போல தோற்றம் தந்தார்.
107
00:11:13,007 --> 00:11:17,429
அதுதான் தன் கட்சியின் வலதுசாரியினரிடம்
தன்னை தக்க வைத்துக்கொண்ட விதம்.
108
00:11:17,429 --> 00:11:20,515
ஆனால், நீங்களும்
அவரும் ஒத்துப் போனீங்க.
109
00:11:21,599 --> 00:11:23,643
அதனாலேயே கூட கொல்லப் பட்டிருக்கலாம்.
110
00:11:28,940 --> 00:11:32,652
இப்ப உள்ள புது பாதுகாப்பு அமைச்சர்,
கதையே வேற.
111
00:11:34,612 --> 00:11:37,365
டிமிட்ரி ஒப்புக்கொண்ட
எல்லாம் நிராகரித்தார்.
112
00:11:37,365 --> 00:11:40,160
உக்ரைனில் மேலும் ரஷ்ய துருப்பு ஊடுறுவியது.
113
00:11:41,244 --> 00:11:42,412
எவ்ளோ ஊடுறுவல்?
114
00:11:44,998 --> 00:11:47,709
ஸ்லோவாகியா எல்லை வரைக்கும்.
115
00:11:49,085 --> 00:11:51,087
உங்களுக்குத் தெரியணும்,
116
00:11:51,087 --> 00:11:55,383
இப்போ நீங்க செயல் பட்டா,
நாங்க நேடோ ஏவுகணைகளை கொண்டு வந்து,
117
00:11:55,383 --> 00:11:56,885
படைகளை பின்வாங்க வைக்கலாம்.
118
00:11:58,553 --> 00:12:00,805
நம் நாடுகள் உளவை பரிமாறிக் கொள்பவை.
119
00:12:03,057 --> 00:12:05,101
ஏன் இப்பத்தான் என் காதுக்கு வருது?
120
00:12:09,230 --> 00:12:13,067
உங்க கூட்டாளிகளை, எதிரிகளைப்
போல நடத்த மாட்டீங்கன்னு எண்ணினேன்.
121
00:12:13,067 --> 00:12:15,612
சிஐஏ தன்னை கடவுளா
நினைக்குறதை மறந்தேன்.
122
00:12:15,612 --> 00:12:17,864
இதை உங்க நண்பனா சொல்றேன்.
123
00:12:17,864 --> 00:12:22,118
-உங்களை நம்பணும்னு எதிர்பாக்குறீங்க.
-எதிர்பார்ப்பல்ல, நம்பிக்கை.
124
00:12:23,495 --> 00:12:26,206
உங்களுக்கு எல்லா
பக்கத்திலும் நெருக்கடி.
125
00:12:26,206 --> 00:12:29,000
உங்களை நிர்ப்பந்திக்க
முடியாதுன்னும் தெரியும்.
126
00:12:30,001 --> 00:12:33,004
உங்களுக்கு தகவல்களைத்
தந்து பலமூட்டுறேன்.
127
00:12:33,004 --> 00:12:36,257
அதை வச்சு என்ன செய்யப்
போறீங்கன்றது உங்க முடிவு.
128
00:12:48,269 --> 00:12:50,939
{\an8}பொஹீமியா, செக் குடியரசு
129
00:12:57,237 --> 00:12:58,446
அடக் கடவுளே.
130
00:13:01,699 --> 00:13:04,035
இந்த கார் எவ்ளோ விலை தெரியுமா?
131
00:13:05,787 --> 00:13:09,666
போறது வேட்டை. எங்கே நடக்கும்னு எதிர்
பார்த்தே?
132
00:13:09,666 --> 00:13:13,044
-மொனாகோவிலா?
-சாலை நல்லா இருக்கும்னு நினைத்தேன்.
133
00:13:18,216 --> 00:13:22,720
மன்னிக்கணும், திரு சுப்கோவ்,
திரு லிச்கின்,
134
00:13:22,720 --> 00:13:25,265
இந்த தொலைதூர இடத்துக்கு வரவழைத்ததுக்கு,
135
00:13:25,265 --> 00:13:30,103
ஆனா, இங்கே இன்னும் ஓநாய்களை வேட்டையாடலாம்.
136
00:13:30,937 --> 00:13:31,813
நல்வரவு.
137
00:13:36,901 --> 00:13:37,902
வாங்க
138
00:13:38,570 --> 00:13:40,029
நோவாக், பைகளை எடுத்து வா.
139
00:13:40,655 --> 00:13:46,035
ஆக நாம் ஒப்புக் கொண்டது
வாங்கப் பட்டு வந்துட்டுருக்கு.
140
00:13:46,035 --> 00:13:47,328
நல்லது.
141
00:13:47,328 --> 00:13:48,454
விலை என்ன?
142
00:13:49,664 --> 00:13:50,915
அது 2 கோடி.
143
00:13:54,794 --> 00:13:59,215
இந்த பேங்க் டோக்கன், பணம் இருக்கும்
கணக்கை கையாள வழி செய்யும்.
144
00:13:59,215 --> 00:14:01,050
பாதி இப்ப, பாதி வினியோகித்த பின்.
145
00:14:01,843 --> 00:14:04,178
ஆனா, நாம் பேரத்தை முடிக்கும் முன்,
146
00:14:05,221 --> 00:14:07,724
சில தவறுகளை நாம் கவனிக்க வேண்டியிருக்கு.
147
00:14:09,350 --> 00:14:12,937
முதல்ல, அந்த சிஐஏ அதிகாரி.
148
00:14:12,937 --> 00:14:14,480
அதை கவனிச்சிட்டிருக்கோம்.
149
00:14:20,778 --> 00:14:21,738
ரெண்டாவதா,
150
00:14:22,614 --> 00:14:23,615
உங்க மகள்.
151
00:14:24,657 --> 00:14:28,036
நீங்க சொன்ன அளவு உங்களுக்கு
செல்வாக்கு இருப்பதா தெரியல.
152
00:14:28,036 --> 00:14:30,371
அதாவது, இதைச் சொல்ல வருத்தமா இருக்கு,
153
00:14:30,371 --> 00:14:32,457
அதாவது நினைப்பது
நான் மட்டுமல்ல,
154
00:14:33,916 --> 00:14:36,878
தலைமையை மாற்ற வேண்டிய நேரம் வந்தாச்சுன்னு
155
00:14:40,214 --> 00:14:41,466
சர்ஹான்.
156
00:14:42,175 --> 00:14:43,509
விடு, லெவான்.
157
00:14:47,597 --> 00:14:50,350
சர்ஹானின் பணம் சரியா உதவிச்சு.
158
00:14:50,350 --> 00:14:52,685
அவருக்கு கருத்தை சொல்ல உரிமை இருக்கு.
159
00:14:52,685 --> 00:14:55,647
அவர் சொன்னதும் சரி,
பின்னடைவுகள் இருக்குது.
160
00:14:57,398 --> 00:15:00,610
ஆனால் இந்த தடைகள் களையப் பட்டன.
161
00:15:02,320 --> 00:15:03,821
உங்களுக்கு வாக்கு தர்றேன்.
162
00:15:07,158 --> 00:15:08,618
எல்லாம் சரியாக நடக்குது.
163
00:15:11,037 --> 00:15:13,414
இது உங்க கவலைக்கு பதிலளிப்பதா இருக்கும்.
164
00:15:20,338 --> 00:15:21,214
இப்போதைக்கு.
165
00:15:23,591 --> 00:15:24,425
நல்லது.
166
00:15:25,677 --> 00:15:28,596
அப்ப, நாம் இங்கே வந்த வேலையை கவனிப்போம்.
167
00:15:36,354 --> 00:15:39,190
-என்ன தெரிந்தது?
-காலை வியன்னா விமான நிலையத்தில்.
168
00:15:39,190 --> 00:15:41,025
அவள் 6 மணிக்கு இறங்கினாள்.
169
00:15:41,901 --> 00:15:45,446
அவளை நீங்க கண்டுபிடிக்க
முடிந்ததுன்னா, ஜாக்குக்கும் முடியும்.
170
00:15:45,446 --> 00:15:48,032
-அவன் இங்கிருக்கானா?
-இருந்தா நல்லது.
171
00:16:00,211 --> 00:16:02,505
-நான் அவனை பிடிக்க உதவறேன்.
-வேண்டாம்.
172
00:16:02,505 --> 00:16:06,134
இங்கே 10 மாதமா வேலை செய்யறான்.
ஏற்கனவே எனக்கு பின்னடைவுகள்.
173
00:16:07,719 --> 00:16:10,471
-அதை பத்தி நல்லா தெரியுமா?
-உங்களை விட அதிகமா.
174
00:16:13,015 --> 00:16:14,058
வியன்னால இருக்கான்.
175
00:16:16,060 --> 00:16:18,146
அவனை பிடிக்கணும்னா, உடனே போங்க.
176
00:16:28,740 --> 00:16:31,409
போபோவ் விசாரணையில் என்ன கிடைத்தது?
177
00:16:31,409 --> 00:16:34,162
பணம் வந்த கொலைகாரனின்
கணக்கை கண்டுபிடித்தோம்.
178
00:16:34,162 --> 00:16:38,583
பல தனியார் வங்கிகளின் வழியா
வந்திருக்கு. எங்கிருந்துனு தெளிவா தெரியல.
179
00:16:38,583 --> 00:16:40,585
ஆனால் ரஷயர்கள்னு தோணுது.
180
00:16:40,585 --> 00:16:43,337
அவங்க நடவடிக்கைகளின்
எல்லா அடையாளமும் உள்ளன.
181
00:16:43,337 --> 00:16:46,048
-விளையாட்டரங்கின் காணொலியை பார்க்கணும்.
-சரி.
182
00:16:46,048 --> 00:16:49,051
-என் ஆய்வாளனை தரச் சொல்றேன்.
-மன்னிக்கணும்.
183
00:16:50,011 --> 00:16:52,597
-மேலும் சில நடந்திருக்கு.
-சொல்லுங்க.
184
00:16:52,597 --> 00:16:56,309
-ஆக, நமது பேரம் பத்தி?
-நான் ஜிஎஸ்-13 வாங்கித் தர முடியும்.
185
00:16:56,309 --> 00:16:58,186
நல்ல சம்பள உயர்வு இல்லே?
186
00:17:00,605 --> 00:17:02,815
-ஜாக் வியன்னால இருப்பதா பேச்சு.
-வியன்னாவா?
187
00:17:02,815 --> 00:17:05,276
ஏதென்ஸில் இருந்து அங்கே எப்படி போனான்?
188
00:17:08,279 --> 00:17:09,322
ஒழிஞ்சேன்.
189
00:17:20,374 --> 00:17:22,460
-நீ லேட்.
-கடைக்குப் போனேன்.
190
00:17:23,628 --> 00:17:26,547
-இதையெல்லாம் பார்த்தா ஒத்து வரலையே.
-என்னது?
191
00:17:26,547 --> 00:17:30,843
சூரிகோவின் தலைமை ஆலோசகன் போபோவ்.
அவன் முரடானா இருக்கலாம்,
192
00:17:30,843 --> 00:17:34,722
ஆனா எப்பவுமே அணு யுத்தத்தை
ஏற்பவனல்ல. இதைப் பார்.
193
00:17:34,722 --> 00:17:40,228
1986ல், இவன் செர்னோபில்லை
ஒழிக்க முன்வருபவனா இருந்தான்.
194
00:17:40,228 --> 00:17:44,899
உருகிவிட்ட பின் அணுஉலையை
செயலிழக்கச் செய்ய முன்வந்தவனா?
195
00:17:44,899 --> 00:17:50,029
அதனோடு இணைந்தவன். பாதுகாப்பு
அமைச்சரா வந்த பின், இவனது முதல் உத்தரவு,
196
00:17:50,029 --> 00:17:53,074
அணு ஆயுத பரவல் தடுப்பை
யுஎஸ், ரஷ்யாவில் வற்புறுத்த.
197
00:17:53,074 --> 00:17:56,077
இவன் எப்பவுமே
அணுஆயுதத்துக்கு எதிரானவன்.
198
00:17:56,077 --> 00:17:57,203
பாவம் இறந்திட்டார்
199
00:17:58,079 --> 00:17:58,955
இறக்கப்பட்டார்.
200
00:18:00,498 --> 00:18:01,499
என்ன சொல்றே?
201
00:18:03,251 --> 00:18:06,003
இதனாலே யாருக்கு லாபம்?
202
00:18:06,003 --> 00:18:07,588
புது பாதுகாப்பு அமைச்சரா?
203
00:18:08,714 --> 00:18:10,800
அவனே அவரை படுகொலை செய்தாங்கறியா?
204
00:18:10,800 --> 00:18:14,595
சூரிகோவிடம் செல்வாக்கு பெற
இது நேர்த்தியான நேரம் என்கிறேன்.
205
00:18:16,681 --> 00:18:17,640
நவம்பர்.
206
00:18:17,640 --> 00:18:18,766
வியன்னா எப்படி?
207
00:18:18,766 --> 00:18:21,561
எப்படி என் தனி ஃபோன் எண்
கிடைத்ததுன்னு சொல்லு?
208
00:18:21,561 --> 00:18:24,021
-சரி, அவனிடம் ஃபோனை குடு.
-இருங்க.
209
00:18:25,231 --> 00:18:27,233
-ஹேய்.
-குரல் கேக்க நல்லாருக்கு.
210
00:18:27,233 --> 00:18:30,820
-டோனி வேலையா?
-உயிரோடிருக்கே, இல்லையா?
211
00:18:30,820 --> 00:18:32,113
ரைட் கூட இருக்காளா?
212
00:18:32,113 --> 00:18:35,741
நான் உதவறதை கண்டு பிடிச்சா, கழட்டி
விட்டா. ப்ராக்ல இருக்கேன்,
213
00:18:35,741 --> 00:18:37,702
படுகொலையை விசாரிக்க.
214
00:18:38,286 --> 00:18:41,873
உன் மனசுல என்ன ஓடுதுன்னு நல்லா தெரியுது.
215
00:18:41,873 --> 00:18:44,000
உனக்கு யாரை நம்பறதுன்னு தெரியலயோ.
216
00:18:44,000 --> 00:18:47,086
நான் ஒன்னு சொல்றேன்.
எடுத்துக்கோ இல்ல விட்டுடு.
217
00:18:47,837 --> 00:18:51,382
என்எஸ்டி, உன்னை கைது செய்ய எஃப்பிஐயை
வியன்னா அனுப்பியிருக்கு.
218
00:18:53,509 --> 00:18:54,427
குற்றச் சாட்டு?
219
00:18:59,807 --> 00:19:00,641
தேசத் துரோகமா?
220
00:19:03,102 --> 00:19:06,314
-ரைட் இதை ரொம்ப பெரிசாக்கறா.
-ரைட் அல்ல, மில்லர்.
221
00:19:06,314 --> 00:19:09,692
அவ பேச்சை கேக்கலை.
அவங்க கூட இருந்து சமாளிக்கிறா.
222
00:19:09,692 --> 00:19:11,694
அவளிடம் மைக் பத்தி சொன்னீங்களா?
223
00:19:11,694 --> 00:19:13,946
ரெண்டு பேருமே உங்க இஷ்டப் படி போறீங்க.
224
00:19:13,946 --> 00:19:18,034
நீங்க நழுவும் ஒவ்வொரு நாளும்,
ஆழமான குழியை தோண்டறீங்க
225
00:19:18,034 --> 00:19:20,036
நான் கேட்ட கேள்விக்கு பதிலில்லை.
226
00:19:20,036 --> 00:19:22,330
-நீதான் தேசத்துரோகி. நானல்ல.
-ஜோக்கு!
227
00:19:23,080 --> 00:19:25,833
சரி, போபோவ் பத்தி
என்ன கண்டுபிடிச்சீங்க?
228
00:19:25,833 --> 00:19:28,419
எதுவும் தேறல. பணவரவு பத்தி தெளிவா தெரியல,
229
00:19:28,419 --> 00:19:32,298
கொலைகாரனின் பட பதிவு
கிடைக்கல, சாட்சி காணாம போனது.
230
00:19:33,174 --> 00:19:36,969
ஒண்ணு கேட்கிறேன். ஒரு வேளை
இது எல்லாமே திட்டமிட்ட சதியா இருந்தா?
231
00:19:38,554 --> 00:19:42,224
இது மாமூல் ரஷ்ய நடவடிக்கையா
தெரியல, நாம் ஆய்வு செய்யணும்.
232
00:19:42,224 --> 00:19:43,726
செய்றேன். அதோட, ஜாக்,
233
00:19:43,726 --> 00:19:45,937
உன்னைத் துரத்தும் ரஷ்யன்...
234
00:19:45,937 --> 00:19:47,480
அவனை தெரியும்.
235
00:19:47,480 --> 00:19:48,731
அவன் ஆல்ஃபா குழு.
236
00:19:50,191 --> 00:19:51,651
ஆல்ஃபா குழுவா, அடடா!
237
00:19:53,110 --> 00:19:53,945
நான் போகணும்.
238
00:19:54,654 --> 00:19:55,488
இது அவள்.
239
00:19:56,572 --> 00:19:58,616
11:00 மணி, ட்ராக் ஆறு.
240
00:20:09,460 --> 00:20:12,546
விருந்தாளிகள் எல்லோரும் வந்தாச்சு.
241
00:20:15,716 --> 00:20:17,426
தாமதத்துக்கு மன்னிக்கணும்.
242
00:20:17,426 --> 00:20:18,552
தனியா பேசணும்
243
00:20:26,978 --> 00:20:27,937
டிமிட்ரிக்காக.
244
00:20:28,896 --> 00:20:30,022
அவர் நல்லவர்.
245
00:20:30,022 --> 00:20:31,649
அவரை உயர்வா நினைச்சீங்க.
246
00:20:32,608 --> 00:20:33,901
அவரிடம் கற்றேன்.
247
00:20:33,901 --> 00:20:37,571
-நம் பல நம்பிக்கைகளுக்கு தோது போகிறவர்.
-முக்கியமானதை தவிர.
248
00:20:38,406 --> 00:20:39,240
இல்லை.
249
00:20:41,200 --> 00:20:43,452
உங்க மகளுடன் எல்லாம் நலம்தானே.
250
00:20:47,415 --> 00:20:49,375
உங்க அக்கறை என் மகளைப் பத்தியல்ல.
251
00:20:49,375 --> 00:20:53,754
நேடோ ஏவுகணைகள் செக் நிலப் பகுதியில்
இறக்கணும், இல்லனா திட்டம் வெல்லாது.
252
00:20:53,754 --> 00:20:58,467
அவளின் மனமும் நோக்கமும்
உறுதியாக இருக்கும். அதை நான் மாற்றமாட்டேன்
253
00:20:59,885 --> 00:21:02,388
அவள் ரஷ்யன், அவளுக்கு தெரியுதோ, இல்லையோ.
254
00:21:07,685 --> 00:21:12,565
என் தந்தை ஒரு ராணுவ வீரர்,
இரும்பு மனம்.
255
00:21:14,483 --> 00:21:18,320
அவர் அழுவதை நான் பார்த்தது பெர்லின் சுவர்
இடிக்கப் பட்ட போதுதான்.
256
00:21:20,197 --> 00:21:21,907
எல்லாம் முடிந்தது என்பதால்.
257
00:21:23,075 --> 00:21:27,830
சோவியத் யூனியன் குறையற்றது என்ற
பிம்பம் அவரிடம் எப்பவும் இருந்ததில்லை,
258
00:21:27,830 --> 00:21:30,291
ஆனால் தாய் ரஷ்யாதான் அவருக்கு எல்லாம்.
259
00:21:30,875 --> 00:21:33,502
அது நொறுங்கியப்ப,
எதற்கெல்லாம் போராடினாரோ
260
00:21:33,502 --> 00:21:35,004
அர்த்தமற்றதாயின.
261
00:21:35,713 --> 00:21:38,257
ஏன் அழுகிறார் என நான் கேட்ட போது, கூறினார்
262
00:21:39,675 --> 00:21:42,344
"நாம ஒரு காலத்தில் உலகே அஞ்சும் தேசமாக
இருந்தோம்
263
00:21:43,220 --> 00:21:47,016
"மீத உலகம் தூக்கத்திலும்
விழித்திருக்க வைத்த பூதமாக."
264
00:21:49,435 --> 00:21:52,855
இப்பொழுதோ, நாம் இணையப் போரில்
இறங்கியுள்ளோம்
265
00:21:52,855 --> 00:21:55,357
நாம் குலைக்கிறோம், இடர் தருகிறோம்.
266
00:21:55,357 --> 00:22:00,237
புத்திசாலித்தனமும், சிக்கனமானதும்,
ஆனால் சேதம் இல்லாத போருக்கு மதிப்பில்லை.
267
00:22:01,447 --> 00:22:05,743
சேதம் இல்லையென்றால், நமக்கு அடையாளமில்லை.
268
00:22:09,622 --> 00:22:10,956
நாம் அவனாகிறோம்.
269
00:22:14,043 --> 00:22:19,757
-இதெல்லாம் எனக்கு ஏன் சொல்றீங்க?
-இது எவ்ளோ முக்கியம்னு உங்களுக்கு காட்ட.
270
00:22:20,591 --> 00:22:26,388
நமக்கு ஒரே வாய்ப்புதான் இருக்கு,
நாம் முன்பு இருந்த நிலை மீள்வதற்கு.
271
00:22:27,389 --> 00:22:30,351
ஆணவத்தை
குறுக்கிட விடக் கூடாது.
272
00:22:32,770 --> 00:22:35,106
நண்பர்களே அருந்துங்க.
273
00:22:37,108 --> 00:22:40,236
நான் குழந்தையா இருந்தப்போ,
ஐஸ் கிரீம், சோடாலாம் இல்லை.
274
00:22:40,236 --> 00:22:41,695
க்வாஸ் மட்டுமேதான்.
275
00:22:42,113 --> 00:22:44,198
என் நன்றியைக் கூற உங்களை அழைத்தேன்.
276
00:22:44,198 --> 00:22:48,202
நமது லட்சியத்துக்கு பல ஆதரவாளர்கள்,
ஆனால் புரவலர்கள் சிலரே.
277
00:22:48,202 --> 00:22:51,247
உங்க பெருந்தன்மைக்கு என்றும் நன்றியுடையவன்
278
00:22:51,247 --> 00:22:54,750
பெரிய கப்பலுக்கு ஆழமான கடல்
தேவைன்னு சொல்வாங்க.
279
00:22:54,750 --> 00:22:57,878
நீங்கதான் அந்த ஆழமான கடல், நண்பரே.
280
00:23:05,094 --> 00:23:05,970
கிளம்பலாம்.
281
00:23:15,479 --> 00:23:17,148
அதோ, அதுத்தான். லெவல் பி.
282
00:23:20,818 --> 00:23:22,278
அப்புறம் அடுத்தது.
283
00:23:22,278 --> 00:23:23,696
லெவல் ஏ.
284
00:23:23,696 --> 00:23:24,655
இருபத்தி எட்டு.
285
00:23:29,660 --> 00:23:32,371
-சுடப் பட்டதன் பதிவு இல்லையா?
-இல்லை.
286
00:23:32,371 --> 00:23:34,874
காமிரா இருப்பிடங்களை நங்கு அறிந்தவர்.
287
00:23:37,209 --> 00:23:40,004
-எழுந்துக்கோ. நான் ஒருமுறை பார்க்கிறேன்.
-சரி.
288
00:23:55,352 --> 00:23:56,270
நீ நலம்தானே?
289
00:23:57,062 --> 00:23:58,814
ரயில் நிலையம் பிடிப்பதில்லை.
290
00:23:58,814 --> 00:24:02,526
படங்களில் பார், ரயில் நிலையத்தில
உருப்படியா ஏதும் நடப்பதில்லை.
291
00:24:07,448 --> 00:24:11,744
{\an8}கைஸ், நான் சிஸ்டத்தில் உள்ளேன்.
உங்களை கண்காணிக்கிறேன்.
292
00:25:03,462 --> 00:25:05,047
எனக்கு ஒண்ணு செய்வீங்களா?
293
00:25:05,965 --> 00:25:08,092
விளையாட்டரங்குக்குள் போகலாமா?
294
00:25:10,135 --> 00:25:11,428
ஆம், இன்றிரவு.
295
00:25:12,471 --> 00:25:14,556
அங்கே போனதும் எல்லாம் விளங்கும்.
296
00:25:38,455 --> 00:25:40,749
சரி, உங்களை எங்கே அனுப்பட்டும்?
297
00:25:45,629 --> 00:25:47,172
{\an8}செம்மரிங் பரவாயில்லயா?
298
00:26:29,381 --> 00:26:30,466
அவன் கிடைத்தான்.
299
00:26:35,346 --> 00:26:38,640
-எங்கே எடுக்கப்பட்டது?
-வியன்னா ரயில் நிலைய 9ம் நடைமேடை.
300
00:26:38,640 --> 00:26:40,976
நாம் இறங்கிய பின்பு விவரம் கிடைக்கும்.
301
00:27:27,731 --> 00:27:29,983
அடிச்சுட்டே இருந்தா அவன் பேச முடியாது.
302
00:27:53,799 --> 00:27:55,092
நான் யார் தெரியுமா?
303
00:27:57,553 --> 00:28:00,639
பொய் சொல்ல பாக்காதே.
மருந்து வேலை செய்ய ஆரம்பிக்கும்.
304
00:28:02,182 --> 00:28:05,436
-லூகா கோச்சரோவ்!
-விஞ்ஞானி உங்களிடம் சொன்னது என்ன?
305
00:28:07,062 --> 00:28:09,314
-ஒண்ணுமில்லை!
-உங்களுக்கு சொன்னது யார்?
306
00:28:09,940 --> 00:28:10,941
எனக்கு தெரியாது.
307
00:28:22,536 --> 00:28:24,663
ஊசியில் வெறும் தண்ணீர்தான்.
308
00:28:24,663 --> 00:28:29,293
நாம் சோகோலை நிறுத்தணும்னா,
நிறைய பேசணும், நேரம் குறைவு.
309
00:28:49,188 --> 00:28:51,815
{\an8}செம்மரிங், ஆஸ்த்ரியா
310
00:29:05,245 --> 00:29:07,873
-பாவ்லோக், ஆஸ்த்ரியா வரவேற்கிறது.
-கிளம்பலாம்
311
00:29:36,527 --> 00:29:37,611
எனக்கு இது பிடிக்கல.
312
00:29:38,779 --> 00:29:40,364
தெளிவா சொல்லிட்டீங்க.
313
00:29:40,364 --> 00:29:41,657
இங்க எனக்காக இருங்க.
314
00:29:50,499 --> 00:29:51,959
வரவழைத்ததுக்கு மன்னிக்கணும்.
315
00:29:51,959 --> 00:29:54,711
ஆனா எனக்கு ஒரு விஷயத்தில் நீங்க உதவலாம்.
316
00:29:56,296 --> 00:29:57,839
என்னென்னு சொல்லுங்க.
317
00:29:57,839 --> 00:30:02,386
டிபோர் காஸல் ஆயுதத்தோடு நுழைய
முடியாத அளவுக்கு பாதுகாப்பு பலமா இருந்தது.
318
00:30:02,386 --> 00:30:06,265
-யாரோ உள்ளே வெச்சிருந்தாங்க.
-இல்ல, சுட்டவன் ஆயுதம் தரித்த வீரன்.
319
00:30:06,265 --> 00:30:08,850
-காஸலா இருக்காதுன்றீங்களா?
-உள்நோக்கம் இல்லயே.
320
00:30:08,850 --> 00:30:11,353
இவ்ளோ தூரம் ஏற்பாடு செய்ய வசதியும் இல்லை.
321
00:30:11,353 --> 00:30:15,232
இங்கே வரும் முன் செயலிழக்க
வைத்தனர். அவன் வெறும் பகடைக் காய்.
322
00:30:16,191 --> 00:30:17,359
இது யார் விளையாட்டு?
323
00:30:17,359 --> 00:30:20,821
இன்னும் உறுதியாகல. ஆனால் நீங்க
போபோவிடம் செய்த ஒப்பந்தம்
324
00:30:20,821 --> 00:30:24,491
நீங்க விரும்பியபடி ஏகமனதான
ஆதரவை பெறவில்லை போல.
325
00:30:24,491 --> 00:30:25,951
இது உள் வேலை.
326
00:30:29,329 --> 00:30:31,081
இங்கே நான் எதுக்கு வந்தேன்?
327
00:30:32,749 --> 00:30:37,546
ரெண்டாவது லெவலில் கேமராக்களே இல்லை.
காஸல் இருந்த இடம் ஏதும் பதிவாகல.
328
00:30:37,546 --> 00:30:40,924
ஆனா, உங்க நினைவில் பதியாத
எதையோ பார்த்திருக்கலாம்.
329
00:30:40,924 --> 00:30:44,177
இங்கே வந்தா உங்களுக்கு
நியாபகம் வரும்னு பாக்கிறேன்.
330
00:30:46,096 --> 00:30:46,972
சரி.
331
00:30:49,141 --> 00:30:52,811
நினைவுக்கு கொண்டு வரணும்னா,
முதலிருந்து செய்து பாப்போமே.
332
00:30:54,521 --> 00:30:56,315
சுடுவதற்கு முன் என்ன நடந்தது?
333
00:30:58,233 --> 00:31:00,944
நாங்க இப்படி வந்துட்டிருந்தோம்.
334
00:31:00,944 --> 00:31:02,321
பேசிக் கொண்டே,
335
00:31:03,238 --> 00:31:06,366
பாதுகாப்பு குழு கூட வியந்தது,
நாங்க எவ்ளோ நல்லா...
336
00:31:09,745 --> 00:31:10,579
என்ன?
337
00:31:12,122 --> 00:31:13,206
இல்ல.
338
00:31:13,206 --> 00:31:15,792
போபோவை சுடும்போது ராடெக் என்னோட இல்லை.
339
00:31:17,794 --> 00:31:20,714
ஒரே குழப்பம்.
வீரர்கள் சிதறி ஓடினாங்க,
340
00:31:20,714 --> 00:31:23,634
ரெண்டு தரப்பினரும் எங்களை
பாதுக்காக்க ஓட, ஆனா...
341
00:31:25,260 --> 00:31:27,721
சுடும் முன்பே ராடெக் போயிட்டுருக்கணும்.
342
00:31:30,891 --> 00:31:32,976
எங்க போகணும்னு நல்லா தெரிஞ்சிருக்கு.
343
00:31:35,854 --> 00:31:38,982
இதில் அவனுக்கு தொடர்பிருக்கும்னு
நினைக்கறீங்களா? இல்லை
344
00:31:38,982 --> 00:31:43,028
எல்லா சிசிடிவி பதிவையும்
பார்த்துட்டேன். போபோவ் விழறப்ப இங்கில்லை.
345
00:31:43,028 --> 00:31:46,156
மாடியில் இருந்தான், காஸலை கொல்ல வசதியா.
346
00:31:49,117 --> 00:31:51,161
நாங்க பல நாள் நண்பர்கள்.
347
00:31:51,912 --> 00:31:55,123
ராடெக் ஒரு தேசபக்தன்.
இதில அவனுக்கு தொடர்பிருக்காது.
348
00:31:55,123 --> 00:31:57,084
இது கடினம்னு தெரியும்.
349
00:31:57,084 --> 00:32:01,088
ஆனா, நாம
எல்லா கோணத்திலிருந்தும் அணுகணும்.
350
00:32:01,088 --> 00:32:04,758
அதுவும், நம் முகத்திற்கு நேராக
உள்ள ஒரு கோணத்தை.
351
00:32:28,573 --> 00:32:30,867
வாங்க.
352
00:32:37,499 --> 00:32:39,251
இங்க வந்து ரொம்ப நேரமாகுது.
353
00:32:40,460 --> 00:32:42,170
நமக்கு அதிர்ஷ்டமில்லை போல.
354
00:32:43,547 --> 00:32:47,801
இரையைத் தேடி ஓநாய்க் கூட்டம்
நூறு கிலோ மீட்டர் கூட போகும்.
355
00:32:47,801 --> 00:32:51,930
"ஓநாயின் வெற்றி,
அதன் கால்களால்தான்."னு பழமொழி.
356
00:32:53,682 --> 00:32:54,933
எனக்கு அதிர்ஷ்டம்.
357
00:32:56,309 --> 00:32:59,688
ஓநாய் என்னிடமில்லாத ஒரு அரிய பொக்கிஷம்.
358
00:33:00,897 --> 00:33:04,443
அத்தகைய மிருகத்தின் தலையை
சுவரில் மாட்டுவது, எவ்ளோ வீண்.
359
00:33:09,322 --> 00:33:10,532
கிட்ட கேக்குது.
360
00:33:12,492 --> 00:33:13,493
பாக்க முடியுதா?
361
00:33:16,872 --> 00:33:17,706
அதோ.
362
00:34:22,687 --> 00:34:25,899
எனக்குப் புரியல. சிஐஏக்கு
நீங்க ஏன் உதவ முயலணும்?
363
00:34:27,067 --> 00:34:30,195
இந்த முறை நாம ஒரே பக்கத்தில
இருப்பதா வெச்சுக்குவோமே.
364
00:34:32,948 --> 00:34:33,865
நான் ஏன்?
365
00:34:35,534 --> 00:34:37,536
நீ சோயாவோட வேலை செய்தது தெரியும்.
366
00:34:38,411 --> 00:34:39,621
அவள் உன்னை நம்பினா.
367
00:34:41,790 --> 00:34:43,124
அவள் உன் ஆள்.
368
00:34:44,584 --> 00:34:48,088
சிஐஏவை கோர்த்து விட கப்பல்ல அணுஆயுதம்
இருக்குனு பொய் சொன்னீங்க
369
00:34:49,381 --> 00:34:51,383
நீ செயல் படாம இருந்திருக்கலாம்
370
00:34:51,383 --> 00:34:54,302
ஆனா, அவன் தகவலும் முக்கியமானது.
371
00:34:54,803 --> 00:34:57,597
சோகோல். இதுப் பத்தி
உங்களுக்கு என்ன தெரியும்?
372
00:34:59,266 --> 00:35:01,142
அது ஒரு பயங்கர விபத்து.
373
00:35:02,227 --> 00:35:04,062
எனக்கு அதுக்கு மேல தெரியாது.
374
00:35:06,565 --> 00:35:10,360
சாகும் முன் யூரி, கான்ஸ்டான்டின்
தேசத் துரோகின்னான். ஏன்?
375
00:35:11,736 --> 00:35:14,364
யூரிக்கு நாங்க இல்லேன்னு தெரியும்.
376
00:35:15,991 --> 00:35:17,284
அது ரஷ்யா அல்ல.
377
00:35:18,034 --> 00:35:19,160
-ஆனால்...
-ரஷ்யன்.
378
00:35:20,620 --> 00:35:21,872
ஒரு துரோக கும்பல்.
379
00:35:24,249 --> 00:35:25,959
ரொம்ப உறுதியா இருக்கேன்,
380
00:35:27,002 --> 00:35:28,253
அதை அம்பலப் படுத்த.
381
00:35:28,253 --> 00:35:29,504
அவங்க தேவை என்ன?
382
00:35:30,755 --> 00:35:32,924
சோவியத் யூனியனை மீண்டும் நிறுவ.
383
00:35:34,301 --> 00:35:35,635
ஆக, அதற்கு கருவி இருக்கா?
384
00:35:36,636 --> 00:35:38,096
யூரி அதற்காக வேலை செய்தான்.
385
00:35:38,096 --> 00:35:40,682
இன்னும் கருவி உருவாகல.
386
00:35:40,682 --> 00:35:41,766
அப்படீன்னா?
387
00:35:42,601 --> 00:35:43,518
யுரேனியமா?
388
00:35:45,979 --> 00:35:49,608
போதுமான அளவு அதை வைத்திருக்கக்
கூடிய ஆயுத வியாபாரிகள் குறைவு.
389
00:35:49,608 --> 00:35:54,946
அந்த பட்டியலில் முதல்ல
இருப்பவன் லெவான் சுப்கோவ்.
390
00:35:55,405 --> 00:35:56,323
யார் அவன்?
391
00:35:56,990 --> 00:35:58,325
உன் நண்பனைக் கேள்.
392
00:36:01,161 --> 00:36:03,079
சுப்கோவ் என் வாடிக்கையாளன்.
393
00:36:04,456 --> 00:36:07,542
அதுக்குத்தான் புடாபெஸ்டுக்கு போறோமா?
394
00:36:07,542 --> 00:36:10,170
நீங்க இன்னும் உயிரோட இருப்பதும் அதனாலதான்.
395
00:36:10,170 --> 00:36:11,880
-மிக்க நன்றி.
-இருங்க.
396
00:36:11,880 --> 00:36:14,883
சுப்கோவ் இந்த கும்பலோட
வேலை செய்றான்னா சொல்றீங்க?
397
00:36:14,883 --> 00:36:15,926
ஆம்.
398
00:36:16,718 --> 00:36:20,347
-எவ்ளோ நெருக்கமா?
-கஸக்ஸ்தானுக்கு ரெண்டு நாள் முன் போனான்.
399
00:36:20,347 --> 00:36:22,223
-இந்த மாதத்தில 3ஆவது பயணம்
-ஐயோ
400
00:36:22,223 --> 00:36:26,937
நான் நம்ப யாருமே இல்ல. ஒருத்தரும்.
என் அரசில் கூட.
401
00:36:28,813 --> 00:36:30,774
சிஐஏ என்னை நம்பணுங்கறீங்க.
402
00:36:32,192 --> 00:36:33,151
நம்ப மாட்டாங்களா?
403
00:36:49,834 --> 00:36:50,669
ஜாக்கா?
404
00:36:50,669 --> 00:36:52,629
என் யூகம் நீங்க இப்ப செம்மரிங்லே!
405
00:36:53,296 --> 00:36:55,632
கூட போறேன். உன்னோட பயணம்
எப்படிருக்கு?
406
00:36:57,425 --> 00:36:59,344
-இயற்கை அழகு.
-இருக்கும்தான்.
407
00:37:00,261 --> 00:37:03,014
உன்னை ஒரு ரஷ்ய கொலைகாரன் தொடரறான்.
408
00:37:03,014 --> 00:37:04,975
-என்னை பிடித்தான்
-கொன்னுட்டீயா?
409
00:37:05,892 --> 00:37:07,602
-நான் இல்லை.
-அப்ப யார்?
410
00:37:09,312 --> 00:37:10,563
லூகா கோச்சரோவ்.
411
00:37:13,066 --> 00:37:15,110
கோச்சரோவ் உன் ஆள் இல்லைலே.
412
00:37:15,110 --> 00:37:17,320
-அவன் செய்தது தெரியும்லே
-உதவினான்.
413
00:37:17,320 --> 00:37:20,115
அது ரஷ்யர்கள் அல்ல. புது பாதுகாப்பு
அமைச்சர்,
414
00:37:20,115 --> 00:37:24,119
சொந்த அரசை மீறி
வேலை செய்யும் ரகசிய குழுவின் அங்கம்.
415
00:37:25,328 --> 00:37:29,457
இருந்தாலும், கோச்சரோவின் தகவல்படி
மில்லர் பணியை உறுதி செய்ய மாட்டார்
416
00:37:29,457 --> 00:37:32,168
-நல்ல வேளை நான் மில்லருக்கு வேலை செய்யல.
-ஜாக்.
417
00:37:32,168 --> 00:37:34,629
யுஎஸ், ரஷ்யா
ஒரு போருக்கு தூண்டப் படுகின்றன.
418
00:37:34,629 --> 00:37:37,924
இந்த தருணத்தில், நாம் மட்டுமே
குறுக்கே நிற்கிறோம்.
419
00:37:39,217 --> 00:37:42,053
-என்னால நம்ப...
-என்னை நீங்க நம்பியாகணும்.
420
00:38:12,959 --> 00:38:15,754
-எங்கே போறீங்க?
-அவன் வருவது சிவப்பு ரயிலில்.
421
00:38:28,850 --> 00:38:31,644
{\an8}ப்ராக் காசில்
ப்ராக், செக் குடியரசு
422
00:38:34,272 --> 00:38:37,108
பார்க்கிங் தளத்தில் இருந்த
ஒரு கேமரா கோணம்,
423
00:38:37,108 --> 00:38:39,694
உள்ளே வரும் வண்டிகளை பதித்தது.
424
00:38:39,694 --> 00:38:41,738
காஸலின் காரை கண்டோம்.
425
00:38:43,615 --> 00:38:47,118
{\an8}இதோ. பாக்க முடியுதா? காஸல் தனியா வரலை.
426
00:38:47,827 --> 00:38:49,954
கார்ல வேற யாரோ அவன் கூட இருக்காங்க.
427
00:38:50,747 --> 00:38:52,791
-யார் அது?
-தெரியல.
428
00:38:52,791 --> 00:38:57,545
ஆனா, இந்த விஷயம்,
பலரால் திறமையா திட்டமிடப் பட்டிருக்கு.
429
00:38:59,714 --> 00:39:03,802
உன் செய்தி கிடைத்தது.
முடிஞ்ச அளவு சீக்கிரம் வந்தேன்.
430
00:39:07,722 --> 00:39:10,058
ஜேம்ஸ் கிரீயர்தானே.
431
00:39:10,058 --> 00:39:14,646
திரு. கோவாக், உங்க மகள் உங்கக்கிட்ட என்ன
சொன்னாங்க?
432
00:39:14,646 --> 00:39:18,024
அவளது பாதுகாப்பு தலைவர்
மீதே பழி போட்டதாகத்தான்.
433
00:39:18,024 --> 00:39:21,486
பதவி இல்ல, ஆனா என்
அப்பா மிக நம்பிக்கையான ஆலோசகர்.
434
00:39:21,486 --> 00:39:25,115
போபோவ் மரணத்தில் ராடெக்
தொடர்பிருந்ததுனு உறுதியா நம்பறீங்களா?
435
00:39:25,115 --> 00:39:28,827
அவன் பெரிய ஒரு சதியின் அங்கமா?
436
00:39:33,748 --> 00:39:35,542
ஆம். அப்படித்தான் நம்பறேன்.
437
00:39:38,002 --> 00:39:41,422
அப்போ, உங்க வாய்ப்புகள்
மிகவும் குறுகியவை, அதிபர் அவர்களே.
438
00:39:47,262 --> 00:39:48,429
முடிவெடுத்தாச்சு.
439
00:39:49,556 --> 00:39:53,685
நேடோவுக்கு ஏவுகணைகளை கொண்டு
வந்து நிறுவ அனுமதி கொடுத்துட்டேன்.
440
00:39:55,103 --> 00:39:57,480
ரஷ்யா எதிலே இறங்கிருக்குன்னு தெரியல,
441
00:39:57,480 --> 00:40:00,608
ஆனா என் நாட்டை அவங்க
விளையாட்டு மைதானமாக்க விடமாட்டேன்.
442
00:40:02,402 --> 00:40:05,071
{\an8}புடாபெஸ்ட், ஹங்கேரி
443
00:40:29,470 --> 00:40:31,973
அந்த எல்லையைப் பத்தி
சொன்னேன், நினைவிருக்கா?
444
00:40:32,849 --> 00:40:34,100
இப்ப அதை தாண்டிட்டே.
445
00:42:26,629 --> 00:42:28,631
வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்
446
00:42:28,631 --> 00:42:30,717
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்