1 00:00:11,470 --> 00:00:12,554 ஆ-டென்-ஹட்! 2 00:00:16,975 --> 00:00:18,268 ஆட் ஏஸ், வீரர்களே. 3 00:00:31,406 --> 00:00:33,367 சரியாக ஒரு வருடத்திற்கு முன், இந்நாளில், 4 00:00:34,326 --> 00:00:37,287 எட்டாவது விமானப் படை, தன் அதிகபட்ச முயற்சியுடன் செயல்பட்டு, உயர்ந்தது. 5 00:00:38,664 --> 00:00:42,376 அது பன்னிரெண்டு பி-17 விமானங்களின் கூட்டு ஆற்றல். 6 00:00:46,672 --> 00:00:50,551 இன்று, எட்டாவது விமானப் படை, தன் அதிகபட்ச முயற்சியாக 7 00:00:50,634 --> 00:00:52,678 மூன்று விமானப் படை தாக்குதல்களைச் சாதிக்கத் திட்டமிட்டுள்ளது. 8 00:00:52,761 --> 00:00:56,515 -சரி. -மொத்தம் 376 கனரக வெடிகுண்டு வீச்சாளர்கள் 9 00:00:56,598 --> 00:00:58,517 மற்றும் 240 ஃபைட்டர்கள். 10 00:00:58,600 --> 00:00:59,434 -மோசம் இல்லை, இல்லையா? -ஆம். 11 00:00:59,518 --> 00:01:03,313 அதுதான் மனித வரலாற்றில், ஒரே இடத்தில் அமைந்த மாபெரும் போர்க்கனைகளின் குவியல். 12 00:01:03,397 --> 00:01:04,272 ஆம்! 13 00:01:04,355 --> 00:01:05,357 ஆமாம்! 14 00:01:07,776 --> 00:01:11,405 இப்போது, நாம் முதல் செயற்பாட்டுப் படையில் இருப்போம். 15 00:01:11,488 --> 00:01:15,909 நமது இலக்கு ரீகன்ஸ்பர்கில் உள்ள மெஸ்ஸர்ஷ்கிமிட் 109 என்ஜின் அசெம்ப்லி தொழிற்சாலை. 16 00:01:15,993 --> 00:01:19,580 இரண்டாவது மற்றும் மூன்றாவது செயற்பாட்டுப் படைகள், ஸ்க்வைன்ஃபர்ட்டில் உள்ள பால் பேரிங் 17 00:01:19,663 --> 00:01:20,539 தொழிற்சாலைகளைத் தாக்குவார்கள். 18 00:01:21,331 --> 00:01:25,210 எந்த போர்க் கருவியும் பால் பேரிங்குகளின்றி செயல்படாது. 19 00:01:26,879 --> 00:01:28,630 நாம் வெற்றி அடைந்தால், 20 00:01:28,714 --> 00:01:31,425 ஜெர்மானியர்களின் தொழிற்சாலைகள் பல மாதங்களுக்கு செயலிழந்துவிடும். 21 00:01:32,718 --> 00:01:34,845 இதனால் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும் என்று கணக்கிட முடியாது. 22 00:01:40,851 --> 00:01:41,852 கார்ப்பொரல். 23 00:01:47,774 --> 00:01:49,484 -கடவுளே. -அடடா. 24 00:01:50,611 --> 00:01:51,653 இது ரீகன்ஸ்பர்க். 25 00:01:57,409 --> 00:01:58,994 கிரௌட்களின் பிரதேசத்துக்கு மேலே 26 00:01:59,077 --> 00:02:02,456 பல மணிநேரம் பறக்க வேண்டுமேன்னு நீங்க யோசிக்கலாம். 27 00:02:04,208 --> 00:02:05,209 அதுதான். 28 00:02:06,168 --> 00:02:08,211 நாம் இதுவரை முயற்சித்திருப்பதில், இதுவே மிக அதிக தூரம். 29 00:02:10,172 --> 00:02:13,175 ஆனால் வலுவான எட்டாம் விமானப் படையான நம்மிடம் ஒரு திட்டமுள்ளது. 30 00:02:14,176 --> 00:02:15,511 மேஜர் பௌமன்? 31 00:02:15,594 --> 00:02:16,637 அவங்களுக்கு அதைச் சொல்லு, ரெட். 32 00:02:20,933 --> 00:02:22,601 இது ஒரு முப்புறத் தாக்குதல் ஆகும், 33 00:02:24,228 --> 00:02:27,022 ஆனால், கிரௌட்களால் ஏதேனும் ஒன்றை மட்டுமே காப்பாற்ற முடியும். 34 00:02:27,105 --> 00:02:31,735 எனவே இதில், செயற்பாடு, காலம் தவறாமை என்ற இரண்டும்தான் மிக முக்கியமானவை. 35 00:02:31,818 --> 00:02:32,861 மேஜர்? 36 00:02:33,445 --> 00:02:35,489 அந்த சிகப்பு கோடு எதற்காக ஆப்பிரிக்கா வரை செல்கிறது? 37 00:02:36,114 --> 00:02:37,824 வழக்கம் போலவே இந்தக் கேள்வி உங்கள் கூர்ந்த அறிவை எடுத்துக்காட்டுகிறது, கர்ட். 38 00:02:37,908 --> 00:02:39,868 நான் இன்னும் சில நிமிடங்களில் அதற்கு விடை தருகிறேன். 39 00:02:40,452 --> 00:02:42,454 சரி, சரி. சிரித்து முடியுங்கள். சரி. 40 00:02:42,538 --> 00:02:45,082 இப்போது, இந்த மூன்று செயற்பாட்டுப் படைகளும், சேனலின் மீது ஒருங்கிணையும்... 41 00:02:45,165 --> 00:02:47,334 தோர்ப் அப்போட்ஸ் - ஸ்க்வைன்ஃபர்ட் ஐபி - எம்பிஐ- ஆர்பி - ரீகன்ஸ்பர்க் 42 00:02:47,417 --> 00:02:48,502 ...பிறகு இங்கே பிரிந்து செல்வார்கள். 43 00:02:49,545 --> 00:02:52,297 லுஃப்ட்வாஃபில், நம்முடைய முதற் செயற்பாட்டுப் படையின் மீது மட்டும்தான் 44 00:02:52,381 --> 00:02:54,007 அவர்கள் எதிர் தாக்குதலை நடத்த முடியும் 45 00:02:54,091 --> 00:02:57,052 பின்னர் அவர்கள் தங்கள் பேஸிலிருந்து ஆயுதங்களையும், எரிபொருளையும் மறுபடி ஏற்றிக்கொள்ள வேண்டும். 46 00:02:57,135 --> 00:02:59,429 அவர்கள் மீண்டும் வானத்தில் வரும்போது, 47 00:02:59,513 --> 00:03:03,141 நமது இரண்டாவது மற்றும் மூன்றாவது செயற்பாட்டுப் படைகள், ஸ்க்வைன்ஃபர்டடில் உள்ள பால் பேரிங்க் 48 00:03:03,225 --> 00:03:05,435 தொழிற்சாலையின் மீது தங்கள் வெடிகுண்டுகளை போடத் தொடங்கியிருப்பார்கள், 49 00:03:05,519 --> 00:03:07,855 அதே சமயம் நாம் ரீகன்ஸ்பர்கில் நம் வெடிகுண்டுகளைப் போட்டுகொண்டிருப்போம். 50 00:03:07,938 --> 00:03:09,940 இப்போது, உங்கள் கேள்விக்கு வருகிறேன், கர்ட். 51 00:03:10,524 --> 00:03:12,818 நாம இதை எப்படிச் சொல்ல... 52 00:03:12,901 --> 00:03:14,695 இந்த அணுகுமுறையில் உள்ள மோசமான விஷயம் என்னவென்றால், 53 00:03:14,778 --> 00:03:17,239 எதிரிப்படையின் தாக்குதல்கள் அனைத்தையும் நம் வீரர்கள் எதிர்கொள்ள வேண்டும், ஆனால், 54 00:03:17,322 --> 00:03:19,825 மேலதிகாரிகள் உறுதிகூறுவது என்னவென்றால், இந்தப் புதிய உத்தியின்படி, 55 00:03:19,908 --> 00:03:21,952 நாம் இரண்டாம் தாக்குதலுக்கு வராமல் போய்விட்டால், அது கிரௌட்களைக் 56 00:03:22,035 --> 00:03:23,996 குழப்பிவிடக் கூடும் என்பதே. 57 00:03:26,582 --> 00:03:29,084 ஏனெனில் வீரர்களே, நீங்கள் அனைவரும் அங்கிருந்து அப்படியே ஆப்பரிக்காவிற்குப் போவீர்கள். 58 00:03:30,460 --> 00:03:31,461 டெலர்கமா 59 00:03:31,545 --> 00:03:34,798 அங்கே 12-வது விமானப் படை, சிலிர்க்க வைக்கும் குளிர்ந்த பியருடனும் 60 00:03:34,882 --> 00:03:35,966 சுவையான லாப்ஸ்டர் வாலுடன் உங்களை வரவேற்பார்கள். 61 00:03:36,675 --> 00:03:39,970 உங்களுக்கு அது ஒரு விடுமுறை போல் இருக்கும். அனைவருக்கும் பியர் பிடிக்குமே. 62 00:03:40,596 --> 00:03:41,597 நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால். 63 00:03:42,431 --> 00:03:43,557 மிக்க நன்றி, ரெட். 64 00:03:45,058 --> 00:03:46,852 இப்போது கெட்ட செய்திகள். 65 00:03:47,519 --> 00:03:50,105 நமது விங்கில், நாமதான் டெயில்-எண்டு சார்லி, அதாவது கடைசியாக வருவோம். 66 00:03:50,189 --> 00:03:52,107 ஸ்குவாடில் அதுவே மிக மோசமான இடம். 67 00:03:52,191 --> 00:03:53,400 ஆம், ஆமாம், ஆம். 68 00:03:54,610 --> 00:03:56,320 நம் உயிர்களுக்கு விலை ஏதும் இல்லை. 69 00:03:57,821 --> 00:03:59,740 418-வது அணிதான் லீட் ஸ்குவாட்ரன், 70 00:03:59,823 --> 00:04:02,242 மேஜர் கிட்தான் அந்த அணியை வழிநடத்தும் கமாண்டர் பைலட். 71 00:04:02,326 --> 00:04:05,746 அதோடு அவருடன், மேஜர் ஈகன், கேப்டன் கிரிக் ஷேங்க்கின் விமானத்தில், 72 00:04:05,829 --> 00:04:09,124 அணியின் ரிசர்வ் கமாண்ட் பைலட்டாக வருவார். 73 00:04:09,666 --> 00:04:13,420 மேஜர் வீல் 349-வது அணியையும், 351-வது அணியையும் மேல் பொசிஷனில் வழிநடத்துவார்... 74 00:04:13,504 --> 00:04:15,130 என்னது, என்னுடன் சேர்ந்து இன்னொரு பயணியா? 75 00:04:15,964 --> 00:04:17,089 அப்படித்தான் தோணுது. 76 00:04:17,841 --> 00:04:18,841 இதோ இதுதான் திட்டம். 77 00:04:19,593 --> 00:04:23,639 இப்போது, வானிலையில் அழுத்தம் நமக்குச் சாதகமாக இல்லை, 78 00:04:23,722 --> 00:04:25,766 குறிப்பாக காலைப் பொழுதில். ஸ்டோர்மி சொல்ல முடியுமா? 79 00:04:25,849 --> 00:04:27,392 மழை பெய்யும் என்று நான் யூகிக்கிறேன். 80 00:04:27,476 --> 00:04:28,810 நூறு சதவீத வாய்ப்புகள் உள்ளன. 81 00:04:30,103 --> 00:04:31,480 அதுதான், சரி, சார். 82 00:04:32,356 --> 00:04:34,066 இன்று நமது முகாமின் மீது, வீரர்களே, 83 00:04:34,149 --> 00:04:37,611 மேக மூட்டம் சூழ்ந்திருக்கும், சுமார் பத்தில்-ஐந்து ஸ்டிராட்ஸ் அளவு 4,000 அடி உயரத்தில் இருக்கும். 84 00:04:37,694 --> 00:04:38,695 அதற்கும் மேல் பத்தில்-ஐந்து... 85 00:04:38,779 --> 00:04:40,781 ஏதோ "ரிசர்வ் கமாண்டர் பைலட்"ன்னு சொன்னாங்களே, அது என்ன கண்றாவி? 86 00:04:42,157 --> 00:04:43,367 எனக்குத் தெரியாது. 87 00:04:44,576 --> 00:04:46,954 -அப்படி சொன்னதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லையா? -விசிபிலிட்டி வந்து... 88 00:04:47,037 --> 00:04:48,288 என்ன? 89 00:04:48,372 --> 00:04:50,707 ஆல்ப்ஸ் மலைகளின் மீது மேக மூட்டங்கள் கண்ணை மறைத்துவிடும், 90 00:04:51,708 --> 00:04:53,710 அப்படியேதான் தென் திசையில் ஆப்பிரிக்காவிற்குப் போகும் போதும். 91 00:04:57,005 --> 00:04:58,006 மிக்க நன்றி, ஸ்டோர்மி. 92 00:05:01,009 --> 00:05:06,765 இப்போது, இந்த மிஷனின் வெற்றி எதில் அடங்கியுள்ளது என்றால், மூன்று செயற்பாட்டுப் படைகளும் 93 00:05:06,849 --> 00:05:09,268 ஒருங்கிணைந்து, சேனலின் மீது துல்லியமாக இயங்குவதில்தான் இருக்கிறது. 94 00:05:10,602 --> 00:05:13,355 நம் சேர்க்கைகள் சரியாக நடக்கவில்லை என்றால், 95 00:05:14,731 --> 00:05:16,066 வந்து, இதில் பாசாங்கு விளையாட்டிற்கு இடமில்லை. 96 00:05:16,149 --> 00:05:18,652 அதாவது விளையாட்டுகளில் நாம் செய்யும் பாசாங்குகள் போல இல்லை இது. 97 00:05:20,404 --> 00:05:23,907 இன்னும் பத்து வினாடிகளில் 05:20. 98 00:05:25,325 --> 00:05:26,326 நல்வாழ்த்துகள்... 99 00:05:27,744 --> 00:05:29,496 இன்னும் சில நாட்களில் நான் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். 100 00:05:31,415 --> 00:05:32,499 நேரத்தைக் குறித்துக்கொள்ளுங்கள். 101 00:05:45,596 --> 00:05:48,932 இது விமானம் 567க்கு கிளியர்-அப் ரேடியோ. 102 00:05:49,016 --> 00:05:51,226 அனைத்து விமானங்களுக்கும் அறிவிக்கப்படுவது, அடர்ந்த மூடுபனியின் காரணமாக 103 00:05:51,310 --> 00:05:52,436 டேக்காஃப் தாமதிக்கப்பட்டுள்ளது. 104 00:05:52,519 --> 00:05:56,356 விங் முழுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆணைகளுக்குக் காத்திருக்கவும். 105 00:05:57,858 --> 00:06:00,652 இது கிளியர்-அப் டவருக்கு, விமானம் 567 சொல்வது. 106 00:06:00,736 --> 00:06:03,030 தற்காலிக நிறுத்தம் ரோஜர். காத்திருக்கிறோம். ஓவர். 107 00:06:06,700 --> 00:06:09,411 "கடவுளே, பரந்து விரிந்துள்ள வான்வெளியின் 108 00:06:09,494 --> 00:06:11,788 பெரும் பரப்புகளில் பறக்கும் மனிதர்களை காக்கவும், வழிகாட்டவும் வேண்டும். 109 00:06:12,414 --> 00:06:17,377 கரும்புயல்களோ, சூரியன் ஒளிரும் தினமோ, அவர்கள் பறக்கும்போது அவர்களுடன் இருப்பீர். 110 00:06:18,253 --> 00:06:22,841 உங்கள் பரிவுள்ள ஆற்றலால், அந்த விமானங்களை சமநிலையில் பறக்கச் செய்யவும். 111 00:06:23,425 --> 00:06:27,262 காற்றின் சீற்றத்தை குறைத்து, உடன் இருந்து, தாங்கள் அருகில் இருப்பதால் பயம் அறியாமல் செய்யவும். 112 00:06:27,346 --> 00:06:29,014 மூன்று செயற்பாட்டுப் படைகளுமே தடை செய்யப்படுள்ளனர். 113 00:06:29,097 --> 00:06:30,390 30-நிமிட தாமதம் ஏற்பட்டுள்ளது. 114 00:06:32,267 --> 00:06:36,396 "…வானத்தின் கீழ் உள்ள தனிமையான பாதைகளில் பறப்பவர்கள்." 115 00:06:36,480 --> 00:06:41,026 நரகத்திற்குச் செல்லும் வழியில், சாலை இரண்டாகப் பிரியும் இடத்தை அடைகிறீர்கள். 116 00:06:41,109 --> 00:06:42,945 ஒரு பாதை வால்ஹாலாக்குப் போகிறது, 117 00:06:43,612 --> 00:06:45,364 மற்றொன்று நரகத்திற்கு. சபிக்கப்பட்ட இடத்திற்குப் போகிறது. 118 00:06:45,864 --> 00:06:47,616 சாலையின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு மாயாவி உள்ளது. 119 00:06:47,699 --> 00:06:49,826 ஒரு மாயாவி எப்போதும் உண்மையே பேசும். 120 00:06:49,910 --> 00:06:52,996 மற்றொன்று தந்திரசாலியானது. எப்போதும் பொய் பேசும். சரியா? 121 00:06:53,080 --> 00:06:54,873 நீ சரியான வழியில் போவதற்கு, ஒரே ஒரு கேள்வியை மட்டுமே 122 00:06:54,957 --> 00:06:56,750 கேட்கலாம் எனில், நீ என்ன கேட்பாய்? 123 00:06:56,834 --> 00:06:58,126 கடவுளே. 124 00:07:03,882 --> 00:07:06,134 -ஹே, லெப்டினன்ட். உங்களுக்கு விருந்தினர். -அது அட்டகாசமான வண்டி. 125 00:07:06,802 --> 00:07:08,387 இன்னும் 30 நிமிடங்களுக்குக் காத்திருக்க வேண்டும். 126 00:07:08,470 --> 00:07:10,472 என்றைக்காவது நற்செய்தியைச் சொல்லியிருக்கிறீர்களா, கார்சியா? 127 00:07:10,556 --> 00:07:12,975 உனக்குப் புகார் செய்யணுமா? ஆபரேஷன் துறையிடம் சொல்லு. 128 00:07:13,058 --> 00:07:16,186 ஹே! காரசாரமா ஒரு கடிதம் எழுதப் போறேன்! 129 00:07:17,187 --> 00:07:19,189 இன்னொரு அரை மணிநேரம் தாமதம், மக்களே. 130 00:07:20,858 --> 00:07:22,067 நாம ஏன் அப்படியே டேக்காஃப் செய்யக்கூடாது? 131 00:07:23,235 --> 00:07:25,237 ஏன்னா நம்மால முடியாது. இப்போ மூடுபனி சூழ்ந்திருக்கே. 132 00:07:25,946 --> 00:07:27,531 அதுக்கெல்லாம் பைலட்டுகளுக்கு பயிற்சி கொடுத்திருக்காங்க இல்லையா? 133 00:07:28,031 --> 00:07:29,867 ஆமாம். அதுதானே அவங்க தொழில்? 134 00:07:29,950 --> 00:07:31,535 நிச்சயமா. 135 00:07:31,618 --> 00:07:35,163 அவங்களால கண்ணை மூடிகிட்டு தலைகீழாகக் கூடப் பறக்க முடியும். 136 00:07:35,247 --> 00:07:36,790 ஆனால் ரன்வேயில் ஒரு பசு மாடு நின்றிருந்தால்... 137 00:07:36,874 --> 00:07:38,166 ரன்வேயில் பசுமாடா? 138 00:07:38,250 --> 00:07:40,294 உனக்கு எங்கிருந்து இது போன்ற அபத்தமான பேச்செல்லாம் வருது, குவின்? 139 00:07:40,377 --> 00:07:42,212 நாமதான் ஃபிளையிங் ஃபோர்ட்ரெஸ்ல இருக்கோமே. 140 00:07:42,296 --> 00:07:43,630 ஒரு பசுமாட்டை எதிர்கொள்ள முடியணுமே. 141 00:07:43,714 --> 00:07:45,674 ஆலிஸ் ஒரு பியூயிக் கார் இல்ல, பேபி ஃபேஸ். 142 00:07:45,757 --> 00:07:47,176 இது ஒரு தகர டப்பா. 143 00:07:47,259 --> 00:07:51,180 நாம நேருக்கு நேர் ஒரு பசு மாடுடன் மோதினால், நசுங்கிடும். உள்ளே இருக்கும் நாமும்தான். 144 00:07:52,598 --> 00:07:54,016 நீ சொல்லும் பசு மாடு எதுன்னு புரியுது. 145 00:07:55,350 --> 00:07:57,019 துப்பாக்கி சுடும் போது அது ஜாம் ஆகி நம்மையும் நசுக்குவதைத் தானே சொல்கிறாய். 146 00:07:59,354 --> 00:08:01,064 உன் பசுமாட்டை நான் கொன்று இறைச்சி ஆக்கிடுவேன். 147 00:08:02,941 --> 00:08:03,942 பக்கி. 148 00:08:04,776 --> 00:08:05,777 பக்கி. 149 00:08:07,279 --> 00:08:09,198 -பக்கி. -சொல்லு, கிராங்க்? 150 00:08:11,074 --> 00:08:12,993 நீயும் விமானத்தில் வருவதற்கு எப்படி ஹார்டிங்கின் சம்மதத்தை வாங்கின? 151 00:08:15,662 --> 00:08:16,747 நீ என்ன சொல்ற? 152 00:08:16,830 --> 00:08:18,665 நீ, பக், வீல், கிட்? 153 00:08:19,333 --> 00:08:21,084 மூன்று ஸ்குவாட்ரன் சீஓ-க்களும் ஒரு விமான நிர்வாகியும். 154 00:08:22,085 --> 00:08:23,086 நிறைய உயர் அதிகாரிகள் ஒரே மிஷனில் போகிறார்களே. 155 00:08:23,170 --> 00:08:25,923 ஆமாம், இவ்வளவு உயர் அதிகாரிகள் ஒரு மிஷனில் இருந்து நானும் பார்த்ததில்லை. 156 00:08:27,382 --> 00:08:29,343 சரி, அப்படியென்றால் நான் இதை எப்படி மிஸ் பண்ண முடியும், இல்லையா? 157 00:08:31,720 --> 00:08:35,182 பொறு, பொறு, பொறு. "நீதான் நல்ல மாயாவியா?"ன்னு அதுகிட்ட கேட்டயா? 158 00:08:35,890 --> 00:08:38,602 இல்ல. இல்ல, ஆனால் நீ உண்மையைக் கண்டுபிடிக்கத்தான் போற. 159 00:08:38,684 --> 00:08:40,938 நான் நினைச்சதைவிட நீ புத்திசாலிதான், கிராஸ். 160 00:08:41,020 --> 00:08:42,731 இரண்டாவது மற்றும் மூன்றாவது செயற்பாட்டுப் படை, ஏற்கனவே மேலே பறக்கறாங்கன்னு நான் பத்து டாலர்கள் 161 00:08:42,813 --> 00:08:45,108 -பந்தயம் கட்டுறேன். -இருக்காது. 162 00:08:45,192 --> 00:08:47,861 இல்ல, நாம அவங்களுடன் சேருவதுக்கு முன்னாடி அவங்க இலக்கை அடிக்க மாட்டாங்க. 163 00:08:47,945 --> 00:08:49,029 அடிச்சுட்டாங்கன்னா? 164 00:08:50,531 --> 00:08:52,407 அப்போ இந்த அறிவார்ந்த திட்டம் சரியான சொதப்பல்தான். 165 00:09:08,173 --> 00:09:11,635 இங்கே வா, மீட்பால். வா, ஓடு. குட் பாய். 166 00:09:11,718 --> 00:09:12,719 ஹே, பக். 167 00:09:15,430 --> 00:09:16,431 ஹே, கர்ட். 168 00:09:23,981 --> 00:09:25,023 அடர்ந்த மூடுபனி, இல்ல? 169 00:09:26,441 --> 00:09:27,276 ஆம். 170 00:09:31,321 --> 00:09:32,948 இப்படிப்பட்ட மூடுபனி எங்க ஊர்ல வரும். 171 00:09:34,992 --> 00:09:36,451 நான் சிறுவனா இருந்தபோது, இது எப்போதும் என்னை பயமுறுத்தும். 172 00:09:37,786 --> 00:09:39,037 யாருக்கும் மூடுபனி பிடிக்காது. 173 00:09:41,415 --> 00:09:42,416 நீங்க எப்படி இருக்கீங்க, மக்களே? 174 00:09:43,667 --> 00:09:44,668 பதட்டமா இருக்கா. 175 00:09:45,544 --> 00:09:46,545 எனக்கில்லை. 176 00:09:47,337 --> 00:09:48,255 நான் நல்லா இருக்கேன். 177 00:09:48,338 --> 00:09:50,465 இது ஒரு பெரிய விஷயமா அமையலாம்னு எனக்குத் தோணுது, தெரியுமா? 178 00:09:51,383 --> 00:09:54,052 -பெரிய விஷயம்தான். -நிஜமாகவே நாம் நிறைய சேதம் ஏற்படுத்த முடியும். 179 00:09:58,432 --> 00:09:59,433 சரி, 180 00:10:00,976 --> 00:10:02,603 போய் மீண்டும் வேலையைப் பார்ப்போம். 181 00:10:02,686 --> 00:10:03,979 உன்னை அல்ஜீரியாவில் சந்திக்கிறேன். 182 00:10:04,771 --> 00:10:05,898 அங்கே சந்திக்கலாம், பக். 183 00:10:18,035 --> 00:10:19,036 இப்போ போகலாம், சார். 184 00:10:21,914 --> 00:10:23,415 நாம தொடங்கணும்னு லெமே விரும்புறார். 185 00:10:23,498 --> 00:10:25,334 அவர் மற்ற செயற்பாட்டுப் படைகளுக்காகக் காத்திருக்க விரும்பலை. 186 00:10:25,417 --> 00:10:26,418 என்ன சொல்கிறாய்? 187 00:10:26,960 --> 00:10:28,295 அவர்கள் இவர்களுடன் சேர்ந்துகொள்ள வேண்டியதுதான், சார். 188 00:10:32,257 --> 00:10:36,053 06:40-க்கு என்ஜினைத் தொடங்கலாம். ஒரு ஃபிளேரை மேலே அனுப்பி, மீண்டும் செயலைத் தொடங்கச் செய். 189 00:10:36,136 --> 00:10:37,137 சரி, சார். 190 00:10:40,849 --> 00:10:42,726 நாம அவங்களை நேராக நரகத்துக்குத்தான் அனுப்புறோம். 191 00:10:43,810 --> 00:10:44,811 அதுவும் தனியாக. 192 00:12:55,025 --> 00:12:57,486 டொனால்ட் எல். மில்லரின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 193 00:13:16,797 --> 00:13:21,760 மூன்றாம் பாகம் 194 00:13:36,149 --> 00:13:41,029 பெல்ஜியத்தின் மீதான வான்வெளி இலக்கை அடைய இன்னும் நான்கு மணிநேரம் உள்ளது 195 00:13:50,372 --> 00:13:51,665 அணிக்குக் கமாண்ட் பைலட் சொல்வது. 196 00:13:52,749 --> 00:13:54,668 மற்ற செயற்பாட்டுப் படைகளை யாராவதுப் பார்த்தீர்களா? 197 00:13:57,087 --> 00:13:59,214 -ரேடியோ, நெகெடிவ். -வேயிஸ்ட் நெகெடிவ். 198 00:13:59,298 --> 00:14:00,340 டெயில், நெகெடிவ். 199 00:14:00,924 --> 00:14:01,925 நெகெடிவ், சார். 200 00:14:02,009 --> 00:14:03,010 நெகெடிவ். 201 00:14:11,935 --> 00:14:13,520 அவர்கள் நம்மிடம் அப்படிச் சொல்லவில்லையே! 202 00:14:13,604 --> 00:14:15,564 நாமதான் அதிகமா பாதிக்கப்படுவோம்னுதான் சொல்லிட்டாங்களே, நண்பா. 203 00:14:15,647 --> 00:14:16,607 ஆமாம், எனக்குத் தெரியும். தெரியும். 204 00:14:16,690 --> 00:14:19,610 ஆனால் எதிரிகள் இரண்டாவது முறை வந்து நம்மைத் தாக்காம பார்த்துக்கொள்வதற்கு 205 00:14:19,693 --> 00:14:21,737 மற்ற செயற்பாட்டுப் படைகள் நம்மை பின்தொடர்ந்து வரும்னு சொன்னாங்களே. 206 00:14:21,820 --> 00:14:22,821 அவங்க எல்லாம் எங்கே, ஹம்? 207 00:14:24,031 --> 00:14:26,491 வியா, நீ யாரையும் பார்க்கலைன்னு உறுதியா சொல்றயா? 208 00:14:27,075 --> 00:14:28,785 ஒருவரைக் கூடப் பார்க்கவில்லை. இன்னும் நாம தனியாகத்தான் இருக்கோம். 209 00:14:34,333 --> 00:14:37,377 கிராங்க்? நாம இன்னும் கொஞ்சம் பிளேக்லிக்கு, பக்கத்துல போக முடியுமா? 210 00:14:37,961 --> 00:14:38,962 போக முடியும். 211 00:14:40,088 --> 00:14:41,256 பின்னாடி உட்கார்ந்தே ஓட்டுறான் பாரு. 212 00:14:41,798 --> 00:14:42,841 ஹா! சரியாச் சொல்ற, கிராங்க். 213 00:14:44,468 --> 00:14:46,094 பின்னாடி உட்கார்ந்திருக்கிற ரிசர்வ் பைலட். 214 00:14:47,429 --> 00:14:49,139 வாப்பா, பக். எங்களுடன் சேர்ந்து வா. 215 00:14:52,601 --> 00:14:55,354 மத்த பிரிவுகள் அனைவரும் நம்மை கைவிட்டுட்டாங்கன்னு தோணுது. 216 00:14:55,437 --> 00:14:56,772 நாம தனியாத்தான் இருக்கோம். 217 00:14:57,439 --> 00:14:59,650 தரையிலிருந்து வரும் எதிரித் தாக்குதல் ஒண்ணும் பெரிசா இல்லையே. 218 00:15:00,484 --> 00:15:02,319 அவங்க ஃபைட்டர்களுக்காக, வானத்தை கிளியரா வைக்க முயற்சி செய்யறாங்க. 219 00:15:16,667 --> 00:15:19,670 ச்சே! 10:00 கீழே ஃபைட்டர்கள் வர்றாங்க! பத்து மணி கீழே! 220 00:15:23,882 --> 00:15:25,509 அவங்க பக்கை நோக்கிப் போறாங்க. 221 00:15:25,592 --> 00:15:27,094 ஃபைட்டர்கள், 2:00! 222 00:15:30,389 --> 00:15:32,599 ஒன்பது மணி கீழே. இன்னும் ஜெர்மானியர்கள். 223 00:15:32,683 --> 00:15:36,478 -நான் ஒன்பதுல இருக்கேன்! -இன்னும் ஃபைட்டர்கள். இரண்டு மணி லெவல்ல. 224 00:15:37,855 --> 00:15:39,648 உன்னை சுட்டுட்டேன், கேவலமானவனே! 225 00:15:39,731 --> 00:15:41,400 இன்னும் வர்றாங்க, 11:00 கீழே! 226 00:15:43,944 --> 00:15:45,362 இப்போ கிளேடரைத் தாக்குறாங்க! 227 00:15:48,156 --> 00:15:49,575 இடது இறக்கை அடிபட்டிருக்கு. 228 00:15:54,246 --> 00:15:55,664 விமானம் இடது பக்கமா இழுக்குது. 229 00:15:57,833 --> 00:16:00,836 இடது ஃபிளாப்பை பூட்டியாச்சு. ஈடுகட்டிகிட்டு இருக்கு. 230 00:16:03,672 --> 00:16:06,884 -ராக்கெட்டுகள் 2:00! -அடப் பாவமே! 231 00:16:10,846 --> 00:16:12,848 ச்சே! அவங்க கிளீவெனை அடிச்சுட்டாங்க. 232 00:16:15,267 --> 00:16:16,435 நார்மன்? ஸ்ட்ரௌட்? 233 00:16:17,019 --> 00:16:19,354 நம்முடைய காற்று அழுத்தம் குறையுது. ஆற்றலை அதிகரிக்கணும். 234 00:16:19,438 --> 00:16:21,690 அதிகம் பண்ணு. நார்மன்! ஸ்ட்ரௌட்! 235 00:16:24,401 --> 00:16:25,652 நாங்க ரெண்டு பேரும் இங்கே இருக்கோம். 236 00:16:25,736 --> 00:16:26,820 உங்களுக்கு எவ்வளவு சேதம் ஆகியிருக்கு? 237 00:16:26,904 --> 00:16:28,697 எலக்ட்ரிக்கல் மற்றும் பிராண வாயு ஹோசுகள் சேதம். 238 00:16:28,780 --> 00:16:31,158 -பாம்ப்சைட் எப்படித் தெரியுது? -செக் பண்ணறேன். 239 00:16:34,369 --> 00:16:35,954 பாம்ப்சைட் சரியா தெரியுது! 240 00:16:36,038 --> 00:16:37,789 இரண்டு 190 கள், 2:00. 241 00:16:44,004 --> 00:16:45,589 சார்ஜ் ஹேன்டில் பிச்சுட்டுப் போயிடுச்சு! 242 00:17:02,064 --> 00:17:03,732 இரண்டு மணி கீழே! 243 00:17:04,983 --> 00:17:07,694 கடவுளே, எல்லா திசையிலிருந்தும் வர்றாங்களே! 244 00:17:11,073 --> 00:17:12,406 நான் ஒண்ணை அடிச்சேன்! 245 00:17:13,951 --> 00:17:15,868 முழு ஸ்குவாடும், 10:00 கீழே! 246 00:17:15,953 --> 00:17:17,412 ச்சே! பக்கை அடிச்சுட்டாங்க. 247 00:17:18,288 --> 00:17:20,249 நாசமா போகட்டும். நான் நேராக கீழே போகிறேன். 248 00:17:20,332 --> 00:17:21,250 ரோஜர். 249 00:17:21,791 --> 00:17:23,210 ஏழு மணி கீழே! 250 00:17:23,292 --> 00:17:24,502 இன்னும் இரண்டு வருகின்றன! 251 00:17:25,671 --> 00:17:27,631 சரிதான், மர்ஃப். அந்தத் துப்பாக்கியை நான் பார்த்துக்கறேன். 252 00:17:27,714 --> 00:17:28,715 சார். 253 00:17:31,802 --> 00:17:34,763 பத்து மணி கீழே! முன்பாகத்துக்கு டெயில், உன்னை நோக்கி வருது. 254 00:17:36,390 --> 00:17:38,725 -இரண்டு மணி மேலே! -அவங்க பிரியப் போறாங்க, மர்ஃப்! 255 00:17:39,685 --> 00:17:41,144 அவங்க பக்கை நோக்கிப் போறாங்க. 256 00:17:41,854 --> 00:17:43,647 ஃபைட்டர்ஸ், 2:00 மேலே! 257 00:17:43,730 --> 00:17:45,983 புரிஞ்சது. அவங்களை பார்த்துட்டோம். அடிக்கலாம், வீரர்களே. 258 00:17:48,151 --> 00:17:50,070 அவங்க இப்போ இரண்டாவது பிரிவை நோக்கிப் போறாங்க. 259 00:18:03,041 --> 00:18:05,836 கிளீவெனுக்கு டெயில் சொல்வது. ஹம்மெல்லின் விமானம் போயிடுச்சு. 260 00:18:06,378 --> 00:18:07,588 ஏதாவது சூட்டுகளைப் பார்த்தீங்களா? 261 00:18:08,714 --> 00:18:11,341 பத்து சூட்டுகளையும் பார்த்தேன், ஆனால் கிளேடருக்குப் பிரச்சினை. 262 00:18:11,425 --> 00:18:13,886 மோசமா இழுத்துட்டு இருக்கான். வடிவமைப்பிலிருந்து விலகிட்டு இருக்கான். 263 00:18:18,182 --> 00:18:20,559 -எரிபொருளை இழக்கிறோம். -சரி, எனக்கு அது புரியுது. 264 00:18:22,227 --> 00:18:23,395 இடது இறக்கையில நெருப்பு பத்தியிருக்கு. 265 00:18:24,396 --> 00:18:25,981 நாம குதிக்கணுமா, ராய்? 266 00:18:26,064 --> 00:18:28,317 ராய்! ராய்! நாம குதிக்கணுமா? 267 00:18:28,817 --> 00:18:29,818 குதிக்கணுமா? 268 00:18:32,738 --> 00:18:34,072 அணிக்குப் பைலட் சொல்வது, குதிச்சிடுங்க. 269 00:18:34,156 --> 00:18:36,408 குதிச்சிடுங்க! விமானத்தை விடுங்க! தப்பித்துக்கொள்ளுங்க! 270 00:18:36,491 --> 00:18:38,327 -விமானத்தை விடுங்கன்னு சொன்னயா? -ஆம், நாசமா போச்சு! 271 00:18:38,410 --> 00:18:39,912 கலவரத்தை உண்டுபண்ணிட்டு அப்புறம் குதிக்கலாம்! 272 00:18:40,495 --> 00:18:42,623 பைலட் குண்டு வீச்சாளருக்குச் சொல்வது. வெடிகுண்டுக் கதவுகளைத் திறக்கவும்! 273 00:18:42,706 --> 00:18:43,707 ரோஜர். 274 00:18:58,138 --> 00:18:59,806 லோர்ச், அனைத்து வெடிகுண்டுகளையும் போட்டுவிடு. 275 00:19:38,887 --> 00:19:42,057 அணிக்கு பால் டர்ரெட் சொல்வது. நான் மாட்டிகிட்டு இருக்கேன். 276 00:19:42,766 --> 00:19:45,686 -என்னால டர்ரெட்டை விட்டு வர முடியலை. -வர முடியலைன்னா என்ன அர்த்தம்? 277 00:19:46,395 --> 00:19:48,438 எலிவேஷன் கிளச்சு ஜாம் ஆகியிருக்கு. 278 00:19:49,273 --> 00:19:50,315 அது திறக்க மாட்டேங்குது. 279 00:19:59,575 --> 00:20:01,702 குவின்! எனக்கு உதவி செய். 280 00:20:06,790 --> 00:20:09,001 -குவின், கமான். உதவி செய், நண்பா. -தள்ளு! 281 00:20:09,084 --> 00:20:10,627 மூணு எண்ணும்போது இழு. 282 00:20:10,711 --> 00:20:13,797 -முயற்சி செய்யறேன்! -ஒண்ணு, ரெண்டு, மூணு. 283 00:20:13,881 --> 00:20:14,965 கமான்! 284 00:20:16,925 --> 00:20:19,511 தள்ளு, பேபி ஃபேஸ்! எனக்கு உதவு! 285 00:20:28,478 --> 00:20:30,689 கமான், குவின்! பிளீஸ்! 286 00:20:32,816 --> 00:20:35,819 பாரு, என்னை எப்படியாவது வெளியே எடு. பிளீஸ்! 287 00:20:38,864 --> 00:20:39,865 என்னை மன்னிச்சுடு. 288 00:20:40,908 --> 00:20:42,492 நீ என்ன சொல்ற? இல்ல! 289 00:20:42,576 --> 00:20:43,827 இல்ல! 290 00:20:47,247 --> 00:20:48,957 இல்லை! 291 00:20:49,750 --> 00:20:53,879 திரும்பி வா, குவின்! குவின், பிளீஸ்! 292 00:20:54,713 --> 00:20:57,049 -என்னால முடியாது. -என்னை இங்கிருந்து வெளியே எடு! 293 00:20:58,300 --> 00:20:59,301 காப்பாத்துங்க! 294 00:20:59,968 --> 00:21:00,969 என்னால முடியாது. 295 00:21:03,430 --> 00:21:07,893 என்னை வெளியே எடுங்க! பிளீஸ்! குவின்! 296 00:21:08,727 --> 00:21:14,233 -என்னை மன்னிச்சுடு, பேபி ஃபேஸ். -இல்ல! இல்ல! 297 00:21:20,030 --> 00:21:23,408 பைலட்டிற்கு, டெயில் லீட் சொல்வது. நம்முடைய இரண்டாம் பிரிவு மொத்தமும் காலி. 298 00:21:24,117 --> 00:21:27,454 கடவுளே. ரோஜர், டெயில். 299 00:21:30,707 --> 00:21:32,668 நாம 418-வது அணியுடன் சேரணும். 300 00:21:35,712 --> 00:21:38,632 ரெட்மீட் ஸ்குவாட்ரனுக்கு, ரெட்மீட் லீட் சொல்வது, நாங்க பேசருடன் சேர்ந்துகொள்கிறோம். 301 00:21:38,715 --> 00:21:42,135 ரோஜர், ரெட்மீட் லீட். நாம ஆற்றலை அதிகரிப்போம். 302 00:21:42,928 --> 00:21:45,764 நாம இன்னும் உயரத்துக்குப் போய், 418-வது அணியின் பாதுகாப்பைப் பெறுவோம். 303 00:21:51,395 --> 00:21:52,813 கமாண்ட் பைலட்டுக்கு, டெயில் சொல்வது, 304 00:21:52,896 --> 00:21:54,940 350-வது அணியின் கடைசிப் பிரிவு மொத்தமும் காலியாகிடுச்சு. 305 00:21:55,858 --> 00:21:57,693 பிழைத்துள்ளவர்கள் நம்முடன் சேர முயற்சிக்கிறார்கள். 306 00:21:57,776 --> 00:21:58,610 ரோஜர். 307 00:22:00,404 --> 00:22:01,488 வாங்க. 308 00:22:06,451 --> 00:22:07,494 சார். 309 00:22:11,415 --> 00:22:13,959 பெல்ஜியத்தில் உள்ள ஒவ்வொரு லுஃப்ட்வாஃப் பேஸிலும் உதவிப் படை வந்திருக்கு. 310 00:22:14,042 --> 00:22:17,254 ஆனால் நாம, இன்னும் நம் முதல் பாயிண்ட்டிலிருந்தே மூணு மணிநேர தூரத்துல இருக்கோம். 311 00:22:18,547 --> 00:22:19,590 இலக்கு 312 00:22:23,886 --> 00:22:26,221 ராக்கெட்டுகள் உள்ளே வருகின்றன. ஏழு மணி! 313 00:22:29,641 --> 00:22:30,475 கடவுளே! 314 00:22:31,727 --> 00:22:32,728 ஸ்மித், ரிப்போர்ட் பண்ணு! 315 00:22:33,228 --> 00:22:35,397 ஸமித்! ஸ்மித், ரிப்போர்ட் பண்ணு! 316 00:22:36,815 --> 00:22:39,651 ஸ்மித்தை சுட்டுட்டாங்க. அவனுக்கு மூச்சு இல்லை. 317 00:22:42,154 --> 00:22:45,199 கிளீவெனுக்கு, வேயிஸ்ட் சொல்வது. ஸ்மித் இறந்துவிட்டான், சார். 318 00:22:45,282 --> 00:22:47,367 ஃபைட்டர்கள், 11:00 மேலே! 319 00:22:50,704 --> 00:22:52,247 கேடுகெட்டவனே! 320 00:22:54,166 --> 00:22:55,250 கேடுகெட்டவனே! 321 00:22:55,334 --> 00:22:56,627 -நீ நலமா? -ஆமாம். 322 00:22:56,710 --> 00:22:58,837 அப்போ அங்கே போய், உன் துப்பாக்கியை எடு. 323 00:23:01,256 --> 00:23:02,716 முக்கிய எலெக்ட்ரிக்கல் பேனல் வேலை செய்யல. 324 00:23:03,926 --> 00:23:06,428 -எவ்வளவு மோசமா இருக்கு? -ஜெனரேட்டர் போச்சு. என்னால சொல்ல முடியலை. 325 00:23:09,056 --> 00:23:11,058 பைலட்டுக்கு, வேயிஸ்ட் சொல்வது. பிட்டிக்கைச் சுட்டுவிட்டாங்க. 326 00:23:12,851 --> 00:23:16,605 அனைத்து சிஸ்டங்களிலும், எல்லா இடத்திலும், அழுத்தம் குறையுது. கர்ட், விமானம் போயிடுச்சு. 327 00:23:16,688 --> 00:23:17,606 இல்லை, இன்னும் போகலை. 328 00:23:20,692 --> 00:23:21,527 இல்ல! 329 00:23:22,194 --> 00:23:25,906 டிக்கி! டிக்கி! டிக்கி! இல்ல! 330 00:23:25,989 --> 00:23:28,242 பெஸ்ட்! கீழே இறங்கி வா உடனே! 331 00:23:29,368 --> 00:23:31,870 அவன் கன்ட்ரோலைப் பிடிச்சுட்டு இருக்கான். அவனை விடுதலை செய். 332 00:23:31,954 --> 00:23:33,288 அவனைத் திருப்பிக் கொண்டு வா. 333 00:23:36,917 --> 00:23:39,586 -எப்படி இருக்கான்? -இறந்துவிட்டான்னு நினைக்கிறேன். 334 00:23:39,670 --> 00:23:42,881 இல்ல, டிக்கி. டிக்கி, முழிச்சுக்கோ! 335 00:23:46,260 --> 00:23:47,261 ச்சே! 336 00:23:48,595 --> 00:23:52,266 இந்த விமானம் நீடிக்காது. நாம வெளியே குதிக்கணும். 337 00:23:54,226 --> 00:23:57,729 அணிக்கு, பைலட் சொல்வது. குதித்து விடுங்கள்! 338 00:23:58,230 --> 00:23:59,690 இந்தா உன்னுடைய சூட், கர்ட். 339 00:24:01,942 --> 00:24:03,610 அவன் சுவாசிக்கிறான், சார்! 340 00:24:05,237 --> 00:24:06,321 டிக்கி, தாக்குப்பிடி. 341 00:24:06,405 --> 00:24:08,740 நான் உன்னை பாதுகாப்பா இறக்கறேன். நான் சொல்வது கேட்குதா? 342 00:24:08,824 --> 00:24:10,534 உன்னால் இதைத் தரையிறக்க முடியாது, முடியுமா? 343 00:24:10,617 --> 00:24:12,411 ஆமாம், என்னால முடியும். நாம அவனை குதிக்கச் சொன்னால் அவன் இறந்துப் போவான். 344 00:24:12,494 --> 00:24:14,162 அவனைக் குதிக்கச் செய்வோம். அதுதான் அவனுக்குள்ள சிறந்த வாய்ப்பு! 345 00:24:14,246 --> 00:24:16,665 -அவன் எப்படியானாலும் இறக்கப் போறான், லெப்டினன்ட். -இல்லை, இறக்க மாட்டான்! 346 00:24:18,667 --> 00:24:20,294 நாம விமானத்தை விட்டுக் குதிக்கணும்! வாங்க! 347 00:24:20,377 --> 00:24:22,087 போ. நான் உன் பின்னாடியே வரேன். போ! 348 00:24:22,171 --> 00:24:23,172 வாக்கு கொடு! 349 00:24:23,255 --> 00:24:24,464 நான் உன் பின்னாடி வருவேன். 350 00:24:24,548 --> 00:24:27,384 எல்லோரும் குதிக்கும் வரை விமானத்தை சீராக வச்சுக்கறேன். போ! 351 00:24:28,260 --> 00:24:29,595 நீ வெளியே போகணும், கர்ட்! 352 00:24:29,678 --> 00:24:31,763 நான் உன் பின்னாடி வரேன். வெளியே போ! 353 00:24:37,269 --> 00:24:39,855 நம்மை தரையிறக்கறேன், டிக். எனக்கு விமானத்தின் மீது கன்ட்ரோல் இருக்கு. 354 00:24:40,522 --> 00:24:43,984 அதோ அங்கே இறங்குவோம். அந்த நீளமான வயல். உனக்குத் தெரியுதா? ஹம்? 355 00:24:45,402 --> 00:24:46,904 டிக்கி, தாக்குப்பிடி. என்னை விட்டுப் போகாதே. வா. 356 00:24:50,574 --> 00:24:52,910 கமான், கர்ட். தேவதையைப் போல பறக்கணும், என்ன? 357 00:25:00,626 --> 00:25:01,627 அடக் கடவுளே. 358 00:25:08,717 --> 00:25:11,428 இரண்டாவது, மூன்றாவது செயற்பாட்டுப் படைகள் இப்போதுதான் சேனலைத் தாண்டியிருக்காங்க, சார். 359 00:25:12,721 --> 00:25:14,097 ஐந்து மணிநேரம் தாமதமாக. 360 00:25:15,557 --> 00:25:16,975 கடவுள்தான் நம்ம வீரர்களைக் காப்பாத்தணும். 361 00:26:09,361 --> 00:26:10,779 ஒரு மணி மேலே! 362 00:26:13,991 --> 00:26:15,826 -உனக்கு அடிபட்டதா? -இல்லை. உனக்கு? 363 00:26:15,909 --> 00:26:17,661 இல்ல. 364 00:26:18,662 --> 00:26:20,455 போர்ட் விங்குல திரவக் கசிவு இருக்கு. 365 00:26:20,539 --> 00:26:22,541 அந்தத் தூண் ஏதோ ஒண்ணுல ஜாம் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன். 366 00:26:22,624 --> 00:26:25,335 இடது ரட்டர் பெடல் லூஸா இருக்கு, அதனால எனக்கு வலது ரட்டர் மட்டும்தான் உள்ளது. 367 00:26:25,419 --> 00:26:27,754 -ஈடுகட்டு! -என்னால முடியலை. எனக்கு உதவி செய். 368 00:26:29,715 --> 00:26:32,176 முடிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன். அது செயல்படவில்லை. 369 00:26:32,259 --> 00:26:34,761 நாம இதை சமாளிக்க முடியும். த்ராட்டில்களையும் ரட்டர் டிரிம்மை உபயோகிப்போம். 370 00:26:34,845 --> 00:26:38,098 அது ரொம்ப அதிகம். நாம தப்பிக்கணும். என்ஜின் மூன்றிலும் தீ பத்திக்குச்சு. 371 00:26:38,182 --> 00:26:41,602 -பைலட் அணிக்குக் கூறுவது, தப்... -கேடுகெட்டவனே! 372 00:26:41,685 --> 00:26:43,604 நாம இங்கேயே இருந்து இதை சமாளிக்கப் போறோம். 373 00:26:43,687 --> 00:26:46,106 நான் சொல்வது கேட்குதா? நாம இதை சமாளிப்போம். 374 00:26:49,860 --> 00:26:53,363 அணிக்கு, லீட் பைலட் சொல்வது. நம்மால் பறக்க முடியும் வரை, நமது மிஷனைத் தொடருவோம். 375 00:26:53,447 --> 00:26:55,866 நம்முடைய எரிபொருள் டாங்கில் கசிவு உள்ளதா என்று யாராவது பாருங்கள். 376 00:26:56,825 --> 00:26:59,661 பைலட்டுக்கு, நாவிகேட்டர் சொல்வது, என்னால் பார்க்க முடிகிறது. ஒரு கசிவு இருக்கு. 377 00:26:59,745 --> 00:27:00,787 ரோஜர். 378 00:27:02,623 --> 00:27:04,750 கிரௌட்கள் அவங்க எரிபொருளை மீண்டும் நிரப்பப் போகிறாங்கன்னுத் தோன்றுகிறது. 379 00:27:05,501 --> 00:27:06,752 தொடர்ந்து கண்காணித்து வாருங்கள். 380 00:27:14,676 --> 00:27:15,677 அவங்க எரிபொருளை மீண்டும் நிரப்பப் போயிருக்காங்க. 381 00:27:16,720 --> 00:27:18,013 பார்த்தால் எப்படித் தெரிகிறது, கிராஸ்? 382 00:27:21,600 --> 00:27:23,644 கமாண்டுக்கு, நாவிகேட்டர் சொல்வது. முதல் பாயிண்டைத் தொடுகிறோம். 383 00:27:23,727 --> 00:27:25,395 கமாண்ட், ரோஜர். 384 00:27:27,814 --> 00:27:28,649 ஃபிளேர்கள் மேலே! 385 00:27:32,778 --> 00:27:33,779 முதல் பாயிண்டுகள். 386 00:27:42,913 --> 00:27:45,999 குண்டைப் போடுவதற்கு முப்பது வினாடிகள். விமானத்தை ஹேண்ட் ஓவர் செய்ய தயாராகவும். 387 00:27:46,083 --> 00:27:47,167 டிரிம்மிங். 388 00:27:48,001 --> 00:27:51,255 அதோடு 155ல் நிற்கிறோம். 389 00:27:51,338 --> 00:27:55,509 ஆட்டோபைலட் செட் ஆயிடுச்சு சர்வோக்கள் ஆன் ஆயிருக்கு. பைலட், குண்டு வீச்சாளருக்கு, விமானம் உன்னிடம். 390 00:27:55,592 --> 00:27:56,885 ரோஜர், என் விமானம். 391 00:27:56,969 --> 00:27:59,263 ஃபைட்டர்கள், 10:00 மேலே! வந்துட்டு இருக்காங்க! 392 00:28:08,647 --> 00:28:10,148 நான் அந்தக் கேடுகெட்டவனைப் பார்த்துக்கறேன். 393 00:28:11,567 --> 00:28:12,943 வெடிகுண்டுகளின் தள கதவுகள் திறக்கின்றன. 394 00:28:17,781 --> 00:28:21,159 குண்டுகளை வீச தயாராகவும். நாம் இதை சாதிக்கப் போறோம், வீரர்களே. 395 00:28:24,788 --> 00:28:25,789 வெடிகுண்டுகளை வீசுங்கள்! 396 00:28:29,251 --> 00:28:30,252 அதை எடுத்துக்கொள்ளுங்கள். 397 00:28:34,965 --> 00:28:36,675 வெடிகுண்டுகளை வீசுங்கள்! 398 00:28:44,558 --> 00:28:46,059 கடவுளே. அதைப் பார்க்கறீங்களா? 399 00:28:46,894 --> 00:28:49,188 பால் டர்ரெட்டுக்கு, லீட் பைலட் சொல்வது. நாம எப்படிச் செய்துள்ளோம்? 400 00:28:49,271 --> 00:28:53,859 சார், அந்தத் தொழிற்சாலை... அழிந்துவிட்டது. 401 00:28:55,027 --> 00:28:56,612 மிஷன் பூர்த்தியாகிவிட்டது, மக்களே. 402 00:28:58,447 --> 00:28:59,865 நாம இப்போது வீட்டுக்குப் போகலாமா? 403 00:29:00,449 --> 00:29:03,994 இன்னும் காலம் இருக்கு, ஸ்ட்ரௌட். நமக்கு ஆப்பிரிக்காவில் ஒரு சின்ன நிறுத்தம் இருக்கு. 404 00:29:05,370 --> 00:29:08,624 ஃபிளாண்டர்ஸ், பெல்ஜியம் 405 00:29:20,677 --> 00:29:22,095 அது பரவாயில்லை. நான்... 406 00:29:23,263 --> 00:29:24,223 ஜெர்மானியரா? 407 00:29:25,307 --> 00:29:26,517 நான் அமெரிக்கன். 408 00:29:27,100 --> 00:29:28,101 அமெரிக்கென்னா? 409 00:29:29,686 --> 00:29:31,104 எனக்கு உதவி செய்ய முடியுமா? 410 00:29:32,022 --> 00:29:33,023 இங்கேயே காத்திருங்கள். 411 00:29:35,734 --> 00:29:36,693 அவன் ஒரு அமெரிக்கன். 412 00:29:36,777 --> 00:29:37,819 நிச்சயமா தெரியுமா? 413 00:29:38,195 --> 00:29:39,029 ஆமாம். 414 00:29:42,574 --> 00:29:44,409 இத்தாலிய ஆல்ப்ஸ் மலைகள் அல்ஜீரியாவிற்கு இன்னும் ஐந்து மணிநேரம் 415 00:29:44,493 --> 00:29:47,162 டெயிலுக்கு, கமாண்ட் பைலட் சொல்வது, நம்மில் எவ்வளவு பேர் பாக்கியுள்ளோம்? 416 00:29:47,663 --> 00:29:49,665 கமாண்ட் பைலட்டுக்கு, டெயில் சொல்வது, ஒன்பது. 417 00:29:50,249 --> 00:29:52,835 எல்லா இடத்திலும் சிதறியிருக்காங்க, நான் அவர்களை இடத்திலிருந்து வலது வரைத் தேடினேன். 418 00:29:53,335 --> 00:29:54,920 கிளீவெனின் விமானம் இன்னும் நம்முடன் உள்ளதா? 419 00:29:56,046 --> 00:29:58,382 அவங்களுக்கு ரொம்ப மோசமா அடிப்பட்டிருக்கு, அதனால ரொம்ப பின்னாடி வர்றாங்க, 420 00:29:58,882 --> 00:30:00,050 ஆனால் நம்முடன்தான் இருக்காங்க. 421 00:30:00,717 --> 00:30:01,718 ரோஜர். 422 00:30:08,684 --> 00:30:11,103 மென்சீ, நாம இடது பக்கமா போறோம். எலிவேட்டர்கள் எப்படி செயல்படுகின்றன? 423 00:30:12,813 --> 00:30:14,439 இடது பக்கம் சுத்தமா போயிடுச்சு. 424 00:30:17,943 --> 00:30:18,944 செயல்படவில்லை. 425 00:30:23,282 --> 00:30:25,367 பைலட்டிற்கு, டெயில் சொல்வது. நாம் இன்னொரு விமானத்தை இழந்துட்டோம். 426 00:30:26,076 --> 00:30:27,160 அது ஓக்ஸ்ஸுடைய விமானம்னு நினைக்கிறேன். 427 00:30:27,244 --> 00:30:28,245 ரோஜர். 428 00:30:29,872 --> 00:30:32,124 மேஜர், இன்னும் எவ்வளவு நேரம் இதை நம்மால சமாளிக்க முடியும்னு தெரியலை. 429 00:30:32,207 --> 00:30:33,292 நாம நலம். 430 00:30:33,375 --> 00:30:35,586 -நாம தப்பிக்கணும்னா, நாம... -நாம நலமா போய் சேருவோம். 431 00:30:35,669 --> 00:30:37,796 எலிவேட்டர் லைன் மோசமா சேதம் ஆயிடுச்சு, சார். என்ன நம்ம திட்... 432 00:30:37,880 --> 00:30:41,008 நான் ஒரு எதிரியின் கைதி முகாமில் இருக்க திட்டமிடலை, நீ அப்படித் திட்டமிடுகிறாயா? 433 00:30:42,593 --> 00:30:45,012 மென்சீ, ஹோலென்பெக், மற்றும் டிமார்க்கோ பின்தொடர்ந்து வர்றீங்களா? 434 00:30:45,095 --> 00:30:47,848 பைலட்டுக்கு, டெயில் சொல்வது. டிமார்க்கோ நம்முடன் வரப் போகிறார். 435 00:30:48,348 --> 00:30:50,934 ஹோலென்பெக் விமானத்திலிருந்து குதிக்கிறார். எட்டு சூட்டுகள்... 436 00:30:51,852 --> 00:30:53,478 ஓன்பது. மொத்தம் பத்தும். 437 00:30:53,979 --> 00:30:54,980 நல்லது, மென்சீ. 438 00:30:55,480 --> 00:30:57,191 நார்மன். ஸ்ட்ரௌட். எப்படி இருக்கீங்க? 439 00:30:57,691 --> 00:30:59,109 நாங்க நலம், சார்! 440 00:31:00,485 --> 00:31:03,113 வெளியே காட்சியைப் பார்த்துகிட்டு, காற்றை சுவாசிச்சுகிட்டு இருக்கோம். 441 00:31:05,324 --> 00:31:08,243 திறமையா செயல்பட்டீங்க. நீங்க என்னுடன் இருந்தது பத்தி சந்தோஷமா இருக்கு. 442 00:31:08,327 --> 00:31:11,079 இந்த விமானத்துல உள்ள மத்தவங்களுக்கும் சேர்த்துதான் இதைச் சொல்றேன். 443 00:31:11,163 --> 00:31:12,289 சிறப்பான செயல்பாடு, மக்களே. 444 00:31:27,262 --> 00:31:28,263 ஹே, டக்? 445 00:31:29,264 --> 00:31:30,265 என்ன? 446 00:31:30,349 --> 00:31:32,142 நாம பிட்டிக்கை எப்போ இழந்தோம்னு தெரியுமா? 447 00:31:33,101 --> 00:31:36,522 அதை லாகுல குறிக்க எனக்கு நேரம் இருக்கலை. 448 00:31:36,605 --> 00:31:40,859 கடவுளே, கிராஸ், இந்த மொத்த விங்குலையும், எந்த நாவிகேட்டருக்கும் லாகுல பதிவு செய்ய 449 00:31:40,943 --> 00:31:44,154 -நேரம் இருந்ததாக எனக்குத் தெரியலை. -ஆம், சரியாச் செய்யலாமேன்னுதான், சரியா? 450 00:31:48,617 --> 00:31:49,743 எனக்குத் தெரியும், கிராஸ். 451 00:31:52,329 --> 00:31:55,791 என் யூகம் அவங்க கீழே விழுந்தது, 1100ல. 452 00:31:55,874 --> 00:31:59,127 சரி. புரியுது. 1100. 453 00:32:08,762 --> 00:32:11,765 மெடிட்டரேனியன் கடலுக்கு மேல் அல்ஜீரியாவிற்கு இன்னும் இரண்டு மணிநேரம் 454 00:32:13,267 --> 00:32:14,101 முக்கிய எரிபொருள் அளவு 455 00:32:14,184 --> 00:32:16,019 ஒரு என்ஜினுக்கு 100 கேலனுக்கும் குறைவாகப் போகும் வரை எரிபொருளை மாற்றாதே 456 00:32:16,103 --> 00:32:17,271 நாம் 600க்கு கீழே இருக்கிறோம், சார். 457 00:32:18,272 --> 00:32:21,608 பைலட் நாவிகேட்டருக்குச் சொல்வது. நம்மிடம் 600 கேலன்களுக்கும் குறைவாகத்தான் மீதம் உள்ளது. 458 00:32:21,692 --> 00:32:23,443 அதை வைத்துக்கொண்டு ஆப்பிரிக்கா வரை போக முடியுமா? 459 00:32:24,236 --> 00:32:27,739 இல்லை, மேஜர். இந்த வேகத்துல தொடர்ந்தால், நமக்கு இன்னும் 750 தேவைப்படலாம். 460 00:32:27,823 --> 00:32:29,825 முதல் பாயிண்டிலிருந்து எரிபொருள் கசிந்துகொண்டுதான் இருக்கிறது. 461 00:32:30,951 --> 00:32:31,952 ரோஜர். 462 00:32:33,203 --> 00:32:37,332 அணிக்கு லீட் பைலட் சொல்வது. நாம் செல்லக் கூடிய தூரத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். 463 00:32:38,292 --> 00:32:42,796 போல்ட்டால் இணைக்கப்படாத அனைத்தையும் தூக்கி எறி. பாம்ப்சைட், துப்பாக்கிகள், குண்டுகள், அனைத்தையும். 464 00:32:42,880 --> 00:32:45,841 பைலட்டுக்கு, குண்டு வீச்சாளர் சொல்வது. நீங்க என் பாம்ப்சைட்டைப் போடச் சொன்னீங்களா? 465 00:32:46,717 --> 00:32:49,970 நாம கடலின் மேலே போறோம், நார்ம். கிரௌட்களுக்கு அது கிடைக்காது. 466 00:32:50,053 --> 00:32:51,305 தூக்கி எறி. 467 00:33:00,230 --> 00:33:01,481 டர்ரெட்டை கழட்டுங்க. 468 00:33:08,739 --> 00:33:11,491 பைலட்டுக்கு, மேல் டர்ரெட் சொல்வது, மேலிருந்து எப்படி தெரியுது? 469 00:33:11,575 --> 00:33:13,452 நம்ம விமானம் உடைஞ்சு போயிருக்கு, ஆனால் பரவாயில்லை, சார். 470 00:33:18,749 --> 00:33:21,919 கேரிசன், பின்தங்கியிருப்பவர்கள் எப்படி இருக்காங்க? 471 00:33:23,295 --> 00:33:25,756 டிமார்க்கோக்கு எதுவும் ஆகல. கிளீவென் இப்போ குதிக்கிறார். 472 00:33:25,839 --> 00:33:28,300 வேன் நோய் தண்ணியில இறங்கப் போகிறார் போலத் தெரியுது. 473 00:33:31,220 --> 00:33:32,804 பைலட்டுக்கு, நாவிகேட்டர் சொல்வது, 474 00:33:32,888 --> 00:33:38,060 வேன் நோய் கடலில் பிரச்சினையின்றி இறங்கினார். நிலத்திலிருந்து சுமார் 350 மைல்கள் தாரத்தில். 475 00:33:38,644 --> 00:33:39,645 ரோஜர். 476 00:33:46,944 --> 00:33:47,945 நல்லதா? 477 00:33:48,737 --> 00:33:49,738 ஆமாம். 478 00:33:55,744 --> 00:33:56,745 லூயிஸ்... 479 00:33:58,622 --> 00:34:02,292 அந்தப் பக்கம் திரும்பு. அந்தப் பக்கம் திரும்பு. 480 00:34:06,213 --> 00:34:08,841 உனக்கு என் பெயர் தெரிய வேண்டாம், என் முகத்தையும் நீ மறந்துவிடணும். சரியா? 481 00:34:09,591 --> 00:34:10,425 சரி. 482 00:34:10,509 --> 00:34:12,177 நீ இங்கிலாந்திற்கு தப்பிக்க விரும்புறயா? 483 00:34:13,136 --> 00:34:15,848 -ஆமாம். -என்னால் உதவ முடியும். ஆனால் தெரிஞ்சுக்கோ, 484 00:34:17,099 --> 00:34:19,059 நீ இப்போவே ஜெர்மானியர்களிடம் சரணடைந்தால், 485 00:34:19,560 --> 00:34:22,353 ஜெனீவா உடன்படிக்கையின்படி, நீ ஒரு கைதியா இருப்ப, 486 00:34:22,855 --> 00:34:24,438 போர் முடியும்வரை உயிருடன் இருக்க வாய்ப்பு இருக்கு. 487 00:34:25,690 --> 00:34:27,400 ஆனால் நீ தப்பிக்கப் பார்த்தால், 488 00:34:28,777 --> 00:34:32,906 நீ பிடிபடும்போது உன்னை ஒற்றனாகக் கருதி, மரண தண்டனை கொடுப்பாங்க. 489 00:34:34,324 --> 00:34:35,449 உனக்குப் புரியுதா? 490 00:34:36,784 --> 00:34:37,786 புரியுது. 491 00:34:38,911 --> 00:34:43,792 நீ எதை செய்ய தேர்ந்தெடுக்கிற? சரணடைவதையா? அல்லது தப்பிப்பதையா? 492 00:34:56,054 --> 00:34:58,765 கிராங்க்? அதுதானா? அது ஆப்பிரிக்காவா? 493 00:35:00,267 --> 00:35:04,396 ஆம், அதுதான். அணிக்கு, பைலட் சொல்வது. நேரா பாருங்க, ஆப்பிரிக்கா! 494 00:35:09,526 --> 00:35:10,611 கமாண்ட், நாவிகேட்டர். 495 00:35:11,445 --> 00:35:13,155 கிராஸ், நாம எங்கே போகணுமோ அங்கேதான் போகிறோமா? 496 00:35:13,238 --> 00:35:14,948 அப்படி இல்லைன்னா நாம அந்த மணற்பரப்புல தரையிறங்கணும். 497 00:35:15,032 --> 00:35:16,033 ஆமாம். 498 00:35:16,992 --> 00:35:19,077 எந்த நிமிடமும் 184 பேஸ் நமக்குத் தென்படலாம். 499 00:35:21,413 --> 00:35:24,917 கிராஸ், நமக்கு எரிபொருள் தீர்ந்துபோச்சு. நீ உறுதியாத்தான் சொல்றயா? 500 00:35:28,629 --> 00:35:32,716 நான் உண்மையைத்தான் சொல்கிறேன், வீரர்களே. எனக்கு உறுதியாகத் தெரியும். 501 00:35:36,178 --> 00:35:37,179 போவோம். 502 00:35:42,017 --> 00:35:43,727 இங்கே பாதை பிரியுது பாரு, கிராஸ். 503 00:35:44,603 --> 00:35:46,230 அந்த புதிருக்கு விடை கிடைச்சால், நமக்கு நல்லாயிருக்கும். 504 00:35:46,313 --> 00:35:49,691 அந்தப் புதிருக்கு விடைதான் 184. கவனமா பார்த்துகிட்டே வா. 505 00:36:07,918 --> 00:36:08,919 நான் பார்த்துட்டேன்னு நினைக்கிறேன். 506 00:36:10,337 --> 00:36:13,090 பன்னிரெண்டு மணிக்கு கொஞ்சம் பக்கத்துல. 507 00:36:17,344 --> 00:36:19,513 பரவாயில்லை, கிராஸ். நெருங்கிட்டோம். 508 00:36:19,596 --> 00:36:21,849 -ஓ, நண்பா. -சரிதான். நல்ல முயற்சி. 509 00:36:22,724 --> 00:36:26,520 ஃஜூட்சூட் இரண்டுக்கு, கமாண்ட் பைலட் சொல்வது. விமான தளம் தெரியுது. 510 00:36:28,647 --> 00:36:32,192 -அணிக்கு, பைலட் சொல்வது, தரையிறங்க தயாராகுங்க. -வால்ஹாலாவுக்குப் போறோம், மக்களே. 511 00:36:33,193 --> 00:36:35,362 வால்ஹாலா, இதோ வந்துட்டோம், மக்களே. 512 00:36:55,549 --> 00:36:56,800 தரையிறங்கும் கியரை கீழே இறக்கு. 513 00:36:57,968 --> 00:37:01,805 தரையிறங்கும் கியர் கீழே வருது. வலது கியர் கீழே இருக்கு. 514 00:37:03,182 --> 00:37:06,894 இடது கியர் கீழே இருக்கு. ஃபிளாப்புகள் கால்வாசில இருக்கு. 515 00:37:12,983 --> 00:37:14,359 சபாஷ், நண்பர்களே. 516 00:37:29,124 --> 00:37:33,003 ஹே, பிளேக்லி, அந்தப் புதிருக்கு என்னதான் விடை? 517 00:37:34,171 --> 00:37:35,756 நீ எனக்குச் சொல்வன்னு நினைச்சேன். 518 00:37:38,050 --> 00:37:41,011 சரி, இது வால்ஹாலா இல்லைன்னு எனக்கு நிச்சயமா தெரியும். 519 00:37:50,062 --> 00:37:52,648 சரி, சாதிச்சுட்டோம், நண்பர்களே. எங்கே நம்முடைய வரவேற்பு குழுவைக் காணவில்லையே? 520 00:37:58,278 --> 00:38:00,614 கடவுளே. ஆப்பிரிக்காவிற்கு வருக, வீரர்களே. 521 00:38:02,824 --> 00:38:06,912 டெலர்கமா, அல்ஜீரியா 522 00:38:13,836 --> 00:38:15,671 அதோ தெரியுது விமான தளம். இன்னும் தெற்கே. 523 00:38:19,842 --> 00:38:23,053 என்ஜின் நான்கில் நமக்கு எரிபொருள் அழுத்தம் குறையுது. மிதக்கிறோம். 524 00:38:23,846 --> 00:38:26,014 நான் ரன்வேக்கு டக்குன்னு திருப்பப் போறேன். 525 00:38:31,812 --> 00:38:34,189 -என்ஜின் இரண்டை இழக்கிறோம். -மிதக்கச் செய். 526 00:38:38,318 --> 00:38:39,611 அனைத்து என்ஜின்களும் மிதக்கின்றன. 527 00:38:40,863 --> 00:38:43,365 அவ்வளவுதான். நாம இப்போ வெறுமனே காத்துல மிதந்துபோறோம். 528 00:38:49,788 --> 00:38:51,915 200 அடி. தரையிறங்கும் கியரைக் கீழே இறக்கப்போகிறேன். 529 00:38:52,416 --> 00:38:54,334 பொறு. அது நம்மை இன்னும் நிதானமாக்கிடும். 530 00:38:57,462 --> 00:38:59,339 -இப்போ கீழே இறக்கட்டுமா? -பொறு. 531 00:39:02,217 --> 00:39:03,218 100 அடி. 532 00:39:03,802 --> 00:39:04,803 பொறு. 533 00:39:08,056 --> 00:39:08,891 இப்போ. 534 00:39:08,974 --> 00:39:12,144 வலது தரையிறங்கும் கியர் கீழே இறங்குது. 535 00:39:12,644 --> 00:39:15,480 இடது கியர் கீழே இறங்கியிருக்கு. ஃபிளாப்புகள் கால்வாசியில் இருக்கின்றன. 536 00:39:31,538 --> 00:39:32,915 வந்து சேராமலே இருப்பதைவிட, தாமதமாகவாவது வந்து சேர்ந்தோமே. 537 00:39:32,998 --> 00:39:35,792 ஆம். அந்தக் கூடை-சேர்-வண்டியில் ஏறுவோம். 538 00:40:10,452 --> 00:40:11,453 நான் உதவுறேன். 539 00:40:13,580 --> 00:40:14,623 நலமா இருக்கீங்களா, மக்களே? 540 00:40:14,706 --> 00:40:16,542 -ஆமாம். -ஹே, நார்ம். 541 00:40:16,625 --> 00:40:18,418 -உனக்கு ஒண்ணும் ஆகலயே? -விமானத்திலிருந்து முதல் உதவி கிட்டை எடு. 542 00:40:18,502 --> 00:40:21,380 -இவங்களை எல்லாம் வண்டியில ஏத்துவோம். -மக்களே, நான் நல்லாதான் இருக்கேன். 543 00:40:21,463 --> 00:40:23,215 -அவனை வண்டியில ஏத்துங்க. கிட் சொல்றதைக் கேளுங்க. -ஏத்துங்க. 544 00:40:23,298 --> 00:40:24,591 -அவனைப் பார்த்துக்கொள், சரியா? -நான் கவனிச்சுக்கறேன். 545 00:40:26,134 --> 00:40:27,803 -மேஜர், நான் கவனிச்சுக்கறேன். -நீ பார்த்துக்கறயா? 546 00:40:28,303 --> 00:40:29,304 வா, வா. 547 00:40:32,349 --> 00:40:34,560 நீ எப்படித்தான் அந்த விமானத்தை ஆப்பிரிக்கா வரை ஓட்டிட்டு வந்தயோ தெரியாது, 548 00:40:35,811 --> 00:40:37,396 ரன்வே வரை கூட உன்னால ஓட்ட முடியலயே. 549 00:40:39,356 --> 00:40:40,440 இதோ இங்கேதானே இருக்கு. 550 00:40:45,445 --> 00:40:47,698 சரிதான். அதைக் கவனி, கவனி, கவனி. 551 00:40:49,366 --> 00:40:50,367 அடக் கடவுளே. 552 00:40:53,412 --> 00:40:57,249 -யார் அது? -நார்மன் ஸமித். ரேடியோ ஆபரேட்டர். 553 00:41:04,840 --> 00:41:06,133 நாலு விமானத்தை இழந்துட்டேன். 554 00:41:07,384 --> 00:41:08,385 எனக்குத் தெரியும். 555 00:41:11,889 --> 00:41:14,766 -நாம எவ்வளவு பேரு பிழைச்சு வந்திருக்கோம்? -21 விமானத்துல பதினொன்று பாக்கி. 556 00:41:16,018 --> 00:41:17,769 கிளேடருக்கு என்ன ஆச்சு? ஏதாவது சூட்டுகளைப் பார்த்தாயா? 557 00:41:18,729 --> 00:41:21,481 நான் எதையும் பார்க்கல. 558 00:41:21,565 --> 00:41:24,568 ஆம். அப்புறம் கர்ட்? 559 00:41:29,865 --> 00:41:30,866 எனக்குத் தெரியாது. 560 00:41:31,700 --> 00:41:33,118 ஆம், சரி, எனக்கு பிட்டிக்கை நல்லா தெரியும், 561 00:41:33,202 --> 00:41:36,622 ஒருவேளை இந்தத் தருணத்துல ஒரு பாட்டிலை திறந்து குடிச்சுட்டு இருக்கலாம். 562 00:41:41,251 --> 00:41:44,671 நாம இதைக் கடந்து செல்லப் போறோம். கமான். அதுல எப்போதும் நம்பிக்கையுடன் இரு. 563 00:41:47,257 --> 00:41:48,342 நிச்சயமா, பக்கி. 564 00:42:05,192 --> 00:42:08,487 Masters of the Air-ல் அடுத்து வருவது 565 00:42:09,363 --> 00:42:11,907 அவள்தான் உன் வழிகாட்டி, அவள் சொன்னபடி நீ கேட்கணும். 566 00:42:12,908 --> 00:42:14,952 உங்க பொருட்களை எடுத்துக்கொள்ளுங்க மக்களே. நாம வீட்டுக்குப் போறோம். 567 00:42:15,994 --> 00:42:17,663 இவர்கள் எல்லாம், புது முகங்கள்... 568 00:42:17,746 --> 00:42:20,040 மேஜர் ஈகன். மேஜர் கிளீவென். 569 00:42:21,041 --> 00:42:23,293 நான் பார்க்கக்கூடிய கடைசி அழகு முகம் உன்னுடையதாக இருக்கலாம்னு நினைக்கிறேன். 570 00:42:23,377 --> 00:42:25,128 நாம ஏதோ உண்மையா செய்யப் போறோம் என்பது போல இருக்கு. 571 00:42:25,212 --> 00:42:26,588 ஆம், நீ ஏதாவது செய்வ, சரிதான். 572 00:42:28,549 --> 00:42:31,426 நம்ம கூட இருந்திருக்க வேண்டிய, ஆனால் இல்லாமல் போன வீரர்களுக்காக. 573 00:42:31,510 --> 00:42:35,222 ஜெர்மன். அவங்க நம்ம நெட்வொர்க்கைப் பல வகையிலும் ஊடுருவப் பார்த்தாங்க. 574 00:42:39,226 --> 00:42:43,063 நாம மடிந்துப் போகும்போது, நம்ம இருவரையும் ஞாபகம் இருக்காது. இல்லாமலேயே இருந்திருக்கலாம். 575 00:42:43,939 --> 00:42:45,774 பேபி ஃபேஸ் என்ன ஆனான்? அவன் இறந்துவிட்டானா? 576 00:48:18,357 --> 00:48:20,359 தமிழாக்கம் அகிலா குமார்