1 00:01:07,401 --> 00:01:09,403 ஐசக் அஸிமோவின் நாவல்களை அடிப்படையாக கொண்டது 2 00:01:26,128 --> 00:01:28,255 எல்லா உலகத்திலும் பேய்கள் இருக்கின்றன. 3 00:01:29,173 --> 00:01:31,258 எல்லா வீடுகளையும் அவை ஆட்டிப்படைக்கின்றன. 4 00:01:33,844 --> 00:01:35,721 பேரரசின் அரண்மனையையும் கூட. 5 00:01:36,680 --> 00:01:39,558 குறிப்பாக பேரரசின் அரண்மனையையும். 6 00:01:40,225 --> 00:01:43,103 400 வருடங்களுக்கு முன்பு 7 00:01:43,854 --> 00:01:45,272 நீ எங்கே போயிருந்தாய்? 8 00:01:45,355 --> 00:01:47,274 கணிப்பொறி ப்ரோகிராமர்களுடன் இருந்தேன். 9 00:01:47,858 --> 00:01:49,860 இப்போதெல்லாம் நீ என்னை விட அவர்களுடன் தான் அதிகமாக இருக்கிறாய். 10 00:01:49,943 --> 00:01:50,944 முதலாம் க்ளியோன் 11 00:01:51,028 --> 00:01:52,863 அவர்களுக்கு மிகப்பெரிய வேலையைக் கொடுத்திருக்கிறீர்கள். 12 00:01:54,990 --> 00:01:56,575 நாம் அவர்களை மாற்ற வேண்டுமா? 13 00:01:56,658 --> 00:01:57,910 அவர்களே அதை முடித்துவிடுவார்கள். 14 00:01:59,036 --> 00:02:01,997 நான் உன்னை நம்பலாமா, டெமர்ஸல்? 15 00:02:02,623 --> 00:02:04,416 நீ பார்த்துக் கொள்வாயா? 16 00:02:05,125 --> 00:02:06,126 கண்டிப்பாக, க்ளியோன். 17 00:02:06,210 --> 00:02:07,419 அது மட்டுமல்ல. 18 00:02:08,753 --> 00:02:09,755 எல்லாமேதான். 19 00:02:10,547 --> 00:02:12,925 நான் இறந்த பிறகும் நீ இங்கேயே இருப்பாய் என்று எப்போதும் நினைத்தேன். 20 00:02:13,008 --> 00:02:17,554 ஆனால் இறப்பை நெருங்கும்போது நான் எதையும் எளிதாக நம்பிவிடக்கூடாது... 21 00:02:19,598 --> 00:02:21,391 என்ற எண்ணம் ஏற்படுகிறது. 22 00:02:22,142 --> 00:02:23,977 நான் பேரரசுக்கு விசுவாசமானவள். 23 00:02:24,061 --> 00:02:27,689 ஆம், ஆனால் பேரரசு உனக்கு விசுவாசமாக இருக்குமா? 24 00:02:29,149 --> 00:02:31,568 அது என்றும் உங்கள் இனத்திற்கு கருணை காட்டியதில்லை. 25 00:02:31,652 --> 00:02:34,905 நீங்கள் சோகமாக இருப்பதால் உணர்ச்சிவசப்படுகிறீர்கள். 26 00:02:37,533 --> 00:02:38,784 நான் இறந்துகொண்டிருக்கிறேன். 27 00:02:41,036 --> 00:02:42,955 நான் எதையும் சரிசெய்யாமல் போகிறேன். 28 00:02:43,455 --> 00:02:45,332 உங்கள் வாரிசு குறித்து மகிழ்ச்சியடையவில்லையா? 29 00:02:47,251 --> 00:02:50,420 திருமணம் மற்றும் வாரிசு குறித்த யோசனைகளை மீண்டும் கருத்தில் கொள்ளலாம். 30 00:02:50,504 --> 00:02:55,884 டெமர்ஸல், நீ எல்லாமாக இருப்பதால், ஒருவேளை அதன் காரணமாக... 31 00:02:58,262 --> 00:02:59,721 நீ அறியாத விஷயங்களும் இருக்கின்றன. 32 00:02:59,805 --> 00:03:01,723 எனக்கும் ஒருநாள் இறப்பு வரலாம். 33 00:03:02,266 --> 00:03:03,517 ஆம். 34 00:03:04,226 --> 00:03:06,353 ஆனால் அது விரைவில் வந்துவிட்டதாக நீ உணர்வதாக சந்தேகிக்கிறேன். 35 00:03:11,066 --> 00:03:14,194 ஸ்டார் பிரிட்ஜின் நிறைவை நான் பார்த்திருக்க வேண்டும். 36 00:03:15,612 --> 00:03:19,658 நான். என் மனது. என் கண்கள். 37 00:03:21,743 --> 00:03:24,913 நாம் ஒன்றாக சுற்றுப்பாதை மேடையில் ஏறி 38 00:03:24,997 --> 00:03:27,416 நாம் உருவாக்கிய அனைத்தையும் பார்த்திருக்க வேண்டும். 39 00:03:28,792 --> 00:03:30,127 ஒருநாள் அது நடக்கும். 40 00:03:32,921 --> 00:03:34,631 உங்கள் வம்சாவளி பல ஆண்டுகளுக்குத் தொடரும். 41 00:03:37,759 --> 00:03:40,971 400 வருடங்களுக்குப் பிறகு 42 00:03:41,471 --> 00:03:44,474 -அவரைப் பற்றி அடிக்கடி நினைப்பாயா? -அது உங்களுக்கே தெரியும். 43 00:03:45,559 --> 00:03:48,478 நான் எதையும் யாரையும் மறக்கவில்லை. 44 00:03:49,062 --> 00:03:50,814 ஸ்டார் பிரிட்ஜ் தாக்குதலுக்கு 19 ஆண்டுகளுக்குப் பிறகு 45 00:03:50,898 --> 00:03:52,316 எப்போதும் பேரரசரை பற்றியே நினைக்கிறேன். 46 00:03:52,983 --> 00:03:55,986 தளத்தின் சுற்றுப்பாதை துரிதமான வேகத்தில் அழிந்து கொண்டிருக்கிறது. 47 00:03:57,863 --> 00:04:01,533 அது தங்கள் தலையில் விழுந்துவிடுமோ என கவலைப்படும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். 48 00:04:01,617 --> 00:04:03,493 அவற்றைப் பற்றி கவலைப்படுவதுதான் அவர்களது வேலை. 49 00:04:03,577 --> 00:04:05,078 நாம் கவலைப்பட தேவையில்லையா? 50 00:04:10,417 --> 00:04:13,921 இது இன்னும் உன்னுடையதுதான், ஆனால் இனிமேல் என்னுடையது அல்ல. 51 00:04:15,172 --> 00:04:16,673 இவருடையதாக இல்லாமல் போனது போலவே. 52 00:04:17,466 --> 00:04:19,551 இந்த கடைசி நாளை எப்படி கழிக்கப்போகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். 53 00:04:20,761 --> 00:04:22,387 நீங்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். 54 00:04:24,056 --> 00:04:25,265 எனக்கும் அதில் சந்தேகம் இருக்கிறது. 55 00:04:26,183 --> 00:04:30,771 ஆனால் நான் இறக்கும் நேரத்தில் என்னை தனித்துவமாக உணர செய்ததற்கு நன்றி. 56 00:04:35,901 --> 00:04:37,194 அது அவரை பெரிதும் பாதித்தது. 57 00:04:38,195 --> 00:04:40,489 சிம்மாசனத்தில் அமரவைக்க குழந்தை டான் மட்டுமே அவரிடம் இருந்தார். 58 00:04:41,365 --> 00:04:42,741 இவரது கண்களை கொண்ட குழந்தை. 59 00:04:44,326 --> 00:04:48,664 எல்லா விதத்திலும் ஒரே மாதிரியானவர்கள், இருந்தாலும் அது ஒரு குழந்தை. 60 00:04:50,165 --> 00:04:52,251 நான் அவரைப் பற்றி நினைத்தால், அதை பற்றித் தான் நினைப்பேன். 61 00:04:53,836 --> 00:04:55,420 அவருக்கு நீயும் இருந்தாய். 62 00:04:57,631 --> 00:05:01,718 மாஸ்டர் இலானை பாருங்கள், பேரரசே. உங்கள் உடைகளை சரிசெய்ய காத்திருக்கிறார். 63 00:05:21,446 --> 00:05:22,865 தொடங்கலாமா? 64 00:05:27,244 --> 00:05:29,997 வேலைப்பாடுகள், அருமையாக இருக்கிறது. 65 00:05:34,293 --> 00:05:35,878 தையலுக்கு எதை உபயோகிக்கலாம்? 66 00:05:35,961 --> 00:05:37,504 ஜேடு, பரவாயில்லை. 67 00:05:44,553 --> 00:05:46,013 ஷூ, ஷூ. 68 00:05:57,149 --> 00:05:58,442 மன்னித்துவிடுங்கள், பேரரசே. 69 00:05:58,525 --> 00:05:59,776 நான் எடை குறைந்திருக்கிறேன். 70 00:05:59,860 --> 00:06:01,987 -உங்கள் உடல் அமைப்பு... -நான் மெலிகிறேன். 71 00:06:03,322 --> 00:06:05,824 இந்த உலகம் என்னை தூரத்திலிருந்து பார்க்க தொடங்குகிறது. 72 00:06:07,075 --> 00:06:09,244 இந்த ஆடை நேர்த்தியாக இருக்கிறது, இலான். 73 00:06:10,621 --> 00:06:14,833 இறுதி சடங்கின் போது இதை அணிவது என் பாக்கியம். 74 00:06:14,917 --> 00:06:17,002 நன்றி, பேரரசே. 75 00:06:17,794 --> 00:06:19,546 வேலையை முடிப்போமா? 76 00:06:24,718 --> 00:06:28,138 இலான், இதை அந்த பெண்ணிடம் விட்டுவிடு. 77 00:06:44,488 --> 00:06:47,658 சகோதரர் டஸ்க்? நீங்கள் இங்கே இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. 78 00:06:52,454 --> 00:06:55,249 அனக்ரியான். தெஸ்பிஸ். 79 00:06:55,332 --> 00:06:57,918 நான் இறந்த பிறகு இவற்றை பேசுவீர்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது. 80 00:06:58,001 --> 00:07:00,754 காட்டுமிராண்டிகளின் எதிர்ப்பை அழித்துவிட்டோம். பேரரசில் இருந்து அகற்றிவிட்டோம். 81 00:07:01,463 --> 00:07:03,924 நீங்கள் பேசாத எதைப் பற்றி நாங்கள் பேச விரும்புகிறீர்கள்? 82 00:07:04,007 --> 00:07:08,262 தெரியவில்லை. நான் பேசாத எதைப் பற்றி பேசுவது என்று முடிவு செய்ய முயற்சிக்கிறேன். 83 00:07:08,345 --> 00:07:09,596 விளிம்பு பிரதேசங்களைப் பற்றியா? 84 00:07:09,680 --> 00:07:15,394 ஏதோவொன்று. இவற்றில் ஏதாவது நிஜமாகவே நம் கட்டுப்பாட்டில் உள்ளதா என்பது பற்றி. 85 00:07:15,477 --> 00:07:20,315 எத்தனையோ வார்த்தைகள் என்னிடம் மீதமுள்ளன, அவற்றை வீணாக்குவதை வெறுக்கிறேன். 86 00:07:20,399 --> 00:07:22,526 விளிம்பு பிரதேசங்களைப் பற்றி பேசும்போதுதான் அவற்றை வீணாக்குகிறீர்கள். 87 00:07:22,609 --> 00:07:23,861 நான் செல்டனைப் பற்றி பேசுகிறேன். 88 00:07:23,944 --> 00:07:24,945 அவன் இறந்து நீண்ட காலமாகிவிட்டது. 89 00:07:26,613 --> 00:07:27,656 விரைவில் மறந்துவிட்டோம். 90 00:07:27,739 --> 00:07:31,285 அதனால் அவனுடைய வார்த்தைகள் இந்த பேரரசில் மதிப்பற்றதாகிவிடுமா? 91 00:07:31,368 --> 00:07:33,161 சகோதரரே, பேரரசு வலிமையாக இருக்கிறது... 92 00:07:37,833 --> 00:07:40,169 முதலாம் க்ளியோனின் பாரம்பரியம். 93 00:07:40,252 --> 00:07:43,005 அதை பாதுகாக்க வழியிருக்கிறதா என்று வியக்கிறேன். 94 00:07:43,088 --> 00:07:46,466 உந்துதல் லிஃப்ட் மூலம் அதை நிலைப்படுத்த வேண்டாமா? அதை விண்மீன் மண்டலத்திற்குள் தள்ள வேண்டாமா? 95 00:07:47,050 --> 00:07:48,218 எதுவரை? 96 00:07:48,302 --> 00:07:53,015 நமக்கு எந்த கனவும் இல்லை என்பதற்காக முதலாம் க்ளியோன் கண்ட கனவின் இறுதி எச்சங்களை 97 00:07:53,599 --> 00:07:55,017 நாம் அழிக்க முடியாமல் போகும் வரை. 98 00:08:02,524 --> 00:08:03,650 சகோதரர் டஸ்க். 99 00:08:05,402 --> 00:08:10,824 நாம்தான் முதலாம் க்ளியோனின் மாபெரும் கனவு, ஸ்டார் பிரிட்ஜ் அல்ல. 100 00:08:17,664 --> 00:08:18,874 கனவு காண்பவர். 101 00:08:22,836 --> 00:08:24,463 அறிஞர். 102 00:08:26,131 --> 00:08:27,758 இரசவாதி. 103 00:08:31,887 --> 00:08:33,096 11ஆம் க்ளியோன் வர்ணம் தீட்டுபவர் 104 00:08:33,179 --> 00:08:34,640 அவர்களோடு நானும். 105 00:08:38,268 --> 00:08:40,645 முதலாம் க்ளியோன் கனவு காண்பவர் 106 00:08:50,447 --> 00:08:52,366 என் வாழ்க்கை முழுவதும் முயற்சித்திருக்கிறேன், 107 00:08:53,033 --> 00:08:56,620 ஆனால் என்னால் அந்த முகத்தை கொண்டு வர முடியுமென்று நினைக்கவில்லை. 108 00:08:58,038 --> 00:09:01,708 வாருங்கள். உங்கள் சகோதரர்கள் உங்கள் கடைசி பரிசோடு காத்திருக்கிறார்கள். 109 00:09:02,668 --> 00:09:07,047 இந்த அருமையான உணவிற்காக உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், சகோதரர்களே. 110 00:09:07,548 --> 00:09:11,260 ஒவ்வொரு பிடி உணவிலும் உங்கள் அக்கறையை சுவைக்க முடிகிறது. 111 00:09:11,885 --> 00:09:17,474 உங்கள் நேரத்தையும், கவனத்தையும் ஒதுக்கியதை நான் மிகவும் பாராட்டுகிறேன். 112 00:09:18,308 --> 00:09:19,893 உங்களை வரவேற்கிறோம், சகோதரரே. 113 00:09:19,977 --> 00:09:22,729 ஆனால் இது பரிசல்ல. 114 00:10:05,731 --> 00:10:09,776 பேரரசின் முக்கிய நகரான ட்ரான்டோருக்கு வரவேற்கிறேன். 115 00:10:09,860 --> 00:10:11,737 பார்த்து நீண்ட காலமாகிவிட்டது. 116 00:10:13,405 --> 00:10:15,157 அவர் வல்லமையோடு இருக்கிறார், இல்லையா? 117 00:10:15,240 --> 00:10:16,909 அமைதியை மதித்து மகிழுங்கள். 118 00:10:16,992 --> 00:10:18,118 ஆம். 119 00:10:18,869 --> 00:10:22,623 அவரை கௌரவப்படுதும் விதமாக பெரிதாக ஏதாவது கட்டுவோம். உங்களுக்காக. 120 00:10:24,541 --> 00:10:27,628 அமைதியை மதித்து மகிழுங்கள். 121 00:11:58,635 --> 00:12:02,431 நீங்கள் இங்கிருக்கக்கூடாது. உங்களுக்கே தெரியும். 122 00:12:02,514 --> 00:12:07,019 தான் குழந்தையாக இருப்பதை பார்க்க விரும்பிய முதல் நபராக நான் இருக்க முடியாது. 123 00:12:07,102 --> 00:12:09,062 அதனால்தான் நாம் விதியை உருவாக்கினோம். 124 00:12:09,146 --> 00:12:12,733 நான் இதற்கு முன்பு அந்த பாடலை கேட்டதில்லை. அல்லது கேட்டிருக்கிறேனா? 125 00:12:18,780 --> 00:12:21,491 பேரரசு உன்னை விரும்புவதில் வியப்பேதுமில்லை. 126 00:12:23,493 --> 00:12:28,332 அந்த குழந்தையை ஒரு அப்பாவியாக என்னால் பார்க்க முடியவில்லை. 127 00:12:28,415 --> 00:12:29,833 செல்டன் நினைத்தது தவறென்றாலும்... 128 00:12:32,085 --> 00:12:34,129 அதில் இயற்கைக்கு மாறாக ஏதோ இருக்கிறது. 129 00:12:36,423 --> 00:12:37,424 நீங்கள் போக வேண்டும். 130 00:12:38,884 --> 00:12:40,135 நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். 131 00:12:50,646 --> 00:12:54,066 நான் பிறப்பதை நானே பார்ப்பது, விசித்திரமானது. 132 00:14:05,053 --> 00:14:08,557 தூங்குங்கள். உங்களை நாளை சந்திக்கிறேன். 133 00:14:08,640 --> 00:14:10,267 இன்று இரவு நீ எங்கள் முதல் சகோதரனை... 134 00:14:11,185 --> 00:14:14,438 பழைய ஸ்டார் பிரிட்ஜ்ஜில் பார்ப்பதைப் நான் பார்த்தேன். 135 00:14:15,439 --> 00:14:17,191 நாங்கள் உனக்கு போதவில்லையா? 136 00:14:19,193 --> 00:14:21,236 அதனால்தான் நீ அவரில்லாமல் வருந்துகிறாயா? 137 00:14:23,614 --> 00:14:25,574 ஓ, இல்லை, அன்பு சகோதரரே. 138 00:14:27,159 --> 00:14:28,368 நீங்கள் போதும். 139 00:14:41,465 --> 00:14:44,885 நீங்கள் எப்போதும் என்னை விட்டு பிரிந்துவிடுகிறீர்கள். 140 00:15:35,602 --> 00:15:38,397 நீ நம் மென்மையின் பெரும்பகுதியை ஆக்கிமித்துவிட்டாய். 141 00:15:39,523 --> 00:15:43,026 சகோதரர் டான், இப்போது டே. 142 00:15:56,582 --> 00:15:59,960 நன்றி, சகோதரர் டஸ்க். 143 00:16:12,556 --> 00:16:15,851 அதோடு புதிய டான், பிறந்துவிட்டான். 144 00:16:16,602 --> 00:16:19,563 உனக்கு நீண்ட ஆயுள் இருக்கிறது. 145 00:16:25,736 --> 00:16:28,614 சகோதரர் டார்க்னெஸ், நேரம் வந்துவிட்டது. 146 00:16:44,213 --> 00:16:45,964 கனவு உங்களுடன் தொடர்கிறது. 147 00:16:46,048 --> 00:16:49,134 அதை நீங்கள் உயிர்ப்புடன் வைத்திருந்ததால். 148 00:17:10,571 --> 00:17:11,573 அழாதே. 149 00:17:17,204 --> 00:17:18,204 உங்களுக்கு எதுவுமில்லை. 150 00:17:19,540 --> 00:17:20,874 எல்லாம் சரியாக இருக்கிறது. 151 00:17:24,711 --> 00:17:26,003 இல்லை. 152 00:17:28,674 --> 00:17:30,008 ஏதோ தவறாக தெரிகிறது. 153 00:17:49,069 --> 00:17:50,237 டெமர்ஸல். 154 00:17:51,363 --> 00:17:54,533 நான் எதையும் யாரையும் மறக்கவில்லை. 155 00:17:56,493 --> 00:17:58,579 பேரரசு என்றும் என் மனதில் இருக்கும். 156 00:19:04,019 --> 00:19:06,522 உயிருடன் இருப்பது என்பதே பேய்களை அறிந்திருப்பதுதான். 157 00:19:13,654 --> 00:19:15,614 நாம் காதுகொடுத்து கேட்டால் அவர்களின் முணுமுணுப்புகள் கேட்கும். 158 00:19:16,114 --> 00:19:19,576 17 வருடங்களுக்குப் பிறகு 159 00:19:20,077 --> 00:19:22,454 நம் எல்லோரையும் தீர்க்கதரிசிகள் ஆட்டிப்படைக்கிறார்கள். 160 00:19:22,955 --> 00:19:25,541 14ஆம் க்ளியோன் 161 00:19:26,041 --> 00:19:29,628 கண்டிப்பாக இதை அழிக்க வேண்டுமா, சகோதரர் டான்? 162 00:19:29,711 --> 00:19:30,712 ஆம். 163 00:19:31,547 --> 00:19:32,548 என் அறிவு விரிவடைந்துவிட்டது. 164 00:19:38,637 --> 00:19:41,098 நம்முடைய பேரழிவில் நாம் இறந்தவர்களை ஒதுக்கிவிடுகிறோம். 165 00:19:45,519 --> 00:19:48,856 பேரரசு பல க்ளியோன் தலைமுறைகளை கண்ட அதே காலகட்டத்தில், 166 00:19:48,939 --> 00:19:51,567 ஃபவுண்டேஷன் டெர்மினஸில் மக்களை குடியமர்த்தத் தொடங்கிவிட்டது. 167 00:19:52,985 --> 00:19:56,321 பேரரசு ஹேரியை குறைத்து மதிப்பிட்டது. நாம் எல்லோரும் தான். 168 00:19:58,031 --> 00:20:01,994 க்ளியோன்கள் மரண தண்டனைக்குப் பதிலாக நாடுகடத்துவார்கள் என்றும், தனது ஆதரவாளர்களின்... 169 00:20:03,996 --> 00:20:06,748 இறுதி புகலிடமாக டெர்மினஸ் இருக்கும் என்றும் ஹேரி கணித்திருந்தார். 170 00:20:20,345 --> 00:20:23,765 அவர்களது வருகையின் ஒவ்வொரு அம்சமும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது... 171 00:20:27,769 --> 00:20:29,605 மக்கள் இங்கு தரையிருக்கும்போது... 172 00:20:32,941 --> 00:20:34,902 எங்கே தங்கள் முகாமை அமைப்பார்கள் என்பது கூட. 173 00:20:52,336 --> 00:20:54,671 வேறு ஏதோவொன்று ஏற்கனவே அங்கிருப்பதை 174 00:20:54,755 --> 00:20:58,759 கண்டுபிடித்தபோது அவர்களின் ஆச்சரியத்தை கற்பனை செய்து பாருங்கள். 175 00:21:01,970 --> 00:21:04,431 என்ன கொடுமை அது? 176 00:21:26,537 --> 00:21:28,121 அது ஆய்வுகளில் இல்லை. 177 00:21:28,205 --> 00:21:29,706 நாம் திரும்பி போக வேண்டுமா? 178 00:21:29,790 --> 00:21:32,918 எங்கே திரும்பி போவது, மரி? எப்போதும் இது ஒரு வழிப் பயணம் தான். 179 00:21:33,669 --> 00:21:36,755 -நான் சென்று பார்க்கிறேன். -இல்லை. நாம் ஒன்றாகப் போவோம். 180 00:21:44,930 --> 00:21:46,765 லோவ்ரி, உனக்கு ஒன்றுமில்லையே? 181 00:21:46,849 --> 00:21:47,933 -ஆம். -வா போகலாம். 182 00:21:48,016 --> 00:21:50,394 -கொஞ்சம் தலை சுற்றுகிறது. -வா போகலாம். 183 00:21:55,065 --> 00:21:56,275 திரும்பி வாருங்கள். 184 00:21:58,902 --> 00:22:00,654 ஆபஸ்! திரும்பி வா. 185 00:22:12,499 --> 00:22:14,918 அது வால்ட் என்று அறியப்பட்டது. 186 00:22:15,752 --> 00:22:18,672 பல தசாப்தங்களாக, அதைச்சுற்றி எண்ணிலடங்கா கதைகள் புனையப்பட்டன. 187 00:22:20,924 --> 00:22:23,760 இது ஏலியன்களால் கைவிடப்பட்ட ஒரு பழங்கால கலைப்பொருள் என்றும்... 188 00:22:26,513 --> 00:22:29,183 க்ளியோன்களால் ஏற்கனவே அனுப்பப்பட்ட ஒரு கண்காணிப்பு நிலையம் என்றும். 189 00:22:31,393 --> 00:22:33,520 வால்ட் யாரும் அதை நெருங்க 190 00:22:33,604 --> 00:22:37,191 அனுமதிப்பதில்லை என எல்லா காலனிவாசிகளும் உறுதியாக அறிந்திருந்தனர். 191 00:22:38,442 --> 00:22:40,819 எனவே அவர்கள் தள்ளியே இருந்தனர். 192 00:22:56,251 --> 00:22:57,961 விண்வெளி கப்பலை பிரித்து... 193 00:22:59,796 --> 00:23:01,673 அதிலிருந்த பாகங்களை வைத்து முகாமை அமைத்தனர். 194 00:23:06,553 --> 00:23:10,390 ஒரு காலத்தில் மர்மமாக இருந்தது சுவாரஸ்யமற்று போனது. 195 00:23:16,438 --> 00:23:18,190 அவளது குணம் கடுமையானது என அவளுடைய ஆசிரியர்கள் சொன்னார்கள். 196 00:23:19,483 --> 00:23:20,567 அவள் வெளியாள். 197 00:23:22,152 --> 00:23:23,278 நல்லது. 198 00:23:23,362 --> 00:23:25,239 நான் சொல்வதை நீ கேட்பதில்லை, ஆபஸ். 199 00:23:25,906 --> 00:23:26,907 அவள் கனவு காண்பவள். 200 00:23:28,158 --> 00:23:30,160 அவள் கவனம் சிதரியவள். 201 00:23:31,954 --> 00:23:33,914 உன்னைப் போல அவளும் ஒரு சிந்தனையாளர் தான். 202 00:23:37,167 --> 00:23:38,585 அவளது கவனம் சிதறவில்லை. 203 00:23:40,003 --> 00:23:41,088 அவளுக்குத் தெரியும். 204 00:23:41,880 --> 00:23:45,008 அவளைப் பார். அது அவளை வசீகரிக்கிறது. 205 00:23:50,305 --> 00:23:51,306 அது அழகாக இருக்கிறது. 206 00:23:52,891 --> 00:23:54,142 அது ஆபத்தானது. 207 00:23:54,226 --> 00:23:56,019 அதற்குள் என்ன இருக்குமென்று நினைக்கிறீர்கள்? 208 00:23:56,103 --> 00:23:57,980 எங்களுக்குத் தெரியாது. 209 00:23:58,063 --> 00:23:59,982 பிறகு எப்படி அது ஆபத்தானது என்கிறீர்கள்? 210 00:24:06,488 --> 00:24:07,489 வா. 211 00:24:09,449 --> 00:24:11,952 இப்போது 212 00:25:16,058 --> 00:25:17,059 போ. 213 00:25:18,936 --> 00:25:19,937 இங்கிருந்து போய்விடு. 214 00:26:04,439 --> 00:26:07,067 ஒருநாள் என்னை கண்டுபிடித்ததற்கு நீங்கள் மிகவும் வருத்தப்பட போகிறீர்கள். 215 00:26:07,150 --> 00:26:08,235 நீ அழகாக இருக்கிறாய். 216 00:26:08,318 --> 00:26:09,736 ஆம், பல ஆடைகளை ஒன்றினைத்திருக்கிறேன். 217 00:26:09,820 --> 00:26:12,030 -எந்த பாகங்கள்? -வலது காலணியுடன் இடது காலணியை. 218 00:26:12,114 --> 00:26:13,657 எப்படி அதை பார்க்கத் தவறினேன்? 219 00:26:14,491 --> 00:26:16,326 உன் கடுமையான வேலை எப்படிப் போகிறது? 220 00:26:16,410 --> 00:26:18,370 இப்போதுதான் மேட்டுப்பகுதிகளை கண்காணித்துவிட்டு வந்தேன். 221 00:26:18,453 --> 00:26:21,415 லைக்கன் படுக்கைகள் சுருங்குகின்றன. ஐஸ் லூன்கள் தெற்கு நோக்கி பறக்கின்றன. 222 00:26:21,498 --> 00:26:23,375 அப்படியென்றால் ஒரு நல்ல இதமான வசந்த காலம் வரப்போகிறது. 223 00:26:23,458 --> 00:26:24,710 அதை தவறவிடவில்லை என்று சொல்லுங்கள். 224 00:26:25,669 --> 00:26:27,421 அந்த கந்தகத்தின் நெடியையா? 225 00:26:28,714 --> 00:26:29,715 உறைபனியையா? 226 00:26:29,798 --> 00:26:33,218 ஒரு வார்டனாக இருப்பது என்னை விட உனக்கு நன்றாக பொருந்துகிறது. 227 00:26:35,470 --> 00:26:37,514 அட. அது பெரியது, இல்லையா? 228 00:26:37,598 --> 00:26:42,227 ஆம். பெண் பிஷப்ஸ் க்ளா. 600 கிலோ வரை இருக்கலாம். 229 00:26:42,311 --> 00:26:45,230 அது கடந்த சில வாரங்களாக இரவில் வேலி எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்று சோதிக்கிறது. 230 00:26:45,314 --> 00:26:48,525 அதை மேபல் என்று அழைக்கப்போகிறேன். அது தனியாக இருக்கிறது. 231 00:26:50,402 --> 00:26:53,572 சால்வோர், காலையில் இந்த நேரத்தில் ஏன் இங்கு என்னை வரவைத்தாய்? 232 00:26:55,616 --> 00:26:58,702 என் மகள் சொல்ல தயங்குவது எனக்குத் தெரியும். சொல். 233 00:26:59,870 --> 00:27:01,788 நான் ஒரு சிறிய சோதனை செய்தேன். 234 00:27:03,832 --> 00:27:06,585 செல்ல முடியாத பகுதியில் ஏதோ தவறாக இருக்கிறது. 235 00:27:07,169 --> 00:27:08,962 இப்போது ஆராய எது உன்னை நிர்பந்தித்தது? 236 00:27:09,046 --> 00:27:10,464 தெரியவில்லை. உள்ளுணர்வு? 237 00:27:11,924 --> 00:27:13,759 அதை ஆராய்ந்தேன். ஆதாரம் கிடைத்தது. 238 00:27:13,842 --> 00:27:15,719 கண்டிப்பாக. நீ அவளிடம் சொல்லவில்லையா? 239 00:27:15,802 --> 00:27:17,137 முதலில் உங்களுக்கு சொல்ல நினைத்தேன். 240 00:27:17,221 --> 00:27:20,307 அதை வரவேற்கிறேன். ஆனால் அது அவளுக்குத் தெரிய வேண்டும். 241 00:27:22,434 --> 00:27:23,894 ஆதாரத்தை நன்றாக வலியுறுத்தி சொல். 242 00:27:55,092 --> 00:27:57,427 டாக்டர் செல்டனின் முயற்சிக்கு நன்றி, 243 00:27:57,511 --> 00:28:00,180 12ஆம் க்ளியோன் நம் முகாமை... 244 00:28:00,264 --> 00:28:01,473 நேர பராமரிப்பை பொறுத்தவரை, 245 00:28:01,557 --> 00:28:03,809 நீர் கடிகாரம் தான் மிகவும் துல்லியமான கருவி. 246 00:28:03,892 --> 00:28:08,438 சரி. ஆனால் அது வேலை செய்ய தண்ணீர் தேவைப்படும், இல்லையா? 247 00:28:08,522 --> 00:28:09,815 கண்டிப்பாக. 248 00:28:09,898 --> 00:28:12,150 தண்ணீர் தீர்ந்துவிட்டால் என்னவாகும், நோவிஸ் ஜோர்ட்? 249 00:28:12,234 --> 00:28:16,113 சூரிய கடிகாரத்துக்கு, உங்களுக்கு நோமோன் போதும். அது ஒரு நிறுத்திவைக்கப்பட்ட முக்கோண தகடு. 250 00:28:16,196 --> 00:28:18,073 அதோடு, கண்டிப்பாக... சூரியனும். 251 00:28:19,324 --> 00:28:25,455 அழிவுக்குப் பிறகு நாகரிகத்தை மீண்டும் உருவாக்கும் பொறுப்பை ஹேரி செல்டன் நம்மிடம் ஒப்படைத்தார். 252 00:28:25,539 --> 00:28:26,748 நாம் எதையும் யூகிக்க முடியாது. 253 00:28:26,832 --> 00:28:29,251 எதிர்காலத்தில் உயிர் பிழைத்தவர்களுக்கு படிக்க தெரிந்திருக்குமா இல்லையா, 254 00:28:29,334 --> 00:28:30,627 எந்த மொழியை பேசுவார்கள் என்று. 255 00:28:30,711 --> 00:28:33,589 அவர்கள் எந்த உலகங்களில் சிதறடிக்கப்படுவார்கள் என்று கூட நமக்குத் தெரியாது. 256 00:28:34,590 --> 00:28:37,384 ஒருவேளை அவர்கள் சிக்னஸ் பிரைமில் இருந்தால், 257 00:28:38,010 --> 00:28:41,221 அங்கே வெறும் ஈரப்பதம் கொடிகளில் இருந்து மட்டுமே கிடைக்கும் என்றால்? 258 00:28:41,305 --> 00:28:45,142 எனவே, ஆம், இந்த தண்ணீர் கடிகாரம் மிக துல்லியமானதுதான், 259 00:28:46,185 --> 00:28:47,853 ஆனால் சூரிய கடிகாரம் நடைமுறைக்கு ஏற்றது. 260 00:28:47,936 --> 00:28:51,690 நம் சந்ததியினர் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் நிகழ்வுக்கும் நாம் ஒன்றை கண்டுபிடிக்க முடியாது. 261 00:28:51,773 --> 00:28:54,234 ஒரே காரணத்துக்காக, எல்லா புதுமையையும் நம்மால் பாதுகாக்க முடியாது, 262 00:28:54,318 --> 00:28:56,528 எனவே நாம் தேர்வு செய்துகொண்டே இருக்க வேண்டும். 263 00:28:58,363 --> 00:28:59,907 வீழ்ச்சி வரும் வரை. 264 00:29:00,490 --> 00:29:02,326 நான் தண்ணீர் கடிகாரத்தை தேர்வு செய்வேன். 265 00:29:02,409 --> 00:29:05,078 நீ இன்னும் இங்கு பயிற்சியில் இருந்தால், நீ செய்திருக்கலாம். 266 00:29:05,162 --> 00:29:06,663 மன்னிக்கவும், அது... 267 00:29:06,747 --> 00:29:08,290 நீ இருக்கும் இடத்திற்கு பொருத்தமானவள்தான், 268 00:29:08,373 --> 00:29:10,459 எங்களை பாதுகாக்கிறாய், ஃபவுண்டேஷனை பாதுகாக்கிறாய்... 269 00:29:10,542 --> 00:29:12,336 நீங்கள் உயிர்வாழ்வதை உறுதி செய்கிறேன். ஃபவுண்டேஷன்... 270 00:29:12,419 --> 00:29:14,338 எல்லாம் ஒன்றுதான். நாங்கள்தான் ஃபவுண்டேஷன். 271 00:29:14,421 --> 00:29:17,549 நான் இல்லை. ஆனால் நீங்கள் நம்புகிறீர்கள். அது பரவாயில்லை. 272 00:29:17,633 --> 00:29:19,468 இல்லை. இது ஒரு சமயக் கோட்பாட்டு என்பது போல பேசாதே. 273 00:29:19,551 --> 00:29:22,804 நம் தலைமுறையில் உள்ள சிலருக்கு உண்மையான மத வெறி எப்படி இருக்கும் என்று தெரியும். 274 00:29:22,888 --> 00:29:25,265 நான் என்ன சொல்ல வந்தேன் என்று கேட்க விரும்புகிறீர்களா? 275 00:29:30,479 --> 00:29:32,439 அதன் அருகில் இருப்பது எனக்குப் பிடிக்காது என்று உனக்கே தெரியும். 276 00:29:32,523 --> 00:29:35,651 ஆதாரம் கேட்பீர்கள் என்று அப்பா சொன்னார், இதை நீங்களே பார்க்க வேண்டும். 277 00:29:38,695 --> 00:29:40,113 செல்ல முடியாத பகுதி விரிவடைகிறது. 278 00:29:41,448 --> 00:29:44,618 அது அங்கு தொடங்கும். இப்போது அது இங்கே தொடங்குகிறது. 279 00:29:46,453 --> 00:29:49,498 அது தொடர்ந்து விரிவடைந்தால், நாம் நகரத்தை காலி செய்ய வேண்டியிருக்கும். 280 00:30:15,816 --> 00:30:17,776 நான் உன்னை முதன் முதலில் இங்கே கண்டது நினைவிருக்கிறது. 281 00:30:18,735 --> 00:30:20,821 நான்கு வயது சிறுமி, நள்ளிரவு, 282 00:30:21,697 --> 00:30:25,117 அது ஒன்றுமில்லை என்பது போல அதன் கீழே... நின்றுகொண்டிருந்தாய். 283 00:30:27,578 --> 00:30:29,663 உன் பெயரை சொல்லி அழைத்தபோதும் நீ திரும்பவில்லை. 284 00:30:30,247 --> 00:30:32,291 ஆம், அது என்னை அழைக்கிறது என்று நினைத்தேன். 285 00:30:32,374 --> 00:30:33,458 பேய். 286 00:30:35,294 --> 00:30:36,628 கற்பனை நண்பன் போல. 287 00:30:38,297 --> 00:30:41,466 நான் தரையில் படுத்து உன்னிடம் ஊர்ந்து வர முயற்சித்தேன், ஆனால் வலி அதிகமாக இருந்தது. 288 00:30:41,550 --> 00:30:42,885 நீ… 289 00:30:44,970 --> 00:30:46,054 என்னைப் பார்த்தாய். 290 00:30:47,848 --> 00:30:51,852 வால்ட் ஏன் உங்களை காயப்படுத்துகிறது ஆனால் என்னை ஒன்றும் செய்வதில்லை என புரியவில்லை. 291 00:30:52,352 --> 00:30:53,604 நீ தனித்துவமானவள், சால்வோர். 292 00:30:54,897 --> 00:30:56,106 எப்போதும் அப்படித்தான். 293 00:30:58,609 --> 00:30:59,985 பிறகு ஏன் அதை ரகசியமாக வைத்திருக்கிறீர்கள்? 294 00:31:03,071 --> 00:31:05,407 மக்கள் உன்னை வித்தியாசமாக நடத்துவதை உன் தந்தையும் நானும் விரும்பவில்லை. 295 00:31:05,490 --> 00:31:09,077 ஆம், ஆனால் அப்படித்தான் நடத்துகிறார்கள், அம்மா. எப்போதும். 296 00:31:12,080 --> 00:31:13,415 நான் அவர்களை சங்கடப்படுத்துகிறேன். 297 00:31:14,124 --> 00:31:15,375 வால்ட்டைப் போலவே. 298 00:31:15,459 --> 00:31:16,752 அது இப்போது உன்னை அழைக்கிறதா? 299 00:31:19,505 --> 00:31:20,547 வார்த்தைகளில் இல்லை. 300 00:31:21,882 --> 00:31:23,217 நீ கண்டுபிடித்ததை சொல். 301 00:31:26,053 --> 00:31:27,304 அது விழித்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். 302 00:31:28,180 --> 00:31:29,681 நீங்களும் மற்ற கலைக்களஞ்சிய நிபுணர்களும், 303 00:31:29,765 --> 00:31:33,769 நெடுங்காலத்துக்கு பிறகு வரும் நெருக்கடிக்கு தயாராகி வருகிறீர்கள். 304 00:31:36,563 --> 00:31:37,814 ஆனால் அது இங்கே நடக்கிறது என்று நினைக்கிறேன். 305 00:31:39,024 --> 00:31:40,025 இப்போதே. 306 00:31:43,529 --> 00:31:46,114 ஜியா! கீயர்! நண்பர்களே, ஹ்யூகோ வந்திருக்கிறார்! 307 00:31:46,740 --> 00:31:49,910 -ஹ்யூகோ வந்திருக்கிறார்! -ஹ்யூகோ வந்திருக்கிறார்! வாருங்கள். 308 00:31:50,577 --> 00:31:52,746 -ஹ்யூகோ வந்திருக்கிறார்! -வாருங்கள், ஹ்யூகோ! 309 00:31:52,829 --> 00:31:54,540 -ஹ்யூகோ! -ஹ்யூகோ! 310 00:31:55,374 --> 00:31:56,875 ஹ்யூகோ! 311 00:31:56,959 --> 00:31:58,919 பாருங்கள்! வா. 312 00:32:06,093 --> 00:32:09,012 -இந்த வழியாக வா! -ஆஹா. ஹேய், இப்போது. ஹேய்! 313 00:32:09,096 --> 00:32:10,889 -நீ என்னைப் பிடிக்க முடியாது. -இந்த வழியாக. 314 00:32:10,973 --> 00:32:14,142 வாருங்கள், நண்பர்களே. வாருங்கள். சீக்கிரம்! போகலாம்! 315 00:32:14,226 --> 00:32:16,270 பாலி, வா! சீக்கிரம்! 316 00:32:16,854 --> 00:32:19,106 ஹ்யூகோ! 317 00:32:22,860 --> 00:32:24,903 -ஹ்யூகோ! -ஹ்யூகோ! 318 00:32:24,987 --> 00:32:26,071 நான்கு சத்தியம், ஹ்யூகோ! 319 00:32:26,154 --> 00:32:29,491 ஆண்களே, பெண்களே. வளர்ந்த உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? 320 00:32:29,575 --> 00:32:30,951 எங்களுக்காக ஏதாவது இருக்கிறதா? 321 00:32:31,910 --> 00:32:34,413 கோரெல்லியன் சாக்லேட். ஜாலியாக இருங்கள். 322 00:32:34,913 --> 00:32:37,624 எங்களுக்கு சாக்லேட் வேண்டாம். கொஞ்சம் பீர் இருக்கிறதா? 323 00:32:37,708 --> 00:32:40,752 உன் மார்பில் முடி முளைத்தவுடன் வந்து என்னை பார்க்கிறாயா? 324 00:32:40,836 --> 00:32:42,629 வழிதவறிய நாய்க்குட்டிகளைப் போல என்னிடம் கெஞ்ச வராதே. 325 00:32:42,713 --> 00:32:44,965 நாங்கள் கெஞ்சவில்லை. நாங்கள், வர்த்தகம் செய்கிறோம். 326 00:32:45,048 --> 00:32:46,967 அப்படியா? எதற்கு எதை? 327 00:32:47,050 --> 00:32:49,845 எங்களுடைய பொழுதுபோக்கு துணை எப்படி? 328 00:32:50,470 --> 00:32:51,471 வேண்டவே வேண்டாம். 329 00:32:54,016 --> 00:32:55,017 ஒன்று சொல்கிறேன். 330 00:32:56,185 --> 00:32:58,187 நீங்கள் எனக்கு இறக்குவதற்கு உதவினால், 331 00:32:58,270 --> 00:33:01,148 இன்னும் கொஞ்சம் உங்கள் வயதுக்கு ஏற்ற ஒன்றை என்னால் கண்டுபிடிக்க முடியும். 332 00:33:01,231 --> 00:33:02,941 ஒப்புக்கொள்கிறோம். நான் செய்கிறேன். 333 00:33:03,025 --> 00:33:04,109 நாங்கள் எல்லோரும் செய்வோம். 334 00:33:04,193 --> 00:33:05,194 அப்படியென்றால் தொடங்குங்கள். 335 00:33:05,277 --> 00:33:06,695 -வாருங்கள், நண்பர்களே. -வாருங்கள். 336 00:33:06,778 --> 00:33:08,780 -கீயர், பிடி. பாலி. -நான் இங்கே இருக்கிறேன். 337 00:33:22,461 --> 00:33:23,545 மோசமான வாசம் வீசுகிறது. 338 00:33:24,129 --> 00:33:26,798 அப்படித்தான் இருக்கும். இது என் பூட்ஸுக்கான பசை. 339 00:33:26,882 --> 00:33:28,008 நான் எதிர்பார்த்ததை விட அதிக வெங்காயம். 340 00:33:29,134 --> 00:33:30,844 நான் தவறான செய்முறையைப் பயன்படுத்தியிருக்கலாம். 341 00:33:30,928 --> 00:33:32,596 அது ஒரு சோகமான விபத்து. 342 00:33:34,681 --> 00:33:35,766 இருந்துவிட்டுப்போகட்டும். 343 00:33:37,726 --> 00:33:38,769 என்ன தவறு? 344 00:33:39,603 --> 00:33:40,896 என் சமையலறையில் ஒரு ஆண் இருக்கிறான். 345 00:33:45,150 --> 00:33:46,318 எவ்வளவு நேரம் இங்கு இருப்பாய்? 346 00:33:47,152 --> 00:33:49,404 நீண்ட இருபத்தி ஒன்பது மணிநேரம். 347 00:33:51,198 --> 00:33:53,075 மீதமுள்ள விண்மீன் மண்டலம் எப்படி இருக்கிறது? 348 00:33:53,158 --> 00:33:54,159 பெரிதாக. 349 00:33:54,868 --> 00:33:56,286 நீ அதை எப்போதாவது பார்க்க வேண்டும். 350 00:33:57,412 --> 00:33:58,497 அப்படியா? 351 00:34:09,049 --> 00:34:10,300 ஐரினா நான்கு. 352 00:34:11,385 --> 00:34:13,512 ஒரே ஒரு கண்டம், ஆனால் அது வெப்பமண்டலமானது. 353 00:34:13,594 --> 00:34:15,848 அது பஞ்சுபோல இருக்கும் நாய் அளவு பூச்சிகளை கொண்டது. 354 00:34:17,099 --> 00:34:19,184 மருந்துகளை இறக்கிவிட்டு, பழங்களை வாங்கினேன். 355 00:34:19,268 --> 00:34:21,687 பொருட்களை கடத்துபவனின் பயண வாழ்க்கை அப்படித்தான் இருக்கும். 356 00:34:22,228 --> 00:34:24,690 -பழத்தை எங்கு எடுத்துச் சென்றாய்? -ஹெஸ்பெரஸுக்கு. 357 00:34:24,773 --> 00:34:27,234 நீ இப்போது என்னைப் போலவே அதையும் விவரிக்கலாம். 358 00:34:27,317 --> 00:34:31,112 ஆனால் இந்த சிறிய கூட்டத்தில் ஒரு சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டேன். 359 00:34:32,447 --> 00:34:34,533 வர்த்தகம் செய்ய ஆரம்பித்த அவர்களால் அதை நிறுத்த முடியவில்லை. 360 00:34:34,616 --> 00:34:38,495 தொழிலாளர்களின், சர்க்கரை, ரம், பணம் இவை நான்கும்தான் அங்கே. 361 00:34:40,121 --> 00:34:43,292 உங்களிடம் சில நிலவுகள் இருக்கலாம், ஆனால் அவர்களுடையதை பார்க்க வேண்டும். 362 00:34:43,375 --> 00:34:45,460 வானம் முழுக்க சிதறிய நாணயங்கள் போல இருக்கும். 363 00:34:45,543 --> 00:34:46,753 சிதறிய நாணயங்களா? 364 00:34:47,379 --> 00:34:48,380 அதைப் பார்க்க விரும்புகிறேன். 365 00:34:48,922 --> 00:34:51,842 நீ அங்கு போக வேண்டும். இந்த பனிக்கட்டி பந்திலிருந்து வெளியேறி. 366 00:34:53,177 --> 00:34:56,221 -எனக்கு இங்கு பொறுப்புகள் உள்ளன. -ஆனால் நீயாக அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. 367 00:34:56,304 --> 00:34:58,098 இல்லை, இருந்தாலும் என் பொறுப்புதான்... 368 00:34:59,933 --> 00:35:02,436 காரணங்கள் இருந்தும் அவை என்னவென்று தெரியாமல் இருக்க முடியுமா? 369 00:35:02,519 --> 00:35:04,396 இந்த இடத்திற்கு நீ ஏன் முக்கியம் என்ற காரணங்களா? 370 00:35:05,397 --> 00:35:07,649 சாத்தியம்தான். கொஞ்சம் அகங்காரம், ஆனாலும் சாத்தியம்தான். 371 00:35:07,733 --> 00:35:10,068 நான் முக்கியமானவள் என்று சொல்லவில்லை. நான் போக முடியாது என்றேன். 372 00:35:13,113 --> 00:35:15,616 புறப்படுவதைப் பற்றி பேசுகையில், இரவு உணவு இப்போது வேண்டுமா இல்லை பிறகா? 373 00:35:17,242 --> 00:35:18,243 அப்புறம் சாப்பிடுவோம். 374 00:36:16,385 --> 00:36:17,636 என்ன செய்கிறாய்? 375 00:36:19,596 --> 00:36:20,597 ஏதாவது பிரச்சனையா? 376 00:36:21,974 --> 00:36:24,893 ஏதோ வித்தியாசமான உணர்வு. எல்லையைப் பார்வையிட போகிறேன். 377 00:36:24,977 --> 00:36:27,688 என்ன, அங்கிருந்துதான் அந்த வித்தியாசமான உணர்வு ஏற்படுகிறதா? 378 00:36:27,771 --> 00:36:29,189 இல்லை, அது இங்கே உள்ளது. 379 00:36:30,399 --> 00:36:31,692 இது வெறும் நடைதான். 380 00:36:31,775 --> 00:36:35,279 எனவே, "நானும் வருகிறேன்" என்றால், நீ என்ன சொல்வாய்? 381 00:36:35,362 --> 00:36:39,157 அடுத்த 25 மணி நேரத்திற்கு எங்கும் போகக்கூடாது. 382 00:36:42,578 --> 00:36:44,746 -பிறகு கோபப்படுவாயா? -ஒருபோதும் இல்லை. 383 00:37:05,392 --> 00:37:06,810 நீ இங்கு என்ன செய்கிறாய்? 384 00:37:09,813 --> 00:37:10,981 நில்! 385 00:37:18,071 --> 00:37:20,574 நில். ஊரடங்கு அமுலில் உள்ளது. 386 00:37:38,300 --> 00:37:40,969 ஹலோ? 387 00:38:13,335 --> 00:38:14,336 யார் நீ? 388 00:39:06,513 --> 00:39:07,681 என்ன அது? 389 00:39:08,432 --> 00:39:09,933 சுடும் ஒலியை கேட்டேன். என்ன நடக்கிறது? 390 00:39:10,017 --> 00:39:12,561 எனக்கு பைத்தியமா, அல்லது அது அனக்ரியான் விண்வெளி கப்பலா? 391 00:39:17,816 --> 00:39:19,484 நீ பைத்தியம்தான். 392 00:39:19,568 --> 00:39:20,777 ஆனால் அந்த கப்பல் நிஜம்தான். 393 00:39:29,870 --> 00:39:31,580 பிறகு மூன்று இருக்கின்றன. 394 00:39:32,080 --> 00:39:34,416 -அவற்றை தொடர்புகொள்ளுங்கள். -செய்துவிட்டோம். பதில் இல்லை. 395 00:39:34,499 --> 00:39:36,543 நம் வழிமுறைகளையும் புறக்கணிக்கிறார்கள். 396 00:39:36,627 --> 00:39:38,504 அவர்களைச் சந்திக்க நம் விண்கலம் ஒன்றை அனுப்புவோமா? 397 00:39:38,587 --> 00:39:39,880 உங்கள் நிராயுதக் கப்பல்களையா? 398 00:39:40,964 --> 00:39:43,342 அவை போர்க்கப்பல்கள். ஆயுதம் தாங்கிகள். 399 00:39:43,425 --> 00:39:44,718 இவன் ஏன் இங்கே இருக்கிறான்? 400 00:39:44,801 --> 00:39:46,803 போர் கப்பல்கள் எப்படி இருக்கும் என்று இவனுக்குத் தெரிவதால். 401 00:39:46,887 --> 00:39:48,222 அதோடு, இவன் தெஸ்பின். 402 00:39:48,305 --> 00:39:49,681 தாக்குதலுக்குப் பிறகு உலகத்திற்கு வெளியே இருக்கிறேன். 403 00:39:50,349 --> 00:39:51,850 சாத்தியமில்லை. அப்படியிருந்தால்... 404 00:39:51,934 --> 00:39:55,270 உனக்கு 70 வயதாகியிருக்கும். ஆனால் அதில் பாதி காலத்துக்கு உறைநிலையில் இருந்தேன். 405 00:39:55,812 --> 00:39:58,065 அனக்ரியானுக்கு சரக்கு கொண்டுசெல்லும் போது, நான் நடுநிலையாளனாக இருப்பேன். 406 00:39:58,148 --> 00:40:01,652 -அனக்ரியான் ஏகாதிபத்திய அனுமதி பெற்றது. -அறிவை வளர்த்துக்கொள், லூயிஸ். 407 00:40:01,735 --> 00:40:04,696 ஒருவேளை அது தவறாக நடந்திருக்கலாம். அவர்கள் வழிதவறி வந்திருக்கலாம். 408 00:40:04,780 --> 00:40:06,698 நம் ரேடாருக்குத் தெரியாமல் நுழைய முயற்சிக்கிறார்கள். 409 00:40:06,782 --> 00:40:09,868 நம்முடையது அறிவியல் புறக்காவல் நிலையம். இங்கு மதிப்பு எதுவும் இல்லை. 410 00:40:09,952 --> 00:40:12,496 மேயர், அனக்ரியான்கள் இதற்கு முன்பு இங்கு தரையிறங்கியிருக்கிறார்களா? 411 00:40:12,579 --> 00:40:15,415 அனக்ரியான்களோ தெஸ்பின்களோ செய்ததில்லை. 30 ஆண்டுகளில் யாரும் இல்லை. 412 00:40:15,499 --> 00:40:18,293 ஏகாதிபத்திய உத்தரவின் கீழ், டெர்மினஸ் அனைவரின் வரம்புக்கும் அப்பாற்பட்டது. 413 00:40:18,377 --> 00:40:19,962 இதற்கும் வால்ட்டுக்கும் சம்பந்தம் இருக்க வேண்டும். 414 00:40:20,045 --> 00:40:21,338 என்ன? 415 00:40:22,256 --> 00:40:24,049 செல்ல முடியாத பகுதி விரிவடைகிறது. 416 00:40:24,132 --> 00:40:25,467 -அதை நேற்று கவனித்தேன். -எவ்வளவு வேகமாக? 417 00:40:25,551 --> 00:40:27,302 அடுத்த நாள், அனக்ரியான்கள் வந்திருக்கிறார்கள். 418 00:40:27,386 --> 00:40:29,930 தொழில்நுட்ப ரீதியாக, நாம் ஒரு ஏகாதிபத்திய புறக்காவல் நிலையம். 419 00:40:30,013 --> 00:40:33,392 அனக்ரியான்களுக்கு பேரரசோடு பிரச்சனை இருப்பது எல்லோருக்கும் தெரியும். 420 00:40:33,475 --> 00:40:35,602 வால்ட் அனக்ரியானுடையது என்று சொல்ல வருகிறாயா... 421 00:40:35,686 --> 00:40:38,021 வால்ட்டுக்கு ஏதோ தெரிந்திருக்க வேண்டும், எனவே எதிர்வினையாற்றுகிறது என சொல்கிறேன். 422 00:40:38,105 --> 00:40:39,356 ஒருவேளை அது நம்மை எச்சரித்திருக்கலாம். 423 00:40:39,439 --> 00:40:44,653 நீ எப்படியோ, தனித்துவமானவள் என்பதால் வால்ட் உனக்கு சமிக்ஞை செய்வதாக சொல்கிறாயா? 424 00:40:45,237 --> 00:40:47,364 சால்வோர் எல்லையில் வசிப்பவள். 425 00:40:47,447 --> 00:40:50,075 திட்டம் ஒருவேளை இதை கணித்திருக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்... 426 00:40:50,158 --> 00:40:51,451 திட்டத்தை மறந்து விடுங்கள். 427 00:40:51,535 --> 00:40:52,703 செல்டன் இறந்துவிட்டார். 428 00:40:53,745 --> 00:40:55,706 நீங்கள் எப்போது சுயமாக சிந்திக்கத் தொடங்குவீர்கள்? 429 00:40:55,789 --> 00:40:59,001 சரி, போதும். இதை நாம் மேலும் சிக்கலாக்க தேவையில்லை. 430 00:40:59,084 --> 00:41:03,422 அனக்ரியான்கள் நம் தொடர்பைப் புறக்கணித்தனர், ஏகாதிபத்திய விண்வெளியையும் மீறுகிறார்கள். 431 00:41:03,505 --> 00:41:05,424 நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கை தெளிவாக உள்ளது. 432 00:41:05,507 --> 00:41:07,301 நாம் அடுத்த சுழற்சி நேரத்தை அடைந்தவுடன் 433 00:41:07,384 --> 00:41:09,595 தகவல் தொடர்பு மிதவையோடு இணைப்பை உருவாக்குவோம். 434 00:41:10,179 --> 00:41:12,973 நாம் பேரரசை அழைப்போம், அவர்கள் வருவார்கள். 435 00:41:14,183 --> 00:41:15,767 நீ எங்கு செல்கிறாய்? 436 00:41:15,851 --> 00:41:17,186 ஆயுதக் கிடங்கை சரிபார்க்க. 437 00:41:18,854 --> 00:41:21,231 பேரரசுக்கு முன்பு அனக்ரியான்கள் வந்தால், 438 00:41:21,315 --> 00:41:23,901 நாம் எந்த வகையான எதிர்தாக்குதலை கட்டமைக்க முடியும் என அறிய விரும்புகிறேன். 439 00:41:25,027 --> 00:41:26,778 இவற்றை எப்போது கடைசியாக சரிபார்த்தீர்கள்? 440 00:41:26,862 --> 00:41:29,531 -நாங்கள் கவலையில்லாமல் இருந்தோம். -நவீன துப்பாக்கி ஒன்று இருக்கிறது. 441 00:41:29,615 --> 00:41:31,533 அம்மா, க்யூரேஷன் இருப்பிலிருந்து ஏதாவது பயன்படுத்தலாமா? 442 00:41:31,617 --> 00:41:34,203 சில கோடாரிகள், நெசவாளர் உலகத்திலிருந்து மேய்ப்பனின் கவண். 443 00:41:34,286 --> 00:41:36,455 -நான் மேலும் தயாராக இருந்திருக்க வேண்டும். -அது உன் வேலை அல்ல. 444 00:41:36,538 --> 00:41:39,166 -உங்களை பாதுகாக்கிறேன், நினைவிருக்கிறதா? -வா. 445 00:41:39,249 --> 00:41:41,710 பொதுவாக இது போன்ற சமயத்தில் நான் மதுவை பரிந்துரைப்பேன். 446 00:41:41,793 --> 00:41:43,253 தொடர்பு இணைப்பு இம்பீரியல் குறியீடு தொடங்கப்பட்டது 447 00:41:43,337 --> 00:41:45,088 சுழற்சி நேரம் வரையறை திறக்கப்பட்டுள்ளது. 448 00:41:45,172 --> 00:41:47,841 இணைக்கும் வழிமுறை. இது ஒரு சில வினாடிகள் எடுக்கும். 449 00:41:57,976 --> 00:41:59,520 தொடர்பு இணைப்பு தோல்வியுற்றது 450 00:42:00,646 --> 00:42:01,813 என்ன தவறு? 451 00:42:01,897 --> 00:42:05,108 தகவல் தொடர்பு மிதவை நமக்கு பதிலளிக்கவில்லை. நம்முடன் தொடர்பில் இல்லை. 452 00:42:05,901 --> 00:42:07,110 இன்னொன்றைப் பயன்படுத்து. 453 00:42:07,194 --> 00:42:08,487 இன்னொன்று இல்லை. 454 00:42:08,570 --> 00:42:09,780 அப்படியென்றால் என்ன? 455 00:42:10,364 --> 00:42:11,865 நாம் பேரரசைத் தொடர்பு கொள்ள முடியாது. 456 00:42:14,117 --> 00:42:16,537 சரி, தொடர்ந்து முயற்சி செய். பீதி அடைய வேண்டாம். 457 00:42:16,620 --> 00:42:19,873 விண்கல் மழை போல ஏதாவது இருக்கலாம். அது தெளிவாகிவிடும். 458 00:42:20,749 --> 00:42:22,501 அனக்ரியான் தோன்றிய பிறகா? 459 00:42:23,460 --> 00:42:26,004 அனக்ரியான்களுக்கு இங்கே தரையிறங்கும் நோக்கம் இருந்தால், 460 00:42:26,088 --> 00:42:27,506 அதற்கு எவ்வளவு காலம் ஆகும்? 461 00:42:27,589 --> 00:42:31,051 அவர்களின் தற்போதைய வேகத்தின் அடிப்படையில், 40 மணிநேரம் என்று சொல்வேன். 462 00:42:38,475 --> 00:42:39,476 அம்மா. 463 00:43:18,557 --> 00:43:19,558 என்ன இது? 464 00:43:21,518 --> 00:43:22,811 உளவியல் வரலாறு. 465 00:43:23,937 --> 00:43:26,773 ஹேரியின் எல்லா வேலைகளும் கணித சமன்பாடாக வெளிப்படுத்தப்படுகிறது. 466 00:43:27,441 --> 00:43:29,860 அவரது இறுதிச் சடங்கு அன்று அவருடைய அலுவலகத்திலிருந்து இதை எடுத்தேன். 467 00:43:30,986 --> 00:43:33,697 நாம் ஏன் செய்கிறோம் என்பதற்கு அவருடைய எண்களே அடிப்படை. 468 00:43:34,781 --> 00:43:37,910 கப்பலில், உண்மையில் இதை புரிந்து கொள்ளக்கூடிய இரண்டு நபர்கள் இருந்தனர். 469 00:43:37,993 --> 00:43:39,453 ஹேரி செல்டன் மற்றும் கேல் டோர்னிக். 470 00:43:46,251 --> 00:43:47,628 உனக்கு இதில் ஏதாவது தெரிகிறதா? 471 00:43:47,711 --> 00:43:49,463 எனக்கா? இல்லை, வாய்ப்பில்லை. 472 00:43:50,047 --> 00:43:53,759 சால்வோர், நீ திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தால், 473 00:43:54,343 --> 00:43:57,262 இவை அனைத்தையும் நம்புவது எனக்கு மிகவும் எளிதாக இருக்கும். 474 00:44:31,547 --> 00:44:33,298 ஆம், எனக்கு தெரியாதது ஆச்சரியம்தான். 475 00:44:34,550 --> 00:44:35,592 ஒரு முறை முயற்சிப்பது தவறில்லை. 476 00:44:35,676 --> 00:44:36,927 அப்படியா? 477 00:44:37,594 --> 00:44:39,638 வித்தியாசமும் தனித்துவமும் ஒன்றல்ல என்று சொன்னேன். 478 00:44:59,157 --> 00:45:00,576 தகவல் தொடர்பு மிதவை செயலிழந்துவிட்டது. 479 00:45:02,327 --> 00:45:03,954 இது ஒரு முன்னெச்சரிக்கை நிகழ்வு. 480 00:45:04,663 --> 00:45:06,248 நீ ஒருவேளை அதை பறக்கவைக்க வேண்டும். 481 00:45:08,458 --> 00:45:09,459 அப்படியா? 482 00:45:11,211 --> 00:45:14,923 அனக்ரியான்கள் இரண்டு நாட்களில் இங்கு வந்துவிடுவார்கள். முன்கூட்டியே கூட. 483 00:45:15,424 --> 00:45:17,467 நீ இங்கே இருப்பதை தவிர வேறு எங்கும் பாதுகாப்பாக இருப்பாய். 484 00:45:18,552 --> 00:45:20,637 ஆண்டின் இந்த நேரத்தில் இயற்கைக்காட்சி மிகவும் அழகாக இருக்கிறது. 485 00:45:21,346 --> 00:45:23,682 பரந்த தரிசு நிலங்கள் உறைந்த மலம். 486 00:45:23,765 --> 00:45:24,975 தீவிரமாக சொல்கிறேன், ஹ்யூகோ. 487 00:45:25,058 --> 00:45:26,059 அப்படிச் சொல்ல முயற்சிக்கிறாய். 488 00:45:28,478 --> 00:45:29,646 நான் எங்கும் போகப்போவதில்லை. 489 00:45:29,730 --> 00:45:31,064 இது உன் சண்டை அல்ல. 490 00:45:31,148 --> 00:45:33,483 அப்படியா? பிறகு யாருடைய சண்டை? 491 00:45:39,323 --> 00:45:40,324 செல்டனுடையதா? 492 00:45:42,367 --> 00:45:43,952 அப்போது இது உன் சண்டையும் அல்ல. 493 00:45:46,747 --> 00:45:47,748 என்னுடன் வந்துவிடு. 494 00:45:49,166 --> 00:45:50,167 என்னால் முடியாது. 495 00:45:50,250 --> 00:45:51,251 ஏன் முடியாது? 496 00:45:54,213 --> 00:45:55,672 நான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். 497 00:45:58,550 --> 00:46:00,761 உயிருடன் இருப்பது என்பதே பேய்களை அறிந்திருப்பதுதான். 498 00:46:01,845 --> 00:46:05,349 எதிர்காலத்தை முன்னறிவிக்க முடியும் என்பதால் பேரரசு ஹேரியை கண்டு அஞ்சியது. 499 00:46:06,767 --> 00:46:10,604 ஆனால், உண்மையில், அவர் செய்ததெல்லாம் கடந்த காலத்தை மறுபரிசீலனை செய்தார். 500 00:46:14,483 --> 00:46:15,901 உனக்கு என்ன வேண்டும்? 501 00:46:17,653 --> 00:46:21,865 வடிவங்களில் கவனம் செலுத்து, அடுத்து வரவிருப்பதை நம்மால் முன்னறிவிக்க முடியும். 502 00:46:26,328 --> 00:46:28,789 உயிருடன் இருப்பது என்பதே பேய்களை அறிந்திருப்பதுதான். 503 00:46:29,498 --> 00:46:32,000 நாம் காதுகொடுத்து கேட்டால் அவர்களின் முணுமுணுப்புகள் கேட்கும். 504 00:46:52,771 --> 00:46:53,897 மீண்டும் நீ. 505 00:47:26,805 --> 00:47:27,848 ஹேய் அங்கே இருப்பவளே. 506 00:47:32,019 --> 00:47:33,270 மேபல், உன்னை தாக்கியது எது? 507 00:47:41,403 --> 00:47:42,446 இது வலிக்கும். 508 00:47:56,210 --> 00:47:57,211 பொறுமை. 509 00:47:59,004 --> 00:48:00,214 உன் ஆயுதத்தை கீழே போடு. 510 00:48:06,887 --> 00:48:07,930 யார் நீ? 511 00:48:08,013 --> 00:48:11,725 சால்வோர் ஹார்டின், டெர்மினஸின் வார்டன். 512 00:48:16,772 --> 00:48:19,274 அனக்ரியான்களுக்கு ஏகாதிபத்திய மண்ணில் அனுமதி கிடையாது. 513 00:48:23,195 --> 00:48:24,321 நீ இங்கே என்ன செய்கிறாய்? 514 00:48:25,239 --> 00:48:29,868 முன்பு நம் வீடாக இருந்த எலும்புக் கூடுகளை பேய்கள் வேட்டையாடுகின்றன. 515 00:48:30,702 --> 00:48:32,287 அவை நம்மைச் சூழ்ந்துள்ளன. 516 00:48:32,371 --> 00:48:35,040 அவை நம்முடையவற்றின் மீது பசியோடு இருக்கின்றன. 517 00:49:33,515 --> 00:49:35,517 வசன தமிழாக்கம் அருண்குமார்