1 00:00:19,916 --> 00:00:21,376 எனக்கு ஏமாத்தமா இருந்தது. 2 00:00:22,210 --> 00:00:25,505 மற்றவர்களும் என் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் மற்றும் நான் தப்பான மனிதர்களை நம்பிவிட்டேனே என்ற 3 00:00:25,505 --> 00:00:29,009 கோபம் எல்லாம் வெளியேறி துக்கம் மட்டுமே என்னுள் மிஞ்சியிருந்தது. 4 00:00:29,801 --> 00:00:32,721 டீடேரிடமிருந்து என் பாஸ்போர்ட் மட்டும் கிடைத்து விட்டால், இந்த இடத்தை விட்டு உடனேயே 5 00:00:32,721 --> 00:00:35,349 கிளம்பி விட்டால் போதும் என்றாகிவிட்டது. 6 00:00:56,370 --> 00:00:57,621 லின்பாபா. 7 00:00:57,621 --> 00:00:59,122 எப்படிப் போயிட்டிருக்கு, சிராஜ்? 8 00:00:59,122 --> 00:01:00,457 ஹை, லின்பாபா. 9 00:01:12,511 --> 00:01:14,179 அவன் இன்னும் திரும்பி வரலையா? 10 00:01:14,930 --> 00:01:16,056 சீக்கிரம் வந்துடுவான். 11 00:01:18,266 --> 00:01:20,227 போறதுக்குத் தயாராகிட்டிருக்கான் போலும். 12 00:01:21,395 --> 00:01:23,855 நீ பொய் சொன்னா, காக்கா வந்து கொத்திடும். -கொத்தட்டுமே. 13 00:01:27,359 --> 00:01:28,902 கொஞ்சம் பிரச்சினை இருந்தது. 14 00:01:30,112 --> 00:01:32,698 லின்பாபாவை ஒருத்தன் கொல்ல நினைச்சான். 15 00:01:32,698 --> 00:01:34,116 ஆனால் நாங்க சேர்ந்து அதை முறியடிச்சிட்டோம். 16 00:01:34,116 --> 00:01:36,326 "முறியடிச்சிட்டோம்" அப்படின்னா என்ன அர்த்தம்? -இல்லயில்ல. நான் இல்லை. 17 00:01:37,244 --> 00:01:38,370 லின்பாபாவும்... 18 00:01:39,955 --> 00:01:41,748 காதரோட குண்டன் இருக்கானே, அப்துல்லா, அவனும். 19 00:01:41,748 --> 00:01:43,417 அவங்க தான் சண்டையெல்லாம் போட்டாங்க. நான் வெறுமனே... 20 00:01:43,417 --> 00:01:45,919 லின் உன்னை இதுலயெல்லாம் இழுத்திருக்கவே கூடாது. 21 00:01:45,919 --> 00:01:48,422 நீ இதுல ஈடுபட்டிருக்கவே கூடாது. 22 00:01:50,007 --> 00:01:51,842 நீ இன்னும் சாமர்த்தியமா நடந்துக்கணும். 23 00:01:53,593 --> 00:01:54,761 அவன் என் நண்பன். 24 00:01:54,761 --> 00:01:58,223 உன் நண்பனோட குண்டன் பிரச்சினை உன்னோட பிரச்சனையாச்சுன்னா என்ன செய்வ? 25 00:02:00,976 --> 00:02:02,602 ஒண்ணு ஞாபகம் வச்சுக்கோ. 26 00:02:02,602 --> 00:02:06,523 அவன் இன்னும் சில நாட்கள்ல போயிடுவான், நீ இருப்ப. 27 00:02:07,566 --> 00:02:08,858 உன் வாழ்க்கை இங்கேதான். 28 00:02:10,527 --> 00:02:12,613 அதைப் பத்தி நீ என்னிக்காவது யோசிச்சிருக்கியா? 29 00:02:12,613 --> 00:02:14,948 நீ எடுக்குற முடிவுகள், நம்ம ரெண்டு பேரையுமே பாதிக்கும். 30 00:02:16,283 --> 00:02:17,451 உன்னோட நட்பு, உன்னை சிறையில தள்ளி எனக்கு கணவன் இல்லாம செய்யும்னா 31 00:02:17,451 --> 00:02:19,870 அந்த நட்பு உனக்கிருக்க வேண்டாம்னு தோணுது. 32 00:02:26,209 --> 00:02:27,502 இன்னிக்கு அப்புறம்... 33 00:02:31,006 --> 00:02:32,841 அவனுக்காக நீ எந்த ஆபத்தான வேலையும் செய்யக்கூடாது. 34 00:02:34,593 --> 00:02:35,594 எங்கிட்ட சத்தியம் செய். 35 00:03:02,162 --> 00:03:05,624 நான் ரொம்ப கஷ்டத்துல இருக்குற போது எங்க அம்மா என்னை அப்படித் தான் பார்ப்பாங்க. 36 00:03:05,624 --> 00:03:07,542 அர்ரே, நான் உன்னைப் பத்தி தானே கவலைப்பட்டேன், இல்ல? 37 00:03:09,503 --> 00:03:12,923 நீ நல்லாயிருக்கயா? உனக்கு கத்திக் குத்துகளோ, புல்லெட்டு காயங்களோ இல்லை, இல்ல? 38 00:03:13,799 --> 00:03:16,843 நான் நல்லா இருக்கேன், நண்பா. -அப்புறம் ஏன் உன் முகம் வாடியிருக்கு? 39 00:03:21,682 --> 00:03:24,101 நான் சொன்ன பேச்சைக் கேட்கலையேன்னு வருத்தப்படுற, இல்ல? 40 00:03:24,601 --> 00:03:25,936 நீ மரிஃஜிசோவை கண்டுபிடிச்சயா? 41 00:03:28,480 --> 00:03:30,107 ஆமாம். அவன் உயிரோட தான் இருக்கான். கவலைப்படாதே. 42 00:03:33,026 --> 00:03:36,822 ஆனால் நண்பா, நீ சொன்னது சரிதான். நான் உன்னோட இங்கே திரும்பி வந்திருக்கணும். 43 00:04:03,015 --> 00:04:05,851 நீ மரிஃஜிசோவை கொல்லலை என்பதே நல்ல விஷயம் தான்னு நினைக்கிறேன். 44 00:04:12,566 --> 00:04:14,943 நீ அதைப் பத்தி சந்தோஷப்படணும், வருத்தப்படக்கூடாது. 45 00:04:24,369 --> 00:04:25,912 நான் எதைப் பத்தியுமே கவலைப்படும் நிலையை கடந்து போயிட்டேன். 46 00:04:26,663 --> 00:04:31,460 கார்லா, காதர், அப்துல்லா, மூணு பேருமே, ஆரம்பத்திலேர்ந்து எங்கிட்ட பொய் சொல்லியிருக்காங்க. 47 00:04:36,465 --> 00:04:37,966 உன்னைத் தவிர பாக்கி எல்லோரும். 48 00:04:45,766 --> 00:04:50,103 டீடேர் என் ஆவணங்களைக் கொண்டு வந்தவுடன், நான் போயிடுவேன். 49 00:05:05,285 --> 00:05:07,496 அந்த பத்திரிகையாளர் கிட்ட போற வரைக்கும் நான் கார்லாவை பின்தொடர்ந்தேன். 50 00:05:08,622 --> 00:05:10,958 ஆரம்பத்திலிருந்தே அவங்க எல்லோரும் இதுல ஈடுபட்டிருக்கணும். 51 00:05:12,250 --> 00:05:16,088 லீசா, மொடேனா, கார்லா, கேடுகெட்ட அந்த லின் ஃபோர்ட்லின் ஃபோர்ட், அனைவரும். 52 00:05:17,089 --> 00:05:19,007 நீ ஒரு முட்டாள். 53 00:05:19,007 --> 00:05:20,634 கார்லா என்னை வெறுக்கிறாள், 54 00:05:20,634 --> 00:05:24,805 ஆனால், காதரின் அனுமதியில்லாமல் அவள் எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டாள். 55 00:05:26,723 --> 00:05:31,019 அதோட ஃபோர்ட்... அவன் தான் சேரியிலே காதரோட ஆள். 56 00:05:31,853 --> 00:05:33,105 நாம இப்போ என்ன செய்யலாம்? 57 00:05:34,022 --> 00:05:37,609 கார்லாவின் பத்திரிகையாளரைப் பத்தி நமக்கு தெரிஞ்சது அவங்களுக்குத் தெரியாது. 58 00:05:37,609 --> 00:05:39,069 வலீத் ஷாவைக் கூப்பிடு. 59 00:05:41,571 --> 00:05:43,407 நான் அவனைப் பார்க்கணும்னு சொல்லு. 60 00:05:49,538 --> 00:05:51,331 மினிஸ்டர் பான்டே? 61 00:05:51,331 --> 00:05:52,499 நான் தான். 62 00:05:52,499 --> 00:05:53,792 என் பெயர் கவிதா கண்ணா. 63 00:05:53,792 --> 00:05:56,461 சார், நான் ஒரு பத்திரிகையாளர் அதனால உங்ககிட்ட சில கேள்விகளை கேட்க விரும்புறேன். 64 00:05:57,045 --> 00:06:00,215 நான் ரொம்ப பிசியா இருக்கேன். என் அலுவலகம் வழியா தான் எல்லா பத்திரிகை சந்திப்புகளும் அமையணும். 65 00:06:00,215 --> 00:06:01,550 நான் இப்போது உங்களுடன் பேச முடியாது... 66 00:06:01,550 --> 00:06:04,928 இதை உங்க அலுவலகம் மூலமா வருவதை நீங்க விரும்பமாட்டீங்க. 67 00:06:06,096 --> 00:06:09,266 அவங்க இந்த படங்களைப் பார்ப்பதையோ, அல்லது என்னிடம் இவையெல்லாம் இருக்குன்னு 68 00:06:09,266 --> 00:06:11,935 வலீத் ஷாவுக்கு தெரியறதையோ நீங்க விரும்ப மாட்டீங்கன்னு தோணுது. 69 00:06:12,728 --> 00:06:14,396 அதோட, நான் ஏற்கனவே சுனிதாவுடன் பேசிட்டேன். 70 00:06:14,896 --> 00:06:18,483 விரும்பினால் நீங்க கமெண்ட் செய்யலாம், இல்லனாலும் அது இல்லாமலேயே நான் அதை எழுதுவேன். 71 00:06:18,483 --> 00:06:21,486 சார், எப்படியானாலும், அந்த கட்டுரை வெளியாகத் தான் போகுது. 72 00:06:23,196 --> 00:06:24,948 வெளியே போ. இப்போதே! 73 00:06:25,991 --> 00:06:27,534 நீ ரொம்ப கெட்டவள். 74 00:06:27,534 --> 00:06:30,203 உடனே, போயிடு, அது தான் உனக்கு நல்லது. 75 00:06:37,002 --> 00:06:41,048 நீ சுனிதா விஷயத்தை, கவிதா கண்ணாவிடம் கொண்டு போகும் அவசியமே இருக்கலையே, 76 00:06:41,048 --> 00:06:44,217 நம்ம சமீப கால செயல்களை மட்டும் அவளோட பகிர்ந்திருந்தாலும் போதுமே. 77 00:06:45,427 --> 00:06:47,679 நம்ம திட்டத்துல ஏதாவது விஷயத்தை நான் கவனிக்காம விட்டுட்டேனா? 78 00:06:48,722 --> 00:06:52,100 நான் அதை உனக்காகத் தான் செய்தேன். உனக்கு நீயே இன்னும் ஆபத்தை வரவைக்கறதுக்கு முன்னாடி. 79 00:06:52,100 --> 00:06:54,227 என்னை இங்கே கூட்டிட்டு வர்றதுக்கு முன்னாடியே உன்னால அதைச் சொல்ல முடியல, இல்ல? 80 00:06:54,227 --> 00:06:55,812 நான் தான் அவனைத் தடுத்தேன். 81 00:07:00,776 --> 00:07:02,653 நான் கவிதாவுக்குக் கொடுத்த விஷயம் 82 00:07:02,653 --> 00:07:06,406 ஃஜூவையும் வலீதையும், ருஜுலின் மரணத்துக்கும் பான்டேயை பிளாக்மெயில் செய்ததையும் காட்டிடும். 83 00:07:07,950 --> 00:07:10,577 அவங்களால அப்புறம் எதுவும் செய்ய முடியாது, அப்புறம் சாகர் வாடா உங்களுக்குக் கிடைக்கும். 84 00:07:10,577 --> 00:07:13,538 நீங்க விரும்பியது உங்களுக்குக் கிடைக்கும், ஆனால நீங்க எண்ணிய வழியில அமையாது. 85 00:07:13,538 --> 00:07:15,916 எங்கிட்ட சொல்லாமலேயே இதையெல்லாம் நீ செய்திருக்க. -ஆமாம். 86 00:07:15,916 --> 00:07:18,418 ஏன்னா அதை நிறுத்திடுவேன்னு உனக்குத் தெரியும். -ஆமாம். 87 00:07:18,418 --> 00:07:19,962 அப்படின்னா நீ அதை எனக்காகச் செய்யலை. 88 00:07:19,962 --> 00:07:22,130 உனக்கு மேடம் ஃஜூ மேல இருக்குற வெறுப்பால இப்படிச் செய்தயா? 89 00:07:22,130 --> 00:07:24,925 நீ செய்யற எதுவும் அஹ்மெட்டையோ, கிறிஸ்டீனாவையோ திரும்பிக் கொண்டு வந்து விடாது. 90 00:07:24,925 --> 00:07:28,679 அந்த குற்ற உணர்வு போகவே போகாது... -நான் இதை லின்னுக்காக செய்தேன். அவன் இருக்கட்டும். 91 00:07:29,721 --> 00:07:32,307 இதைச் செய்யச் சொல்லி லின் உன்னிடம் கேட்டானா? 92 00:07:33,100 --> 00:07:34,559 அவன் எதையுமே கேட்டதில்லை. 93 00:07:36,144 --> 00:07:39,564 நாம தான் அவனை இத்தனை நாள் உபயோகப்படுத்திகிட்டோம், நான் அதனால... 94 00:07:41,650 --> 00:07:46,822 என்னை மன்னிச்சிடுங்க. அது என்னை கோழையாக் காட்டலாம், அதை நீங்க விரும்ப மாட்டீங்க. 95 00:07:46,822 --> 00:07:47,990 ஆனால் எனக்கு போதும் போதும்னு ஆயிடுச்சு. 96 00:07:49,199 --> 00:07:50,993 அவனுக்கு நமக்குள்ள இருக்குற பந்தத்தைப் பத்தித் தெரியுமா? 97 00:07:52,077 --> 00:07:53,161 தெரியும். 98 00:07:53,662 --> 00:07:55,247 நீ அவன் கிட்ட சொன்னயா? 99 00:07:55,247 --> 00:07:57,749 அவனே அதைப் புரிஞ்சுகிட்டான், அதனால அவன் என்னை வெறுக்கிறான். 100 00:08:01,211 --> 00:08:02,546 ஹம்ம். 101 00:08:02,546 --> 00:08:08,510 அப்படின்னா அந்த கதையை நீ தடுக்க உனக்கு எதுவுமே தேவையில்லை. 102 00:08:09,845 --> 00:08:16,226 அன்பு... அது இரண்டு பக்கமும் பூட்டியிருக்குற சங்கிலி. 103 00:08:17,311 --> 00:08:20,147 அது நம்ம கையை இழுக்குற வரைக்கும் நாம அதை உணர்வது இல்லை. 104 00:08:21,565 --> 00:08:23,609 உங்களைக் காயப்படுத்தணும்னு எண்ணி நான் இது எதையுமே செய்யலை. 105 00:08:23,609 --> 00:08:25,068 கண்டிப்பா. 106 00:08:25,068 --> 00:08:27,112 எனவே, அப்படின்னா, நீ மறுபரிசீலனை செய்வயா? 107 00:08:30,991 --> 00:08:33,327 என்னோட குற்றங்கள்ல ரொம்ப அதிகமான பாவம் இருந்திருக்கலாம். 108 00:08:34,286 --> 00:08:35,829 இது ஒரு போரை ஆரம்பித்து விடும். 109 00:08:36,747 --> 00:08:38,582 நான் தான் இதைச் செய்தேன்னு வலீத் நினைப்பான். 110 00:08:38,582 --> 00:08:40,375 நீ அதைப் பத்தி யோசிக்கவே இல்லையே? 111 00:08:40,375 --> 00:08:42,210 ஆட்கள் இறக்க வேண்டி வரும். அப்துல்லாவைப் போன்றவர்கள். 112 00:08:42,210 --> 00:08:44,796 நீ என்னை பெருமைபடுத்ததான் இதைச் செய்தேன்னு சொல்ற, அப்புறம் அங்க அப்பாவுக்கு 113 00:08:44,796 --> 00:08:46,632 ஆனதைப் போலவே, என்னை தவிர்க்க முடியாத ஆபத்துல தள்ளிவிட்டுட்டயே. 114 00:08:46,632 --> 00:08:48,634 அது தான் எனக்கு நீ கொடுக்கும் பரிசா? 115 00:08:52,846 --> 00:08:53,972 கார்லா, பொறு. 116 00:08:53,972 --> 00:08:55,390 அவளைப் போக விடு! 117 00:09:02,731 --> 00:09:04,733 லின்னைக் கூப்பிடு. 118 00:09:13,033 --> 00:09:14,076 காசிம். 119 00:09:15,369 --> 00:09:16,912 ஜானி. -லின்பாபா. 120 00:09:49,319 --> 00:09:52,030 ஹோட்டலில் வருகை தந்த நேரப் பதிவு ரிப்போர்ட் 121 00:10:02,165 --> 00:10:05,377 நீ இங்கே வரப் போறதில்லைன்னா, என... நான் இங்கே எதுக்காக காத்திட்டிருக்கணும்? 122 00:10:06,378 --> 00:10:07,587 நீ இப்போ அதை எங்கிட்டச் சொல்ற சரி, 123 00:10:07,587 --> 00:10:10,340 ஆனால் நான் என் வாடிக்கையாளர்கிட்ட அவன் பாஸ்போர்ட்டைப் பத்தி என்ன சொல்வேன்? 124 00:10:11,300 --> 00:10:15,137 இன்னிக்கு தருவதாக அவன் கிட்ட வாக்கு கொடுத்திருக்கேன். எனக்கும் ஒரு பேரு இருக்கில்ல. 125 00:10:16,555 --> 00:10:17,556 அப்படின்னா எவ்வளவு நாள்? 126 00:10:18,765 --> 00:10:21,184 அட, நான் அவங்கிட்ட உன்னோட மன்னிப்பை எல்லாம் சொல்ல முடியாதுப்பா. 127 00:10:23,854 --> 00:10:24,855 டீடேர் லீவே? 128 00:10:26,815 --> 00:10:28,567 நான் தான் சப்-இன்ஸ்பெக்டர் சவான் சர்மா. 129 00:10:28,567 --> 00:10:30,777 நீங்க என்னுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரணும். 130 00:10:32,070 --> 00:10:35,365 என்ன விஷயம்னு சொல்ல முடியுமா? 131 00:10:35,365 --> 00:10:36,950 சார், பிளீஸ். என்னுடன் வாங்க. 132 00:10:37,451 --> 00:10:39,077 உடனேயா? -உடனே. 133 00:10:55,302 --> 00:10:58,180 லின்பாபா. வந்து ஒரு பெக் போடுங்கப்பா, 134 00:10:58,180 --> 00:11:01,892 இல்லைன்னா நாங்க இந்த குழியிலேயே உங்களைப் புதைச்சுடுவோம், அப்புறம் பைப்புக்கு இடமிருக்காது. 135 00:11:03,894 --> 00:11:06,897 காசிம். வேலையெல்லாம் சரியா நடக்குதா? 136 00:11:08,273 --> 00:11:09,650 நான் காதரிடம் சொல்றேன். 137 00:11:11,109 --> 00:11:14,446 குழிகள் தோண்டுறதுக்காக உன் கிளினிக்கை மூடிட்டயா, லின் சகோதரா? 138 00:11:20,452 --> 00:11:21,703 எல்லாம் நலம் தானே, திரு. லின்? 139 00:11:33,590 --> 00:11:34,675 நீ என்ன செய்யற? 140 00:11:35,634 --> 00:11:37,427 என்னைக் கூட்டிட்டு வர, காதர் உன்னை அனுப்பியிருக்கார், சரிதானே? 141 00:11:38,470 --> 00:11:40,389 அவர் விசில் அடிச்சா, நீ ஓடி வந்திடுவயா? 142 00:11:41,640 --> 00:11:42,766 மரிஃஜிசோவைக் கண்டுபிடிச்சயா? 143 00:11:45,268 --> 00:11:47,813 ரஹீமைப் பிடிக்க எனக்கு உதவி செய்ததால நீங்க சொன்ன பொய்களுக்கு ஈடுகட்டிட முடியாது. 144 00:11:50,107 --> 00:11:51,733 உனக்கு எப்படி இருக்கும்னு எனக்குப் புரியுது. 145 00:11:53,860 --> 00:11:55,946 ஆனால் நான் என் சகோதரனுக்கும் அப்பாவுக்கும் இடையே மாட்டிக்கிட்டேன். 146 00:11:55,946 --> 00:11:58,365 உனக்குத் தெரியாத வரைக்கும், நான் எந்த பக்கம்னு தேர்வுசெய்ய அவசியம் இருக்கலை. 147 00:11:58,365 --> 00:12:01,743 ஓ, அதனால பதிலுக்கு நீ பொய் சொல்லிட்டே இருந்தயாக்கும்? நல்ல சகோதரத்துவம் தான். 148 00:12:01,743 --> 00:12:03,537 காதர், சரியானதைச் செய்ய முயற்சி செய்கிறார். 149 00:12:03,537 --> 00:12:06,039 அதனால அவர் சங்கடமான முடிவுகளை எடுக்க வேண்டி வரும். 150 00:12:06,039 --> 00:12:08,667 ஆனால், அது புரியலைனாலும், நான் அவருடைய திட்டத்தை நம்புறேன். 151 00:12:09,793 --> 00:12:12,671 இவ்வளவு எல்லாம் நடந்ததுக்கு அப்புறம், நண்பா, என்னால யாரையும் நம்ப முடியலை. 152 00:12:14,381 --> 00:12:15,882 காதரி இல்ல, கார்லா இல்ல, 153 00:12:17,384 --> 00:12:18,427 உன்னையும் தான். 154 00:12:21,096 --> 00:12:22,097 போகலாம் வா. 155 00:12:26,184 --> 00:12:27,561 நான் எப்போதுமே உன் சகோதரனாதான் இருப்பேன். 156 00:12:29,438 --> 00:12:31,231 நீ என் சகோதரனா இருப்பயான்னு நீ தான் முடிவு செய்யணும். 157 00:12:41,116 --> 00:12:42,117 நைட் கிளப் 158 00:12:42,117 --> 00:12:43,327 வலீத். 159 00:12:48,040 --> 00:12:50,334 நீங்க வீட்டுச் சேவைகளையும் செய்யறீங்கன்னு எனக்குத் தெரியாம போயிடுச்சே, மேடம். 160 00:12:50,917 --> 00:12:53,920 ஆனால், துரதிர்ஷ்டவசமா, நீங்க என் விருப்பத்துக்கு இல்லையே? 161 00:12:55,047 --> 00:12:58,467 என்னிக்காவது ஒரு நாள், "நான் மட்டும் அவங்கள அவமானப்படுத்தியிருக்கலைன்னா, எல்லாமே 162 00:12:58,467 --> 00:13:02,804 வித்தியாசமா இருந்திருக்குமே," அப்படின்னு நீ இந்த தருணத்தைப் பத்தி 163 00:13:03,347 --> 00:13:05,390 யோசிக்க தான் போற. 164 00:13:06,433 --> 00:13:08,268 நீங்க பேலஸை விட்டு வந்ததாகக் கேள்விப்பட்டதே கிடையாது. 165 00:13:08,852 --> 00:13:10,479 இதுவரையில், 166 00:13:10,479 --> 00:13:11,563 எனக்கு அதுக்கு அவசியம் வரலை. 167 00:13:17,069 --> 00:13:21,198 பிளீஸ், மேடம், என்னுடைய மோசமான ஜோக்கை மனசுல வச்சுக்காதீங்க. என்னை மன்னிச்சிடுங்க, ம்ம்? 168 00:13:22,199 --> 00:13:23,700 நான் செய்தது தப்பு தான். 169 00:13:26,620 --> 00:13:29,665 மினிஸ்டர் பான்டேயோட நீங்க போட்டிருக்குற டீலை, காதர் கான் வெளிப்படுத்த திட்டமிட்டிருக்கார். 170 00:13:30,499 --> 00:13:33,043 நீங்க என்ன பேசுறீங்கனே எனக்குத் தெரியலை. எனக்கு பான்டேயைத் தெரியாது. 171 00:13:34,670 --> 00:13:39,257 பான்டேக்கு, காமாத்திப்புராவுல சுனிதான்னு ஒரு விபச்சாரியோட தொடர்பு இருக்கு. 172 00:13:40,258 --> 00:13:42,010 அதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? 173 00:13:42,010 --> 00:13:44,429 அந்த பெண்ணை கொண்டு வர்றதுக்கு உதவி செய்ய காதர்பாய் என்ன வற்புறுத்தினார். 174 00:13:45,180 --> 00:13:46,598 அதுக்காக மட்டுமே உங்களை நான் கொல்லணும். 175 00:13:47,307 --> 00:13:50,102 அதோட, ருஜுல் விஷயத்துல நான் உனக்கு உதவி செய்ததுக்கு என்னை மிரட்டினார். 176 00:13:53,730 --> 00:13:55,774 நான் உயிர் பிழைத்திருக்க தான் முயற்சி செய்யறேன். 177 00:13:56,692 --> 00:13:58,402 இப்போ ஏன் இதை எங்கிட்ட சொல்றீங்க? 178 00:13:59,361 --> 00:14:02,823 நம்ம ரெண்டு பேரையுமே குழி தோண்டிப் புதைக்க காதர் ஒரு பத்திரிகையாளரை உபயோகிக்கிறான். 179 00:14:04,032 --> 00:14:06,493 நான் தனியா போராடும் சக்தி எனக்குக் கிடையாது. 180 00:14:07,953 --> 00:14:09,288 அவங்க இதுக்கு பதில் சொல்லித் தான் ஆகணும். 181 00:14:09,913 --> 00:14:11,081 "அவங்க"ன்னா யாரு? 182 00:14:11,081 --> 00:14:14,209 காதரும், கார்லா சாரனெனும். 183 00:14:16,837 --> 00:14:18,797 நீங்க இதைக் கண்டுபிடிச்சிட்டீங்கன்னு காதருக்குத் தெரியுமா? 184 00:14:21,008 --> 00:14:22,301 சரி, இது ரொம்ப நல்லது. 185 00:14:24,636 --> 00:14:26,763 நீங்க சொன்னது மட்டும் சரியா இருந்தா... 186 00:14:28,515 --> 00:14:32,311 நான் ஒரேடியா காதரைத் தீர்த்துக் கட்ட இது ஒரு நல்ல சாக்கு. 187 00:14:33,186 --> 00:14:37,232 நீங்க சரியான பக்கத்தை தான் தேர்ந்தெடுத்துருக்கீங்க, மேடம். பதிலுக்கு நான் என்ன செய்யணும்? 188 00:14:42,279 --> 00:14:44,114 என்னை நம்ப வைக்கும் செயலை கார்லா கிட்ட செய்யச் சொன்னீங்களா? 189 00:14:44,114 --> 00:14:47,659 இல்லை. அவளுக்கு உன் மேல இருக்கும் காதலைப் பத்தி என்னிடம் சொல்லாம மறைச்சிட்டா. 190 00:14:47,659 --> 00:14:50,078 அது தான் இந்த குழப்பத்துக்கு எல்லாம் காரணம். 191 00:14:50,704 --> 00:14:53,957 சரிதான், "தற்போதோ பின்னரோ, அவரவர் செய்த வினைப் பயனின் விருந்தை அனுபவிப்பார்கள்." 192 00:14:53,957 --> 00:14:55,459 ஓ, லின். 193 00:14:56,710 --> 00:14:59,338 நிஜமாவே எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. அது பொய்யில்லை. 194 00:14:59,338 --> 00:15:01,757 சரி, அந்த எழவைப் பத்தி எனக்கு எந்த அக்கறையும் இல்லை, என்னை மன்னிக்கணும். 195 00:15:01,757 --> 00:15:03,300 நீ யார் கிட்ட பேசுறங்குறதை மறக்க வேண்டாம். 196 00:15:04,843 --> 00:15:05,844 ஓ, எனக்குத் தெரியும். 197 00:15:06,678 --> 00:15:09,723 இந்த இடத்துல, இருக்குற உண்மையான நண்பர்களை, என் மூலமா ஏமாத்துறதுக்காக, ஏதோ ஒரு ஜென்மத்துல 198 00:15:09,723 --> 00:15:13,226 எனக்குத் தந்தையா இருந்திருக்கார்னு கதைவிட்ட ஆள் கிட்ட தான் பேசுறேன். 199 00:15:13,226 --> 00:15:15,145 இந்த வீட்டுல இருக்குற வரை மரியாதையில்லாம பேசாதே. 200 00:15:15,145 --> 00:15:17,522 இல்லன்னா என்ன ஆகும்? -போதும். போதும். 201 00:15:17,522 --> 00:15:18,607 அப்துல்லா. 202 00:15:22,194 --> 00:15:25,113 எனக்குத் தோணுது, மரியாதைங்குறதை நாம சம்பாதிக்கணும்னு, லின் சொல்வான். 203 00:15:26,531 --> 00:15:28,325 அவனுடைய கோபம் நியாயமானது தான். 204 00:15:31,453 --> 00:15:32,746 நான் மன்னிப்பு கேட்குறேன், லின். 205 00:15:33,622 --> 00:15:35,207 ஆனால், விஷயங்கள் ரொம்ப வேகமா மாறிட்டு வருது, இப்போ இந்த தருணத்துல 206 00:15:35,207 --> 00:15:39,252 நான் வெகு காலமா எதுக்காக உழைச்சேனோ, அதெல்லாம் அபாயத்துல இருக்கு. 207 00:15:39,252 --> 00:15:43,215 எனக்குக் கவலையில்லை. நான் கிளம்புறேன். உங்களோட சகவாசம் எல்லாம் எனக்குப் போதும். 208 00:15:43,215 --> 00:15:46,176 உண்மையைச் சொன்னா, நீ தான் என் பிரச்சினைகளுக்குக் காரணம். 209 00:15:50,514 --> 00:15:53,016 எனவே, இன்னும் வேறே எதையோ எங்கிட்டேர்ந்து எதிர்பார்த்து தான் இங்கே என்னைக் கூப்பிட்டீங்களா? 210 00:15:54,184 --> 00:15:55,394 ஓ, அதை நான் எதிர்பார்க்கவேயில்லை. 211 00:15:55,978 --> 00:15:59,022 கவிதா கண்ணா கிட்ட கார்லா ஒரு விஷயத்தை செய்திகளா போடச் சொல்லி கொடுத்திருக்கா 212 00:15:59,022 --> 00:16:01,233 அப்படிச் செய்தா நீ சாகர் வாடாவுல தங்க முடியம்னு. 213 00:16:01,984 --> 00:16:04,528 அந்த செய்தி, வலீத் ஷாவோட ஒரு யுத்தத்தையே ஆரம்பிச்சிடும். 214 00:16:05,362 --> 00:16:08,490 ஆனால், நீ ஆசைப்பட்டதை உனக்குத் தரணும் என்பதுக்காக, என் கூட இவ்வளவு நாள் உழைச்சதையெல்லாம் கார்லா 215 00:16:08,490 --> 00:16:10,325 தூக்கி எறியத் தயாரா இருக்கா. 216 00:16:10,325 --> 00:16:13,704 நீ கார்லாவிடம் பேசி, அந்த செய்தியை வரவிடாமல் செய்யணும், 217 00:16:13,704 --> 00:16:15,372 இல்லன்னா அவள் உயிருக்கே ஆபத்தாகும். 218 00:16:16,873 --> 00:16:22,170 ஆனால், நீ தான் ஏற்கனவே சொல்லிட்டயே, நீ கிளம்புறன்னு, அதனால உனக்கென்ன அக்கறை இருக்கும்? 219 00:16:27,718 --> 00:16:29,136 இது உன் கையில் இல்லாமல் நீ ரொம்ப தூரம் போக முடியாது. 220 00:16:29,136 --> 00:16:30,053 ஆஸ்திரேலியா 221 00:16:30,846 --> 00:16:32,514 எனக்குத் தெரிய வராதுன்னா நீ நினைச்ச? 222 00:16:32,514 --> 00:16:34,099 நான் தான் இங்கே ஆவணச் சந்தையை கட்டுப்படுத்தறேன். 223 00:16:35,517 --> 00:16:37,519 அடேங்கப்பா. 224 00:16:39,688 --> 00:16:40,689 பிளாக்மெயிலா? 225 00:16:43,400 --> 00:16:44,401 அவ்வளவு தானா? 226 00:16:46,445 --> 00:16:48,363 ச்சே, நீ வெறும் ஒரு ஃபிராடு தான். 227 00:16:49,656 --> 00:16:53,577 மந்திரவாதி புளுகு-வியாபாரி தான், ஆனால் வேதாந்தி மாதிரி வேஷம் போடுற. 228 00:16:53,577 --> 00:16:55,787 நீ நிஜமாவே அவரிடம் எல்லா பதில்களும் கிடைக்கும்னு நினைக்கிறயா என்ன? 229 00:16:55,787 --> 00:16:58,332 கார்லாவை அந்த செய்தி வெளியாவதைத் தடுத்து நிறுத்தச் சொல்லு. 230 00:16:59,499 --> 00:17:02,502 பிளீஸ். எந்த கட்டணமும் இல்லாம இதை உனக்குத் தரேன். 231 00:17:04,880 --> 00:17:06,548 அவள் என்ன செய்யணும்னு கார்லாவே தீர்மானிக்கட்டும். 232 00:17:08,592 --> 00:17:10,594 நான் எப்படியோ பிழைச்சுப்பேன். ஒரு வழி இல்லைன்னா இன்னொரு வழியில. 233 00:17:15,140 --> 00:17:16,683 இதுக்கு மேலே உனக்குத் தகுதி இருக்கு, சகோதரா. 234 00:17:31,323 --> 00:17:33,450 இல்லையில்லை! 235 00:17:33,450 --> 00:17:35,202 விடு, நான் நல்லாயிருக்கேன். 236 00:17:40,999 --> 00:17:42,960 என்னை விடு. விடு. 237 00:17:54,972 --> 00:17:58,141 இந்த கோப்புகளைப் பரிசீலனை செய்வதில் உதவறதுக்கு வந்திருக்கேன்னு சொல்லு. 238 00:17:59,351 --> 00:18:02,771 பாரு, உன் பாயிண்ட் எனக்கு புரிஞ்சு போச்சு. என்னை நம்பு. 239 00:18:04,815 --> 00:18:06,441 னான் கேடுகெட்டவனா இருந்தேன். நான் மன்னிப்பு கேட்குறேன். 240 00:18:13,615 --> 00:18:14,658 உண்மையா. 241 00:18:16,827 --> 00:18:17,869 மன்னிப்பு ஏற்கப்பட்டது. 242 00:18:20,831 --> 00:18:23,875 லின்ட்சே ஃபோர்டு எங்கே இருக்கான்னு துல்லியமா தெரியக்கூடிய ஆள் ஒருத்தனை நான் கண்டுபிடிச்சேன். 243 00:18:57,367 --> 00:19:01,663 நீ முன்னாடி ஒரு முறை இங்கே மாட்டிக்கிட்டபோது, லின்ட்சே ஃபோர்டு உன்னை பெயில்ல எடுத்தான், இல்ல? 244 00:19:02,372 --> 00:19:04,124 அதனால அவனை எங்கே கண்டுபிடிக்க முடியும்னு உனக்குத் தெரியும்னு நினைக்கிறேன். 245 00:19:06,335 --> 00:19:08,170 சார், நீங்க யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? 246 00:19:08,837 --> 00:19:11,965 நான் தான் துப்பறிவாளர் வால்டர் நைட்டிங்கேல், ஆஸ்திரேலிய ஃபெடரல் போலீஸ். 247 00:19:12,591 --> 00:19:14,676 ஆம், நான் தான் டேல் கான்டீயை சிறையில அடைச்சவன்... 248 00:19:14,676 --> 00:19:16,845 அது தான் உன் நண்பனோட உண்மையான பேரு... 249 00:19:16,845 --> 00:19:19,306 ஆயுதத்தோட கொள்ளை அடிச்சு, ஒரு போலீஸ்காரனையும் கொலை செய்திருக்கான். 250 00:19:22,726 --> 00:19:23,852 நீங்க ரொம்ப தூரம் வந்திருக்கீங்க. 251 00:19:24,728 --> 00:19:26,188 நான் அவனை பிடிச்சுக் கொண்டு போகாம விடமாட்டேன். 252 00:19:27,189 --> 00:19:30,692 சரி... எனக்கு, டேலை அல்லது லின்னை அதிகம் தெரியாது, 253 00:19:30,692 --> 00:19:31,818 நீங்க எப்படி அவனைக் கூப்பிடாலும் சரி. 254 00:19:31,818 --> 00:19:33,987 அதிகம் தெரியாதா? தெரியாதா? -ஆம், நான் வெறுமனே அறிமுகமானவன் தான். 255 00:19:33,987 --> 00:19:35,572 உண்மையா? -ஆமாம். 256 00:19:36,573 --> 00:19:37,574 அவன் உன் நண்பன். 257 00:19:38,158 --> 00:19:39,743 எனக்கு நண்பர்களே கிடையாது. 258 00:19:40,577 --> 00:19:43,288 என் வாழ்க்கை அப்படி இருப்பதால தான் சுலபமா இருக்கு. 259 00:19:43,997 --> 00:19:46,166 அப்போ, சவான் உன்னை அந்த இருட்டறையில போட்டுப் பூட்டி வைக்குறபோது 260 00:19:46,166 --> 00:19:49,086 உன்னை காப்பாத்த யாரும் வாரமாட்டாங்க போலும். 261 00:20:05,018 --> 00:20:06,770 உன்னை திரும்பவும் பார்ப்பேன்னு நான் நினைக்கலை. 262 00:20:07,854 --> 00:20:10,857 நீ கவிதாவுடன் என்ன டீல் போட்டிருந்தாலும் அதை இப்போதே ரத்துசெய்துடு. 263 00:20:11,358 --> 00:20:12,818 உனக்காக அவள் போட்ட டீலையா? 264 00:20:13,735 --> 00:20:15,570 உன்னை உன் பொன்னான சேரியிலேயே தங்க வைக்குறதுக்காக போட்டது. 265 00:20:15,570 --> 00:20:16,989 லீசா, வேண்டாம். -இல்லை. 266 00:20:16,989 --> 00:20:18,991 நேத்தி ராத்திரி அவன் உங்கிட்ட பேசினது கொஞ்சமும் சரியில்லை. 267 00:20:21,034 --> 00:20:22,494 அவ உனக்காக அவளுடைய வாழ்க்கையையே பணையம் வச்சிருக்கா. 268 00:20:22,494 --> 00:20:24,621 மேலே வேறெதுவும் சொல்றதுக்கு முன்னாடி அதை முதல்ல புரிஞ்சுக்கோ. 269 00:20:24,621 --> 00:20:26,498 நீ காதரிடன் பேசினயா. 270 00:20:27,624 --> 00:20:28,625 ஆமாம். 271 00:20:30,502 --> 00:20:32,671 நீ செய்த காரியம் ஒரு போரை உருவாக்கும்னு சொன்னார். 272 00:20:36,675 --> 00:20:38,468 அப்புறம் என்னோட புது பாஸ்போர்ட்டை எங்கிட்ட காட்டினார். 273 00:20:39,594 --> 00:20:42,889 உங்கிட்ட அந்த கதையை வெளியாகாம பார்த்துக்கும்படி செய்யச் சொன்னா, அதை தருவாராம். 274 00:20:42,889 --> 00:20:43,974 அதுக்கு நீ என்ன சொன்ன? 275 00:20:43,974 --> 00:20:45,684 உன்னால ஆனதைப் பார்த்துக்கோன்னுட்டேன். -ஏன்? 276 00:20:45,684 --> 00:20:48,270 ஏன்னா, இனிமேல் நான் எந்த பொய்யையும் நம்பி மோசம் போகப் போறதில்லை. 277 00:20:49,521 --> 00:20:51,648 அதுக்காக உன்னை ஆபத்துல பார்க்க நான் விரும்பலை. 278 00:20:54,318 --> 00:20:58,155 ச்சே, கார்லா. நீ ஏன் எங்கிட்ட முதல்லயே உண்மையைச் சொல்லலை? 279 00:20:58,822 --> 00:21:00,699 நான் உங்கிட்ட இதையெல்லாம் செய்யச் சொல்லி கேட்கவேயில்லையே. 280 00:21:04,202 --> 00:21:06,079 வெறுமனே உன்னுடன் இருக்க மட்டும் தான் விரும்பினேன். 281 00:21:07,831 --> 00:21:09,166 அவ்வளவு தான். 282 00:21:11,460 --> 00:21:13,754 உன்னால இருக்க முடியும்னா, உனக்கு பாஸ்போர்ட் தேவையே இல்லையே. 283 00:21:13,754 --> 00:21:16,965 அதோட இப்போ உன்னால இங்கே இருக்க முடியும், லின். அதை உறுதியாச் சொல்றேன். 284 00:21:19,426 --> 00:21:20,927 நான் போறேன். -ஏன்? 285 00:21:22,846 --> 00:21:25,057 ஏன்னா எல்லாமே மாறிப் போச்சு. 286 00:21:25,057 --> 00:21:28,310 எனவே, நீ உன் வாழ்க்கையை பழையபடி வாழலாம், நான் இங்கே வராதது போல. 287 00:21:28,310 --> 00:21:30,020 அடக் கடவுளே. 288 00:21:30,020 --> 00:21:33,982 வேண்டாத சண்டையை விட்டுட்டு, நீங்க ரெண்டு பேரும் பிரச்சினையை தீர்க்கும் வழிய பார்க்குறீங்களா? 289 00:21:35,609 --> 00:21:37,194 அனைவரும் தான் பொய் சொல்வதுண்டு. 290 00:21:37,194 --> 00:21:39,279 எல்லோருமே கெட்டதைச் செய்யறோம். அதனால் என்ன? 291 00:22:02,094 --> 00:22:03,220 உனக்கு என்ன வேணும்? 292 00:22:04,137 --> 00:22:05,138 இங்கேயே இரு. 293 00:22:06,848 --> 00:22:08,976 இதையெல்லாம் வீணாக்கிடாதே. பிளீஸ். 294 00:22:09,559 --> 00:22:11,144 இனிமேல் ரொம்ப தாமதாகிடுச்சு. 295 00:22:27,077 --> 00:22:30,664 சிறைக்குப் போகும் ஆபத்தையும் சந்திப்பயா? கான்டீக்காக எதையும் செய்வயா? 296 00:22:30,664 --> 00:22:33,709 அவன் சுயநலம் மட்டுமே இருக்குற பித்தலாட்டக்காரன். 297 00:22:33,709 --> 00:22:37,379 நான் முன்னாடியே சொன்னது போல, நீங்க வர்ணிக்கிற ஆள் எனக்கு தெரிந்தவர் இல்லை. 298 00:22:37,379 --> 00:22:40,132 திரு. லீவே, எங்க கிட்ட இருக்குற ஆதாரங்கள் எல்லாம் நேர் எதிரா நிரூபிக்குது. 299 00:22:40,841 --> 00:22:42,676 போலீஸ் கிட்ட பொய் சொல்றதும் குத்தம் தான், தெரியுமில்ல? 300 00:22:43,260 --> 00:22:45,220 உங்களுக்குத் தெரிஞ்ச தகவலை நீங்க எங்களோட பகிரலைன்னா, 301 00:22:45,220 --> 00:22:47,222 நான் உங்களை சிறையில் போட வேண்டி வரும். 302 00:22:47,222 --> 00:22:48,974 நம்ம ரெண்டு பேருமே அதை விரும்பலைன்னு நினைக்கிறேன். 303 00:22:53,645 --> 00:22:55,105 இதுக்கு மேலே என்னால எந்த உதவியும் செய்ய முடியலை. 304 00:22:55,105 --> 00:22:56,189 சவான்? 305 00:22:57,190 --> 00:23:00,694 அந்த வெள்ளைக்காரருக்கும் உங்களுக்கும் லின்ட்சே ஃபோர்டைப் பத்தி நான் ஒரு தகவல் சொல்றேன். 306 00:23:10,996 --> 00:23:12,456 சொல்லு கேட்கலாம். 307 00:23:12,456 --> 00:23:14,833 சாகர் வாடா குடிசை வாரியத்துல தான் அந்த லின்ட்சே ஃபோர்டு வாழ்ந்துட்டு இருக்கான். 308 00:23:14,833 --> 00:23:17,044 அவன் அங்கே இருக்குறவங்களுக்கு வைத்தியம் செய்துட்டு இருக்கான். 309 00:23:17,044 --> 00:23:19,046 சஞ்சய், உனக்கு எப்படி இந்த தகவல் எல்லாம் கிடைச்சுது? 310 00:23:19,046 --> 00:23:21,131 இதை எங்களிடம் சொல்றதுக்கு யார் உனக்கு பணம் கொடுக்கறாங்க? 311 00:23:21,131 --> 00:23:22,591 என் கடமையைத் தான் செய்யறேன், சார். 312 00:23:22,591 --> 00:23:24,343 எல்லாத்துக்கும் முதல் முறைன்னு ஒண்ணு இருக்கு. 313 00:23:24,343 --> 00:23:25,802 நான் இப்போதே உங்கள அங்கே கூட்டிட்டு போறேன். 314 00:23:27,054 --> 00:23:29,640 நம்ம சேரிக்குள்ள போறதுக்கு முன்னாடி நான் ஒரு அணியை அமைக்கணும். 315 00:23:29,640 --> 00:23:31,433 கைது பண்ணுறபோது, ஒழுங்கா பண்ணணும். 316 00:23:31,433 --> 00:23:33,393 நீ என்ன சொன்னாலும் சரி தான், சவான். இது உன்னுடைய ஊர். 317 00:23:36,688 --> 00:23:38,148 அங்கே முடங்கிக் கிடக்குற டீடேரின் கதி என்ன? 318 00:23:38,148 --> 00:23:40,692 நாம லீவேயை வெளியே விட்டா, அவன் நேரா நம்மை கான்டீ கிட்ட அழைச்சுட்டுப் போகலாம். 319 00:23:42,903 --> 00:23:44,112 அவன் பின்தொடர எற்பாடு பண்ணுவோம். 320 00:23:45,656 --> 00:23:47,532 அவன் லின் ஃபோர்டைத் தேடிப் போனா, அப்போ நமக்கு தெரிஞ்சுடும். 321 00:23:52,704 --> 00:23:55,040 துரோகத்துக்கு பதில் சொல்லும் நேரம் வந்துடுச்சு. 322 00:23:55,040 --> 00:23:58,752 காதருக்கு வயசாச்சு. அவனுடைய காலம் ஆயிடுச்சு. 323 00:23:58,752 --> 00:24:01,296 நம்ம வர்றது கூட அவனுக்குத் தெரியாது. 324 00:24:01,296 --> 00:24:05,842 இது முடிஞ்சதுக்கு அப்புறம், இந்த மொத்த மும்பையும் நமக்கு சொந்தம் ஆகிடும். 325 00:24:05,842 --> 00:24:08,762 நாம அவனுடைய தொழில்களை, பாதுகாப்பான இடங்களையும் அடிச்சு போடுவோம். 326 00:24:08,762 --> 00:24:13,475 அவனுடைய கை பொம்மைகளான பான்டே, காசிம் அலி, அப்துல்லா டஹெரியை எல்லாம் கொல்வோம். 327 00:24:17,479 --> 00:24:18,730 அப்புறம் அவனையும் கொல்வோம். 328 00:24:48,468 --> 00:24:49,469 ஹை. 329 00:25:18,040 --> 00:25:19,041 ஆஆ. 330 00:25:31,219 --> 00:25:33,221 கடைசியா உணவு வந்துடுச்சு. 331 00:25:40,103 --> 00:25:41,229 ஓட்டு! 332 00:25:57,287 --> 00:25:58,288 ஹே. 333 00:25:58,288 --> 00:25:59,998 நான் கழிப்பறைக்குப் போறேன். 334 00:25:59,998 --> 00:26:02,668 என் மேஜையில் யாரையும் உட்கார விடாதே. நான் இன்னும் முடிக்கலை. 335 00:26:11,093 --> 00:26:12,427 டபிள்யூசி 336 00:26:12,427 --> 00:26:13,512 பெண்கள் 337 00:26:13,512 --> 00:26:14,513 ஆண்கள் 338 00:26:56,680 --> 00:26:58,056 உனக்கு இதெல்லாம் வேணுமா? 339 00:26:58,056 --> 00:26:59,891 என் ஸ்டைல் இல்லை, பாஸ். -சரி. 340 00:26:59,891 --> 00:27:01,601 நன்றி. இதை எடுத்துக்கோ. 341 00:27:01,601 --> 00:27:03,979 ஹே, லின். -நீ இங்கே என்ன பண்ணுற? 342 00:27:03,979 --> 00:27:06,732 ஒரு ஆஸ்திரேலிய போலீஸ்காரன் இங்கே வந்து உன்னைத் தேடிட்டு இருக்கான். 343 00:27:08,984 --> 00:27:10,235 நைட்டிங்கேலா? -ஆமாம். 344 00:27:13,739 --> 00:27:15,657 உன்னை நாங்க தலைமறைவா வச்சிருக்கணும். 345 00:27:16,450 --> 00:27:18,201 மன்னிச்சிடு, உன் பாஸ்போர்ட் இன்னிக்கும் ரெடி ஆகலை, 346 00:27:18,201 --> 00:27:20,954 எனவே, உன்னை எங்கே ஒளிச்சு வக்கிறதுன்னு யோசிக்கணும், சரியா? 347 00:27:20,954 --> 00:27:22,039 அது என் கைக்கு கிடைக்குற வரை. 348 00:27:22,623 --> 00:27:24,207 காதர் கான் கிட்ட தான் என் பாஸ்போர்ட் இருக்கு. 349 00:27:28,420 --> 00:27:31,882 உனக்கு கார்லாவும் காதரும் சேர்ந்து தான் வேலை செய்யறாங்கன்னு தெரியுமா? 350 00:27:33,967 --> 00:27:34,968 தெரியும். 351 00:27:35,552 --> 00:27:36,928 கண்டிப்பா உனக்குத் தெரிஞ்சிருக்கும். 352 00:27:37,638 --> 00:27:41,933 ஆனால், ஹே, கார்லாவின் ரகசியத்தை காப்பாத்தியது, உன் ரகசியத்தைக் காப்பாத்தியது போல தானே? 353 00:27:41,933 --> 00:27:44,186 இந்த விஷயத்துல எல்லாம் நான் ஸ்விஸ் நாட்டுக்காரனைப் போல. 354 00:27:45,228 --> 00:27:46,229 ஆமாம். 355 00:27:48,565 --> 00:27:51,610 எனவே, காதர் உன்னிடம் அதை தரலையா? 356 00:27:52,527 --> 00:27:54,196 இல்ல, அதை வச்சு என்னை பிளாக்மெயில் செய்யறார். 357 00:27:58,659 --> 00:27:59,660 நாசமாப் போகட்டும். 358 00:28:01,787 --> 00:28:02,788 நாசமாப் போகட்டும். 359 00:28:09,127 --> 00:28:11,171 லின்பாபா! -ஹே! 360 00:28:12,464 --> 00:28:15,175 என்ன ஆச்சு? -குண்டர்கள். வலீதோட ஆட்கள். 361 00:28:15,175 --> 00:28:17,678 அவனை என் குடிசையில் போடு. -என்ன? லின், நாங்க போகணும். நாங்க... 362 00:28:17,678 --> 00:28:19,012 நான் அவரை இப்படி விட்டுட்டுப் போக முடியாது. 363 00:28:19,012 --> 00:28:20,305 ஆனால்... 364 00:28:20,305 --> 00:28:22,099 உனக்குப் பைத்தியம், என் சகோதரா. 365 00:28:23,308 --> 00:28:26,186 என்ன தெரியுமா? நான் வேற ஏற்பாடுகளைச் செய்யப் போறேன், சரியா? 366 00:28:26,186 --> 00:28:27,646 ஆனால் எவ்வளவு சீக்கிரம் முடியுதோ, வந்திடு... -சரி. 367 00:28:27,646 --> 00:28:29,147 ...சரியா? -பிரபு, பார்வதி எங்கேன்னு பாரு. 368 00:28:38,532 --> 00:28:40,409 இந்த கதை ரொம்ப முக்கியம், கவிதா. 369 00:28:40,409 --> 00:28:42,327 என் எடிட்டர் இதுக்காக முதல் பக்கத்தையே ஒதுக்கப் போகிறார். 370 00:28:43,578 --> 00:28:46,790 இந்த நிலத்தைப் பத்திய டீல்கள் எல்லாம் தீண்டத்தகாத ரகசியங்கள், யாரும் அதைத் தொட விரும்ப மாட்டாங்க. 371 00:28:47,332 --> 00:28:49,960 எனவே, பான்டே கமெண்ட் செய்ய மறுத்துட்டாரா? -அவர் பீதி அடைஞ்சுட்டார். 372 00:28:49,960 --> 00:28:52,462 நிச்சயமா நிரபராதியைப் போல நடந்துக்கலை. 373 00:28:52,462 --> 00:28:55,924 உறுதியாத் தெரியுமா? இவங்க எல்லாம், அதிகாரமுள்ளவங்க, ஆபத்தானவங்க. 374 00:28:55,924 --> 00:28:59,011 இந்த கட்டுரை வெளியானா, நம்ம எல்லோரையுமே அது ரொம்ப பாதிக்கும். 375 00:29:00,554 --> 00:29:02,723 அதனால, அவங்கள அப்படியே விட்டுடணுமா? 376 00:29:02,723 --> 00:29:05,100 நாம உண்மையைச் சொல்ல பயந்தால் அப்புறம் இங்கே இருந்து என்ன பயன்? 377 00:29:05,100 --> 00:29:06,977 நாம சொல்லலைன்னா, நாமும் அவங்களப் போல தானே. 378 00:29:08,353 --> 00:29:09,938 நான் உன்னை கல்யாணம் செய்துக்க விரும்புறேன். 379 00:29:11,440 --> 00:29:13,400 உன் ஆலோசனையின் பேருல அதை எடுத்துக்குறேன். 380 00:29:13,400 --> 00:29:15,360 ஆனால், இப்போ, நமக்கு வேலை இருக்கு. 381 00:29:15,360 --> 00:29:20,532 ஃஜூவைப் போல இருக்குறவங்க, இங்கே வந்து வாழ்ந்துட்டு இப்படிச் செய்யலாம்னு நினைக்கிறாங்க. 382 00:29:20,532 --> 00:29:23,160 இந்த மாதிரி ஒரு பொம்பள, மும்பைக்கு எந்த வகையில நல்லது செய்யறா? 383 00:29:23,160 --> 00:29:24,328 எனவே, இப்போ என்ன? 384 00:29:24,328 --> 00:29:26,997 நான் மினிஸ்டர் பான்டே கிட்ட பேச, அதிகாரப் பூர்வமா ஒரு கோரிக்கை வைக்கிறேன். 385 00:29:26,997 --> 00:29:30,083 நீ பேலஸைப் பத்தியும், மேடம் ஃஜூவைப் பத்தியும், இன்னும் தகவல்களைச் சேர்க்கணும். 386 00:29:30,667 --> 00:29:33,003 மத்த எல்லாத்தையும் விட, மக்கள் செக்ஸ் ஊழலை ரொம்ப விரும்புவாங்க. 387 00:29:33,587 --> 00:29:36,256 அதுக்கு அப்புறம் இந்த ஊழலைப் பத்தி வெளியிட்டு அவங்களை திடுக்கிட வைப்போம். 388 00:29:38,091 --> 00:29:41,136 நீ இதுக்கெல்லாம் தயாரா இருக்கயா? இனிமே பின்வாங்க முடியாது. 389 00:29:42,971 --> 00:29:44,181 நான் ரொம்ப தயாரா இருக்கேன். 390 00:29:52,230 --> 00:29:56,026 எனக்கு இந்த சந்தர்ப்பத்தைக் கொடுத்ததுக்கு நன்றி. எனக்கு இது ரொம்ப முக்கியமான விஷயம். 391 00:29:57,319 --> 00:29:59,613 நீ எனக்கு ஆதரவு தரலைன்னா நான் இங்கே இப்படி இருக்கமாட்டேன்னு தெரியும். 392 00:30:00,238 --> 00:30:03,742 திறமையைப் பார்த்த உடனேயே எனக்குத் தெரியும். இப்போ சீக்கிரமா அந்த திருத்தி எழுதுறதை கவனி. 393 00:30:16,672 --> 00:30:17,673 எப்படி இருக்கு? 394 00:30:20,550 --> 00:30:21,551 தலை வலிக்குது. 395 00:30:25,889 --> 00:30:28,058 சரி, அவருக்கு ஓய்வு தேவை, ரொம்ப அசையக் கூடாது. 396 00:30:28,058 --> 00:30:29,810 அவருக்கு உள்ளே பலமா அடிபட்டிருக்குன்னு நினைக்கிறேன். 397 00:30:29,810 --> 00:30:32,896 அதனால், அவரை விழிச்சிருக்க வச்சு, அவர் யார் என்னன்னு விவரத்தை கேட்டுட்டே இருக்கணும். 398 00:30:32,896 --> 00:30:34,147 அவருக்கு இன்னும் இந்த... 399 00:30:34,147 --> 00:30:35,440 காசிம்பாய். 400 00:30:41,655 --> 00:30:46,243 அங்கே ஒரு டீக்கடை இருக்கு. அந்த வெள்ளைக்காரனோட கிளினிக் பக்கத்துல தான். 401 00:30:47,452 --> 00:30:50,038 அந்த வெள்ளைக்கார டாக்டர் எங்கே வசிக்கிறான்? 402 00:30:52,874 --> 00:30:53,875 ஹம்? 403 00:31:05,053 --> 00:31:06,680 என்ன ஆயிருக்கு? 404 00:31:08,265 --> 00:31:11,727 அவருக்கு ஹீமடோமா இருக்குன்னு நினைக்கிறேன். மண்டைக்குள்ள இரத்தக்கசிவு. 405 00:31:11,727 --> 00:31:12,686 அது ரொம்ப ஆபத்தானதா? 406 00:31:12,686 --> 00:31:14,938 ஆதாவது, உள்ளுக்குள்ள இருக்குற அழுத்தத்தை நாம இலகுவாக்கலைன்னா, இறந்து விடுவார். 407 00:31:17,858 --> 00:31:19,776 லின்பாபா, போலீஸ் இங்கே வந்து உன்னைத் தேடிட்டு இருக்காங்க. 408 00:31:20,569 --> 00:31:22,070 சரி, லின், நீ இப்போ போக தான் வேண்டும். 409 00:31:22,070 --> 00:31:23,655 உன்னை வேறே எங்கேயாவது மறைச்சு வக்கணும். 410 00:31:26,533 --> 00:31:27,701 நான் இவரை விட்டுட்டுப் போக முடியாது. 411 00:31:27,701 --> 00:31:31,246 காசிமை அவர் குடிசைக்கே எடுத்துட்டுப் போகலாம். பொருட்களை எடுத்துட்டு அங்கேயே சிகிச்சை செய். 412 00:31:32,748 --> 00:31:35,542 சரி. ஜானி, அவரை எடுத்துப் போக நீ எனக்கு உதவு. பார்வதி நீ நம்முடைய மருந்துகளை எடுத்துட்டு வா. 413 00:31:36,126 --> 00:31:39,504 காசிம், நாங்க இப்போ உங்கள நகர்த்தப் போறோம், என்ன? மூணு எண்ணுற போது உங்கள தூக்குவோம். 414 00:31:39,504 --> 00:31:41,465 ஒண்ணு, ரெண்டு, மூணு. 415 00:31:43,675 --> 00:31:44,801 ச்சே. 416 00:31:44,801 --> 00:31:46,928 நான் இங்கேயே இருக்கேன். போலீஸ்காரங்களை தாமதிக்கிறேன். போங்க. 417 00:31:46,928 --> 00:31:50,057 பிரபு. வேண்டாம். -காசிம்பாய்க்கு நீங்க ரெண்டு பேரும் இருக்கணும். 418 00:31:50,057 --> 00:31:51,475 நான் டாக்டர் இல்லை. 419 00:31:52,267 --> 00:31:53,935 ஆனால் என்னால உங்களுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசத்தைத் தர முடியும். 420 00:32:15,457 --> 00:32:16,458 யார் அது? 421 00:32:16,458 --> 00:32:17,542 செபாஸ்டியன். 422 00:32:24,925 --> 00:32:25,926 லீசா. 423 00:32:33,141 --> 00:32:34,142 என் அன்பே. 424 00:32:35,310 --> 00:32:37,312 கார்லா. -செபாஸ்டியன். 425 00:32:37,312 --> 00:32:39,606 லின்னைக் கூட்டிட்டு வரலாம், தாமதமாகலை. 426 00:32:39,606 --> 00:32:42,609 லின்னா? நாம ஏன் லின்னைக் கூட்டிட்டுப் போகணும்? 427 00:32:42,609 --> 00:32:44,528 ஏன்னா அவன்தான் மரிஃஜிசோவிடமிருந்த நம்மள காப்பாத்தினான். 428 00:32:45,404 --> 00:32:47,614 ஏன்னா, நீ என் மேல அன்பு வச்சிருக்குறது போல அவன் கார்லா மேல அன்பு வச்சிருக்கான். 429 00:32:47,614 --> 00:32:48,699 வேண்டாம். 430 00:32:48,699 --> 00:32:52,035 கார்லா, எனக்குப் பரவாயில்லை. நம்ம கிட்ட போதுமான அளவு பணம் இருக்குப் போக. 431 00:32:53,203 --> 00:32:54,329 அந்த பணம் எங்கே? 432 00:32:56,623 --> 00:32:58,166 அதை நான் பாதுகாப்பான இடத்துல வச்சிருக்கேன். 433 00:33:00,669 --> 00:33:02,838 நாம ஊரை விட்டு போறபோது எடுத்துக்கலாம். 434 00:33:09,261 --> 00:33:10,971 இதுக்கு முன்னாடி இதை செய்திருக்கீங்களா? 435 00:33:10,971 --> 00:33:14,057 இல்லை. இதெல்லாம் ஒரு சர்ஜன் தான் செய்யணும். 436 00:33:14,891 --> 00:33:17,978 நாம இந்த அழுத்தத்தை எடுக்கலைன்னா, அவர் இறந்து விடுவார், அதனால முயற்சி செய்யணும். 437 00:33:25,694 --> 00:33:27,571 சரி, இப்போ அவரை கெட்டியா பிடிச்சுக்கோ. 438 00:33:31,116 --> 00:33:33,452 கெட்டியா. அவரை கெட்டியாப் பிடி. 439 00:33:40,834 --> 00:33:42,753 எனக்கு அயோடினும் பஞ்சும் வேண்டும். 440 00:33:47,132 --> 00:33:49,176 சரி. சரி. நல்லது. 441 00:33:51,511 --> 00:33:52,721 சரி. 442 00:34:00,520 --> 00:34:02,731 அந்த பகுதியை தூக்கிப் பிடிக்கணும். 443 00:34:09,780 --> 00:34:11,031 அடக் கடவுளே! -ஹே. 444 00:34:11,031 --> 00:34:12,199 பின்னாடிப் போ. 445 00:34:17,663 --> 00:34:19,539 நீ ரொம்ப தப்பு செய்யற. 446 00:34:21,083 --> 00:34:22,083 ஏன்? 447 00:34:23,085 --> 00:34:24,586 ஏன்னா நீ காதர் கானுக்கு வேலைப் பார்க்குறதாலயா? 448 00:34:26,922 --> 00:34:29,174 சரி, உனக்குத் தெரிந்திருக்கும், அவர் இப்போ இறந்து போய் இருப்பாரே? 449 00:34:29,840 --> 00:34:31,385 நீ ஆரம்பிச்சு வச்ச ஒரு சண்டையால. 450 00:34:32,135 --> 00:34:34,513 மேடம் ஃஜூ ரெண்டு பேரையும் பார்க்கணுங்கிறாங்க. -முடியவே முடியாது. 451 00:34:36,181 --> 00:34:37,641 அந்த பேகுகள், மொடேனா. அப்புறம் நீ, கார்லா. 452 00:34:50,112 --> 00:34:51,571 அந்த பணம் எங்கே? 453 00:34:54,241 --> 00:34:55,951 பணம். பணம். அந்த பணம்! 454 00:34:55,951 --> 00:34:58,287 கண்ராவி, அந்த பணம் எங்கே? அது எங்கேன்னு சொல்லு, உடனே! 455 00:34:58,287 --> 00:35:00,372 மரிஃஜிசோ, அவங்களைப் போக விடு, அப்புறம் நான் உன்னிடம் அதைக் கொடுக்கறேன். 456 00:35:01,498 --> 00:35:03,583 இல்ல. -இங்கே வா. 457 00:35:03,583 --> 00:35:05,711 இல்ல, இல்ல. வேண்டாம். மரிஃஜிசோ. -இல்ல! 458 00:35:06,211 --> 00:35:07,754 இங்கே வா. நான் சொல்றதைக் கேளு. 459 00:35:07,754 --> 00:35:10,257 நீ அந்த பணத்தை என்ன செய்தன்னு என்னிடம் சொல்லலைன்னா, 460 00:35:10,257 --> 00:35:11,883 நான் அடிச்சு நொறுக்கிடுவேன்... -இல்லை, வேண்டாம். 461 00:35:11,883 --> 00:35:15,762 ...என்னை சுடுன்னு கெஞ்சுற வரை இந்த அழகு முகத்தை அடிப்பேன். உனக்குப் புரியுதா? 462 00:35:16,596 --> 00:35:17,973 போதும். நாம இப்போ போகணும். 463 00:35:17,973 --> 00:35:19,725 கொண்டு போ. -இல்லை, இல்ல! வேண்டாம். 464 00:35:19,725 --> 00:35:21,018 ஷ்ஷ். சொல்லிடு. -இல்ல! 465 00:35:21,018 --> 00:35:22,728 எங்கே இருக்குன்னு எங்கிட்ட சொல்லு. -மரிஃஜிசோ. 466 00:35:22,728 --> 00:35:24,021 அந்த பணம் எங்கே இருக்குன்னு சொல்லிடு. 467 00:35:24,021 --> 00:35:25,814 சொல்லு. சொல்லு! 468 00:35:25,814 --> 00:35:27,232 மாட்டயா? மாட்டயா? -மாட்டேன். 469 00:35:27,816 --> 00:35:29,651 இல்ல! இல்ல! 470 00:35:37,159 --> 00:35:38,994 கண்ணே. அவனுக்கு உதவுங்க, பிளீஸ்! 471 00:35:38,994 --> 00:35:42,664 பிளீஸ், இல்ல. இல்லயில்ல. -இங்கே வா. 472 00:35:42,664 --> 00:35:44,541 அவனைக் காப்பாத்துங்க, பிளீஸ். 473 00:35:45,125 --> 00:35:48,712 அந்த பணம் எங்கே இருக்குன்னு சொல்லு, உடனே! -அவளுக்குத் தெரியாது, அவளால சொல்ல முடியாது! 474 00:35:50,172 --> 00:35:51,298 இல்ல, இல்ல. இல்லயில்ல. 475 00:35:52,049 --> 00:35:53,133 கண்ணே! 476 00:36:04,978 --> 00:36:06,772 அங்கே தான் இருக்கான். அவன் தான். 477 00:36:09,983 --> 00:36:11,526 நான் உங்களுக்கு உதவலாமா? 478 00:36:14,363 --> 00:36:16,615 அந்த வெள்ளைக்காரன் லின் ஃபோர்ட் எங்கே இருக்கான்னு தெரியுமா? 479 00:36:16,615 --> 00:36:18,825 அவன் எனக்கு நல்ல நண்பன். அதோ அங்கே இருக்கு அவனுடைய குடிசை. 480 00:36:18,825 --> 00:36:21,620 அவன் உள்ளே இருக்கானா? -இல்ல, அது அவன் குடிசைன்னு சொல்றேன், 481 00:36:21,620 --> 00:36:22,955 அங்கே இருக்கான்னு சொல்லலை. 482 00:36:24,164 --> 00:36:25,582 டேல் கான்டீ எங்கே இருக்கான்? 483 00:36:26,166 --> 00:36:30,963 டேல் கான்டீயா. எனக்கு டேல் கான்டீ எல்லாம் தெரியாது. இது என் நல்ல நண்பன், லின்பாபா. 484 00:36:32,339 --> 00:36:33,382 நீ தான் அவனுடைய நல்ல நண்பனா? 485 00:36:33,382 --> 00:36:36,802 லின்பாபா இங்கே நல்ல டாக்டர், எங்க எல்லோரையும் நல்லா பார்த்துக்குறார். 486 00:36:37,469 --> 00:36:40,055 அவர் இங்கே எங்கே வேணும்னாலும் இருக்கலாம். தேடுறது கஷ்டம். 487 00:36:40,055 --> 00:36:43,809 ஆனால், நான் கண்டுபிடிக்கிறதுல நிபுணன். 488 00:36:43,809 --> 00:36:45,852 இந்த சேரி பெருச்சாளிக்கு லஞ்சம் வேணுமாம். 489 00:36:50,482 --> 00:36:55,195 விஷயங்களை ஒழுங்கா செய்யறது உனக்குப் பிடிக்கும். ஆனால், டேல் கான்டீ இன்னொரு போலீஸை கொன்னான். 490 00:36:55,195 --> 00:36:59,658 இப்போ அவனை பிடிக்கலைன்னா, ஓடிடுவான். ஓடிப் போயிடுவான். 491 00:37:03,787 --> 00:37:05,664 நான் வேறு எங்காவது போய் தேடலை கவனிக்கிறேன். 492 00:37:09,167 --> 00:37:10,252 சரி. 493 00:37:20,095 --> 00:37:22,097 லைட்டை கொஞ்சம் அசை. எனக்கு இன்னும் வெளிச்சம் வேணும். 494 00:37:26,768 --> 00:37:28,353 இது தான் உண்மை தெரியும் தருணம். 495 00:37:35,569 --> 00:37:37,654 சரி. சரி. 496 00:37:41,283 --> 00:37:43,035 அந்த வெள்ளைக்காரன் எங்கே? ஹம்? 497 00:37:45,412 --> 00:37:47,706 ஹம்? -கிட்டதட்ட ஞாபகம் வந்தது. 498 00:37:47,706 --> 00:37:49,166 அப்புறம் நீங்க மீண்டும் என்னை மறக்க செய்துட்டீங்க. 499 00:37:50,667 --> 00:37:52,336 கேளு, கேளு. 500 00:37:52,336 --> 00:37:54,713 நீ ஏன் இன்னும் சிரமப்படுற, மகனே? ஏன்? 501 00:37:55,505 --> 00:37:58,508 அதை உன்னால பார்க்க முடியுதா? அது தான் கட்டி. -ஆமாம். 502 00:38:12,397 --> 00:38:14,608 இப்போ, சரி. எனக்கு கொஞ்சம் சலைன் தேவை. 503 00:38:23,742 --> 00:38:26,578 சொல்லு, இல்ல நான் உன் கண்ணை தோண்டிடுவேன். ஹம்? 504 00:38:33,669 --> 00:38:34,670 சரி. 505 00:38:37,506 --> 00:38:40,175 என்ன நடக்குது? காசிம் மாமா எங்கே? 506 00:38:40,175 --> 00:38:41,760 லின்பாபா அவருக்கு சிகிச்சைக் கொடுக்குறார். 507 00:38:49,267 --> 00:38:51,895 நீ இப்போ போகணும். போ. 508 00:38:58,944 --> 00:39:00,237 அவன் எங்கே? 509 00:39:01,113 --> 00:39:02,197 ஹம்? 510 00:39:07,619 --> 00:39:09,830 நைட்டிங்கேல். இங்கே வா, உடனே. 511 00:39:18,505 --> 00:39:21,800 என்ன? -அந்த வெள்ளைக்காரன் இருக்குற இடம் தெரியும், சாப். 512 00:39:21,800 --> 00:39:23,385 உனக்கு என்ன எழவு வேணும்? 513 00:39:24,970 --> 00:39:26,305 அவனை தண்டிக்கணும். 514 00:39:32,311 --> 00:39:34,062 வா, பையா, போகலாம். 515 00:39:38,525 --> 00:39:39,610 காசிம். 516 00:39:40,736 --> 00:39:42,195 காசிம், நான் பேசுறது கேட்குதா? 517 00:39:50,454 --> 00:39:51,622 ஹே, ஹே. 518 00:39:51,622 --> 00:39:56,501 ஹே. ஹே, காசிம். நான் யாருன்னு தெரியுதா? 519 00:40:01,214 --> 00:40:03,342 தொந்தரவு கொடுக்குற வெள்ளைக்காரன். 520 00:40:24,196 --> 00:40:25,280 அவளைப் போய் தேடு. 521 00:40:25,280 --> 00:40:26,490 நான் இப்போ உங்களை விட்டுட்டுப் போக மாட்டேன். 522 00:40:26,490 --> 00:40:30,953 எனக்கு தான் ரண்வீரும் மத்தவங்களும் இருக்காங்களே. வலீத் என்னை குறி வச்சு தவறிட்டான். 523 00:40:30,953 --> 00:40:33,705 மத்தவங்களுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. எல்லா இடத்துலயும் நம்ம ஆட்களை அடிக்கிறாங்க. 524 00:40:33,705 --> 00:40:35,707 கார்லாவைத் தேடி இங்கே கூட்டிட்டு வா! 525 00:40:35,707 --> 00:40:37,584 கார்லா தான் இதுக்கெல்லாம் காரணம். 526 00:40:38,877 --> 00:40:42,881 கார்லா பிழை செய்துட்டா, ஆனால் நாம அவளை இன்னும் நேசிக்க தான் செய்யறோம். 527 00:40:44,675 --> 00:40:45,676 இப்போ போ. 528 00:40:47,427 --> 00:40:48,804 எவ்வளவு தூரம் இருக்கு? 529 00:40:49,513 --> 00:40:50,847 லின்பாபா. 530 00:40:52,766 --> 00:40:55,894 அந்தத் தருணத்தில், என் ஆசைகளும் பயங்களும் ஒன்றாக விழுந்து நொறுங்கின. 531 00:40:55,894 --> 00:40:59,064 நைட்டிங்கேல் என்னை பிடித்தால், என்ன பயங்கரம் எனக்காக காத்திருக்கிறது என எனக்குத் தெரியும். 532 00:40:59,064 --> 00:41:00,190 டேல்! 533 00:41:04,403 --> 00:41:06,196 ஆம், நான்தான், கொலைகாரனே. 534 00:41:06,196 --> 00:41:07,197 ஹே! 535 00:41:11,118 --> 00:41:12,619 வா! வா! 536 00:42:00,917 --> 00:42:01,960 போலீஸ் 537 00:42:07,716 --> 00:42:09,217 அதோ, அதோ, அதோ, அங்கே தான். 538 00:42:10,344 --> 00:42:11,511 உள்ள ஏறு, லின்பாபா! 539 00:42:24,316 --> 00:42:26,652 நான் இதுக்கு நிறைய டிப்ஸ் எதிர்பார்ப்பேன், லின்பாபா. 540 00:42:26,652 --> 00:42:27,736 நிறைய வேணும், என்ன? 541 00:42:41,625 --> 00:42:43,543 கிரெகோரி டேவிட் ராபர்ட்ஸ் எழுதிய Shantaram என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது 542 00:44:01,622 --> 00:44:03,624 தமிழாக்கம் அகிலா குமார்