1 00:00:06,069 --> 00:00:07,946 சென்ற பருவம், பாஷில்... 2 00:00:08,697 --> 00:00:09,573 அய்யோ. 3 00:00:09,656 --> 00:00:12,325 எல்லோரும் வெளியேறுங்க. வெடிகுண்டு. வெளியேறுங்க. 4 00:00:12,826 --> 00:00:14,244 -ஓடுங்க, ஓடு! -சீக்கிரம்! 5 00:00:19,541 --> 00:00:22,711 -நீங்களும் நண்பர்களும் இன்று செய்தது... -வேலையின் அங்கம். 6 00:00:24,254 --> 00:00:25,297 யார் அது? 7 00:00:25,797 --> 00:00:27,048 டெய்ஸி க்ளெய்ட்டன். 8 00:00:27,132 --> 00:00:28,341 டெய்ஸிக்கு 14 வயது. 9 00:00:28,425 --> 00:00:30,552 கற்பழித்து, கொன்று, ப்ளீச் செய்து, 10 00:00:30,635 --> 00:00:32,429 அவளை காட்சிப்படுத்தினான். 11 00:00:32,512 --> 00:00:35,891 என் மாமா ஆன்ட்வானின் மரணம் பற்றி சகோதரனிடம் பேசினேன். 12 00:00:35,974 --> 00:00:37,726 நான் நினைக்கிறவர் நீங்கதானா? 13 00:00:37,809 --> 00:00:41,021 ஜாக் ஆவ்ரில், என் அம்மாவின் சகோதரனை கொன்றவரா? 14 00:00:42,981 --> 00:00:45,817 மார்க்கோஸும் அரியாஸும் சாக யாருக்கு ஆசை தெரியுமா? 15 00:00:46,443 --> 00:00:49,404 உலகில் பல கோபம்கொண்ட பழிவாங்குபவர் இருக்காங்க. 16 00:00:50,030 --> 00:00:51,198 நான் அவர்களில் ஒருவன். 17 00:00:51,281 --> 00:00:54,951 ஜாக் ஆவ்ரில் இங்கே சட்டத்தை மீறும் வரை அவனை தொட முடியாது. 18 00:00:55,035 --> 00:00:56,703 விஷயங்கள் மாறக்கூடும். 19 00:00:56,787 --> 00:00:58,538 வல்லவர்கள் வீழலாம். 20 00:00:58,622 --> 00:01:01,041 கெட்டவர்கள் தண்டிக்கப்படுவர். 21 00:01:01,875 --> 00:01:02,793 நான் நம்பறேன். 22 00:01:02,876 --> 00:01:04,544 அது சுருக்கத்தில் இல்லை. 23 00:01:04,628 --> 00:01:05,629 அருமை, மேடி. 24 00:01:05,712 --> 00:01:08,465 மறைந்துள்ளதை தேடணும்னு அப்பா எப்பவும் சொல்வார். 25 00:01:08,924 --> 00:01:10,175 உன் அப்பா, புத்திசாலி. 26 00:01:10,675 --> 00:01:12,844 அவரை சந்திக்கணும். திரு. பழங்காலம். 27 00:01:12,928 --> 00:01:14,763 அவர் சகஜமா பழக மாட்டார். 28 00:01:14,846 --> 00:01:17,390 உனக்கு சொல்லித் தந்தா. ஃபேட் டயர் வாங்க சொன்னாளா? 29 00:01:18,099 --> 00:01:19,184 சொல்ல விரும்பலை. 30 00:01:20,852 --> 00:01:23,063 -நீ குடிக்கலையா? -என்னால் முடியாது. 31 00:01:24,356 --> 00:01:25,482 ஏன் முடியாது? 32 00:01:26,650 --> 00:01:27,692 கர்ப்பமா இருக்கேன். 33 00:01:29,402 --> 00:01:32,948 பதவியில் லத்தீன பெண் இருக்கணுமென நகரில் பலர் நினைக்கிறாங்க. 34 00:01:33,031 --> 00:01:35,033 லோபெஸ் கிழக்குப்பகுதியில் வெல்வார். 35 00:01:35,116 --> 00:01:36,952 இதை முன்பு செய்ததுண்டா? 36 00:01:37,035 --> 00:01:39,120 உயர்நிலைப்பள்ளி. விவாத அணி. 37 00:01:40,247 --> 00:01:41,122 குழுவின் தலைவர். 38 00:01:41,206 --> 00:01:42,374 என்னை வெறுக்கறீங்க. 39 00:01:42,457 --> 00:01:43,667 ஏன் உங்களை வெறுப்பேன்? 40 00:01:43,750 --> 00:01:45,627 நான் தெரிஞ்சுக்க ஏதும் இருக்கா? 41 00:01:45,710 --> 00:01:47,170 உங்களிடையே என்ன பிரச்சனை? 42 00:01:47,254 --> 00:01:49,548 குற்றப்பதிவுகளை குறைத்து மாட்டினார்... 43 00:01:49,631 --> 00:01:51,633 அனாமதேய துப்பு, நினைவிருக்கு. 44 00:01:51,716 --> 00:01:53,051 என் மீது பழி போடறார். 45 00:01:53,134 --> 00:01:57,764 இந்த ஒட்டுக்கேட்டலை வைத்து நீங்க வழக்கு தொடுத்தா, என் நீதிமன்றத்துக்கு வரும். 46 00:01:57,848 --> 00:01:59,516 தெரியும், நீதிபதி அவர்களே. 47 00:01:59,599 --> 00:02:02,435 என்னை தவறா வழிநடத்தினீங்கன்னு தெரிய வரக்கூடாது. 48 00:02:02,519 --> 00:02:06,022 நீங்க ஜாக் ராபின்சன்னு சொல்லுமுன், வழக்கை தள்ளுபடி செய்வேன். 49 00:02:06,106 --> 00:02:07,816 -புரிந்தது. -அதை நம்பறேன். 50 00:02:07,899 --> 00:02:09,484 எனக்கு என்ன தேவைனு தெரியல. 51 00:02:09,568 --> 00:02:11,111 சட்டத்தைப் பற்றி சந்தேகமா? 52 00:02:11,987 --> 00:02:13,113 எல்லாவற்றையும் பற்றி. 53 00:02:13,196 --> 00:02:14,281 கண்டுபிடிப்பே. 54 00:02:14,364 --> 00:02:16,658 -இவ்ளோ சீக்கிரம் எங்கே? -அறிவியல் முகாம். 55 00:02:16,741 --> 00:02:20,537 கொலைகளை தீர்க்கும் ரோபோ துப்பறிவாளர்களை கண்டுபிடிப்பாங்க போல, 56 00:02:21,997 --> 00:02:23,915 பாதாளத்துள் மூழ்கிடாமல். 57 00:02:24,624 --> 00:02:25,625 என்னாச்சு? 58 00:02:29,546 --> 00:02:30,589 இது ஆவ்ரில் செய்தது. 59 00:02:30,672 --> 00:02:32,007 உணர்ச்சிகரமா ஈடுபடுறே. 60 00:02:32,090 --> 00:02:33,383 பின்வாங்கு. 61 00:02:34,843 --> 00:02:35,719 நீ பின்வாங்குவியா? 62 00:02:36,803 --> 00:02:38,388 ட்வைட் வைஸ் தந்த கடிதம். 63 00:02:38,471 --> 00:02:41,182 "அமைப்பு தோற்கும்போது, நல்லவர்கள் எழுவர்." 64 00:02:41,266 --> 00:02:43,602 என்ன செய்யணுமோ அதை செய்யணும்னு அர்த்தம். 65 00:02:44,311 --> 00:02:46,104 ஆவ்ரில் வீட்டில் என்ன செஞ்சீங்க? 66 00:02:46,229 --> 00:02:47,939 கேட்க வேண்டிய கேள்விகள் இருந்தன. 67 00:02:48,023 --> 00:02:49,399 அடுத்தது என்னாகும்? 68 00:02:50,650 --> 00:02:51,818 எல்ஏபிடி! 69 00:02:53,028 --> 00:02:54,362 அது நீங்களா, டிடெக்டிவ் எட்கர்? 70 00:02:54,446 --> 00:02:56,740 நான் தான். துப்பாக்கியை போடுங்க. 71 00:02:57,198 --> 00:02:58,241 உங்களை நம்பறேன், 72 00:02:58,325 --> 00:02:59,951 சரணடைகிறேன். 73 00:03:00,035 --> 00:03:03,246 தன் கையில் துப்பக்கி வைச்சிருந்தான். கீழே இறக்கினான்... 74 00:03:05,332 --> 00:03:07,208 எப்போ உதவிக்கு அழைச்சீங்க? 75 00:03:07,292 --> 00:03:08,710 என்னிடம் ரோவர் இல்லை. 76 00:03:08,793 --> 00:03:10,670 உங்க கைபேசி? 77 00:03:10,754 --> 00:03:12,422 மறந்து வீட்டில் விட்டேன். 78 00:03:13,089 --> 00:03:14,299 நீ செஞ்சது தெரியும். 79 00:03:14,382 --> 00:03:17,469 அது தவறென நீ முடிவெடுத்திருக்கலாம்னு நம்பறேன். 80 00:03:17,552 --> 00:03:19,512 நீ அங்கே செய்யப் போனது. 81 00:03:19,596 --> 00:03:21,056 பணமிருந்தாலும் இழந்தாலும். 82 00:03:21,139 --> 00:03:23,558 இந்த மோதிரத்தை அணிவித்து உன்னை மணக்கிறேன். 83 00:03:23,850 --> 00:03:26,895 எல்ஏ நகர மேயர் தேர்தல் பிரச்சாரம் பற்றிய சமீப செய்தி. 84 00:03:26,978 --> 00:03:30,023 மேயர் தேர்தலை விட்டு விலகி, கவின்சில்வுமன் 85 00:03:30,106 --> 00:03:33,276 சுசான்னா லோபெஸை ஆதரிப்பதாக தலைவர் இர்விங் அறிவித்தார். 86 00:03:33,360 --> 00:03:36,655 போலீஸ் தலைவராக அவருடன் பணிபுரிய ஆர்வமாக உள்ளேன். 87 00:03:37,155 --> 00:03:39,824 அவனுடைய கேடு என்னை தொந்தரவு செய்யுது. என்னால்... 88 00:03:39,908 --> 00:03:41,409 என்னால் அதை உதற முடியலை. 89 00:03:42,202 --> 00:03:43,328 என் மனதை மாற்றினேன். 90 00:03:43,411 --> 00:03:44,621 சட்டக் கல்லூரி பற்றியா? 91 00:03:44,704 --> 00:03:47,415 எந்தத் தரப்பில் அமர வேண்டும் என்பதை மாற்றினேன். 92 00:03:49,542 --> 00:03:52,545 நீங்க குற்றவாளிகளை பிடித்தா, நான் சிறையில் தள்ளுவேன். 93 00:03:55,048 --> 00:03:57,425 பணத்தாசை சாண்ட்லரிடம் என்ன சொல்வாய்? 94 00:03:57,509 --> 00:03:59,803 அடுத்த கோடை அவரிடம் பயிற்சி பெற விரும்புவதா. 95 00:04:00,261 --> 00:04:02,764 எதிர் வக்கீலை போல அரசு வக்கீல் யோசிக்கணும். 96 00:04:04,391 --> 00:04:06,726 டெய்ஸியை கொன்றவனை கண்டுபிடித்ததா தோணுது. 97 00:04:08,353 --> 00:04:09,437 அவனை பிடிச்சோம். 98 00:04:12,649 --> 00:04:16,236 டெய்ஸி க்ளேடன் மே 8, 1995 - ஆகஸ்ட் 15, 2009 99 00:04:38,008 --> 00:04:41,845 நான்கு மாதங்கள் கழித்து புத்தாண்டு இரவு 12/31/19 100 00:04:52,230 --> 00:04:53,940 சாண்ட்லருக்கு மேயரை தெரியுமா? 101 00:04:54,024 --> 00:04:56,192 -சாண்ட்லர் பலரை அறிவார். -நல்ல நட்பு. 102 00:04:56,276 --> 00:04:59,320 இர்விங் விலகினபின், சாண்ட்லர் தன் ஆதரவை மாற்றினார், 103 00:04:59,404 --> 00:05:00,530 லோபெஸ் கடன்பட்டார். 104 00:05:00,613 --> 00:05:02,490 இப்போ, அவங்க சிறந்த நண்பர்கள். 105 00:05:02,574 --> 00:05:03,575 அப்படி சொல்லலாம். 106 00:05:03,658 --> 00:05:06,369 ஆன்டோனியோ, மேடி, நீங்க வந்ததில் சந்தோஷம். 107 00:05:06,453 --> 00:05:08,121 உன் அப்பா வரலைனு வருந்தறேன். 108 00:05:08,204 --> 00:05:09,831 அவர் வேற திட்டம் போட்டார். 109 00:05:09,914 --> 00:05:12,876 நிச்சயமா. முரட்டு புத்தாண்டு இரவு கொண்டாடுவார். 110 00:05:12,959 --> 00:05:15,587 ஒரு நல்ல கொலை புத்தகத்தை படித்து தூங்குவது. 111 00:05:16,463 --> 00:05:18,048 அவர் அப்படித்தான். 112 00:05:18,131 --> 00:05:19,549 தனித்துவமானவர். 113 00:05:53,708 --> 00:05:56,669 கரடி வருது, ஆளிடம் கரடி சொல்லுது, 114 00:05:57,128 --> 00:06:00,090 "இங்கே நீங்க வேட்டையாட வரலையோ?" 115 00:06:02,050 --> 00:06:03,343 இருங்க, எனக்கு புரியல. 116 00:06:03,426 --> 00:06:05,678 இது ரொம்ப மோசம்! 117 00:06:05,762 --> 00:06:08,348 -சிரிக்கிறீங்க! -எனக்கே என் சிரிப்பு பிடிக்கல. 118 00:06:08,431 --> 00:06:10,475 ஒவ்வொரு ஆண்டும் துணுக்கு சொல்றார்! 119 00:06:10,558 --> 00:06:12,393 ஒவ்வொரு ஆண்டும். தவறாமல். 120 00:06:12,477 --> 00:06:15,355 ஒவ்வொரு ஆண்டும், அதிக அலங்காரமாக. 121 00:06:15,438 --> 00:06:17,398 அலங்காரம்னா சும்மாவா? 122 00:06:18,066 --> 00:06:19,901 போங்கடா, கிறுக்கர்களே! 123 00:06:20,527 --> 00:06:22,278 கழுதை அறியுமா கற்பூர மணம்! 124 00:06:22,695 --> 00:06:23,988 உங்களை பார்க்க இன்பம். 125 00:06:24,280 --> 00:06:25,490 -ஹேய். -ஹேய்! 126 00:06:25,573 --> 00:06:27,826 மாறுவேட பாணி அருமை, எட்ஜ். 127 00:06:27,909 --> 00:06:30,120 -பொருத்தமா இருக்கு. -நன்றி, எல்டீ. 128 00:06:30,203 --> 00:06:31,579 -இன்பமா இருக்கா? -அருமை. 129 00:06:31,663 --> 00:06:32,914 அருமையான ஏற்பாடு. 130 00:06:34,916 --> 00:06:37,168 -கமாண்டர் பால்கா. -ஹேய், எல்டீ. 131 00:06:37,252 --> 00:06:39,754 -நீங்க வந்ததில் மகிழ்ச்சி. -மகிழ்கிறேன். 132 00:06:39,838 --> 00:06:42,799 அருமை, அருமை, அருமை. ஆன்னை சந்திச்சிருக்கீங்க. 133 00:06:44,843 --> 00:06:46,761 -நலம்தானே? -கடினமான கூட்டம். 134 00:06:47,303 --> 00:06:49,681 தெரியும். கண் டாக்டர்களோடு ஒப்பிடுகையில். 135 00:06:50,515 --> 00:06:52,350 ரொம்ப நல்லவங்க, உன் நண்பர்கள். 136 00:06:52,433 --> 00:06:54,227 போலீஸ் நல்லவங்கனு நினைக்கலையே? 137 00:06:55,186 --> 00:06:56,604 மணநாள் வாழ்த்துக்கள். 138 00:06:56,688 --> 00:06:58,189 மணநாள் வாழ்த்துக்கள், அன்பே. 139 00:07:00,024 --> 00:07:02,986 -புத்தாண்டு வாழ்த்துக்கள். -இன்ப, இன்ப 2020. 140 00:07:03,736 --> 00:07:05,405 -எல்டீ. -ஹேய்! 141 00:07:05,488 --> 00:07:08,116 பென்னட்! ஆன் நினைவிருக்கா? ஆன், ஜோன் பென்னட். 142 00:07:08,199 --> 00:07:09,868 ஆமா, போன ஆண்டு சந்திச்சோம். 143 00:07:09,951 --> 00:07:12,078 -எப்படி இருக்கீங்க? -நலம். நன்றி. 144 00:07:12,662 --> 00:07:14,706 -புத்தாண்டு வாழ்த்து. -உங்களுக்கும். 145 00:07:14,789 --> 00:07:16,040 எட்கர் வருவாரா? 146 00:07:16,124 --> 00:07:17,458 வருவதா சொன்னார். 147 00:07:18,668 --> 00:07:19,836 அவரை கூப்பிடபோறேன். 148 00:07:23,548 --> 00:07:26,301 ஜெர்ரி எட்கரின் எண். பெயரும் எண்ணும் விடவும். 149 00:07:26,384 --> 00:07:28,261 ஹேய், ஜெர், நான் ஜோன். 150 00:07:28,344 --> 00:07:29,679 நான் பில்லெட்ஸ் வீட்டில். 151 00:07:30,471 --> 00:07:33,308 உன்னை பார்த்தா மகிழ்வேன். ரொம்ப நாள் ஆச்சு. 152 00:07:33,766 --> 00:07:37,270 எப்படியோ, புத்தாண்டு வாழ்த்துக்கள். நீ நலம்னு நம்பறேன். 153 00:07:53,453 --> 00:07:54,287 அன்பே. 154 00:07:55,830 --> 00:07:57,957 இதை மாடியில ஆன்ட்டி கொன்ஸுஏலாவிடம் 155 00:07:59,375 --> 00:08:00,877 கொடுத்துட்டு உடனே வா. 156 00:08:02,086 --> 00:08:04,923 முடிஞ்சபோது தட்டை கொடுத்தால் போதும்னு சொல்லு. 157 00:08:05,006 --> 00:08:06,090 சரி, அம்மா. 158 00:08:13,765 --> 00:08:17,310 புத்தாண்டு வாழ்த்துக்கள், திரு ருல்ஃபோ. இந்த டமாலிகள் உங்களுக்காக. 159 00:08:17,393 --> 00:08:19,270 அதிர்ஷ்டத்துக்காக அம்மா செஞ்சாங்க. 160 00:08:20,688 --> 00:08:21,814 உள்ளே வா. ப்ளீஸ். 161 00:08:37,413 --> 00:08:38,873 ஹேய், ஜே. 162 00:08:39,207 --> 00:08:40,833 உங்க கைபேசியை அழைத்தேன். 163 00:08:40,917 --> 00:08:44,212 புத்தாண்டை வரவேற்க உங்களுக்காக காத்திருக்கோம். 164 00:08:44,796 --> 00:08:47,131 உங்களைப் பார்க்க பசங்க ஆவலா இருக்காங்க. 165 00:08:48,216 --> 00:08:49,634 வர்றீங்கனு நம்பறேன். 166 00:09:01,729 --> 00:09:05,024 எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, 167 00:09:05,108 --> 00:09:08,945 நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று. 168 00:09:09,028 --> 00:09:11,948 புத்தாண்டு வாழ்த்துக்கள்! 169 00:09:27,714 --> 00:09:31,467 இதோ, மகிழ்வான, ஆரோக்கியமான, வளமான 2020க்கு! 170 00:10:29,984 --> 00:10:31,319 அம்மா? 171 00:10:34,280 --> 00:10:35,615 அம்மா? 172 00:11:00,765 --> 00:11:03,476 என்னால விட்டுத் தொலைக்க முடியலேன்னு தோணுது 173 00:11:03,559 --> 00:11:05,895 என்னால விட்டுத் தொலைக்க முடியலேன்னு தோணுது 174 00:11:05,978 --> 00:11:08,773 என்னால விட்டுத் தொலைக்க முடியலேன்னு தோணுது 175 00:11:08,856 --> 00:11:11,317 என்னால விட்டுத் தொலைக்க முடியலேன்னு தோணுது 176 00:11:11,401 --> 00:11:13,903 என்னால விட்டுத் தொலைக்க முடியலேன்னு தோணுது 177 00:11:14,278 --> 00:11:16,739 என்னால விட்டுத் தொலைக்க முடியலேன்னு தோணுது 178 00:11:16,823 --> 00:11:19,409 என்னால விட்டுத் தொலைக்க முடியலேன்னு தோணுது 179 00:11:19,492 --> 00:11:20,952 விட்டுத் தொலைக்க முடியலே 180 00:11:26,541 --> 00:11:29,752 பாஷ் 181 00:11:33,714 --> 00:11:35,508 என்னைப் போல் 182 00:11:48,146 --> 00:11:50,565 அழகான மாலைக்கு நன்றி. 183 00:11:51,107 --> 00:11:53,151 என் இன்பம். நன்றி. 184 00:11:53,901 --> 00:11:55,319 புத்தாண்டு வாழ்த்து. 185 00:11:55,736 --> 00:11:57,864 நன்றாக தொடங்கியிருக்கு. 186 00:11:59,073 --> 00:12:00,533 இரவு மது அருந்தலாமா? 187 00:12:01,159 --> 00:12:02,243 நேரமாச்சு. 188 00:12:03,619 --> 00:12:05,496 சீக்கிரம்னு சொல்லலாம். 189 00:12:07,081 --> 00:12:08,166 ஆமா, சொல்லலாம். 190 00:12:12,170 --> 00:12:13,963 மணி அடிச்சு கெடுத்தது. 191 00:12:15,047 --> 00:12:17,675 மன்னிக்கணும். மேக்? 192 00:12:17,758 --> 00:12:19,594 -மன்னிக்கணும். -என்ன விஷயம்? 193 00:12:19,677 --> 00:12:21,554 ஒரு பிரச்சனை ஏற்பட்டது. 194 00:12:21,637 --> 00:12:25,016 கிழக்கு ஹாலிவுட். பல மரணங்கள். தீவைப்பு. 195 00:12:25,516 --> 00:12:27,477 சரி, சரி. முகவரியை அனுப்புங்க. 196 00:12:28,936 --> 00:12:30,146 மன்னிக்கணும். 197 00:12:30,229 --> 00:12:31,230 நீங்க கிளம்பணும். 198 00:12:31,314 --> 00:12:33,733 ஆமாம். தீவிபத்து, கிழக்கு ஹாலிவுட்டில். 199 00:12:34,233 --> 00:12:36,235 -தீவைப்பா? -அப்படித்தான் போல. 200 00:12:36,319 --> 00:12:37,570 மரணங்கள் உண்டா? 201 00:12:37,987 --> 00:12:39,155 ஆமாம். 202 00:12:39,989 --> 00:12:41,449 அவசரப்பட்டு சொன்னேன். 203 00:12:42,492 --> 00:12:43,701 எதைப்பற்றி? 204 00:12:44,118 --> 00:12:46,162 புத்தாண்டு நல்ல ஆரம்பம் என்றேன். 205 00:12:48,122 --> 00:12:49,874 குற்றம் என்றும் குறைவதில்லை. 206 00:12:52,919 --> 00:12:54,337 பிறகு சந்திப்போமா? 207 00:12:54,420 --> 00:12:55,796 பிறகு சந்திப்போம். 208 00:13:13,272 --> 00:13:15,399 ஜெர்ரி, ஏன் கைபேசி அழைப்பை ஏற்கலை? 209 00:13:15,483 --> 00:13:17,652 அழைப்பு வந்தது. தீவைப்பு. மூவர் சாவு. 210 00:13:17,735 --> 00:13:19,278 களத்தில் என்னை சந்தி. 211 00:13:38,881 --> 00:13:41,425 காய். மெக்விட்டி எங்கே? 212 00:13:41,509 --> 00:13:44,053 தீவைப்பு நிபுணரா? அங்கே பியர்ஸ், வேகாவுடன். 213 00:13:44,136 --> 00:13:45,346 நன்றி, சகோதரா. 214 00:13:47,848 --> 00:13:48,933 சொல்லுங்க, மேக். 215 00:13:49,016 --> 00:13:51,310 -எவ்ளோ மோசம்? -இன்னும் மோசமாகியிருக்கலாம். 216 00:13:51,394 --> 00:13:53,437 பலர் தெருவில் கொண்டாடினர். 217 00:13:53,521 --> 00:13:55,856 சிலர் புகை பாதிப்பால் ஆஸ்பத்திரியில். 218 00:13:55,940 --> 00:13:58,359 -துவக்கம்? -மேலாளர் வீட்டில். 219 00:13:58,442 --> 00:14:00,861 அவரது மற்றும் மேல் வீட்டில் தீ சேதம். 220 00:14:00,945 --> 00:14:02,196 காரணம்? 221 00:14:02,280 --> 00:14:04,365 தீவைப்பு. தீப்பந்தம். 222 00:14:04,448 --> 00:14:05,533 எப்படி தெரியும்? 223 00:14:05,616 --> 00:14:07,034 பல சாட்சிகள். 224 00:14:07,118 --> 00:14:09,036 நள்ளிரவில், கார் வந்தது, 225 00:14:09,120 --> 00:14:12,540 ஒருவன் பயணி இருக்கையிலிருந்து குதித்து, தீ பாட்டிலெறிந்தான் 226 00:14:12,623 --> 00:14:15,293 இரண்டாம் மாடி ஜன்னல் வழியே விழுந்தது. 227 00:14:15,751 --> 00:14:16,919 எறிவதில் திறமைசாலி. 228 00:14:17,503 --> 00:14:19,130 அவனின் அடையாளம்? 229 00:14:19,714 --> 00:14:21,215 முக்காடு சட்டையில் இருவர். 230 00:14:22,341 --> 00:14:23,509 வயது? இனம்? 231 00:14:23,593 --> 00:14:25,177 -இருட்டில் தெரியலை. -கார்? 232 00:14:25,803 --> 00:14:28,055 அடர் சாம்பல். கருப்பு. "ஆடம்பரம்." 233 00:14:28,389 --> 00:14:29,974 -எண்? -தெரியலை. 234 00:14:32,059 --> 00:14:33,686 வீட்டார் இப்போ எங்கே? 235 00:14:33,769 --> 00:14:36,439 தெருக்கோடியில் பள்ளியில். ரெட் க்ராஸ் வர்றாங்க. 236 00:14:36,522 --> 00:14:38,733 நீங்க அங்கே போங்க. விசாரியுங்க. 237 00:14:38,816 --> 00:14:41,444 யாராவது கைபேசியில் காணொளி எடுத்திருப்பர். 238 00:14:41,527 --> 00:14:43,029 சரி. செய்றோம். 239 00:14:57,627 --> 00:14:58,919 நான் செய்யல. 240 00:15:05,801 --> 00:15:07,178 மேலாளர் பிழைப்பாரா? 241 00:15:07,261 --> 00:15:09,972 கைகளால் தீயை அணைக்கப் பார்த்தார், பிழைப்பார். 242 00:15:10,973 --> 00:15:14,226 முடிஞ்சதும், ஆஸ்பத்திரி போய் அவரின் வாக்குமூலம் பெறுவேன். 243 00:15:15,102 --> 00:15:17,271 புகை உள்ளிழுப்பு, இருவரும். 244 00:15:17,355 --> 00:15:18,773 மூவர் சாவு என்றீங்க. 245 00:15:22,401 --> 00:15:23,778 எட்டு மாத கர்ப்பிணியா? 246 00:15:23,861 --> 00:15:26,364 -கடவுளே. -கூறாய்வாளர் சொல்றார். 247 00:15:26,447 --> 00:15:27,531 குடியிருந்தவளா? 248 00:15:27,615 --> 00:15:29,992 குடியிருந்தது மற்றவள். மரியா ஹெர்னாண்டெஸ். 249 00:15:30,076 --> 00:15:32,161 கட்டிட தென் கிழக்கில் செத்தாள். 250 00:15:32,244 --> 00:15:33,621 தப்பிக்கப் பார்த்தாளா? 251 00:15:33,704 --> 00:15:35,289 தன் மகளை தேடினாள். 252 00:15:35,915 --> 00:15:37,458 ஒரு குழந்தையை காணோமா? 253 00:15:39,710 --> 00:15:41,462 சோனியா, வயது 10. 254 00:15:42,463 --> 00:15:44,423 கடைசியா அண்டை வீட்டார் பார்த்தனர். 255 00:15:45,132 --> 00:15:48,010 பியர்ஸும் வேகாவும் பள்ளியில் அவளை தேடுறாங்க. 256 00:15:48,928 --> 00:15:50,346 கிடைப்பானு நம்புவோம். 257 00:15:50,429 --> 00:15:52,473 இதை செஞ்ச பாவிகள் பத்தி? 258 00:15:52,556 --> 00:15:55,643 இருவர், உயர்தர கார் என்று சாட்சிகள் சொல்றாங்க. 259 00:15:57,019 --> 00:15:59,146 காணொளியை தேடறோம். 260 00:15:59,730 --> 00:16:01,315 உங்க அடுத்த நடவடிக்கை? 261 00:16:01,941 --> 00:16:04,735 ஆஸ்பத்திரியில் மேலாளரை நேர்காண வேண்டும். 262 00:16:04,819 --> 00:16:07,905 -அதை ஏற்கனவே செய்திருக்கணும். -அதிகாரிகள் பத்தலை. 263 00:16:07,988 --> 00:16:09,782 கேட்க நினைச்சேன். எட்கர் எங்கே? 264 00:16:09,865 --> 00:16:12,034 உடம்பு சரியில்லை. வயிறு உபாதை. 265 00:16:12,993 --> 00:16:15,788 அவரது நோய் பரவற வரை வீட்டில் இருக்க சொல்லுங்க. 266 00:16:15,871 --> 00:16:17,540 நானும் அதையேதான் சொன்னேன். 267 00:16:17,873 --> 00:16:19,166 போய் தூங்குங்க. 268 00:16:19,250 --> 00:16:21,669 உங்க உடல்நிலையும் கெடக்கூடாது. 269 00:16:21,752 --> 00:16:23,045 புரிஞ்சது. 270 00:16:37,685 --> 00:16:38,811 அவ கிடைச்சுட்டா. 271 00:17:19,435 --> 00:17:20,728 கூரை அணுகல் 272 00:17:55,346 --> 00:17:56,764 உங்களுக்கு உதவலாமா? 273 00:17:56,847 --> 00:18:00,684 டிடெக்டிவ் பாஷ், எல்ஏபிடி. எடுவார்டோ ரோஹாஸிடம் பேசணும். 274 00:18:00,768 --> 00:18:02,394 இந்த உலகில் அவரில்லை, அன்பே. 275 00:18:02,478 --> 00:18:05,314 ஒரு மணி நேரம் முன்பு காலமானார். பக்கவாதம். 276 00:18:08,859 --> 00:18:10,027 நன்றி. 277 00:18:10,569 --> 00:18:12,738 -புத்தாண்டு வாழ்த்துக்கள். -உனக்கும். 278 00:18:44,770 --> 00:18:46,230 ஹேய், நீ நலம்தானே? 279 00:18:46,730 --> 00:18:47,857 நலம்தான். 280 00:18:48,232 --> 00:18:49,567 புத்தாண்டு வாழ்த்து. 281 00:18:51,944 --> 00:18:53,237 நீங்க நலம்தானே? 282 00:18:53,320 --> 00:18:55,948 உங்க குரல் சோர்வா இருக்கு. எங்கே இருக்கீங்க? 283 00:18:56,490 --> 00:18:57,825 வீட்டில் இருக்கேன். 284 00:18:59,201 --> 00:19:01,453 குளிச்சு ஷேவ் பண்ண போறேன். வேலையிருக்கு. 285 00:19:02,371 --> 00:19:03,455 இரவு உணவு? 286 00:19:04,582 --> 00:19:05,583 தாமதமாகலாம். 287 00:19:06,125 --> 00:19:07,960 -தீவிபத்து பற்றியா? -ஆமா. 288 00:19:09,211 --> 00:19:10,129 சோகமானது. 289 00:19:10,754 --> 00:19:12,298 ஆமாம், சோகம்தான். 290 00:19:12,715 --> 00:19:14,675 இன்றிரவு சந்திப்போம். கவனமா இருங்க. 291 00:19:15,384 --> 00:19:16,468 எப்பவும் போல. 292 00:19:18,637 --> 00:19:21,724 சீடர்ஸ்-சைனாய் மருத்துவ மையம் 293 00:19:32,443 --> 00:19:33,819 இனிய புத்தாண்டு. 294 00:19:36,196 --> 00:19:37,865 இப்படி இருக்கும்னு நினைக்கல. 295 00:19:37,948 --> 00:19:41,619 இவன் வீடு வந்ததும் கொண்டாடுவோம். எல்லாம் சரியாகிடும். 296 00:19:45,706 --> 00:19:46,916 உங்களுக்கு தோணலையா? 297 00:19:49,001 --> 00:19:51,420 நேர்மறையா யோசிக்க பாடுபடறேன். 298 00:19:51,879 --> 00:19:53,047 ஆனா? 299 00:19:56,800 --> 00:20:00,012 என் பாட்டி சொல்வாங்க, ஆசைகள் குதிரை போல ஓடினால்... 300 00:20:03,891 --> 00:20:05,517 சரியாகிடும். 301 00:20:06,393 --> 00:20:07,603 பார்ப்பீங்க. 302 00:20:27,873 --> 00:20:29,249 நேற்றிரவு எங்கே இருந்தே? 303 00:20:30,918 --> 00:20:32,378 எல்லை மீறிட்டேன். 304 00:20:32,670 --> 00:20:34,088 ரொம்ப அதிகம் குடிச்சேன். 305 00:20:35,464 --> 00:20:37,633 தூங்கினேன். முக்கிய நிகழ்வு போச்சு. 306 00:20:37,716 --> 00:20:39,510 -சமாளிச்சதுக்கு நன்றி. -விடு. 307 00:20:39,593 --> 00:20:41,845 இல்ல, பெரிய விஷயம். உனக்கு கடன்பட்டேன். 308 00:20:41,929 --> 00:20:43,263 கஷ்டமில்லை. 309 00:20:43,973 --> 00:20:46,141 ஆள் பத்தலை, ஆனா சமாளிச்சோம். 310 00:20:46,767 --> 00:20:49,812 இலக்காக இருந்திருக்கக்கூடிய முக்கிய சாட்சி இறந்தார், 311 00:20:49,895 --> 00:20:51,438 ஆனா கண்டுபிடிப்போம். 312 00:20:51,522 --> 00:20:52,815 அல்லது மாட்டோம். 313 00:20:52,898 --> 00:20:54,191 நான் சாரினு சொன்னேனே. 314 00:20:55,150 --> 00:20:56,902 உனக்கு என்னாச்சு, பா? 315 00:20:56,986 --> 00:20:57,987 என்ன? 316 00:20:58,654 --> 00:21:01,657 கடந்த சில மாதங்களா நீ முடங்கிப் போயிருக்கே. 317 00:21:02,282 --> 00:21:03,826 மன்னிக்கணுமா? முடங்கினேனா? 318 00:21:03,909 --> 00:21:06,036 நடந்தது நடந்த பின், 319 00:21:06,120 --> 00:21:07,746 ரொம்ப மாறிட்டே. 320 00:21:07,830 --> 00:21:11,083 போடா. நான் நல்லாதான் இருக்கேன். 321 00:21:11,625 --> 00:21:13,085 என்னைப்பத்தி கவலைப்படாதே. 322 00:21:13,669 --> 00:21:16,588 -மனநல மருத்துவரிடம் பேசறியா? -நம்பிக்கையோட. 323 00:21:16,672 --> 00:21:18,382 -உதவறாங்களா? -உனக்கு உதவினாங்களா? 324 00:21:19,425 --> 00:21:20,759 எனக்கு உதவி தேவையிருக்கல. 325 00:21:21,427 --> 00:21:22,511 எனக்கும் தேவையில்ல. 326 00:21:23,846 --> 00:21:25,431 போடா, ஜெர்ரி. 327 00:21:25,681 --> 00:21:27,975 -எல்லாம் என் தப்பு. -எது? 328 00:21:28,058 --> 00:21:29,268 அன்றிரவு நீ செய்தது, 329 00:21:29,351 --> 00:21:32,146 என்னை தெரியலைனா நீ அங்கே போயிருக்க மாட்டே. 330 00:21:32,229 --> 00:21:34,898 போடா. நானும் தப்பு செய்யக்கூடியவன் தான். 331 00:21:34,982 --> 00:21:37,901 எல்லாத்துக்கும் எப்பவும் நீயே பொறுப்பாக மாட்டே. 332 00:21:41,530 --> 00:21:43,615 -புகைக்கிறியா? -புகைக்கிறதில்லை. 333 00:21:43,699 --> 00:21:45,075 நான் அதை கேட்கல. 334 00:22:08,307 --> 00:22:11,185 -ஸ்பானிஷ் நல்லா தெரியுமா? -நல்லா தெரியாது. 335 00:22:11,268 --> 00:22:13,437 -என்ன தகவல் கிடைச்சது? -அதிகமில்லை. 336 00:22:13,520 --> 00:22:16,315 பயந்திருக்காங்க. பேசினா வெளியேற்றப்படும் பயம். 337 00:22:16,398 --> 00:22:17,566 அல்லது கைது பயம். 338 00:22:17,649 --> 00:22:19,735 -சட்டப்புறம்பா வசிப்பவங்களா? -பலர். 339 00:22:19,818 --> 00:22:22,529 குடியுரிமை-சுங்கத்துறையிடம் அனுப்ப மாட்டோம்னியா? 340 00:22:22,613 --> 00:22:25,741 பல முறை சொன்னேன். நம்மை ஏன் அவங்க நம்பணும்? 341 00:22:26,533 --> 00:22:28,452 தொல்லை நடக்கிறது, யாரும் பதிவில் 342 00:22:28,535 --> 00:22:30,871 புகார் செய்ய விரும்பலைனு தோணுது. 343 00:22:32,039 --> 00:22:32,998 ஏதாவது இருக்கா? 344 00:22:33,082 --> 00:22:36,460 புது உரிமையாளர், இடத்தை சுத்தம் செய்ய புது மேலாளரை நியமிச்சார். 345 00:22:36,543 --> 00:22:38,754 -சுத்தம்னா? -போதை விற்பவர்களை துரத்தல். 346 00:22:39,338 --> 00:22:41,840 சரி, கட்டிடத்தின் வரைபடம் உருவாக்கு, 347 00:22:41,924 --> 00:22:43,884 வாசிகளை பட்டியலிடு. 348 00:22:44,343 --> 00:22:46,303 புது உரிமையாளர்கள் பற்றி விசாரி, 349 00:22:46,386 --> 00:22:50,641 311, 911 அழைப்புகளை ஆய்வு செய், குறிப்பாக மேலாளருடையது. 350 00:22:50,724 --> 00:22:51,850 செய்றேன். 351 00:22:58,857 --> 00:23:00,067 உங்களுக்கு உதவலாமா? 352 00:23:02,111 --> 00:23:04,905 மரியா ஹெர்னாண்டெஸ். அவளுக்கு கணவன் இருந்தான். 353 00:23:06,323 --> 00:23:07,699 சோனியாவின் அப்பா. 354 00:23:09,409 --> 00:23:11,787 "ஹெக்டர் ஹெர்னாண்டெஸ்." அவரெங்க தெரியுமா? 355 00:23:12,871 --> 00:23:14,039 மெக்ஸிகோ. 356 00:23:14,456 --> 00:23:16,333 போன வருஷம் நாடு கடத்தினாங்க. 357 00:23:16,416 --> 00:23:18,252 -மெக்ஸிகோவில் எங்கே? -ஹாலீஸ்கோ. 358 00:23:19,002 --> 00:23:20,629 முகவரி இருக்கா? கைபேசி எண்? 359 00:23:20,712 --> 00:23:21,880 சாரி. இல்லை. 360 00:23:27,010 --> 00:23:29,596 அவங்க வீட்டில் இந்த எண் கிடைச்சது. 361 00:23:29,680 --> 00:23:32,516 ஐம்பத்தி இரண்டு மெக்ஸிகோ. 33 இட குறியீடு. 362 00:23:32,599 --> 00:23:34,476 முப்பத்தி மூன்று, குவாடலஹாரா. 363 00:23:34,977 --> 00:23:36,228 அவனை நீங்க பிடிக்கணும். 364 00:23:38,856 --> 00:23:41,984 இதை பிணஆய்வாளரிடம் தருவோம். உறவினர்களுக்கு சொல்வாங்க. 365 00:23:43,735 --> 00:23:44,945 சார்? 366 00:23:45,445 --> 00:23:47,030 இதை யார் செய்தது தெரியுமா? 367 00:23:47,447 --> 00:23:48,574 தெரியாது. 368 00:23:49,408 --> 00:23:51,201 புது மேலாளரை பற்றி சொல்லுங்க. 369 00:23:52,286 --> 00:23:55,873 விற்பவர்களை ஒழிக்க புது உரிமையாளர்களால் நியமிக்கப்பட்டார். 370 00:23:55,956 --> 00:23:57,291 விற்பவர்களா? 371 00:23:57,374 --> 00:23:59,877 -அவங்க பெயர் தெரியுமா? -நிஜ பெயர் தெரியாது. 372 00:23:59,960 --> 00:24:01,378 புனைப்பெயர்கள் சொல்லுங்க. 373 00:24:06,008 --> 00:24:07,509 லா மயொரிஸ்டா. 374 00:24:07,843 --> 00:24:09,469 லா மயொரிஸ்டாவின் ஊழியர்கள். 375 00:24:09,553 --> 00:24:10,554 லா மயொரிஸ்டா? 376 00:24:12,681 --> 00:24:15,309 அது யாரு? ஒரு பெண்தானே? 377 00:24:16,768 --> 00:24:19,271 போதும். இதுக்கு மேல சொல்ல முடியாது. 378 00:24:19,354 --> 00:24:20,355 சரி. 379 00:24:23,317 --> 00:24:24,484 பயந்துட்டார். 380 00:24:24,568 --> 00:24:26,612 நம்மிடம் அவர் பேசறதை பார்க்கிறாங்க. 381 00:24:26,695 --> 00:24:29,072 தெருவில் நள்ளிரவில் பல சாட்சிகள், 382 00:24:29,156 --> 00:24:31,241 இருவர் வந்து, தீ குண்டு வீசினர், 383 00:24:31,950 --> 00:24:33,994 இவங்க யாருன்னு யாரும் பார்க்கலையா? 384 00:24:34,077 --> 00:24:37,706 பெரிய கருப்பு காரில் தலைமூடிய இரு கிறுக்கர்களா? சுத்த உளறல். 385 00:24:37,789 --> 00:24:39,499 யாருன்னு அவங்களுக்கு தெரியும். 386 00:24:40,876 --> 00:24:44,296 அந்த ஆளுங்களை நிச்சயமா அவங்களுக்கு தெரியும். 387 00:24:45,839 --> 00:24:47,257 வேகமா நடந்தது. 388 00:24:49,134 --> 00:24:50,761 கும்பல் நிபுணரிடம் பேசுவோம். 389 00:24:54,389 --> 00:24:56,183 அந்த பேட்டை, அந்த தெருவா? 390 00:24:56,266 --> 00:24:57,851 லாஸ் பால்மாஸ் 13. 391 00:24:57,935 --> 00:25:00,646 மேலாளர் சாகும் முன் அவரது வாக்குமூலம் வாங்கினீரா? 392 00:25:00,729 --> 00:25:03,857 இல்லை. "லா மயொரிஸ்டா" தெரியுமா? 393 00:25:03,941 --> 00:25:07,402 க்ளாடிஸ் ரொட்ரிகெஸ். அந்த தெருவில் போதைத் தொழில் தலைவி. 394 00:25:07,486 --> 00:25:11,323 லாஸ் பால்மாஸிடம் போதை வாங்கி, வாடகை கட்டி, அவங்களை பாதுகாக்கிறா. 395 00:25:11,406 --> 00:25:13,492 ஒரு பெண். அது வினோதம். 396 00:25:13,575 --> 00:25:15,661 ஆமாம், அவள் வினோதமான பெண். 397 00:25:16,286 --> 00:25:17,496 வங்கியாளர் போன்றவள். 398 00:25:17,579 --> 00:25:20,582 பெண் ஸ்ட்ரிங்கர் பெல் போல. தி வயர் பார்த்தியா? 399 00:25:20,666 --> 00:25:23,669 -முழுதும் பார்த்தேன். -அப்போ நான் சொல்றது புரியும். 400 00:25:23,752 --> 00:25:26,171 எல்லாம் வணிகம். குறைத்து மதிப்பிடக்கூடாது. 401 00:25:26,255 --> 00:25:28,757 -லாஸ் பால்மஸின் தலைவன் யார்? -நல்ல கேள்வி. 402 00:25:28,840 --> 00:25:31,301 பெலிக்கன் பே இல் ஆயுள் தண்டனை கைதி. 403 00:25:31,593 --> 00:25:33,053 இன்னும் அவன் தலைவனா? 404 00:25:33,136 --> 00:25:35,847 ஆமாம், ஆனால் இங்கே அதிகார வெற்றிடம். 405 00:25:35,931 --> 00:25:39,935 பதவிக்காக இளைஞர்கள் மோதறாங்க. எமானுவெல் ட்ரேஹோ, மிக்கி பேன்யா. 406 00:25:40,018 --> 00:25:41,395 ஒரு கோப்பு எழுதறேன். 407 00:25:41,478 --> 00:25:44,022 மேலாளருக்கு ஒரு மிரட்டல் விடுத்தாங்க. 408 00:25:44,106 --> 00:25:45,399 வசிப்பவர்களுக்கும். 409 00:25:45,482 --> 00:25:47,067 இப்ப வணிகம் மெதுவா போகுது. 410 00:25:47,150 --> 00:25:49,611 கூடுதல் போலீஸ். அதிக கைதுகள், ரோந்துகள். 411 00:25:50,529 --> 00:25:51,697 குறைந்த லாபம். 412 00:25:51,780 --> 00:25:53,657 லா மயொரிஸ்டா மகிழ முடியாது. 413 00:25:54,032 --> 00:25:56,493 ரொம்ப கோபமாயிருப்பாள். கட்டி வைக்குமளவு. 414 00:25:56,576 --> 00:25:58,745 அவளைப் பற்றி தகவல் அனுப்பு, சரியா? 415 00:25:58,829 --> 00:26:01,123 அனுப்பறேன். பர்ரிடோ எப்படி இருக்கு? 416 00:26:02,374 --> 00:26:03,500 சுவையா இருக்கு. 417 00:26:03,583 --> 00:26:05,961 நல்லாயிருக்கு இல்ல? இது எனக்கு பிடிக்கும். 418 00:26:06,044 --> 00:26:09,589 டாகோ வண்டிகள், மதிய உணவு வண்டிகள், கும்பல்களுக்கு மாமூல் தர்றாங்க. 419 00:26:09,673 --> 00:26:11,466 -லாப பங்கு? -ஆமா, லாப பங்கு. 420 00:26:11,800 --> 00:26:13,510 கும்பல்கள் மெக்ஸிகன் மாஃபியா. 421 00:26:13,593 --> 00:26:16,013 அது ஒரு சமூகம், அதை மாற்ற முடியாது. 422 00:26:16,096 --> 00:26:19,224 ஓரமா நறுக்கலாம், ஆனா மெக்ஸிகன் மாஃபியா நீடிக்கும். 423 00:26:19,308 --> 00:26:20,934 ஆச்சரியப்படுத்துதில்ல? 424 00:26:22,185 --> 00:26:23,312 தினமும். 425 00:26:24,021 --> 00:26:26,315 நமது சகோதர சகோதரிகள் துக்கமாகினர். 426 00:26:26,398 --> 00:26:29,234 நமது சமூகத்துக்கு இது நொறுக்கும் சோகம். 427 00:26:29,318 --> 00:26:32,112 குடும்பங்களை நினைக்கிறோம், பிரார்த்திக்கிறோம். 428 00:26:32,195 --> 00:26:34,990 தலைவர் இர்விங் இப்போது சில வார்த்தைகள் பேசுவார் 429 00:26:35,073 --> 00:26:36,575 சில கேள்விகளை எதிர்கொள்வார். 430 00:26:37,326 --> 00:26:38,702 நன்றி, மேடம் மேயர். 431 00:26:40,287 --> 00:26:43,081 எங்க விசாரணையின் முதல் கட்டத்தில் இருக்கோம். 432 00:26:43,165 --> 00:26:45,834 சாட்சிகளை நேர்கண்டு துப்புகளைப் பின்தொடர்ந்து, 433 00:26:46,668 --> 00:26:50,088 எல்ஏ போலீஸ் துறையின் முழு வளங்களையும் ஈடுபடுத்துகிறோம். 434 00:26:52,007 --> 00:26:53,133 கேள்விகள்? 435 00:26:58,513 --> 00:26:59,723 இடி சாலை. 436 00:27:00,724 --> 00:27:02,309 நிறுத்து. அங்கேயே நிறுத்து. 437 00:27:02,392 --> 00:27:05,145 சரி, பின்னாடி போ. அங்கே. 438 00:27:05,562 --> 00:27:06,897 கிடைச்சது. 439 00:27:08,774 --> 00:27:10,233 கடைசி மூன்று எண்கள். 440 00:27:11,026 --> 00:27:12,152 இது ஒரு துவக்கம். 441 00:27:13,904 --> 00:27:15,280 கடைசியா ஒரு கேள்வி. 442 00:27:15,364 --> 00:27:18,617 உண்மைதானா, சின்ன டமாலி சிறுமியின் உடல்-- 443 00:27:18,700 --> 00:27:19,910 மன்னிக்கணும்? 444 00:27:20,243 --> 00:27:22,746 சோனியா ஹெர்னாண்டெஸ், சின்ன டமாலி சிறுமி. 445 00:27:22,829 --> 00:27:25,749 அப்படித்தான் அவளை அழைக்கிறாங்க. இணையத்தில் உச்சம். 446 00:27:26,416 --> 00:27:27,584 உங்க கேள்வி? 447 00:27:27,667 --> 00:27:30,504 பூட்டப்பட்ட தீ வெளியேற்ற கதவு முன் கிடந்தாளா? 448 00:27:31,004 --> 00:27:32,714 அது விசாரணையில் இருக்கு. 449 00:27:32,798 --> 00:27:36,343 இது நிரூபிக்கப்பட்டா, வழக்கை டி ஏ கிட்ட அனுப்புவோம். 450 00:27:36,760 --> 00:27:37,969 நன்றி. 451 00:27:40,972 --> 00:27:42,057 ஜென். 452 00:27:42,474 --> 00:27:43,517 இர்வ். 453 00:27:44,726 --> 00:27:47,521 சொல்லுங்க. லோபெஸுடன் என்ன பிரச்சனை? 454 00:27:48,271 --> 00:27:49,731 என்னை புறக்கணிக்கிறாங்க. 455 00:27:50,232 --> 00:27:51,983 உங்களை அவங்க நம்பலை போல. 456 00:27:53,527 --> 00:27:54,736 ஓ, ஜென். இன்னுமா? 457 00:27:56,071 --> 00:27:58,073 எனக்கு முன்னறிவிப்பு தந்திருக்கணும். 458 00:27:59,241 --> 00:28:01,201 நீ எப்படியோ தப்பிச்சே. 459 00:28:01,284 --> 00:28:04,037 என் சிபாரிசு உன் பாஸை ஜெயிக்க வைத்தது. 460 00:28:05,372 --> 00:28:07,874 நீங்க இல்லாம தெற்கு எல்ஏ ஜெயிச்சிருப்போம். 461 00:28:09,292 --> 00:28:10,794 நான் அப்படி நினைக்கல. 462 00:28:12,337 --> 00:28:14,172 அதை மேயரிடம் சொல்றேன். 463 00:28:19,261 --> 00:28:21,221 துப்பறிவாளர் கமாண்டர் 464 00:28:22,222 --> 00:28:23,557 ஹேய். உள்ளே வாங்க. 465 00:28:24,015 --> 00:28:25,392 கூப்பிட்டீங்களா, எல்டீ? 466 00:28:25,851 --> 00:28:28,937 ஆமா. நீங்க நோய்வாய்ப்பட்டதா ஹார்ரி சொன்னார். 467 00:28:29,020 --> 00:28:31,481 நலம்தான். என் உடலை விட்டு வெளியேற்றினேன். 468 00:28:34,985 --> 00:28:36,695 எல்லாம் நலம்தானே, ஜெர்ரி? 469 00:28:37,279 --> 00:28:38,447 ஏன் கேட்கிறீங்க? 470 00:28:39,030 --> 00:28:42,993 உங்களையும் உங்கள் செயல்திறன் பற்றியும் கவலைப்படுறேன். 471 00:28:43,952 --> 00:28:45,787 என் செயல்திறனுக்கு என்ன? 472 00:28:46,413 --> 00:28:48,665 சமீபத்தில் களையிழந்திருக்கு. 473 00:28:48,748 --> 00:28:50,208 நீங்க நீங்களாவே இல்லை. 474 00:28:50,292 --> 00:28:53,128 -ஹார்ரி உங்களை பேச சொன்னாரா? -இல்லவே இல்லை. 475 00:28:54,254 --> 00:28:57,966 உங்களைப்பற்றி பாஷிடம் பேசலை. என்னிடம் எதுவும் சொல்ல மாட்டார். 476 00:28:58,550 --> 00:28:59,676 நல்லாயிருக்கேன். 477 00:29:01,303 --> 00:29:02,971 அவ்ளோ தெரிஞ்சா போதும். 478 00:29:14,107 --> 00:29:15,734 -நானும் வரவா? -ப்ளீஸ். 479 00:29:23,074 --> 00:29:25,911 இன்று நாளிதழில் ஸ்காட் ஆண்டர்சனின் கட்டுரை. 480 00:29:26,536 --> 00:29:29,331 சிறுமி சோனியாவை எப்படி அழைக்கிறார் தெரியுமா? 481 00:29:29,414 --> 00:29:30,707 சோனியா ஹெர்னாண்டெஸ். 482 00:29:31,208 --> 00:29:34,002 -அவளை சின்ன டமாலி சிறுமி என்கிறார். -சரி. 483 00:29:35,253 --> 00:29:38,173 அவளும் அவளது தாயும் இறந்த மற்ற பெண்ணும்... 484 00:29:38,924 --> 00:29:40,300 கர்ப்பிணிப் பெண்ணா? 485 00:29:40,383 --> 00:29:43,386 புத்தாண்டுக்காக அண்டை வீட்டாருக்கு டமாலிகள் செய்தனர். 486 00:29:44,387 --> 00:29:45,639 அதிர்ஷ்டத்துக்காக. 487 00:29:50,393 --> 00:29:52,270 பணியில், என் மேஜை மேல், 488 00:29:52,771 --> 00:29:55,357 மூன்று இளம் பெண்களின் படங்கள் இருக்கு. 489 00:29:56,900 --> 00:30:01,238 ஒரு ஃபிலிப்பினா, ஒரு சைனீஸ், ஒரு லத்தீனா. 490 00:30:03,990 --> 00:30:07,160 சான்றில்லாமல், சட்டப்புறம்பாக, எப்படி வேணா சொல்லலாம். 491 00:30:08,328 --> 00:30:09,538 குடியேறியவர்கள். 492 00:30:12,874 --> 00:30:15,126 அவர்களது நிஜ பெயர்கள் தெரியலை. 493 00:30:17,337 --> 00:30:19,297 அவர்களது அடையாளம் தெரியலை. 494 00:30:21,341 --> 00:30:23,343 அவர்களது உடல்களை யாரும் கோரலை. 495 00:30:24,803 --> 00:30:27,097 யாரும் அவங்களை காணோம்னு புகார் தரலை. 496 00:30:30,100 --> 00:30:32,602 அவர்களது கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படலை... 497 00:30:34,354 --> 00:30:36,064 இனிமேலும் வாய்ப்பில்லை. 498 00:30:38,358 --> 00:30:39,734 ரொம்ப வருத்தமா இருக்கு. 499 00:30:40,277 --> 00:30:41,361 ஆமா. 500 00:30:45,490 --> 00:30:47,284 ஏன் அவற்றை வெச்சிருக்கீங்க? 501 00:30:47,742 --> 00:30:48,994 படங்கள்? 502 00:30:50,495 --> 00:30:52,122 எனக்கு ஞாபகப்படுத்த. 503 00:30:52,872 --> 00:30:55,792 எல்லாரும் முக்கியம், அல்லது யாரும் முக்கியமில்லை. 504 00:31:12,142 --> 00:31:14,561 -என்னை பணிநீக்கம் செய்வாங்க. -அது நடக்காது. 505 00:31:14,644 --> 00:31:17,355 நுட்ப தவறுக்கு தண்டனை கிடைக்கலாம். அவ்ளோதான். 506 00:31:17,439 --> 00:31:20,150 வெளி அழுத்தத்துக்கு துறை பதிலளிக்கும். 507 00:31:20,233 --> 00:31:22,902 வெளி அழுத்தமே இல்லை, வழக்கு கூட இல்லை. 508 00:31:23,653 --> 00:31:25,905 யார் வழக்கிடுவா? ஆவ்ரிலிடம் துப்பாக்கி. 509 00:31:25,989 --> 00:31:27,907 நியாயமான சுடல், கதை முடிஞ்சது. 510 00:31:30,994 --> 00:31:32,871 வர சொல்றாங்க, டிடெக்டிவ். 511 00:31:32,954 --> 00:31:34,039 முதலில் நீங்க. 512 00:31:54,726 --> 00:31:58,313 டிடெக்டிவ் எட்கர், அதிகாரி-ஈடுபட்ட சுடலில் ஜாக் ஆவ்ரில் 513 00:31:58,396 --> 00:32:02,317 இறந்தது பற்றிய துறை விசாரணைப் பிரிவின் ஆய்வை குழு விவாதித்தது. 514 00:32:03,068 --> 00:32:04,694 நுட்பத்தை பொறுத்தவரை, 515 00:32:05,278 --> 00:32:08,531 நீங்க பயன்படுத்தின நுட்பங்கள் கொள்கைக்கு மாறானவை என்றும் 516 00:32:08,615 --> 00:32:11,618 ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படணும் என குழு முடிவு. 517 00:32:13,328 --> 00:32:17,791 உங்க துப்பாக்கியை எடுத்தல், காட்டல், சுடல் என்பவற்றை பொறுத்த வரை, 518 00:32:18,458 --> 00:32:22,045 நீங்கள் விதிப்படி நடந்ததாக குழு தீர்ப்பளிக்கிறது. 519 00:32:24,714 --> 00:32:26,508 ஒழுங்குமுறை ஆய்வு விஷயத்தில், 520 00:32:26,591 --> 00:32:29,302 நீங்க சரியா முடிவெடுக்கலை என்பது குழுவின் தீர்ப்பு. 521 00:32:29,386 --> 00:32:33,056 உங்க இடத்தை தொடர்புப்பிரிவிடம் தெரிவிக்காமல், 522 00:32:33,139 --> 00:32:35,225 உதவி அதிகாரிகளை கோரவோ, காத்திருக்கவோ 523 00:32:35,308 --> 00:32:38,978 செய்யாமல் நீங்க இடத்துக்குள் நுழைந்த செயல், 524 00:32:39,062 --> 00:32:42,232 எதிர்மறையான விளைவுக்கு நேரடியாக வித்திட்டது. 525 00:32:43,733 --> 00:32:47,862 போலீஸ் அகாடமியில் நுட்ப மறுகற்றல் வகுப்பை, இன்றிலிருந்து 526 00:32:47,946 --> 00:32:49,280 90 நாட்களுக்குள் 527 00:32:49,364 --> 00:32:52,158 நீங்கள் முடிக்க வேண்டுமென உத்தரவிடுகிறோம். 528 00:33:02,252 --> 00:33:04,295 ஹாய். எங்கிட்ட கொடு. 529 00:33:04,379 --> 00:33:07,340 காலை முழுக்க ஃபோனில் பேசறாங்க. என்ன நடக்குது? 530 00:33:08,967 --> 00:33:11,803 ரகசியம். புது கட்சிக்காரர். பெரிய வழக்கு. 531 00:33:13,513 --> 00:33:15,140 பார்ட்டி எப்படி இருந்தது? 532 00:33:16,808 --> 00:33:17,851 பார்ட்டியா? 533 00:33:18,560 --> 00:33:20,562 சாண்ட்லரின் பார்ட்டி. புத்தாண்டு. 534 00:33:22,147 --> 00:33:24,941 பரவாயில்லை. சீக்கிரம் கிளம்பினோம். 535 00:33:26,693 --> 00:33:27,986 என்னை கூப்பிடலை. 536 00:33:29,821 --> 00:33:30,905 என்ன செஞ்சே? 537 00:33:31,531 --> 00:33:33,992 வீட்டிலேயே இருந்தேன், படம் பார்த்தேன். 538 00:33:34,951 --> 00:33:36,786 நீ எதையும் இழக்கலை. 539 00:33:38,538 --> 00:33:39,622 பின்னர் சந்திப்போம். 540 00:33:42,667 --> 00:33:45,920 நுட்ப மறுகற்றலா? இதற்கு இடைநீக்கம் செஞ்சிருக்கலாம். 541 00:33:46,004 --> 00:33:48,339 அகாடமியில் ஒரு காலை. பெரிய விஷயமில்ல. 542 00:33:48,423 --> 00:33:50,091 இதை முடிக்க 90 நாட்கள். 543 00:33:50,175 --> 00:33:53,595 மாணவ போலீஸுடன் காகித இலக்குகளை சுடணும். 544 00:33:53,678 --> 00:33:55,054 அவமானமா இருக்கு. 545 00:33:55,138 --> 00:33:56,639 வாழ்த்துக்கள். 546 00:33:57,140 --> 00:33:58,183 லாங். 547 00:33:58,975 --> 00:34:00,226 தப்பிச்சுட்டே. 548 00:34:00,310 --> 00:34:02,604 சொன்னாரே. நியாயமான சுடல். 549 00:34:02,687 --> 00:34:05,148 அப்படியா? அல்லது திட்டமிட்ட கொலையா? 550 00:34:05,648 --> 00:34:07,066 நாசமாப் போடா. 551 00:34:07,817 --> 00:34:10,028 -எனக்கு சந்தேகமிருக்கு. -பலருக்கும். 552 00:34:13,948 --> 00:34:15,575 இதை எப்படி செய்றது? 553 00:34:16,451 --> 00:34:19,788 அவர்கள் தரப்பு கதை உறுதியாகிற வரை தீ கதவை பற்றி மறைப்போம். 554 00:34:20,288 --> 00:34:21,372 சரி. 555 00:34:25,001 --> 00:34:26,419 நிம்மதியா இருப்பே. 556 00:34:28,338 --> 00:34:29,547 அப்படி சொல்லலாம். 557 00:34:31,466 --> 00:34:33,343 இப்ப நாம் நலம்தானே? 558 00:34:33,426 --> 00:34:36,179 எல்லாம் திருப்தியா? நாம ஒருங்கிணைவோமா? 559 00:34:36,262 --> 00:34:39,390 பழைய பாட்டு இருக்கே, நான் ஆணையிட்டால்? 560 00:34:40,558 --> 00:34:42,185 நான் அதை கடந்துட்டேன். 561 00:34:42,268 --> 00:34:45,730 கடக்க வேண்டியது நீதான், சகா. 562 00:34:50,401 --> 00:34:51,569 சரி. 563 00:34:52,695 --> 00:34:55,365 கோடீசுவர நிதி மேலாளர் வின்சென்ட் ஃப்ரான்ஸென் 564 00:34:55,448 --> 00:34:57,283 குற்றம்சாட்டப்பட்டு கைதானார், 565 00:34:57,367 --> 00:35:01,371 200 மில்லியன் டாலர் போலி தங்கக்கட்டிகள் மோசடி திட்டம் தீட்டினார். 566 00:35:01,663 --> 00:35:04,207 அய்யோ. அதைப்பாரு. 567 00:35:04,290 --> 00:35:06,459 அய்யோ, ஃபோர்ட் நாக்ஸ். 568 00:35:06,543 --> 00:35:10,630 நீங்கள் காணும் பிரமிட், தங்கக்கட்டிகள் அடுக்கப்பட்டது அல்ல, 569 00:35:12,549 --> 00:35:13,716 இல்லையா? 570 00:35:13,800 --> 00:35:16,803 இது பால்சா மர துண்டு, தங்க வர்ணம் பூசப்பட்டது, 571 00:35:16,886 --> 00:35:19,430 பல நூறு முதலீட்டாளர்களை பெரிய மோசடிக்குள் 572 00:35:19,514 --> 00:35:21,057 ஈர்ப்பதற்கு. 573 00:35:21,140 --> 00:35:22,517 நானும் ஏமாந்திருப்பேன். 574 00:35:22,600 --> 00:35:24,644 எனவே புத்தாண்டை சரியாக தொடங்குவோம் 575 00:35:24,727 --> 00:35:26,896 சில நிஜ குற்றவாளிகளையும், மக்களின் 576 00:35:27,397 --> 00:35:30,817 சேமிப்பையும், ஓய்வூதியத்தையும் திருடுபவர்களையும், முதியோர் 577 00:35:30,900 --> 00:35:33,528 மற்றும் அப்பாவிகளை ஏமாற்றுவோரை தண்டிப்போம். 578 00:35:33,611 --> 00:35:34,988 ஆமென், சகோதரி. 579 00:35:35,071 --> 00:35:35,905 என்கேஆர் சொத்து மேலாண்மை 580 00:35:35,989 --> 00:35:37,323 9 மாதம் முன் காடிடம் வாங்கி 581 00:35:37,407 --> 00:35:39,242 வாங்கி குழுமம் சீரமைக்குது. 582 00:35:39,325 --> 00:35:43,413 -விற்பவர்களை துரத்துவதால். -ஆமா. போதைப்பொருட்களை ஒழிப்பதால். 583 00:35:43,496 --> 00:35:45,582 அதனால் மிஸ்டர். ரோஹாஸை நியமிச்சோம். 584 00:35:45,665 --> 00:35:48,334 கும்பல்கள் பதிலுக்கு தாக்கும்னு தெரியாதோ. 585 00:35:48,418 --> 00:35:50,545 இதை நாங்க எதிர்பார்க்கலை. 586 00:35:51,546 --> 00:35:53,256 ஒரு பயங்கரமான சோகம். 587 00:35:54,173 --> 00:35:56,092 பூட்டப்பட்ட தீ வெளியேற்ற கதவு? 588 00:35:56,759 --> 00:35:58,094 வசிப்போர் பொறுப்பு. 589 00:35:58,177 --> 00:36:02,056 அந்த துரதிர்ஷ்ட சூழ்நிலைக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை. 590 00:36:02,140 --> 00:36:04,434 மாவட்ட வக்கீல் வேறு மாதிரி உணர்வாங்க. 591 00:36:04,976 --> 00:36:07,562 எல்லா நகர ஆய்விலும் நன்றாக தேறியிருக்கோம். 592 00:36:08,062 --> 00:36:10,148 உங்க வக்கீல்கள் தயாரா இருப்பாங்களே. 593 00:36:10,231 --> 00:36:13,151 குடியிருப்போரில் சிலருக்கு இடமாற்றம் பற்றி கவலை. 594 00:36:13,234 --> 00:36:15,278 நாங்க யாரையும் வெளியேற்றப் பார்க்கலை. 595 00:36:15,361 --> 00:36:18,406 ஆனா நிஜத்தில், இந்த பேட்டை மாறுகிறது. 596 00:36:19,157 --> 00:36:20,825 சில காலத்தில் மாறிவிடும். 597 00:36:24,495 --> 00:36:26,623 "துரதிர்ஷ்ட சூழ்நிலை," போங்கடா. 598 00:36:26,706 --> 00:36:29,709 கதவு பூட்டப்படலைனா, சிறுமி உயிரோடு இருந்திருப்பா. 599 00:36:29,792 --> 00:36:32,545 தன் கட்டிடத்தில் அவங்களே தாக்குதல் நடத்தினாங்களா? 600 00:36:32,629 --> 00:36:34,547 கட்டிடம் காலியாக எளிய வழி இருக்கு. 601 00:36:34,631 --> 00:36:37,800 தன் லாபத்துக்காக அவங்க கும்பல்களை பயன்படுத்தியிருக்கலாம். 602 00:36:38,384 --> 00:36:40,428 -இழிவான எண்ணமோ? -நிஜமாயிருக்கலாம். 603 00:36:44,015 --> 00:36:45,934 இடைவேளை அறை 604 00:36:47,352 --> 00:36:48,853 அதோ அவர் அங்கே. 605 00:36:48,937 --> 00:36:50,146 மிக முக்கிய நபர். 606 00:36:50,229 --> 00:36:52,190 வாழ்த்துக்கள், நண்பா. 607 00:36:52,607 --> 00:36:55,276 -அது நல்ல சுடல்னு அறிவோம். -சந்தேகமே இல்ல. 608 00:36:55,944 --> 00:36:57,946 கார் பற்றின ஏதாவது தகவல் இருக்கா? 609 00:36:58,029 --> 00:36:59,364 பேச்சிய மாற்றுகிறான். 610 00:36:59,447 --> 00:37:01,115 அநியாயத்துக்கு பணிவா இருக்கானே. 611 00:37:02,075 --> 00:37:04,285 வண்டி எண் பாதி தெரிஞ்சது. தேடறோம். 612 00:37:04,702 --> 00:37:07,288 சீட்டு சரிவது போல சீக்கிரம் தீர்வு வரும். 613 00:37:07,372 --> 00:37:09,082 நல்லது. தெரிஞ்சதும் சொல்லுங்க. 614 00:37:16,381 --> 00:37:19,509 "நேரா போ, 200 டாலர் பரிசு" அப்படின்னு கிடைச்சவன் இவன், 615 00:37:19,592 --> 00:37:22,178 ஆனா சுரத்தே இல்லாம இருக்கானே. 616 00:37:22,595 --> 00:37:24,222 இன்னும் அவனுக்கு உறைக்கலை. 617 00:37:25,556 --> 00:37:26,724 அப்படித்தான் போல. 618 00:37:28,810 --> 00:37:30,520 செய்தியாளர் சந்திப்பை கண்டேன். 619 00:37:30,603 --> 00:37:32,605 அவளுக்கு என்ன பிரச்சனை? 620 00:37:33,106 --> 00:37:34,273 யாருக்கு, மேயருக்கா? 621 00:37:34,357 --> 00:37:38,069 அப்படி கிளம்புவது அநாகரீகம், நீங்க பேச தொடங்கினதும் கிளம்பினா. 622 00:37:38,152 --> 00:37:40,905 என் இரண்டாம் பணிக்காலத்தில் அவளுக்கு இஷ்டமில்ல. 623 00:37:40,989 --> 00:37:42,740 அவ ஜெயிக்க நீங்க உதவினீங்க. 624 00:37:42,824 --> 00:37:44,826 அவ அப்படி நினைக்கலையே. 625 00:37:44,909 --> 00:37:47,745 ஏன் உங்க இரண்டாம் பணிக்காலம் வேண்டாம்னு நினைக்கிறா? 626 00:37:48,121 --> 00:37:50,665 வேற புது ஆளை கொண்டு வர நினைக்கிறா போல, 627 00:37:50,748 --> 00:37:53,001 ராமோஸ் நிர்வாகமுடன் தொடர்பில்லாதவரை. 628 00:37:53,084 --> 00:37:55,503 வெளி நபர். பெண், லத்தீனோ. 629 00:37:55,920 --> 00:37:58,089 ஆணையம் உங்களை ஆதரிக்குதா? 630 00:37:58,172 --> 00:38:00,508 இப்ப எனக்கு இரண்டுக்கு ஒன்று என ஆதரவு. 631 00:38:00,591 --> 00:38:01,634 அது போதுமே. 632 00:38:01,718 --> 00:38:04,971 தேவையில்லாம கவலைப்படறீங்க. நான் ஆஸ்பத்திரி போறேன். 633 00:38:05,096 --> 00:38:07,265 -உன்னுடன் வர்றேன். -இல்லை, என் முறை. 634 00:38:08,307 --> 00:38:09,767 நிஜமா? எனக்கு சிரமமில்ல. 635 00:38:09,851 --> 00:38:11,686 இங்கேயே இருந்து கவலைப்படுங்க. 636 00:38:12,895 --> 00:38:14,397 அதை சிறப்பா செய்வேன். 637 00:38:18,151 --> 00:38:20,403 911, உங்க அவசரநிலை என்ன? 638 00:38:20,486 --> 00:38:23,281 என் கட்டிட வளாகத்தில் போதைப்பொருள் விற்கப்படுது. 639 00:38:23,364 --> 00:38:25,408 -உங்க பெயர்? -எடுவார்டோ ரோஹாஸ். 640 00:38:25,491 --> 00:38:27,285 நடப்பதை தெளிவா சொல்லுங்க. 641 00:38:27,368 --> 00:38:29,037 இதெல்லாம் லாஸ் பால்மாஸ் 13. 642 00:38:29,120 --> 00:38:31,748 மைக்கி பேன்யா, டீலர்கள், லா மயொரிஸ்டா ஆட்கள். 643 00:38:31,831 --> 00:38:33,166 முகவரி என்ன, சார்? 644 00:38:35,376 --> 00:38:36,627 மிஸ்டர் ஃப்ரான்ஸென். 645 00:38:37,003 --> 00:38:40,173 மிஸ் சாண்ட்லர். உங்களை பார்க்க மகிழ்ச்சி. 646 00:38:40,715 --> 00:38:42,592 -நல்லா இருக்கீங்களா? -இல்லை. 647 00:38:42,675 --> 00:38:44,427 எப்போ வெளியே எடுப்பீங்க? 648 00:38:44,510 --> 00:38:46,721 நாளை காலை, ஜாமீன் விசாரணை இருக்கு. 649 00:38:46,804 --> 00:38:48,514 இன்றிரவு நான் இங்கே தங்கணுமா? 650 00:38:48,931 --> 00:38:50,099 ஆமாம். 651 00:38:50,183 --> 00:38:51,517 கடவுளே. 652 00:38:53,352 --> 00:38:55,021 உங்களுக்கு புரியலை. நான்... 653 00:38:55,104 --> 00:38:57,273 விலக்கி வை நிலையில் இருப்பீங்க. 654 00:38:57,356 --> 00:38:59,650 உங்களுக்கு தனி அறை. பத்திரமா இருப்பீங்க. 655 00:39:01,569 --> 00:39:04,572 சரி, அருமை. கடவுளுக்கு நன்றி. 656 00:39:05,156 --> 00:39:07,158 உங்களை உதாரணமாக்க டிஏ விரும்பறாள். 657 00:39:07,241 --> 00:39:10,119 மிக அதிக ஜாமீன் தொகை கேட்பாள். 658 00:39:10,203 --> 00:39:12,121 நீதிபதியை தெரியும். எதிர்ப்போம். 659 00:39:12,205 --> 00:39:14,290 -விலைபேரம், கொஞ்சம். -விலைபேரமா? 660 00:39:14,791 --> 00:39:16,667 பேரம். வாதாடல். விவாதித்தல். 661 00:39:16,751 --> 00:39:18,544 அதன் அர்த்தம் தெரியும். 662 00:39:18,628 --> 00:39:20,463 நீங்க செய்வீங்கனு ஆச்சரியம். 663 00:39:21,214 --> 00:39:22,131 ஏன்? 664 00:39:22,215 --> 00:39:25,134 அட, அதாவது... உங்களை பாருங்க. நீங்க... 665 00:39:25,218 --> 00:39:27,386 -யூதர் பெண்ணா? -ஆமா. 666 00:39:28,387 --> 00:39:30,223 என் முதல் கணவர் யூதர். 667 00:39:30,848 --> 00:39:32,600 தெரிஞ்சுக்க மகிழ்ச்சி. 668 00:39:33,434 --> 00:39:35,770 அப்போ, தோராயமா? 669 00:39:37,313 --> 00:39:38,397 இரண்டாண்டு வரை சிறை. 670 00:39:41,150 --> 00:39:42,360 என்னால் அது முடியும். 671 00:39:42,819 --> 00:39:45,571 முடியும்னு தெரியும். அதை உறுதிசெஞ்சேன். 672 00:39:46,948 --> 00:39:49,117 கொஞ்சம் ஓய்வெடுங்க. நாளை சந்திப்போம். 673 00:39:49,700 --> 00:39:51,035 -சரி. -தைரியமாயிருங்க. 674 00:39:51,119 --> 00:39:53,204 யாரிடமும் பேசாதீங்க. உங்க மனைவியிடமும். 675 00:39:53,287 --> 00:39:56,457 நினைவிருக்கட்டும், எல்லா அழைப்புகளும் பதிவாகும். 676 00:39:58,000 --> 00:39:59,127 அருமை. 677 00:39:59,418 --> 00:40:03,798 லாஸ் ஏஞ்சலீஸ் காவல் துறை ஹாலிவுட் ஸ்டேஷன் 678 00:40:05,550 --> 00:40:06,717 ஆமாம், சர். 679 00:40:07,051 --> 00:40:09,095 உங்களை தொடர்பு கொள்வாங்க. 680 00:40:11,806 --> 00:40:12,974 வரவேற்கிறேன். 681 00:40:13,599 --> 00:40:15,726 உங்க இழப்புக்கு என் இரங்கல். 682 00:40:38,583 --> 00:40:39,667 பாஷ். 683 00:42:26,107 --> 00:42:28,109 வசனங்கள் மொழிபெயர்ப்பு திவ்யா தினேஷ் 684 00:42:28,192 --> 00:42:30,194 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்