1 00:00:16,330 --> 00:00:19,124 என் கண்கள் தான் ஏமாத்துதா? இது ஆவியா? 2 00:00:22,586 --> 00:00:26,048 இல்லயே, சேரியிலேயே சந்தோஷமா வாழற அந்த வெள்ளைக்காரன் தான் அது. 3 00:00:27,716 --> 00:00:29,426 ஹே! 4 00:00:29,426 --> 00:00:31,094 திரும்பி வந்த ஹீரோவைப் பாராட்டுங்கப்பா. 5 00:00:33,138 --> 00:00:34,139 ஹே! 6 00:00:35,849 --> 00:00:38,143 டிரிங்க்ஸ்! எங்களுக்கு டிரிங்க்ஸ் தேவை. 7 00:00:38,852 --> 00:00:41,104 ஹை, லின். எப்படி இருக்க? -நீ எப்படி இருக்க? 8 00:00:41,188 --> 00:00:42,189 உட்காரு. 9 00:00:43,941 --> 00:00:45,275 ஹே. 10 00:00:45,359 --> 00:00:46,360 ஹை. 11 00:00:50,238 --> 00:00:51,490 உனக்கு எப்படி இருந்தது? 12 00:00:53,325 --> 00:00:57,537 தரம் நல்லாயிருந்தது. இனி பிசினஸைத் தொடரலாம்னு நினைக்கிறேன். 13 00:00:58,121 --> 00:00:59,831 உன்னால் இன்னும் அதிக எடையை தர முடியுமா? 14 00:01:00,707 --> 00:01:02,417 ஹே, உனக்கு எவ்வளவு வேணும்னாலும் தருவோம். 15 00:01:03,961 --> 00:01:07,673 உன்னை நம்பலாம்னு தெரியும், லீசா. நீ தான் மும்பையில என் அதிர்ஷ்டக் குறி. 16 00:01:07,673 --> 00:01:09,758 ஹே, விபச்சாரிகளுக்கு இங்கே அனுமதி இல்லை. 17 00:01:11,301 --> 00:01:12,970 அவள் இப்போ அதெல்லாம் செய்யறதில்லை. 18 00:01:14,596 --> 00:01:17,724 அதோட, அவளை விபச்சாரின்னு கூப்பிடாதே. 19 00:01:19,601 --> 00:01:20,811 அவகிட்ட மன்னிப்பு கேளு. 20 00:01:22,396 --> 00:01:23,730 தப்பு தான் மேடம். 21 00:01:27,776 --> 00:01:31,071 அவனைப் பத்திக் கவலைப்படாதே. பரவாயில்லை. விடு. விடு. 22 00:01:31,071 --> 00:01:32,155 நன்றி. 23 00:01:33,323 --> 00:01:34,324 வணக்கம். 24 00:01:35,242 --> 00:01:37,786 உனக்கு அந்த போர்சலீனோ டெஸ்டு தெரியுமா? -தெரியாதே. 25 00:01:37,786 --> 00:01:43,667 சரி, போர்சலீனோ ஒரு உயர்தரத் துணி, பலரும் அது தான் 26 00:01:43,667 --> 00:01:47,004 சீமான்களோட தலையங்கிகளைச் செய்யச் சிறப்பா இருக்கும்னு நம்புறாங்க. 27 00:01:47,713 --> 00:01:49,631 தெரியுமா... -எனவே, அது வெறும் ஒரு தொப்பிதானா? 28 00:01:51,258 --> 00:01:55,095 இப்போ, ஒரு உண்மையான போர்சலீனோ தொப்பியை 29 00:01:55,095 --> 00:01:59,766 ஒரு குழல் மாதிரி உருட்டி, ஒரு விரல் மோதிரத்துக்குள்ள நுழைச்சிடலாம். 30 00:01:59,850 --> 00:02:02,102 அது அதுக்குள்ள நுழைஞ்சு வெளியே வரும்போது, சுருக்கங்கள் இல்லாம 31 00:02:02,102 --> 00:02:06,607 தன்னுடைய பழைய நிலைக்கே திரும்பி வந்ததுன்னா, அது உண்மையான... 32 00:02:06,607 --> 00:02:08,524 போர்சலீனோ. -போர்சலீனோ. 33 00:02:09,693 --> 00:02:13,947 இப்போ, மும்பையும் உன்னோட சேரியும், எல்லாமா சேர்ந்து உன்னை ஒரு குழலா சுருட்டி, 34 00:02:14,031 --> 00:02:16,241 இப்போ விரல் மோதிரத்துக்குள்ள இழுக்குறாங்க... 35 00:02:16,325 --> 00:02:17,492 ம்ம்-ஹம்ம், ம்ம்-ஹம்ம். 36 00:02:17,576 --> 00:02:21,246 ...நீ உண்மையானவனா இல்ல போலியான்னு பார்க்க. 37 00:02:22,372 --> 00:02:23,915 நீ உண்மையானவன் தானா? 38 00:02:25,834 --> 00:02:28,128 நீ என்ன நினைக்கிற? -டீடேர் நல்லா குடிச்சிருக்கான்னு நினைக்கிறேன். 39 00:02:29,004 --> 00:02:30,631 சரி. -ஹே, லின். 40 00:02:32,966 --> 00:02:36,762 லீசா, அட, இவளைப் பாருடா. நல்லாயிருக்கயே. 41 00:02:36,762 --> 00:02:37,929 நன்றி. -நீ எப்படி... 42 00:02:38,013 --> 00:02:40,265 நான் நல்லாயிருக்கேன். -அப்படியா? 43 00:02:40,349 --> 00:02:41,391 ரொம்ப நல்லாயிருக்கேன். 44 00:02:42,017 --> 00:02:45,729 நான் உனக்கு ஹை சொல்லிட்டு, அன்னிக்கு நடந்ததுக்கு நன்றி சொல்ல வந்தேன், 45 00:02:45,729 --> 00:02:48,023 என்னை அந்த பேலஸ்லேர்ந்து காப்பாத்தினதுக்காக. 46 00:02:48,023 --> 00:02:50,484 நீ இல்லன்னா என்ன செய்திருப்பேன்னு எனக்குத் தெரியாது. 47 00:02:50,484 --> 00:02:54,905 என்னவானாலும், அது என் மனசை ரொம்ப தொட்டுது, நான் அதை ஒருபோதும் மறக்கமாட்டேன், அதனால... 48 00:02:55,989 --> 00:02:56,990 சரி. 49 00:02:57,074 --> 00:02:59,743 மக்களோட உண்மையான ஹீரோப்பா. 50 00:02:59,743 --> 00:03:03,246 நான் பார்த்ததில, உண்மையான போர்சலீனோ. -பரவாயில்லை. 51 00:03:03,330 --> 00:03:05,916 நான் போகணும். -என்ன? வா. எங்களோட உட்காரு. 52 00:03:08,210 --> 00:03:09,211 சரி. 53 00:03:09,711 --> 00:03:11,088 எனவே, நீ இன்னும் இங்கே தான் இருக்கயா, ம்ம்? 54 00:03:11,797 --> 00:03:12,923 அப்படித்தான் தோணுது. 55 00:03:14,758 --> 00:03:17,219 உன் பிரச்சினைகளுக்கு காரணம் காட்ட வேற யாரையும் கண்டுபிடிச்சியா? 56 00:03:17,803 --> 00:03:19,471 இல்ல, நீ அவன் மேல பரிதாபப்பட்டு விட்டுட்டயா? 57 00:03:19,471 --> 00:03:21,390 அதுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்னு எனக்குத் தெரியலை. 58 00:03:21,390 --> 00:03:24,601 ஹே, லின் சாகர் வாடா சேரியில தனக்குன்னு புது வாழ்க்கையை அமைச்சுக்கிட்டான். 59 00:03:24,685 --> 00:03:26,436 நானும் கேள்விப்பட்டேன். -நீ... 60 00:03:27,104 --> 00:03:28,647 அது தான் நாத்தம் நாறுதே. 61 00:03:29,815 --> 00:03:31,650 நான் நினைக்கிறேன், ஒருத்தருக்கு பெரிய ஆளா தெரியணும்னா, 62 00:03:31,650 --> 00:03:33,944 குள்ளர்கள் நடுவில இருக்குறது தானே அதுக்கு சிறந்த வழி, இல்லையா? 63 00:03:34,444 --> 00:03:36,905 அதை நீ நினைக்க வேண்டிய அவசியமில்லையே. உனக்கு தான் தெரியுமே. 64 00:03:36,989 --> 00:03:40,242 ஏன்னா தினமும் நீ முழிச்ச உடனே கண்ணாடியைப் பார்க்குறபோது, 65 00:03:40,867 --> 00:03:43,870 யாரோ குட்டியா ஒருத்தன் அதுல உன்னைத் திருப்பிப் பார்க்குறானேனு உனக்கு பயமா இருக்கு. 66 00:03:44,913 --> 00:03:47,499 யாருமே வேண்டாம்னு ஒதுக்கின ஒருத்தன். நீ சொல்றது சரிதான், நண்பா. 67 00:03:48,583 --> 00:03:51,545 உன்னைப் பார்க்குறபோது, என்னோட இருக்குறவங்க எல்லோரும் கிங்-காங் மாதிரி ஆளுங்க தான். 68 00:03:52,921 --> 00:03:54,881 உனக்கு தப்பிக்க வாய்ப்பு கிடைச்சப்போவே போயிருக்கணும். 69 00:04:02,931 --> 00:04:04,391 என்ன கேவலமான ஒரு ஆளு. 70 00:04:04,391 --> 00:04:07,019 ஆமாம், ஜாக்கிரதையா இரு. நீ செய்ததை அவன் மறக்கவே மாட்டான். 71 00:04:07,936 --> 00:04:08,937 மறக்கக்கூடாது. 72 00:04:13,775 --> 00:04:14,610 டிரிங்க்ஸ்! 73 00:04:28,874 --> 00:04:30,542 எல்லாத்தையும் ஒரேடியா விடமுடியாது. 74 00:04:35,881 --> 00:04:39,676 நாம இங்க ஒரு ரிக்கார்டு பிளேயரை வைக்கணும். அப்போ நாம சேர்ந்து ஆடலாம். 75 00:04:41,595 --> 00:04:45,891 அவன் உன்னைக் காப்பாதிக் கூட்டிட்டு வந்த அப்புறம், நீ லின்னோட சேர்ந்து ரிக்கார்டுகள் கேட்டயா? 76 00:04:48,060 --> 00:04:49,561 வேற என்னவெல்லாம் செய்தீங்க? 77 00:04:51,563 --> 00:04:53,148 இது என்னது? உனக்குப் பொறாமையா? 78 00:04:55,442 --> 00:04:56,902 யாரு மேலே? என்னையும் லின்னையும் பார்த்தா? 79 00:04:58,654 --> 00:05:00,447 உன்னோட யாரைப் பார்த்தாலும் எனக்குப் பொறாமை தான். 80 00:05:00,447 --> 00:05:03,617 லின்னுக்கு கார்லா மேல மட்டும் தான் கண்ணு. என்னை நம்பு. 81 00:05:05,661 --> 00:05:09,831 "அவள் இப்போ அதெல்லாம் செய்யறதில்லை"ன்னு நீ சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சுது. 82 00:05:11,541 --> 00:05:15,212 நீ சொன்னப்போதான் அது உண்மைன்னு நானே முதல் முறையா யோசிச்சேன். 83 00:05:29,309 --> 00:05:30,519 எனக்கு நீ வேணும். 84 00:05:37,234 --> 00:05:38,986 அதாவது, பாரு, அவங்கள குத்தம் சொல்ல முடியாது. 85 00:05:38,986 --> 00:05:41,029 அவங்க இல்லாத மாதிரி தானே இந்த சமூகமே நடத்துது. 86 00:05:41,113 --> 00:05:44,157 தெரியுமா, அரசு மருத்துவமனைகள்ல இருக்குற டாக்டருங்க கூட லஞ்சம் எதிர்பார்க்குறாங்க. 87 00:05:44,241 --> 00:05:45,450 இதெல்லாம் ரொம்ப மோசம். 88 00:05:46,034 --> 00:05:49,496 இந்த ஏழைங்க, பாவம், அவங்க திரும்பி வீட்டுக்கு வந்து சாகக்கிடக்குறாங்க, 89 00:05:50,956 --> 00:05:52,708 நான் எதாவது செய்தாதான் உண்டு. 90 00:05:54,251 --> 00:05:56,336 கருப்புச் சாந்தையில மருந்துப் பொருட்களுக்கு ஒரு தொடர்பை வச்சிருக்கேன். 91 00:05:56,420 --> 00:05:58,171 இப்போ, என் குடிசையைப் பார்த்தீங்கன்னா, மருந்துக் கடை மாதிரி இருக்கும். 92 00:05:58,255 --> 00:05:59,631 நான் தமாஷுக்குச் சொல்லலை. 93 00:05:59,715 --> 00:06:01,925 இன்னும் ஒரு வாரம் போச்சுன்னா, நான் என்னோட ஆம்புலன்ஸை ஓட்டுவேன். 94 00:06:02,009 --> 00:06:04,094 சாகர் வாடா ஆம்புலன்ஸ் கம்பெனி. 95 00:06:05,721 --> 00:06:07,931 அட, லின், உன் முகத்தை அப்படியே படமெடுக்கணும் 96 00:06:08,015 --> 00:06:12,602 அந்த உயர்ந்த பார்வையோட சீற்றம் 97 00:06:12,686 --> 00:06:15,272 அதை நான் அப்படியே நினைவுல வச்சுக்கணும். 98 00:06:15,272 --> 00:06:19,109 அதையெல்லாம் இங்கே பார்க்கவே முடியாது, அதனால அதை மெச்சணும். 99 00:06:19,693 --> 00:06:22,821 அர்ரே, நீ சாரஸ் புகைக்க நேரா வாரணாசிக்குத் தான் போயிருக்கன்னு நினைச்சோம். 100 00:06:22,821 --> 00:06:26,366 பார்த்தா நீ இங்கே தான் இருக்க, கடல்ல கழிச்சிட்டு, உயிர்கள காப்பாத்திட்டு இருக்க. 101 00:06:26,450 --> 00:06:29,411 நான் செய்யறது அவ்வளவுதான். -அருமையான கதை. 102 00:06:29,411 --> 00:06:31,246 நீ இதுமாதிரி எதுவும் கேட்டிருக்கயா? 103 00:06:31,788 --> 00:06:33,040 நான் கேட்டதில்லை. 104 00:06:34,541 --> 00:06:36,501 நீங்க செய்யறது ரொம்ப அற்புதமான விஷயம், லின். 105 00:06:36,585 --> 00:06:38,587 இல்ல, நான் அந்த இடத்துல இருந்தேன், அவ்வளவுதானே? 106 00:06:41,006 --> 00:06:43,717 நன்றாக குடித்துவிட்டு போதையில் இருந்ததாலும், என்னுடைய பாவமன்னிப்பைப் பற்றிய 107 00:06:43,717 --> 00:06:45,427 எண்ணங்களினாலும், என் உண்மை நிலையை மறந்தேன். 108 00:06:46,094 --> 00:06:48,430 நான் ஓடி ஒளிந்து, தலைமறைவாக இருக்க நினைக்கும் ஒரு அகதி. 109 00:06:57,522 --> 00:07:00,442 லின்பாபா! -லின்பாபா! 110 00:07:04,154 --> 00:07:05,614 டாக்டர். லின்! 111 00:07:05,614 --> 00:07:07,491 காலை வணக்கம்! 112 00:07:07,491 --> 00:07:09,409 வெளியே வாங்க, லின்பாபா! 113 00:07:13,705 --> 00:07:16,291 காலை வணக்கம்! காலை வணக்கம்! 114 00:07:16,375 --> 00:07:18,126 வெளியே வாங்க, லின்பாபா! 115 00:07:19,628 --> 00:07:22,005 வெளியே வா, லின்பாபா! 116 00:07:22,089 --> 00:07:24,925 சரி! சரி! வர்றேன். 117 00:07:30,263 --> 00:07:32,307 லின்பாபா, எழுந்துட்டீங்களா, அப்பாடி. 118 00:07:33,892 --> 00:07:38,647 நல்லது. நல்லது. இன்னிக்கு தான் ரேஷன் தினம். எடுத்துக்கோங்க. 119 00:07:39,690 --> 00:07:41,233 லின்பாபா, எடுங்க, எடுங்க. 120 00:07:43,944 --> 00:07:45,445 அம்மாடி... 121 00:07:45,529 --> 00:07:50,701 குடிமக்களான எங்களுக்கு, திரு. லின், நாங்க குடிசைவாழ் மக்கள், எங்களுக்கும் உரிமைகள் இருக்கு. 122 00:07:50,701 --> 00:07:55,455 ஓட்டு போட, ரேஷனுல பொருட்களைப் பெற, ஆம், நிச்சயமா வரி பணம் செலுத்தவும் உரிமை உண்டு. 123 00:07:56,623 --> 00:08:00,377 ஆனால், லின்பாபா, நீ தான் உண்மையிலேயே இல்லாதவன், அதனால இதெல்லாம் கிடைக்காது, இல்ல? 124 00:08:00,377 --> 00:08:03,088 ஆனால் எங்களுக்கு நீ தர்மம் எல்லாம் செய்ய வேண்டாம். நீயும் இப்போ எங்கள்ல ஒருத்தன். 125 00:08:04,047 --> 00:08:07,843 நாம எப்போவெல்லாம் ரேஷன் வாங்குறோமோ, அப்போ டாக்டருக்கும் கிடைக்கும், என்ன? 126 00:08:09,803 --> 00:08:11,179 நன்றி, தன்யவாத். 127 00:08:13,265 --> 00:08:14,808 அர்ரே, இன்னும் கொடு. 128 00:08:14,808 --> 00:08:17,060 ஓ, வேண்டாம். இல்ல, வேண்டாம். -நீ எடுத்துக்க முடியும், இல்ல? 129 00:08:17,144 --> 00:08:18,520 வேறு எதுவும் வேணும்னாலும் எடுத்துக்கலாம். 130 00:08:18,520 --> 00:08:20,230 நன்றி. -உருளைக் கிழங்கு, அரிசி. 131 00:08:20,314 --> 00:08:21,857 நாங்க உங்களுக்கு டீ அனுப்புறோம். 132 00:08:25,444 --> 00:08:30,157 லின் வெளிநாட்டுக்காரர். உயிர்களைக் காப்பாத்துறார். அது ஒரு நல்ல கட்டுரையா அமையும்னு நினைக்கிறேன். 133 00:08:30,157 --> 00:08:32,326 உங்க எடிட்டர்கிட்ட நீ இதைப் பத்தி பேசணும்னு நினைக்கிறேன். 134 00:08:32,326 --> 00:08:35,704 எனவே, தலைப்புச் செய்தி என்ன? "வெள்ளைக்கார சுற்றுலா பயணி, மருந்துகள் தருகிறார்" என்பதா? 135 00:08:35,704 --> 00:08:39,291 "வாயைப் பொத்திக்கிட்டு சீரியஸாகு, நிஷான்த், இல்ல இந்த கட்டுரை, வேற இடத்துக்குப் போயிடும்" 136 00:08:39,291 --> 00:08:42,711 என்பது தான் தலைமைச் செய்தி. -அட, கோபமா. சரி. மன்னிச்சிடு. 137 00:08:42,793 --> 00:08:43,962 அவர் இலவசமா வேலைச் செய்யறார் 138 00:08:44,046 --> 00:08:47,174 மட்டுமில்லாம மருத்துவ சமுதாயம் அவருக்கு எந்த உதவியும் செய்யறதில்லை. 139 00:08:47,174 --> 00:08:49,968 வெக்கப்பட வேண்டிய ஒரு சமூகத்தை வெக்கப்பட வைக்கிறார். 140 00:08:50,052 --> 00:08:51,928 நீ இந்த வெள்ளைக்கார சேரி டாக்டரைப் பத்தி ஒரு கட்டுரையாவே எழுதப் போறயா? 141 00:08:52,012 --> 00:08:55,766 ஆமாம். எல்லோர் கவனத்தையும் ஈர்த்து, அது சமுதாயம் மாறக் காரணமாகணும். 142 00:08:57,851 --> 00:09:03,315 இந்த சினிமா நட்சத்திரங்களோட சிரிப்பையும், காதல் விவகாரங்களையும் எழுதி சலிச்சு போச்சு. 143 00:09:03,315 --> 00:09:05,984 அது தான் நல்ல விற்பனை ஆகுதும்மா. -ஆனால் அது ஊடகவியல் இல்லையப்பா. 144 00:09:06,068 --> 00:09:08,695 எனக்கு அதைச் செய்ய பிடிக்கலை. -ரொம்ப வைராக்கியம் தான். 145 00:09:11,907 --> 00:09:13,033 அது உனக்குப் பிரச்சினையா இருக்கா? 146 00:09:14,159 --> 00:09:16,787 என் தகுதிக்கு மீறி ஆசைப் படுறேனா, நிஷான்த்? 147 00:09:16,787 --> 00:09:19,706 அதுக்குப் பதிலா, நான் குழந்தைகள பெத்துட்டு இருக்கணுமோ? 148 00:09:19,790 --> 00:09:20,791 ஆமாம். 149 00:09:20,791 --> 00:09:22,209 என்ன? நான் குழந்தைகளப்... 150 00:09:22,209 --> 00:09:24,962 ஆம், என்னோட எடிட்டர் அதை விரும்பலாம். நான் அவரோட பேசுறேன். 151 00:09:28,173 --> 00:09:30,175 ஆனால் அது ஃபிரீ-லான்ஸா மட்டும் தான் இருக்கும். 152 00:09:30,676 --> 00:09:33,220 தெளிவாச் சொல்றேன், நான் உனக்குப் பத்திரிகையில வேலைத் தரலை. 153 00:09:34,721 --> 00:09:36,181 நான் உன் பாஸா இருக்கமாட்டேன். 154 00:09:36,181 --> 00:09:39,059 அதோட, உன் விதிகள் பிரகாரம் நாம சேர்ந்து டின்னர் சாப்பிடலாம். 155 00:09:41,895 --> 00:09:43,105 நான் முடியாதுன்னு சொன்னா? 156 00:09:45,232 --> 00:09:47,359 அப்போவும் அந்த கட்டுரையை அவர்கிட்ட காட்டுவேன், ஆனால் பொதுவா ஒரு ஆர்வம் இருப்பது, 157 00:09:47,359 --> 00:09:50,195 அதாவது, ஒரே தொழில்ல இருப்பது என்பது 158 00:09:50,279 --> 00:09:54,157 நம்மை ஒன்று சேர்க்கணுமே தவிர பிரிக்கக்கூடாது என்பதை பதிவு செய்வேன். 159 00:09:58,954 --> 00:10:01,206 நல்லது. டின்னர். 160 00:10:02,207 --> 00:10:04,376 எனக்கு அனுகூலமான மாலை நேரம். 161 00:10:04,376 --> 00:10:06,169 நாளை மாலை உனக்கு அனுகூலமா இருக்குமா? 162 00:10:18,307 --> 00:10:19,599 குடிக்க எதுவும் எடுத்துட்டு வரவா? 163 00:10:45,083 --> 00:10:46,168 மன்னிக்கணும். 164 00:10:52,507 --> 00:10:53,759 மினிஸ்டர் பான்டே. 165 00:10:56,303 --> 00:10:57,763 என் நல்வாழ்த்துகள். 166 00:10:58,388 --> 00:10:59,598 நன்றி, மேடம். 167 00:11:01,308 --> 00:11:04,186 என்னை நான் அறிமுகப்படுத்திக்க விரும்புறேன். அப்துல் காதர் கான். 168 00:11:04,895 --> 00:11:06,563 சந்தோஷம். கண்டிப்பா. 169 00:11:06,647 --> 00:11:11,860 மினிஸ்டர் பான்டே, உங்களுக்கு முன்னாடி இருந்தவர் அவர் இல்லாதது எனக்கு வருத்தம். ரொம்ப வருத்தம். 170 00:11:12,903 --> 00:11:13,904 பெரிய சோகம் தான். 171 00:11:13,904 --> 00:11:16,865 அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு நான் வெகு காலமா ஆதரவு தந்துட்டு இருந்தேன் 172 00:11:16,949 --> 00:11:19,952 ஏன்னா அவர் கொலாபாவின் மக்களுக்கு வேண்டிய சரியான விஷயங்களச் செய்ய விரும்புவார்னு 173 00:11:19,952 --> 00:11:21,286 நான் உறுதியா நம்பினேன். 174 00:11:21,370 --> 00:11:24,915 சிலரோட விருப்பங்களுக்கு அடிபணியாம, பலரோட தேவைகளை பூர்த்தி செய்ய. 175 00:11:25,749 --> 00:11:29,211 கண்டிப்பாக. நாங்க மக்களோட சந்தோஷத்துக்காக தான் உழைக்கிறோம். 176 00:11:29,211 --> 00:11:32,381 மக்களோட சந்தோஷங்கிறது, ஒரு வினாடியில மாறக்கூடும். 177 00:11:34,132 --> 00:11:36,426 அரசியல்வாதிகளுக்கே உள்ள அபாயம் அது. 178 00:11:36,510 --> 00:11:39,096 மக்கள் உங்களுக்கு அதிகாரம் கொடுக்குற வரைதான் நீங்க ஆதிக்கம் செலுத்த முடியும். 179 00:11:39,680 --> 00:11:42,265 அதோட, அவங்க கொடுக்கறதை, அவங்களால திரும்பி எடுத்துக்கவும் முடியும். 180 00:11:42,349 --> 00:11:45,310 ஆமாம், உங்க நம்பிக்கையை சேரியில வையுங்க. 181 00:11:46,436 --> 00:11:47,854 வந்ததுக்கு ரொம்ப நன்றி. 182 00:11:47,938 --> 00:11:50,774 நான் உங்கள நேருக்கு நேர் பார்க்க ஆவலா இருந்தேன். 183 00:11:50,774 --> 00:11:52,067 மீண்டும் சந்திக்கலாம். 184 00:11:52,067 --> 00:11:53,402 அவர் ஏற்கனவே விலைக்கு போய் விற்கப்பட்டார் 185 00:11:54,111 --> 00:11:56,238 மிஸ். கார்லா உங்ககிட்ட அந்த தகவலைச் சொல்லியிருப்பாங்கன்னு நினைச்சேன். 186 00:11:56,238 --> 00:12:00,284 சொன்னாங்க. ஆனால் நான் மினிஸ்டருக்கு வேற தகவலைச் சொல்ல விரும்பினேன். 187 00:12:00,284 --> 00:12:02,995 அதனால தான் அவரை இப்படி மிரட்டினீங்களா? சாகர் வாடாவோட ஓட்டுக்கள வச்சா? 188 00:12:02,995 --> 00:12:06,164 உங்க செல்லப் பிள்ளை டாக்டரை வச்சு, சேரி மக்களோட அபிமானதைப் பிடிக்கலாம்னு நினைக்கிறீங்களா? 189 00:12:06,665 --> 00:12:08,458 காதர்பாய், இன்னும் சாமர்த்தியமா இருப்பீங்கன்னு நினைச்சேன். 190 00:12:08,542 --> 00:12:11,628 இது இந்தியா, இங்கே தர்மம் தலைக்காகும். 191 00:12:11,712 --> 00:12:13,046 உங்களுக்கும் எனக்கும் தெரியும் 192 00:12:13,130 --> 00:12:16,717 அவங்க விதியை நிர்ணயிக்கிற அதிகாரம் அவங்ககிட்ட இருக்குன்னு, சாகர் வாடா மக்களுக்குத் தெரியும். 193 00:12:16,717 --> 00:12:20,762 ஓட்டை வாங்கினா மட்டும் போதாது, ஏன்னா அதை எண்ணுற அலுவலகமே என் கையில இருக்கும். 194 00:12:35,527 --> 00:12:37,237 ஒரு நண்பர் உன்னைத் தேடுறார். 195 00:12:38,280 --> 00:12:39,364 ஏன்னு யாருக்கும் தெரியாது. 196 00:12:41,617 --> 00:12:42,618 எனக்கு இது பிடிக்கலை. 197 00:12:46,330 --> 00:12:47,623 சரி பாரு, தம்பி. 198 00:12:48,206 --> 00:12:50,959 நேரா ஃபாக்ட்ரியிலேர்ந்து வந்தது. இது செகண்ட் ஹேன்ட் எல்லாம் இல்ல. 199 00:12:51,043 --> 00:12:52,586 நீ என்ன சொல்ற? 200 00:12:52,586 --> 00:12:53,795 இது உனக்காக வாங்கினது தான். 201 00:12:53,879 --> 00:12:55,922 அதை டாக்டர். லின்னுக்காக வாங்கியிருக்கான்! 202 00:12:57,174 --> 00:12:58,508 அவன் காதரோட ஆளு. 203 00:12:59,384 --> 00:13:00,636 நண்பா, என்னால இதை எடுத்துக்க முடியாது. 204 00:13:00,636 --> 00:13:01,803 அவன் ஒரு குண்டன். 205 00:13:01,887 --> 00:13:04,681 நாம சகோதரர்கள் இல்லையா? நாம ஒருத்தரை ஒருத்தர்க் காப்பாத்தலையா? 206 00:13:06,933 --> 00:13:08,018 உனக்கு ஓட்ட வராதா? 207 00:13:10,395 --> 00:13:11,396 நான் ஓட்டுவேன். 208 00:13:12,940 --> 00:13:15,275 நீ பயப்படுறன்னு நினைக்கிறேன். 209 00:13:15,359 --> 00:13:18,153 அந்த சிறுவன் கூட சொல்லுவான். ஹே, என்ன நினைக்கிற, பையா? இவனுக்கு பயம் தானே? 210 00:13:18,153 --> 00:13:19,237 ஆம். 211 00:13:21,365 --> 00:13:23,283 நீ இந்த பைக்கை எடுத்துக்கணும், லின். 212 00:13:23,951 --> 00:13:27,496 உனக்கு மருந்துகள டெலிவரி செய்யறதோட எனக்கு வேற வேலை இருக்கு. 213 00:13:27,996 --> 00:13:31,458 பார்த்தயா? அதை ஏத்துக்கறது தான் நீ எனக்குத் தர்ற பரிசு. 214 00:13:42,260 --> 00:13:43,679 நீ என்ன நினைக்கிற, ரவி? 215 00:13:59,861 --> 00:14:01,446 ஓட்டி பாரேன்? 216 00:14:02,990 --> 00:14:04,366 நீயும் வர்றியா, ரவி? 217 00:14:46,325 --> 00:14:48,785 நாம அங்கேர்ந்து வந்ததிலிருந்து நீ எதுவுமே பேசலை. 218 00:14:50,495 --> 00:14:53,832 லின் ஃபோர்டும் உங்க திட்டத்துல பங்கெடுக்கிறான்னு எதுக்கு வலீதை நம்ப வைக்குறீங்க? 219 00:14:53,832 --> 00:14:57,336 அதாவது, ஒருத்தனோட சட்டைப் பையைக் களவாடும் போது, அவன் கவனத்தை திசைத்திருப்பணும். 220 00:14:58,211 --> 00:15:00,213 அதுதான் முதல்லேர்ந்து லின்னுக்கான உங்க திட்டமா இருந்ததா? 221 00:15:00,297 --> 00:15:04,051 இவ்வளவு கச்சிதமா விதியையும் அதன் செயல்பாட்டையும் கட்டுப்படுத்த நான் யார்? கடவுளா? 222 00:15:04,551 --> 00:15:09,056 இல்ல. லின் சாகர் வாடாவில இருப்பது அவனுடைய சொந்த காரணங்களுக்காக. 223 00:15:09,056 --> 00:15:12,517 எங்களுக்குள்ள இருக்குற ஒப்பந்தம், வெறும் மருந்துகள் சம்மந்தப்பட்டது மட்டும் தான். 224 00:15:12,601 --> 00:15:16,271 நாம மட்டும் இல்லைனா, நான் அவனை அதைச் செய்ய வைக்கலைன்னா, அவன் அங்கே இருக்கமாட்டான். 225 00:15:17,230 --> 00:15:20,984 அவனைக் கொல்லல சாகர் வாடாவுக்கு ஃஜூ ஆட்கள அனுப்பியிருக்கா, அதுதான் தீ விபத்துக்குக் காரணம். 226 00:15:21,068 --> 00:15:23,946 யாரோ இறந்துட்டாங்க. அதுக்காக லின், தன் மீது தானே பழி சுமத்திக்கிறான். 227 00:15:26,031 --> 00:15:27,991 இதையெல்லாம் அவன் உங்கிட்ட சொன்னானா? 228 00:15:29,201 --> 00:15:35,374 உனக்கு அக்கறையில்லாத ஒருவனுடனான சாதாரண உரையாடல் போல அது இல்லையே. 229 00:15:37,250 --> 00:15:38,961 வேற என்னவெல்லாம் அவனோட பேசின? 230 00:15:38,961 --> 00:15:40,253 முக்கியமா எதுவும் இல்ல. 231 00:15:42,214 --> 00:15:45,300 லின் என்னோட இருந்த விஷயத்தைப் பத்தி, நான் உங்கிட்ட சொன்னதோட அதிகமா, 232 00:15:45,384 --> 00:15:46,468 உன் கிட்ட அவன் சொல்லுவானான்னு பார்த்த. 233 00:15:50,472 --> 00:15:52,224 சொன்னானா? -இல்ல. 234 00:15:54,768 --> 00:15:58,271 நமக்கெல்லாம் நடுவுல இருக்குற தொடர்பு என்னன்னு அவங்கிட்ட உண்மையை சொல்லணுமா? 235 00:15:58,855 --> 00:16:00,357 அதுக்கெல்லாம் இப்போ காலம் கடந்துபோச்சு. 236 00:16:01,692 --> 00:16:03,694 எனக்கு இன்னும் ஒருத்தரை காயப்படுத்துறதுல விருப்பம் இல்லை. 237 00:16:04,444 --> 00:16:06,405 நானும் சந்தோஷமா ஒத்துக்குறேன் 238 00:16:07,531 --> 00:16:12,035 உனக்கும் அதுல உடன்பாடு இருந்தா, லின்னோட பாதையில நாம இருவரும் இனி குறுக்கிட வேண்டாம். 239 00:16:13,078 --> 00:16:15,289 அவன் சாகர் வாடாவில இருக்க விரும்பினா, அதனால என்ன? 240 00:16:16,540 --> 00:16:19,960 இல்லைன்னா, நாம இருவரும் ஒதுங்கிடலாம். 241 00:16:40,355 --> 00:16:43,400 அதோ அங்கே இருக்குற ஆளுக்கு உன்னைப் பிடிக்கலைன்னு நினைக்கிறேன். 242 00:16:43,400 --> 00:16:44,693 இல்ல, உன்னை ரொம்ப பிடிச்சிருக்கோ. 243 00:16:45,402 --> 00:16:46,570 ஆமாம், அவன் மோசமானவன். 244 00:16:48,363 --> 00:16:52,326 அதோட இந்த பையன் ரவி, அவனுக்கும் உன்னைப் பிடிக்கலை. 245 00:16:52,326 --> 00:16:56,246 அதுக்காக தான் நீ இந்த சேரியில இவ்வளவு மருத்துவம் பார்க்கறயா? மக்களுக்கு உன்னை பிடிக்கணும்னு? 246 00:16:57,289 --> 00:16:59,791 அங்கே நாம கொஞ்சம் செய்தாலே, மக்கள் ரொம்ப சந்தோஷப்படுறாங்க. 247 00:17:00,834 --> 00:17:02,336 உனக்கு எது சந்தோஷத்தைத் தரும், லின்? 248 00:17:04,253 --> 00:17:05,422 ஒரு பெரிய பட்டியலே இருக்கு. 249 00:17:07,299 --> 00:17:10,176 நான் இந்த கார்லாவை கரெக்ட் பண்ண முடிஞ்சா, கொஞ்சம் நல்லாயிருக்கும். 250 00:17:10,260 --> 00:17:11,178 கார்லா? 251 00:17:11,178 --> 00:17:13,930 அதான், அன்னிக்கு ராத்திரி நம்மகிட்ட வந்து கிளப்புல பேசினாளே. 252 00:17:14,765 --> 00:17:15,973 அவளோட எவ்வளவு தூரம் இருக்கு உன் கதை? 253 00:17:17,392 --> 00:17:18,684 நீ சொல்லுப்பா, நண்பா. 254 00:17:18,769 --> 00:17:22,064 அந்த பெண், மர்மமா இருக்குற ஒரு விடுகதை, புரியாத புதிராக இருக்கா. 255 00:17:23,357 --> 00:17:26,360 என்னைத் தள்ளி விடுறா, அப்புறம் அவ பக்கமா இழுக்குறா. 256 00:17:26,360 --> 00:17:29,363 புறக்கணிக்கிறா, அப்புறம் எங்கிட்ட "அந்நியனா நடந்துக்காதே" அப்படிங்குறா. 257 00:17:30,364 --> 00:17:32,157 நான் என்ன செய்யறதுன்னு எனக்குப் புரியலையே? 258 00:17:32,908 --> 00:17:34,660 அந்நியனா இருக்காதே, அப்படின்னு சொல்வேன். 259 00:17:35,661 --> 00:17:37,788 அவ்வளவுதானா? அவ்வளவு எளிமையா? -அவ்வளவு தான். 260 00:17:38,705 --> 00:17:39,998 நல்லாயிருக்கு. 261 00:17:40,999 --> 00:17:42,960 மரிஃஜிசோ, நண்பா, அந்த வீடி கிளினிக்குல எல்லாம் சரியாகிடுச்சா? 262 00:17:42,960 --> 00:17:44,670 எல்லாம் குணமாகிடுச்சா? 263 00:17:45,545 --> 00:17:47,381 அன்டிபையாடிக்ஸ் எல்லாம் அற்புதமா வேலைச் செய்யும். 264 00:17:53,637 --> 00:17:56,139 உன்னை எப்படி பிடிக்காமப் போகும்னு எனக்குப் புரியவேயில்லை. 265 00:18:03,438 --> 00:18:04,523 விடு. 266 00:18:04,523 --> 00:18:08,193 இங்கே அவங்களால எதுவும் செய்ய முடியாது. அதனால தான் அவங்க வீரமா இருக்காங்க. 267 00:18:18,578 --> 00:18:19,871 அது ராஃபிக் தானே? 268 00:18:21,206 --> 00:18:23,000 பாரு, அன்னிக்கு நடந்ததுதே, 269 00:18:23,000 --> 00:18:25,377 அது ஏன் உன்னை பாதிச்சிருக்கு, 270 00:18:25,377 --> 00:18:28,505 அதுக்கு நீ எப்படி பழிவாங்க நினைக்கிறன்னு எல்லாம் என்னால புரிஞ்சிக்க முடியுது. 271 00:18:28,505 --> 00:18:30,549 ஆனால் பாருங்க, நான் நடுநிலையில இருக்கேன். 272 00:18:32,050 --> 00:18:34,720 பட்டப்பகல்ல, ரெண்டு பேர் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிட்டு கொலை செய்யறதை 273 00:18:34,720 --> 00:18:35,804 என்னால அனுமதிக்க முடியலை. 274 00:18:35,804 --> 00:18:38,432 அவ்வளவு தான். தப்பா நினைச்சுக்காதே, சரியா? 275 00:18:49,484 --> 00:18:52,821 நான் உன் உயிரைக் காப்பாத்தினேன். நான் இல்லன்னா, நீ இன்னிக்கு இங்க இருக்கமாட்ட. 276 00:18:52,821 --> 00:18:55,073 இல்ல, அவன் இருந்திருக்க மாட்டான். 277 00:18:58,327 --> 00:19:00,954 உனக்கு எதாவது ஆகுறதுக்கு முன்னாடி நீ மும்பையை விட்டுப் போயிடு. 278 00:19:02,080 --> 00:19:03,707 ஆம், எல்லோரும் எங்கிட்ட சொல்லிட்டு இருக்காங்க. 279 00:19:04,333 --> 00:19:07,377 பாரு, நான் சீரியஸாதான் சொல்றேன். எனக்கு உன்னோட எந்த பிரச்சினையும் இல்ல. 280 00:19:08,462 --> 00:19:12,215 ரொம்ப தாமதாமாயிடுச்சு. நீ உன் பக்கத்தை தேர்ந்து எடுத்துட்ட, டாக்டர். 281 00:19:14,051 --> 00:19:15,093 தவறான தேர்வு. 282 00:19:20,474 --> 00:19:21,475 சரி தான். 283 00:19:23,226 --> 00:19:24,436 நாம போறோம். 284 00:19:24,436 --> 00:19:25,937 ஆனால் எனக்குப் போக வேண்டாம். 285 00:19:26,021 --> 00:19:27,981 நீ தனியா வீட்டுக்கு நடந்து வர தயாரா இரு, இல்ல நகரு. 286 00:19:33,362 --> 00:19:34,446 நீ இருக்கப் போறயா? 287 00:19:36,907 --> 00:19:39,701 உனக்கு என்னைத் தெரியும். எனக்கு ரெண்டாவது சுத்து வேணும். 288 00:19:40,327 --> 00:19:41,328 ஜாக்கிரதையா இரு. 289 00:20:18,073 --> 00:20:20,325 ஹே, ஜித்தேந்திரா, ரத்னா, எப்படி போகுது? 290 00:20:20,867 --> 00:20:21,868 ரவி? 291 00:20:23,287 --> 00:20:25,455 உன் வேலைகள முடிச்சியா? -எந்த வேலைகள்? 292 00:20:26,415 --> 00:20:28,166 ரவி, இதோப் பாரு. 293 00:20:28,250 --> 00:20:30,961 ஆமாம், சார், இதோ போறேன். 294 00:20:34,715 --> 00:20:35,882 நாம கொஞ்சம் பேசலாமா? 295 00:20:35,966 --> 00:20:38,176 நிச்சயமா. நிச்சயமா, உள்ளே வாங்க. 296 00:20:43,724 --> 00:20:44,850 நீங்க உட்காருங்களேன்? 297 00:20:44,850 --> 00:20:48,687 ஓ, இல்ல. நான் இப்போ தான் இதை எல்லாம் சேர்த்துட்டு வந்தேன். 298 00:20:49,896 --> 00:20:53,275 எதுக்கு? நீங்க ஏற்கனவே நிறைய கொடுத்தாச்சு. 299 00:20:53,275 --> 00:20:56,862 இல்லை, திரு. லின். நீங்க எங்களுக்காக செய்யற வேலைக்கு தான் இதெல்லாம். 300 00:20:57,654 --> 00:21:02,784 இது, இந்த பணம், இது நீங்க வாங்க வேண்டிய மருந்துப் பொருட்களுக்கான செலவுக்காக. 301 00:21:04,620 --> 00:21:05,621 சரி. 302 00:21:07,581 --> 00:21:08,790 பாருங்க, திரு. லின், 303 00:21:09,583 --> 00:21:13,295 உங்களுக்கு எங்கிருந்து மருந்துப் பொருட்கள் கிடைக்குதுங்கிறது, உங்க பாடு. 304 00:21:13,295 --> 00:21:16,214 ஆனால், இங்க இருக்கிற மக்கள், நாங்க, எங்களால முடிஞ்சதை கொடுக்கணும். 305 00:21:18,133 --> 00:21:19,760 நீங்க காதரோட ஆள்கிட்ட பேசுறதைப் பார்த்தேன். 306 00:21:20,510 --> 00:21:22,346 அவன் உங்கள "தம்பின்னு" கூப்பிடறான். 307 00:21:23,972 --> 00:21:25,891 அப்படிப்பட்ட அண்ணன் உங்களுக்குத் தேவையில்லை. 308 00:21:26,642 --> 00:21:29,811 இந்த குடிசைப்பகுதியிலேயே, சகோதரத்துவம் உங்களுக்கு கிடைக்கும். 309 00:21:32,147 --> 00:21:34,608 அதோட, ரெண்டு அண்ணன்கள் இருந்தா அனாவசிய சண்டைகள் வரும். 310 00:21:42,699 --> 00:21:44,201 இங்கே பெரிசா எதுவும் இல்ல, 311 00:21:44,952 --> 00:21:46,620 ஆனால் நாங்க யாருக்கும் கடனாளியும் இல்ல. 312 00:21:47,204 --> 00:21:48,705 அது தான் எங்களுக்கு இருக்கிற வலிமை. 313 00:21:50,666 --> 00:21:53,502 நீங்க கொடுக்குற மருந்துப் பொருட்களோட விலையை நாங்க தான் ஏத்துக்கணும், திரு. லின், 314 00:21:54,336 --> 00:21:59,257 ஏன்னா அது உங்களையோ, அல்லது எங்களையோ இல்ல இன்னொருத்தரையோ கடனாளியாக்கக்கூடாது. சரியா? 315 00:22:02,886 --> 00:22:03,887 சரிதான். 316 00:22:04,388 --> 00:22:05,597 சலாம் ஆலேக்கும். 317 00:22:05,681 --> 00:22:06,890 ஆலேக்கும் சலாம். 318 00:22:09,017 --> 00:22:10,560 அவர் சொன்னது சரி எனப் புரிந்தது 319 00:22:11,144 --> 00:22:13,271 அதோடு, நான் இந்த இடத்தில் இருக்க விரும்பினால், 320 00:22:13,772 --> 00:22:15,315 அவர்களுடைய விதிகளை நான் மதிக்க வேண்டும். 321 00:22:20,195 --> 00:22:22,114 நான் தான் இந்த ஸ்கூலுக்கு நிதி உதவி செய்யறேன். 322 00:22:24,783 --> 00:22:27,286 இங்கே இருக்கிற குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கிடையாது. 323 00:22:33,333 --> 00:22:35,419 நான் பணம் சம்பாதிக்கிற வழியை மறுக்கமுடியாது, 324 00:22:35,419 --> 00:22:37,838 ஆனால் நான் அதை என்ன செய்யறேங்குறது, அதைவிட முக்கியமில்லையா? 325 00:22:38,922 --> 00:22:40,924 நீதிமன்றங்களும் போலீஸும் அதை ஒத்துக்காது. 326 00:22:41,008 --> 00:22:44,845 இப்போதெல்லாம், சட்டங்கள், ஒரு பாவச்செயலில் உள்ள குற்றத்தின் அளவையேப் பார்க்குறாங்க. 327 00:22:44,845 --> 00:22:47,639 என்னைப் பொறுத்தவரை, அந்த குற்றச் செயல்ல எவ்வளவு பாவம் இருக்குங்குறது தான் முக்கியம். 328 00:22:48,223 --> 00:22:50,642 நான் விபச்சார விடுதி வச்சோ, போதை மருந்து வித்தோ, பணம் சாம்பாதிக்குறது இல்ல. 329 00:22:50,726 --> 00:22:52,561 நான் குழந்தைகளையோ, பெண்களையோ கடத்துறது இல்ல. 330 00:22:53,145 --> 00:22:56,857 ஆனால் மற்ற எல்லா இடங்களிலும், செய்யறாங்க, அதனால எனக்குச் சாதகமில்லாம போயிடுது. 331 00:22:56,857 --> 00:23:01,486 எனவே நான் பாவத்துல வாழறதுக்கு பதில், மக்களில் முதலீடு செய்யறேன், 332 00:23:01,987 --> 00:23:05,574 அவங்கள வளரச் செய்யறேன், ஒருவேளை, ஏதோ ஒரு கட்டத்துல எனக்கு அது பலனைத் தரலாம். 333 00:23:05,574 --> 00:23:07,743 எனவே, அது போல விதைச்ச விதையில நானும் ஒண்ணு. 334 00:23:08,994 --> 00:23:11,038 என் மூலம் நீங்க நினைச்ச படி பலன் கிடைக்குதா? 335 00:23:13,498 --> 00:23:17,669 எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு நானும் நீயும் இங்கே இப்போ இப்படியிருக்கோமே. 336 00:23:18,462 --> 00:23:22,549 நீ ரொம்ப வேறுபட்டவள். அது உனக்கே தெரியும்னு நினைக்கிறேன். 337 00:23:23,717 --> 00:23:27,095 எனக்குக் குழந்தைகள் கிடையாது, ஆனால் இந்த உலகத்துல நீ தான் என் மகள், 338 00:23:27,179 --> 00:23:28,430 நீ விருப்பப்பட்டால், 339 00:23:28,430 --> 00:23:31,600 ஏன்னா நான் ஒரு மகளுக்குத் தேவையான அப்பாவாக இருப்பதாக ஒருபோதும் பாசாங்கு செய்ததில்லை. 340 00:23:32,351 --> 00:23:34,519 எங்க அப்பா எனக்கு தந்ததைவிட நீங்க எனக்கு அதிகமாகவே தந்திருக்கீங்க. 341 00:23:37,606 --> 00:23:38,857 எனக்கு வருத்தமா இருக்கு. 342 00:23:40,609 --> 00:23:44,446 நான் முதன்முதல்ல ருஜுல்ல பார்த்தபோது, அவனுக்கு மும்பையை இன்னும் சிறப்பா ஆக்கணும்னு இருந்தது. 343 00:23:44,947 --> 00:23:46,573 ஆனால், அதிகாரமும் பணமும் அவனை மாத்திடுச்சு. 344 00:23:46,657 --> 00:23:49,451 நீ சொல்ற வரைக்கும் அது எனக்குத் தெரியலை. 345 00:23:50,702 --> 00:23:53,372 ஆனால் நீ சொன்னதுக்காக வருத்தப்படுறியோன்னு எனக்குக் கவலையா இருக்கு. 346 00:23:54,081 --> 00:23:56,124 எனக்கு இதைச் சமாளிக்க முடியலைன்னு தோணுது. 347 00:23:56,208 --> 00:23:58,877 எதுவும் என் கட்டுப்பாட்டுல இல்லை. எனக்கு அது பிடிக்கலை. 348 00:23:58,961 --> 00:24:00,712 அதனால தான் நீ எப்போதும் உன்னையே கேட்டுக்கணும் 349 00:24:00,796 --> 00:24:04,466 உனக்கு இந்த குத்தத்துல எவ்வளவு பாவம் வரும்னு, மத்தவங்களை பார்க்காதே. 350 00:24:05,300 --> 00:24:07,511 உன் ஆன்மாவுக்கு தாங்க முடியாம போச்சுன்னா, 351 00:24:07,511 --> 00:24:09,262 நீ அதிலிருந்து விலகிடணும். 352 00:24:09,763 --> 00:24:12,641 நீ, நான், அப்துல்லா, லின் ஃபோர்ட் கூட, எல்லோரையும் உந்துறது, 353 00:24:12,641 --> 00:24:14,643 நாம மாத்த விரும்புற மரணம் தான். 354 00:24:15,268 --> 00:24:17,729 மாத்தம் என்கிற தொடக்கப்புள்ளி நடக்குறபோது நம்ம மனசுக்குத் தெரியும் 355 00:24:17,813 --> 00:24:19,523 ஆனால் அதை நம்ம ஏன்னு கேள்வி கேட்க முடியாது. 356 00:24:19,523 --> 00:24:22,401 அதுக்கு அப்புறம் நம்ம பாதைங்க முடிவாயிடுச்சுன்னா. நாம அதை மாத்த முடியாது... 357 00:24:22,401 --> 00:24:24,027 இல்லயில்ல. மாத்த முடியும். நாம மாத்தணும். 358 00:24:24,987 --> 00:24:27,990 நான் உன்னை நேசிக்கிறேன், கார்லா, எனக்கு உரிமை இருந்தாலும், இல்லன்னாலும். 359 00:24:27,990 --> 00:24:29,866 அதனால நான் அதை திரும்ப சொல்றேன். 360 00:24:31,201 --> 00:24:33,245 நீ வேற பாதையில போக நினைச்சன்னா, 361 00:24:34,329 --> 00:24:36,331 அது எந்த விதத்திலும் நம்ம உறவை பாதிக்காது. 362 00:24:52,347 --> 00:24:53,515 இதுல எனக்கு உதவி செய். 363 00:25:08,864 --> 00:25:11,199 நீங்க காட்டின இடங்கள நான் மூடிடுறேன். 364 00:25:16,622 --> 00:25:19,958 இன்னிக்கு ராத்திரி இந்த ஐவி முடியற வரை அவங்க இங்கே தான் இருக்கணும். 365 00:25:20,042 --> 00:25:23,337 அவங்க அதை விரும்ப மாட்டாங்க. அதுவும் உங்களோட இங்கே தனியா. 366 00:25:24,838 --> 00:25:25,881 தெரியும். 367 00:25:26,381 --> 00:25:28,508 அதனால தான் நீ இங்கே அவங்களோட இருக்கணும். 368 00:25:29,551 --> 00:25:30,761 நான் பிரபுவோட வீட்டுக்குப் போறேன். 369 00:25:34,806 --> 00:25:36,266 உனக்கு இதுல நல்ல திறமை இருக்கு, பார்வதி. 370 00:25:39,853 --> 00:25:43,440 நிஜமாவே இதையே என் வேலையா செய்ய நான் விரும்புறேன். 371 00:25:45,651 --> 00:25:48,820 ஆமாம், எப்போதுமே நல்ல கைகளுக்குத் தேவையிருக்கு. நீ இதைத் தொடர்ந்து செய்யணும். 372 00:25:48,904 --> 00:25:51,740 இங்கே, என்னை மாதிரி ஒரு பெண்ணுக்கு அது சுலபம் இல்ல. 373 00:26:09,758 --> 00:26:12,427 கவிதா, நீ இங்கே என்ன செய்யற? 374 00:26:12,511 --> 00:26:15,305 நீங்க அன்னிக்கு ராத்திரி சொன்னதை கேட்டப்புறம், இதுக்கு நான் எப்படி உதவலாம்னு 375 00:26:15,389 --> 00:26:16,682 யோசிக்க ஆரம்பிச்சேன். 376 00:26:16,682 --> 00:26:17,766 எதுக்கு உதவணும்? 377 00:26:17,766 --> 00:26:20,894 நீங்க செய்யற இந்த மருத்துவத்துக்கு, இங்கே உங்களோட போராட்டத்துல. 378 00:26:20,978 --> 00:26:23,188 நீங்க செய்யற இந்த வேலைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். 379 00:26:23,188 --> 00:26:26,400 வேற யாரும் இதைச் செய்ய தயாராயில்லைங்குறதால நீங்க இதைச் செய்யும் கட்டாயம். 380 00:26:26,400 --> 00:26:29,528 லின், நீங்க இதைச் செய்யறது அற்புதம்னு நான் நினைக்கிறேன், 381 00:26:29,528 --> 00:26:32,781 ஆனால், உண்மையான மாற்றத்தைக் கொண்டு வர, அரசியல் ஒத்துழைப்புத் தேவை. 382 00:26:32,781 --> 00:26:37,119 அதைச் செய்ய சுலபமான வழி, அட்டைப் படத்துல உங்க படத்தை போடறதுதான். 383 00:26:37,786 --> 00:26:39,204 வேண்டாம். முடியாது. 384 00:26:40,122 --> 00:26:41,373 அதையெல்லாம் விடு. 385 00:26:42,124 --> 00:26:44,543 என்னால முடியாது, கவதா. மன்னிச்சிடுங்க. 386 00:26:44,543 --> 00:26:47,212 நான் சில நோயாளிங்கக் கிட்ட பேசினால் என்ன, அப்படிச் செய்யலாமே? 387 00:26:47,296 --> 00:26:48,964 நீங்க தொண்டு செய்யறதை படம் பிடித்துப் போடலாமே. 388 00:26:50,299 --> 00:26:52,884 ஹே! -இதுல கதையெல்லாம் கிடையாது, சரியா? 389 00:26:52,968 --> 00:26:54,344 நீங்க எல்லாத்தையும் கெடுத்துடுவீங்க. 390 00:26:54,928 --> 00:26:56,263 என்ன கண்ராவி இது? 391 00:26:59,558 --> 00:27:00,642 நான் சொல்றது புரியுதா? 392 00:27:01,310 --> 00:27:03,103 ஏன்னு சொன்னீங்கன்னா இன்னும் நல்லாப் புரியும். 393 00:27:07,274 --> 00:27:09,067 நீங்க இந்த கதையை சொல்ல ஏன் விரும்புல? 394 00:27:13,614 --> 00:27:15,574 இதெல்லாம் பெரிசில்ல. நிஜமா. நான்... 395 00:27:17,409 --> 00:27:19,286 என்னை மன்னிச்சிடுங்க. நான் அப்படிச் செய்திருக்கக்கூடாது. 396 00:27:19,870 --> 00:27:22,414 அதனால எதுவும் சேதம் ஆகியிருந்தா, நான் செலவை தரேன்... 397 00:27:22,998 --> 00:27:25,000 அதைப் பத்தி நீங்க கவலைப்படவேண்டாம். -இல்ல, கவிதா. 398 00:27:26,376 --> 00:27:27,419 கவிதா. 399 00:27:30,255 --> 00:27:34,301 என்னுடைய இந்த சுதந்திரம் எவ்வளவு மெல்லிய நூலிழையில் ஊசலாடுகிறது என பீதி அடைந்தேன். 400 00:27:34,301 --> 00:27:38,096 என்னுடைய ஒரே ஒரு படம் போதும், என்னை மீண்டும் சிறையில் கொண்டு தள்ளுவதற்கு. 401 00:27:46,855 --> 00:27:47,898 பார்வதி. 402 00:27:53,070 --> 00:27:54,613 பார்... 403 00:27:58,367 --> 00:28:01,453 பார்வதி, ஓஓ, பார்வதி, 404 00:28:01,453 --> 00:28:06,583 ஓஓ, என் பார்வதி. 405 00:28:06,667 --> 00:28:07,668 ஹே. 406 00:28:10,837 --> 00:28:13,715 என் சந்தோஷக் கனவுகளைக் கெடுக்காதே, என்ன? 407 00:28:14,716 --> 00:28:16,259 உன் முகம் ரொம்ப... 408 00:28:17,636 --> 00:28:19,846 இந்த முகத்தைப் பார்த்து, குழந்தைங்க அழுவாங்க. 409 00:28:21,682 --> 00:28:23,600 இன்னிக்கு ரொம்ப மோசமான நாள், பிரபு, நண்பா. 410 00:28:25,394 --> 00:28:27,938 நான் நல்லது செய்ய நினைச்சாலும், எல்லாம் தப்பாவே முடியுது. 411 00:28:38,407 --> 00:28:40,450 நான் அவளை ரொம்ப நேசிக்கிறேன், லின்பாபா. 412 00:28:41,702 --> 00:28:43,203 நீ என்னைப் பொறைமைப் பட வைக்கிற. 413 00:28:44,288 --> 00:28:48,917 சரி, ஆமாம், காசிம்பாய் உனக்குக் கொடுத்த அந்த பணம் போட்ட கவரைப் பாரத்துப் பொறாமையா இருக்கு. 414 00:28:49,543 --> 00:28:50,627 எனக்கு அது வேண்டவே வேண்டாம். 415 00:28:53,380 --> 00:28:56,800 சரி. அப்போ, இன்னும் சந்தோஷப் படு, 416 00:28:56,800 --> 00:29:01,054 நீ ஏன், அதை படுக்கையில போட்டு சுத்தி வைச்சு, அது மேலேயே புரளக்கூடாது, லின்பாபா? 417 00:29:01,763 --> 00:29:04,016 பிரபு, இந்த குடிசைப் பகுதி மொத்தமும் இதுக்கு பணம் கொடுத்திருக்காங்க 418 00:29:04,016 --> 00:29:06,893 ஏன்னா நான் என் சொந்த பணத்தைப் போட்டு மருந்துப் பொருட்களை வாங்குறேன்னு நினைக்கிறாங்க. 419 00:29:06,977 --> 00:29:08,103 நீ போடலைன்னா, வேற யாரு போட்டா? 420 00:29:09,980 --> 00:29:11,231 காதர்பாய் தான் பணம் கொடுக்குறார். 421 00:29:15,569 --> 00:29:18,030 சரி, அது கெட்ட விஷயம். ரொம்ப கெட்டது... 422 00:29:18,030 --> 00:29:21,033 லின், நீ இதை யார்கிட்டேயும் சொல்லாதே, 423 00:29:21,617 --> 00:29:23,619 இல்ல, காசிம்பாய் உன்னை சாகர் வாடாவை விட்டு வெளியே அனுப்பிடுவார். 424 00:29:23,619 --> 00:29:25,829 பாரு, இந்த பணம் திரும்ப மக்களுக்கே தான் போகணும். 425 00:29:25,829 --> 00:29:27,706 வேண்டாம். 426 00:29:28,498 --> 00:29:30,375 அது உன்னை இன்னும் வம்புல கொண்டு விடும். 427 00:29:30,459 --> 00:29:34,087 இங்கே இருக்குறவங்க உன்னை நேசிக்கிறாங்க, நீ தேவை, விருப்பப்பட்டு கொடுக்கறாங்க. பிளீஸ், லின்பாபா. 428 00:29:35,005 --> 00:29:39,676 வெளிய தலைக்காட்டாம, அந்த பணத்தை உன் பையில போட்டுக்கோ, பாஸ். 429 00:29:42,554 --> 00:29:45,432 அது பொய் ஆகிடும். -அது பொய் இல்ல. அது... 430 00:29:46,391 --> 00:29:48,185 சொல்லாம இருக்கறது. 431 00:29:48,810 --> 00:29:50,729 அதனால ஏற்படுற விளைவுகள நீ எதிர்கொள்ளணும். 432 00:29:50,729 --> 00:29:54,566 அதோட விளைவா எல்லோரும் சந்தோஷமா இருப்பாங்க, 433 00:29:55,192 --> 00:29:59,529 நீயும் நிறைய பணத்தோட வாழலாம். 434 00:30:13,669 --> 00:30:15,712 நீ ஏன் அந்த பார்வதிக்கு கொஞ்சம் சாப்பாடு எடுத்துட்டுப் போகக்கூடாது 435 00:30:17,422 --> 00:30:18,840 அப்படியே ஒரு ஹலோ சொல்லலாமே? 436 00:30:18,924 --> 00:30:23,053 பீளீஸ், லின். அவ குடும்பம் எற்கனவே என்னை வெறுக்குறாங்க. 437 00:30:23,053 --> 00:30:26,056 ஒரு கல்யாணம் ஆகாத பெண், நல்ல அழகான, கல்யாணம் ஆகாத... 438 00:30:27,683 --> 00:30:33,647 என்னைப் போல ஒரு இளைஞனோட, இந்த அழகான இரவுல தனியா பேசமுடியாது. 439 00:30:36,984 --> 00:30:38,902 என்ன? அதனால தானே இன்னிக்கு ராத்திரி நீ இங்கே வந்த. 440 00:30:40,487 --> 00:30:41,947 எவ்வளவு விதி முறைகள். 441 00:30:43,156 --> 00:30:47,369 இன்னொருத்தனோட மனைவி, இல்லை யாரோட மனைவியும் இல்லன்னாலும், எந்த பெண்ணோடும் 442 00:30:47,869 --> 00:30:49,538 தனியாவே இருக்கக்கூடாது. 443 00:30:50,205 --> 00:30:51,957 அப்போ இவ்வளவு குழந்தைங்க எங்கிருந்து வந்தாங்கன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு. 444 00:30:53,583 --> 00:30:56,670 நான் உன்னை அவளோட இரவை கழிக்கச் சொல்லலை. போய் ஹலோ சொல்லலாமேன்னேன். 445 00:31:00,507 --> 00:31:02,592 லின்பாபா, அதெல்லாம் கூடாது. 446 00:31:07,973 --> 00:31:13,228 பார்வதி தனியா இருக்கா, அதனால நான் அவளோட இருக்க முடியாது, நான் அதை ரொம்ப விரும்பினாலும். 447 00:31:15,897 --> 00:31:18,400 அதுக்கு பதிலா தான் என் சின்ன குடிசையை உன்னோட பகிர்ந்துக்கறேனே. 448 00:31:20,027 --> 00:31:24,239 ஆனால், கார்லா மேடம் தனியா தான் இருக்காங்க, அவங்களோட நீ இருப்பதைத் தடுக்க விதிகள் இல்ல. 449 00:31:24,823 --> 00:31:26,283 ஆனால் நீ, என்னைப் பார்த்து பொறாமைப் படறயே? 450 00:31:28,368 --> 00:31:31,079 இந்த சூழல்நிலையில, என்னால தான் 451 00:31:31,163 --> 00:31:32,414 ஜல்ஸா செய்ய முடியாது. 452 00:31:36,501 --> 00:31:37,502 இப்போ, எனக்குக் குழப்பமா இருக்கு. 453 00:31:37,586 --> 00:31:41,798 நீ என்னைப் போய் ஜல்ஸா பண்ணச் சொல்றயா, இல்ல நீ சுய இன்பம் அனுபவிக்கறதுக்காக இதைச் சொல்றயா? 454 00:31:43,300 --> 00:31:47,429 இங்கே நாம எல்லோரும் நண்பர்கள், லின்பாபா. தனியா இருக்கேனா இல்லையான்னு பார்க்க மாட்டேன். 455 00:31:53,226 --> 00:31:55,520 அப்படின்னா கண்டிப்பா நான் வேற இடத்துக்குத் தான் போகணும். 456 00:32:11,912 --> 00:32:13,455 லின் ஃபோர்ட் கேட்டுல இருக்கார், சார். 457 00:32:13,956 --> 00:32:15,123 நீ இப்போ போயிடு. 458 00:32:16,166 --> 00:32:17,918 லின் உன்னைப் பார்க்க வேண்டாம். 459 00:32:20,629 --> 00:32:21,922 இதை அப்புறமா முடிக்கலாம். 460 00:32:40,565 --> 00:32:41,650 காதர்பாய். 461 00:32:42,818 --> 00:32:47,364 நீ விளையாடுவியா? -இல்ல, இது என்னன்னு தெரியாது எனக்கு. 462 00:32:47,864 --> 00:32:49,825 பச்சீசி. நான் சொல்லித் தரேன். 463 00:32:49,825 --> 00:32:51,243 இன்னொரு தடவை பார்க்கலாம். 464 00:32:53,704 --> 00:32:56,373 காதர்பாய், பாருங்க, நீங்க செய்த உதவியை நான் ரொம்ப மதிக்கிறேன், 465 00:32:56,373 --> 00:32:59,584 ஆனால், என் தரப்புலேர்ந்து அதுக்கான விலையைத் தருவதை நீங்க எடுத்துக்கணும்னு வற்புறுத்தறேன். 466 00:33:00,836 --> 00:33:02,796 அதுக்கெல்லாம் இனிமேல் நான் பணம் தருவேன். 467 00:33:04,881 --> 00:33:07,050 யாராவது இதை எங்கிட்டச் சொல்லச் சொல்லி உன்னை அனுப்பினாங்களா? 468 00:33:07,134 --> 00:33:09,303 இல்ல. அப்படியில்லை, அதுக்கு அவசியமில்லை. 469 00:33:09,928 --> 00:33:11,263 சாகர் வாடாவுல சில விதிகள் இருக்கு, 470 00:33:11,263 --> 00:33:13,932 நான் அங்க இருக்கப் போறேன்னா, அதையெல்லாம் நானும் பின்பற்றணும். 471 00:33:14,016 --> 00:33:16,685 புழுதியிலும், குப்பையிலும் பொறுக்கறதையும் நோண்டுறதையும் தவிர வேற என்ன விதி இருக்கு அங்கே? 472 00:33:17,269 --> 00:33:19,730 ஒரே விதி என்னன்னா, கஷ்டப்படறதுல, மகிழ்ச்சியா இருக்காங்க, என்பது தான். 473 00:33:19,730 --> 00:33:21,857 பல வகைப்பட்ட கஷ்டங்கள் இருக்கு, அப்துல்லா. 474 00:33:21,857 --> 00:33:24,318 நாம உணர்வது ஒண்ணு, இன்னொருத்தருக்கு கொடுக்குற கஷ்டம் வேற. 475 00:33:24,318 --> 00:33:26,862 அது இல்லன்னு ஒதுக்குற அளவு நீ வலிமையானவனா இருந்தா, கஷ்டப்பட வேண்டாம். 476 00:33:26,862 --> 00:33:29,990 சரி, உண்மையான வலிமைங்குறது, நமக்காக இல்லாம இன்னொருவருக்காக கஷ்டப்படுவது தான். 477 00:33:29,990 --> 00:33:33,118 திரு. லின் தன் வாழ்க்கையை இன்னும் கஷ்டப்படுத்திக்க வந்திருக்கார். அவரை பலவீனமானவர்னு நினைச்சயா? 478 00:33:33,702 --> 00:33:35,871 இல்லை. ஆனால், நான் அவனைத் தம்பின்னு நினைச்சாலும், 479 00:33:35,871 --> 00:33:38,165 அவன் ஒரு கிறுக்கு மேற்கத்திக்காரன், அவனுக்கு அந்த விதிமுறைகள் எல்லாம் இல்லை. 480 00:33:38,165 --> 00:33:40,292 அல்லல் என்பது ஒரு வகையான கோபம் தான். 481 00:33:40,292 --> 00:33:43,211 அநியாயத்தையும் அராஜகத்தையும் எதிர்த்து நாம பொங்கி எழுறோம், 482 00:33:43,295 --> 00:33:45,881 சிலர், அதோட விளைவுகளப் பத்தி எல்லாம் கவலைப்படாம, கஷ்டத்தை வலியப் போய் 483 00:33:45,881 --> 00:33:47,591 ஏற்க முனையறாங்க. 484 00:33:48,133 --> 00:33:50,969 அப்படிப்பட்டவங்க, மத்தவங்களுக்காக கஷ்டப்பட்டாதான் சந்தோஷமா இருப்பாங்க. 485 00:33:51,053 --> 00:33:52,679 அது தான் ஒரு ஹீரோவுக்கு இடப்பட்ட சாபம். 486 00:33:53,930 --> 00:33:56,725 நீ தொடங்கி வச்சுட்டுட்ட இப்போ. இந்த விவாதம் ரொம்ப நேரம் தொடரும். 487 00:33:56,725 --> 00:33:58,310 நீ பணத்தை எடுத்துட்டு இடத்தை காலிப் பண்ணு. 488 00:33:58,810 --> 00:34:00,187 நான் பணத்தை எடுத்துக்க முடியாது. 489 00:34:03,065 --> 00:34:05,108 நானும் உன் முடிவ மதிக்கிறேன். 490 00:34:05,984 --> 00:34:08,946 நீ சாகர் வாடாவிலே இருக்க உதவி செய்யறது தான் என் உத்தேசம். 491 00:34:08,946 --> 00:34:12,783 என்னால இனியும் எப்போதாவது உதவி செய்ய முடியும்னா, என் கதவு திறந்தே இருக்கும். 492 00:34:13,367 --> 00:34:16,536 நன்றி, காதர்பாய். -இந்த உரையாடல்கள் பிடிச்சிருக்கு, லின். 493 00:34:16,536 --> 00:34:19,039 நம்ம நட்பையாவது நாம விடாம இருக்கணும்னு நினைக்கிறேன். 494 00:34:19,873 --> 00:34:21,291 நானும் அதை விரும்புறேன். 495 00:34:21,375 --> 00:34:22,376 நல்லது. 496 00:34:41,936 --> 00:34:43,730 என் எஜமானர் சீக்கிரம் வந்திடுவார். 497 00:35:16,221 --> 00:35:17,222 லின்ட்சே. 498 00:35:17,306 --> 00:35:20,058 ஃபோர்டு லின்ட்சே - நியூசிலாந்து பாஸ்போர்ட் எண் - ஆர் 22624-788 499 00:35:31,278 --> 00:35:33,280 லின்ட்சே 500 00:35:37,826 --> 00:35:41,288 லின்ட்சே ஃபோர்டு - என்இசெட் ஆர் 22624-788. 501 00:35:47,878 --> 00:35:50,922 சாகர் வாடாவுல ஒரு ஆண், திருமணமாகாத ஒரு பெண்ணோட இருப்பது 502 00:35:51,006 --> 00:35:54,551 கொஞ்சமும் ஒத்துக்கொள்ள முடியாதது, அதுவும் நள்ளிரவுல, முடியவே முடியாதுன்னுத் தெரியுமா? 503 00:36:02,809 --> 00:36:04,102 நீ இங்கே என்ன செய்யற? 504 00:36:07,940 --> 00:36:09,232 நான் உன்னை மிஸ் பண்ணினேன். 505 00:36:23,538 --> 00:36:24,873 என்னை ஏன் உள்ள அனுமதிச்ச? 506 00:36:40,472 --> 00:36:42,182 உள்ளே வாங்க. 507 00:36:43,850 --> 00:36:46,645 வா போகலாம். உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக தான் வந்தேன். 508 00:36:47,854 --> 00:36:50,107 இன்னிக்கு ராத்திரி அவங்கள தனியா விட முடியாது. 509 00:36:50,774 --> 00:36:56,363 இது உன் வேலையில்ல. கவனிக்கிறதுக்கு, உனக்கு கடையிருக்கு. 510 00:36:57,906 --> 00:37:01,326 நம்ம கஷ்டங்களை எல்லாம் தீர்த்துக்க ஒரே ஒரு பாதை தான் இருக்கு, பார்வதி! 511 00:37:02,911 --> 00:37:04,246 பார்வதி. 512 00:37:04,246 --> 00:37:06,832 நீ கிளினிக்குக்காக செய்யறது எல்லாம்... 513 00:37:06,832 --> 00:37:10,043 உன் சொந்த பந்தங்களை விட்டுட்டுச் செய்யற. 514 00:37:10,127 --> 00:37:15,882 நான் இதை கிளினிக்குக்காக செய்யலை. எனக்காகச் செய்யறேன். 515 00:37:29,396 --> 00:37:31,315 நான் போதையில இருக்கேன். 516 00:37:31,315 --> 00:37:34,276 "ஓஓ, உனக்குப் பைத்தியம். கிறுக்கு. 517 00:37:34,276 --> 00:37:35,611 பித்தம் தலைக்கு ஏறிடுச்சு. 518 00:37:36,778 --> 00:37:41,241 ஆனால் உனக்கு ஒரு ரகசியம் சொல்றேன். "சிறந்தவங்க எல்லோரும் கிறுக்குதான்." 519 00:37:41,825 --> 00:37:45,120 நல்லாயிருக்கு, லின். உன்னைப் பத்தி நினைச்சதுல நீ பாதி புத்திசாலி தான். 520 00:37:48,874 --> 00:37:52,794 நீ இங்க இருப்பது, அந்த சேரிப் பெண்கள் யாருக்காவது பொறாமையை உண்டாக்குமா? 521 00:37:54,046 --> 00:37:55,213 என்ன? 522 00:37:56,006 --> 00:37:57,215 இல்லையே. 523 00:37:58,508 --> 00:38:00,969 நான் டீடேர் சொல்றதை காதுல வாங்கக்கூடாது. 524 00:38:01,053 --> 00:38:03,680 அந்த சேரியில நீ இருக்குறதுக்கு ஒரே காரணம் உடலுறவுதான்னு நினைக்கிறான். 525 00:38:04,556 --> 00:38:07,017 என்ன, காதல் கூட இல்லையா? வெறுமனே உடலுறவா? 526 00:38:08,477 --> 00:38:09,561 நான் காதலை வெறுக்குறேன். 527 00:38:13,815 --> 00:38:15,943 நீ அன்பை வெறுக்க முடியாது, கார்லா. 528 00:38:15,943 --> 00:38:17,361 ஏன் முடியாது? 529 00:38:17,361 --> 00:38:21,031 ஒருத்தரைக் காதலிச்சு, அவரும் அப்படியே உணரணும்னு நினைக்குறது எவ்வளவு திமிரானது. 530 00:38:22,741 --> 00:38:26,703 சொர்க்கத்துல எல்லோரும் சந்தோஷமா இருப்பாங்கன்னு நினைக்கிறேன் 531 00:38:26,787 --> 00:38:29,790 ஏன்னா அங்கே யாருமே யாரையும் மீண்டும் காதலிக்கவே வேண்டாமே. 532 00:38:33,919 --> 00:38:35,462 எனவே அன்புனால பயனில்லன்னா... 533 00:38:37,714 --> 00:38:39,299 எதுக்குத் தான் இருக்கு? 534 00:38:39,383 --> 00:38:43,220 அதிகாரம். அது தான் அன்போட எதிர்பதம். 535 00:38:44,638 --> 00:38:46,098 நீ ஒரு பெரிய காட்டேரி தான். 536 00:38:55,691 --> 00:38:59,778 இருக்கட்டும், முதல்ல நீ மும்பைக்கு எதுக்காக வந்த? 537 00:39:03,407 --> 00:39:04,783 என் முதல் குற்றம். 538 00:39:11,581 --> 00:39:13,959 நீ வெளிப்படையா பேசுறதுன்னா, நானும் வெளிப்படையா பேசுறேன். 539 00:39:14,668 --> 00:39:15,877 அப்போ நீ எதுவும் சொல்ல வேண்டாம். 540 00:39:16,837 --> 00:39:18,130 எனக்குச் சொல்லணும்னு இருந்தால். 541 00:39:21,341 --> 00:39:23,218 எனக்கு யாரிடமாவது உண்மையைச் சொல்லணும்னு இருக்கலாம். 542 00:39:24,886 --> 00:39:26,346 நம்பிக்கைக்கு பாத்திரமா இருக்குறவங்க கிட்ட. 543 00:39:28,015 --> 00:39:30,058 எனக்கு நண்பரா இருக்கலாம்னு நினைக்குறவங்க கிட்ட. 544 00:39:33,687 --> 00:39:34,855 நாம நண்பர்களா? 545 00:39:36,356 --> 00:39:39,234 நான் தான் உன்னை உள்ளே விட்டுட்டேனே, புத்திசாலியா யோசிக்காம. 546 00:40:12,142 --> 00:40:13,518 நான் ஹெராயினுக்கு அடிமையா இருந்தேன். 547 00:40:17,481 --> 00:40:20,817 எனக்குப் பணம் தேவைப்பட்டது, அதனால வங்கியை கொள்ளையடிச்சேன். 548 00:40:22,945 --> 00:40:24,112 ஒரு போலீஸ் அதுல இறந்துட்டார், 549 00:40:25,447 --> 00:40:28,283 என்னால இல்ல, ஆனாலும் நான் அங்கே இருந்தேன். 550 00:40:31,036 --> 00:40:32,371 என்னை சிறையில் போட்டாங்க. 551 00:40:35,457 --> 00:40:37,042 அதுக்கு அப்புறம் நான் தப்பிச்சுட்டேன்... 552 00:40:39,419 --> 00:40:42,589 அங்கேர்ந்து ஓடி, ஓடி, இங்கே வந்து சேர்ந்தேன். 553 00:40:46,969 --> 00:40:48,011 ஏன் இங்கே வந்த? 554 00:40:49,763 --> 00:40:51,056 எனக்கு எப்போதுமே இங்கே வரணும்னு இருந்தது. 555 00:40:52,265 --> 00:40:54,226 அதுக்கு தான் அந்த பணம் பயன்பட்டிருக்கணும். 556 00:40:56,603 --> 00:40:59,189 அதனால, நானே எனக்கு சொல்லிக்கிட்டேன், எப்படியாயிருந்தாலும் போகலாம்னு. 557 00:41:01,275 --> 00:41:03,193 பாக்கி எல்லாத்தையும் விட்டுட்டு போயிடலாம்னு. 558 00:41:09,992 --> 00:41:12,286 இந்த தகவலை நீ எந்த போலீஸ் கிட்டச் சொன்னாலும் சரி. 559 00:41:12,286 --> 00:41:13,870 அதுக்கு எதுவும் பரிசு கிடைக்கும். 560 00:41:20,919 --> 00:41:22,546 எனவே, நாம இப்போ நண்பர்களாக தான் இருக்கணும். 561 00:41:24,715 --> 00:41:26,258 என் வாழ்வே உன் கையில தான் இருக்கு. 562 00:41:36,143 --> 00:41:37,519 வேண்டாம். வேண்டாம். 563 00:41:41,898 --> 00:41:44,109 இது புனித ஹில்டா'ஸ் மருத்துவமனை, மும்பையா? 564 00:41:44,109 --> 00:41:45,360 ஆமாம், இது புனித ஹில்டா'ஸ் தான். 565 00:41:45,444 --> 00:41:47,321 இது உஷாவா? -ஆமாம். 566 00:41:47,321 --> 00:41:50,115 நான் சூசன் ரீவ்ஸ், ஆக்லாந்தில் இருக்கிற பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து. 567 00:41:50,115 --> 00:41:53,160 நான் அந்த பாஸ்போர்ட் எண்ணை செக் செய்தேன். நீங்க சரியான எண்ணைத் தான் கொடுத்தீங்களா? 568 00:41:54,745 --> 00:41:59,166 ஆர் 22624-788. லின்ட்சே ஃபோர்டு. 569 00:42:00,083 --> 00:42:03,128 அவர் இன்னும் கோமாவுல தான் இருக்கார், பார்த்தால் நல்லாயில்ல, அது தான். 570 00:42:03,629 --> 00:42:07,257 அவர் குடும்பத்தைக் கண்டுபிடிச்சு, அவங்க கிட்ட அவர் இனி வீடு திரும்பமாட்டார்னு சொல்லலாமே. 571 00:42:07,341 --> 00:42:10,677 அவங்களுக்குத் தெரிந்கிருக்கலாம், அன்பே. லின்ட்சே ஃபோர்டு ஆறு வருடத்துக்கு முன்னரே இறந்துட்டார். 572 00:42:11,345 --> 00:42:14,806 நீங்க ஒரு நிமிஷம் லைன்ல இருக்கீங்கன்னா, என் சூப்ரவைசர் உங்களோட பேசணுமாம். 573 00:42:14,890 --> 00:42:15,932 நிச்சயமா. 574 00:42:21,605 --> 00:42:24,191 அவர் ஒரு இறந்தவரின் பாஸ்போர்ட்டை உபயோகிச்சிட்டு இருக்கார். 575 00:42:25,817 --> 00:42:29,112 டாம் வேயிட்ஸ் கிளோசிங் டைம் 576 00:42:53,387 --> 00:42:57,599 எனக்கு 12 வயசிருக்கும்போது, என் அப்பா தன்னையே சுட்டுக்கிட்டார். 577 00:42:59,309 --> 00:43:00,394 நான் தான் பார்த்தேன். 578 00:43:02,145 --> 00:43:04,898 போண்டியானவரின் பத்திரங்கள் மேலே அவருடைய மூளை சிதறிக்கிடந்தது. 579 00:43:08,110 --> 00:43:11,530 நான் பணக்காரியா வளர்ந்தேன், அப்போ இரண்டு விஷயங்கள் மட்டும் உறுதியா தெரிஞ்சுது. 580 00:43:13,115 --> 00:43:17,494 எனக்கு எந்த குறையும் இருக்காது, என் அப்பா என்னை தான் எல்லாத்தையும் விட நேசித்தார். 581 00:43:20,205 --> 00:43:23,292 நான் நினைத்திருந்த அந்த இரண்டு விஷயங்களுமே தப்பு. 582 00:43:25,711 --> 00:43:29,089 அதுக்கு அப்புறம் நடந்த எல்லாத்திலுமே, என் மனசுக்குள்ள ஒரு கேள்வி மட்டும் மிஞ்சியது, 583 00:43:30,632 --> 00:43:33,427 அவர் வாழ்க்கைக்கு பிடிப்பா இருக்க நான் அவருக்குப் போதவில்லையா? 584 00:43:38,890 --> 00:43:41,018 நான் அவருடைய அன்பை சாதாரணமானதாக எடுத்துக்கிட்டேன் 585 00:43:42,352 --> 00:43:44,771 மேலும், என் அனுமானத்தில், அவர் என்னைதான் ரொம்ப நேசிச்சார். 586 00:43:46,398 --> 00:43:47,441 ஆனால் யதார்த்தத்தில் அப்படி இல்லை. 587 00:43:48,233 --> 00:43:51,737 அவர் தன்னையும், தான் யார் என்பதையும், மத்தவங்க அவரை மதிக்கிறதையும் தான் நேசித்தார். 588 00:43:54,615 --> 00:43:56,033 நான் அழுதுக்கிட்டே தூங்கிய நாட்கள் பல உண்டு 589 00:43:56,033 --> 00:43:59,328 ஏதேதோ உறவுக்காரங்க வீட்டில் எல்லாம் தள்ளினாங்க, 590 00:44:00,537 --> 00:44:02,789 எனக்குள்ள நானே கேட்டுப்பேன், ஏன், அவர் எனக்காக வாழ்ந்திருக்கக்கூடாதா... 591 00:44:05,208 --> 00:44:07,461 அவர் என்னை நேசிச்சிருந்தாலும் போதுமே? 592 00:44:12,716 --> 00:44:14,092 அது உன் தப்பில்லை. 593 00:44:14,926 --> 00:44:18,597 எனக்குத் தெரியும். குற்ற உணர்வு உனக்கு தான் வரும், எனக்கில்ல. 594 00:44:21,475 --> 00:44:25,646 என் அன்பை தூக்கி எறிஞ்சதுக்கு நான் அவரை மன்னிக்கலை. 595 00:44:28,106 --> 00:44:29,733 பழி, குற்ற உணர்வைவிட இன்னும் மோசமானது. 596 00:44:32,235 --> 00:44:33,862 இன்னும் சுலபமானதும் தான். 597 00:44:36,073 --> 00:44:39,034 நீ அனைவரைப் பத்தியும் மோசமானதை எண்ணினால், யாரோடும் நெருங்கிப் பழக முடியாது. 598 00:44:41,912 --> 00:44:44,081 நீ எனக்கு என்ன வேணும்னு கேட்ட இல்ல. 599 00:44:44,081 --> 00:44:47,459 நான் இனி யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது, அது தான் எனக்கு வேணும். 600 00:44:48,335 --> 00:44:49,836 அவ்வளவுதான். 601 00:44:52,631 --> 00:44:53,715 ரொம்ப தனிமையா இருக்குமே. 602 00:44:58,053 --> 00:45:03,350 "உனக்கு தப்பு செய்தாங்க, உன் தாயும் தந்தையும். அப்படிச் செய்ய நினைக்கலை, ஆனாலும் செய்தாங்க." 603 00:45:04,643 --> 00:45:06,979 "அவங்க கிட்ட இருந்த குறைகளை எல்லாம் உன்னிடம் கொட்டினாங்க." 604 00:45:06,979 --> 00:45:09,773 "அதோட, உனக்காகவே, இன்னும் கொஞ்சம் சேர்த்து கொடுத்தாங்க." 605 00:45:16,571 --> 00:45:19,658 போன முறை நான் உன்னோட பேசிட்டு, கர்ஃப்யூவிலே வெளிய போனப்போ... 606 00:45:21,743 --> 00:45:23,203 போலீஸ்காரங்க என்னை துரத்தினாங்க. 607 00:45:25,622 --> 00:45:28,834 அப்படின்னா, நீ இங்கேயே பேசாம இருந்துடு, விரும்பினா. 608 00:45:59,698 --> 00:46:00,741 என்னால முடியாது. 609 00:46:02,367 --> 00:46:03,410 முடியும். 610 00:46:05,912 --> 00:46:07,331 அது அவ்வளவு சுலபமில்லை. 611 00:46:19,426 --> 00:46:20,802 இந்த சோஃபா உனக்குத் தான். 612 00:46:54,544 --> 00:46:56,546 கிரெகோரி டேவிட் ராபர்ட்ஸ் எழுதிய Shantaram என்ற நாவலை அடிப்படையாக் கொண்டது 613 00:48:16,543 --> 00:48:18,545 தமிழாக்கம் அகிலா குமார்