1 00:00:15,162 --> 00:00:19,333 வாங்க! நம்மிடம் உள்ள தண்ணீரை எல்லாம் பயன்படுத்துவோம்! 2 00:00:19,333 --> 00:00:22,836 சீக்கிரம்! துணிகளைக் கொண்டு தீயை அணைப்போம். 3 00:00:41,229 --> 00:00:45,567 இந்த குடிசையை எல்லாம் உடைச்சு கீழே தள்ளுங்க. அப்போ தான் தீ பரவுவதை நிறுத்த முடியும். 4 00:00:47,069 --> 00:00:50,447 எனக்கு நெருப்பே பிடிக்காது. என்னைக் கொல்லணுமா? வா, எடுத்துக்கோ! 5 00:01:20,143 --> 00:01:21,395 என்ன எரியுது? 6 00:01:21,979 --> 00:01:25,649 சாகர் வாடா தான் எரியுது. லின் அங்க தான் இருந்தான். 7 00:01:27,943 --> 00:01:29,528 நீ தான் அவன் போயாச்சுன்னு சொன்னயே. 8 00:01:32,990 --> 00:01:33,991 எனக்குக் குளிருது. 9 00:01:54,720 --> 00:01:58,307 சரி. நீ இதை சுத்தமா வச்சுக்கணும். புரியுதா? 10 00:01:58,307 --> 00:01:59,558 புரியுது. சரி. 11 00:01:59,558 --> 00:02:00,642 சரிதான். நல்லவர். 12 00:02:07,524 --> 00:02:08,899 சலாம் ஆலைக்கும், திரு. லின். 13 00:02:08,983 --> 00:02:10,444 வா ஆ்லைக்கும் அசலாம். 14 00:02:10,444 --> 00:02:12,696 நான் காசிம் அலி, இந்த இடத்துக்கு தலைவன். 15 00:02:13,572 --> 00:02:15,240 பிரபு உங்களப்பத்தி நிறைய சொல்லியிருக்கான். 16 00:02:15,907 --> 00:02:17,075 ரொம்ப நன்றி, திரு. லின். 17 00:02:18,118 --> 00:02:19,661 நீங்க செய்யற உதவிக்கு நன்றி. 18 00:02:19,745 --> 00:02:21,872 ஆமாம், இன்னும் மருந்தெல்லாம் கிடைச்சா நிறைய செய்யலாம். 19 00:02:21,872 --> 00:02:23,498 உங்களால முடியறதெல்லாம் தந்தீங்கன்னா... 20 00:02:23,582 --> 00:02:26,168 சில பேருக்கு ஆஸ்பித்திரி உதவி தேவை, மருந்துகள், ஐவிகள். 21 00:02:26,168 --> 00:02:28,712 ஆமாம், ஆனால் அதெல்லாம் எதுவும் இங்கே வராது. 22 00:02:29,421 --> 00:02:30,964 எங்களால முடிஞ்சதை நாங்க ஏற்கனவே கொடுத்துட்டோம், என்ன? 23 00:02:32,215 --> 00:02:33,592 பார்வதி? 24 00:02:34,301 --> 00:02:35,886 யாராவது லக்ஷ்மீயைப் பார்க்க முடியுமா? 25 00:02:35,886 --> 00:02:37,638 என்ன ஆச்சு? என்ன ஆச்சு, லக்ஷ்மீ? 26 00:02:37,638 --> 00:02:39,014 லின், இங்கே வாங்க! 27 00:02:41,850 --> 00:02:42,976 சரி, அவங்கள இங்க எடுத்துட்டு வாங்க. 28 00:02:43,894 --> 00:02:45,979 எனக்கு இன்னொரு மேஜை தேவை, அவங்கள படுக்க வைக்க. 29 00:02:48,982 --> 00:02:51,068 மெதுவா. நிதானம், நிதானம். 30 00:02:51,985 --> 00:02:55,238 சரி. நீங்க நல்லாயிருக்கீங்க. இல்ல, நலம் தான். 31 00:02:55,322 --> 00:02:57,574 உங்களுக்கு எதுவும் இல்ல. நல்லாயிருக்கீங்க. 32 00:03:03,038 --> 00:03:04,998 அவங்களுக்கு மூச்சுவிடறதுல சிரமம் இருக்கான்னு கேளு. 33 00:03:11,630 --> 00:03:13,632 உலோகத்தை எடுக்க அவங்கள மருத்துவமனை கூட்டிட்டுப் போகணும். 34 00:03:13,632 --> 00:03:15,509 என்ன, உன்னால அதைச் செய்ய முடியாதா? -இல்ல. முடியாது. 35 00:03:16,426 --> 00:03:18,095 அவங்க நுரையீரலை குத்திடுச்சுன்னு நினைக்கிறேன். 36 00:03:18,095 --> 00:03:19,930 அம்மா. -ரவி! 37 00:03:19,930 --> 00:03:23,058 இல்லயில்ல! அது வெளிய வந்துடுச்சு. 38 00:03:23,725 --> 00:03:24,893 ரவி! -அம்மா! 39 00:03:24,977 --> 00:03:27,229 பிரபு! அப்படி கையை வைங்க, சரியா? 40 00:03:27,229 --> 00:03:28,730 நல்ல அழுத்திப் பிடி. 41 00:03:31,942 --> 00:03:34,152 கையை அசை! கையை அசை! 42 00:03:35,946 --> 00:03:37,739 நான் அவங்கள பிடிக்கணும். சரியா? -சரி. 43 00:03:37,823 --> 00:03:39,157 அவங்கள அசைய விடாதீங்க. -சரி. 44 00:03:39,950 --> 00:03:41,827 இது அவங்களுக்கு மூச்சுவிட உதவும்னு சொல்லு. 45 00:03:43,203 --> 00:03:44,329 தொடாதே! 46 00:03:56,758 --> 00:03:59,386 எங்க அம்மாவை விட்டு விலகி நில்லுங்க! 47 00:03:59,386 --> 00:04:01,054 காசிம், எனக்கு சத்தமில்லாம இருக்கணும். 48 00:04:01,138 --> 00:04:04,391 ரவி, நிறுத்து! அவங்களுக்கு உதவ பார்க்கிறார். 49 00:04:09,604 --> 00:04:11,023 ரவி. -பரவாயில்லையா? 50 00:04:12,649 --> 00:04:14,860 ரவி. ரவி. -அம்மா! 51 00:04:14,860 --> 00:04:16,360 ரவி. 52 00:04:16,444 --> 00:04:18,155 ச்சே. நாசம். 53 00:04:18,237 --> 00:04:20,282 என்ன ஆச்சு? -அவங்களுக்கு இப்போ ஒரு டாக்டர் தேவை. 54 00:04:21,283 --> 00:04:22,326 நகருங்க! நகருங்க! 55 00:04:22,326 --> 00:04:24,745 பிரபு, அவங்கள தூக்க உதவி செய். 56 00:04:24,745 --> 00:04:27,164 மூணுல. ஒண்ணு, ரெண்டு, மூணு. 57 00:04:29,416 --> 00:04:31,627 அம்மா. -திரு. லின், அவங்கள எங்கே எடுத்துட்டுப் போறீங்க? 58 00:04:32,294 --> 00:04:34,713 அவங்களுக்கு டாக்டர் தேவை, இல்ல சீக்கிரம் இறந்துடுவாங்க. 59 00:04:36,715 --> 00:04:38,925 அப்போ அவங்க தான் நேசிக்கிறவங்களோட இருக்கும்போது அவங்க உயிர் போகட்டுமே. 60 00:04:39,009 --> 00:04:40,886 அவங்க நேசிக்கிறவங்களோட அவங்க வாழணும்னு நினைக்கிறேன், 61 00:04:40,886 --> 00:04:42,346 அவங்களோட இறக்க வேண்டாமே. பிரபு? 62 00:04:42,346 --> 00:04:45,557 இது தவறு. -மூணுல. ஒண்ணு, ரெண்டு, மூணு. 63 00:04:45,641 --> 00:04:47,059 ரவி. -லக்ஷ்மீ, பரவாயில்ல. 64 00:04:47,059 --> 00:04:49,269 உங்கள டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போறோம். -போ, போ! 65 00:04:49,353 --> 00:04:50,771 ரவி, ரவி! ரவி. 66 00:04:50,771 --> 00:04:52,940 கவலைப்படாதே, ரவி. உங்க அம்மாவுக்கு உதவி செய்யறாங்க. 67 00:04:55,317 --> 00:04:56,318 லின். 68 00:04:58,278 --> 00:05:00,030 லின், கேளு! 69 00:05:00,030 --> 00:05:02,282 அவங்க இறக்கல, பிரபு. என்னால இல்ல. 70 00:05:03,283 --> 00:05:04,576 ஹே! உதவி வேணும்! 71 00:05:06,787 --> 00:05:08,830 ஹே! நிறுத்துங்க! ஹே! 72 00:05:08,914 --> 00:05:11,583 பிரபு, பிரபு. -இங்க ஒரு பெண்ணோட உயிருக்கு ஆபத்து! 73 00:05:11,667 --> 00:05:13,001 பிரபு. பிரபு. 74 00:05:14,294 --> 00:05:16,046 ஹே. ஹே, நிறுத்து! 75 00:05:17,547 --> 00:05:19,591 லின், நிறுத்து! போதும்! 76 00:06:11,685 --> 00:06:12,936 அவங்க என்ன சொன்னாங்க? 77 00:06:13,729 --> 00:06:15,147 பரவாயில்லை. 78 00:06:15,897 --> 00:06:17,107 எனக்குத் தெரியணும். 79 00:06:18,900 --> 00:06:20,277 ரவியைக் கேட்டாங்க. 80 00:06:36,793 --> 00:06:38,211 அவங்க சீக்கிரம் திரும்பிடுவாங்க. 81 00:06:41,381 --> 00:06:43,550 எவ்வளவு குடிசைகள் எரிஞ்சுது? 82 00:06:43,634 --> 00:06:46,762 முப்பது. என்னோடதையும் சேர்த்து. 83 00:06:49,848 --> 00:06:51,058 அம்மா! 84 00:07:47,447 --> 00:07:50,617 நான் போய் கொஞ்சம் சாப்பாடும், டீயும் வாங்கிட்டு வர்றேன், சரியா? 85 00:07:50,701 --> 00:07:52,202 எனக்குப் பசிக்கலை. 86 00:07:52,869 --> 00:07:53,870 லின். 87 00:07:55,580 --> 00:07:57,833 நீ எது ரொம்ப நல்லதோ அதை செய்ய முயற்சி பண்ணின. தெரியும். அதனால நீ... 88 00:07:57,833 --> 00:07:59,209 இது என்னோட தப்புதான். 89 00:08:01,837 --> 00:08:04,006 பிரபு, நான் இங்கே இருக்கலைன்னா, அந்த தீ விபத்தே நடந்திருக்காது... 90 00:08:04,006 --> 00:08:05,841 லின், பிளீஸ். பிளீஸ். 91 00:08:09,011 --> 00:08:11,138 தீ விபத்துகள், இங்க நடக்குறது உண்டு. 92 00:08:12,848 --> 00:08:16,226 லக்ஷ்மீ போனதுல எனக்கு மட்டும் துக்கம் இல்லன்னு நினைக்கிறயா, என்ன? 93 00:08:17,811 --> 00:08:18,937 இந்த முறை, நாம அதிர்ஷ்டம் செய்திருக்கோம். 94 00:08:19,021 --> 00:08:22,190 போன வருஷம் இதைவிட இன்னும் பெரிய தீ விபத்து நடந்தது, இன்னும் நிறைய குடிசைகள் எரிஞ்சுது. 95 00:08:22,274 --> 00:08:23,817 20க்கும் மேலே ஜனங்க இறந்தாங்க. 96 00:08:27,863 --> 00:08:29,281 நான் சாப்பாடு கொண்டு வர்றேன், சரியா? 97 00:09:00,771 --> 00:09:02,564 கீழேப் போடு... ச்சே. ச்சே. 98 00:09:02,648 --> 00:09:04,816 கிளிப்போர்டை கீழேப் போட்டுட்டு, கைகள மேலே போடுங்க. 99 00:09:04,900 --> 00:09:06,401 சீக்கிரம் ஆகட்டும். 100 00:09:08,695 --> 00:09:10,781 எந்த அலார பட்டன்களையும் தொட வேண்டாம், சரியா? 101 00:09:10,781 --> 00:09:12,824 பெண்களே, அந்த பைகளை நிரப்புறீங்களா, பிளீஸ்? 102 00:09:12,908 --> 00:09:15,327 எல்லாத்துக்கும் இன்சூரன்ஸ் இருக்கு. அதைப் பத்தி உண்மையில் கவலை வேண்டாம். 103 00:09:15,327 --> 00:09:16,995 அவன் சொல்றப்படி செய்யுங்க. 104 00:09:17,579 --> 00:09:20,165 பிளீஸ்... லாரா. -சரி, சரி. 105 00:09:20,165 --> 00:09:21,959 சோம்பேறிக் கழுதைகளா, ஏன் வேலையைத் தேடிக்க மாட்டேன்றீங்க? 106 00:09:21,959 --> 00:09:25,504 ஹே! மன்னிக்கணும், இது தான் எங்க வேலை, தடிக் கழுதையே. 107 00:09:26,129 --> 00:09:27,839 எங்க வேலையை நாங்க செய்ய தடங்கலா இருக்காதே, சரியா? 108 00:09:27,923 --> 00:09:31,301 வா, அன்பே. எல்லாம் நல்லது தான். நீ இந்த பையை நிரப்ப வேண்டும். 109 00:09:31,385 --> 00:09:32,970 அவங்க மிரண்டு இருப்பது தெரியலயா? 110 00:09:32,970 --> 00:09:34,596 அந்த பையை நிரப்பு! 111 00:09:42,854 --> 00:09:45,148 வழி விடு! வழி விடு! நகரு! நகரு! 112 00:09:51,071 --> 00:09:52,364 பார்த்துப் போ. 113 00:09:52,364 --> 00:09:54,283 மன்னிச்சிடு, நண்பா. என் தப்புதான். 114 00:09:57,369 --> 00:10:00,080 ஹே. என்னை விடு. 115 00:10:00,080 --> 00:10:01,290 அந்த எழவு துப்பாக்கியைக் கீழே போடு. 116 00:10:02,374 --> 00:10:04,293 என்னை விடு! மூர்க்கனே. துப்பாக்கிய கீழே போடு! 117 00:10:05,085 --> 00:10:06,420 என்னை விட்டு ஒழிஞ்சு போ. 118 00:10:06,420 --> 00:10:08,714 துப்பாக்கிய கீழே போடு! போடு! -சரி. சரி! 119 00:10:15,595 --> 00:10:16,722 நீ என்ன செய்திருக்க? 120 00:10:22,102 --> 00:10:23,395 நகரு. 121 00:10:24,062 --> 00:10:25,147 டேல். 122 00:10:27,190 --> 00:10:28,567 டேல், போ. 123 00:10:29,109 --> 00:10:31,111 உடனே. போகலாம் வா. 124 00:10:32,112 --> 00:10:32,988 டேல். 125 00:10:42,748 --> 00:10:44,666 யாராவது, ஆம்புலென்ஸைக் கூப்பிடுங்க. 126 00:10:46,126 --> 00:10:48,754 சரி. ஹே, ஹே. பொறுங்க. ஹே. 127 00:10:48,754 --> 00:10:51,006 உனக்கு எதுவும் இல்ல, நண்பா. உனக்கு ஒண்ணும் இல்ல. 128 00:10:51,673 --> 00:10:53,258 தாக்குப் பிடி. 129 00:10:53,342 --> 00:10:54,760 அவரை விட்டு தள்ளிப் போ! 130 00:11:33,799 --> 00:11:35,467 சலாம் ஆலைக்கும், வலீத்பாய். 131 00:11:36,259 --> 00:11:37,803 ஆலைக்கும் அசலாம், காதர்பாய். 132 00:11:39,137 --> 00:11:41,139 நல்ல இடத்தை தேர்ந்து எடுத்திருக்கீங்க. 133 00:11:42,599 --> 00:11:46,895 ஒரு காலத்துல இங்க எவ்வளவு பேர் பிழைப்பு நடத்துனாங்கன்னு நினைக்குறப்போ வருத்தமா இருக்கு. 134 00:11:46,979 --> 00:11:49,481 அட, எல்லாத்துக்குமே ஒரு முடிவு காலம்னு ஒண்ணு இருக்கு, இல்லையா? 135 00:11:50,065 --> 00:11:51,275 அதோடு எல்லோருக்கும் கூட. 136 00:11:52,484 --> 00:11:55,988 இப்போ, நீங்க பேசணும்னு சொன்னீங்க. இங்க தான் அதை செய்ய முடியும். 137 00:12:06,999 --> 00:12:08,834 ருஜுல் ஆடேகர் இறந்து விட்டார். 138 00:12:12,170 --> 00:12:15,841 உங்க இடத்துல இருந்திருந்தா, நானும் அதைத்தான் செய்திருப்பேன். 139 00:12:16,675 --> 00:12:18,927 எல்லா நிறுவனங்களும் சமாதானமா போறாங்க. 140 00:12:19,011 --> 00:12:21,430 எங்க ஆளுங்க, வீதியில ஒருத்தரை ஒருத்தர் சுட்டுகிட்டு, கொலை செய்துட்டு இல்ல, 141 00:12:21,430 --> 00:12:23,015 அதனால எல்லோருமே சந்தோஷமா இருக்கோம். 142 00:12:23,015 --> 00:12:25,434 களைச்சு போய், இருக்கிறபடி இருக்கட்டும்னு நினைக்கிற, வயசான நபர்களால, 143 00:12:25,434 --> 00:12:26,768 நிறுவனங்கள் சமாதானமா போறாங்க. 144 00:12:26,852 --> 00:12:28,228 உன்னோடதைத் தவிரவா? 145 00:12:28,312 --> 00:12:29,479 என்னோடதைத் தவிர. 146 00:12:30,731 --> 00:12:33,692 நீங்க வலிமையை இழந்துட்டீங்கன்னு ருஜுல் நம்பினான், இல்ல? 147 00:12:34,401 --> 00:12:37,613 அது தான் சரின்னு நம்புறதால, யாரும் வலிமை இழந்தவங்களா ஆகிடமாட்டாங்க, 148 00:12:37,613 --> 00:12:41,700 இல்லன்னா எனக்கு பதிலா நீங்க தான் கொலாபால இன்னும் பாஸ்போர்ட் சந்தையை நடத்திட்டு இருந்திருப்பீங்க. 149 00:12:42,367 --> 00:12:44,161 அது தான் விஷயமா, வலீத்? 150 00:12:45,287 --> 00:12:48,540 உங்க அடிபட்ட கௌரவத்தின் காரணமாக ஒரு சண்டையை உருவாக்க விரும்புறீங்களா? 151 00:12:48,624 --> 00:12:51,335 நான் எதையும் உருவாக்கல. இது பிசினஸ், அப்பா. 152 00:12:52,252 --> 00:12:57,382 சாகர் வாடாவோட விலை அதிகம். எனவே, நான் ருஜுல் கிட்ட இன்னும் நல்ல பேரமா தந்தேன். 153 00:12:58,133 --> 00:13:00,302 நான் சாகர் வாடாவை இழக்க மாட்டேன். 154 00:13:01,053 --> 00:13:02,054 அது என்ன மிரட்டலா? 155 00:13:02,054 --> 00:13:05,140 வெறுமனே உண்மையைச் சொன்னேன். 156 00:13:06,642 --> 00:13:08,226 சித்தப்பா, உங்களுக்கு வேணும்னா அப்படி இருக்கலாம், என்ன? 157 00:13:09,269 --> 00:13:13,357 அதாவது, ஒருவர் தன் மனைவி அழகானவள்னு சொல்லலாம், 158 00:13:13,357 --> 00:13:15,192 ஆனால் இன்னொருத்தனுக்கு அவள் பன்னியாத் தெரியலாம். 159 00:13:16,193 --> 00:13:19,947 அதாவது, உண்மை என்னன்னா, எங்கிட்ட உங்கள விட ஆள்பலமும் பணபலமும் இருக்கு. 160 00:13:19,947 --> 00:13:23,575 விபச்சாரமும், போதை மருந்தும் தான் எதிர்காலத்துல நல்ல பணம் தரும்னு நான் நினைக்கிறேன், 161 00:13:24,409 --> 00:13:27,037 இருந்தாலும், நீங்க இன்னும் பழங்காலத்துலேயே இருக்க தீர்மானிச்சிருக்கீங்க. 162 00:13:28,705 --> 00:13:30,624 மக்கள் என்ன விரும்புறாங்களோ, அதை நீங்க கொடுக்கணும், காதர்பாய். 163 00:13:30,624 --> 00:13:32,834 இல்லன்னா, நீங்க காலாவதி ஆகிடுவீங்க. 164 00:13:40,509 --> 00:13:44,262 என் சாகர் வாடாவோட வாசல்ல உங்களுக்காக நான் ஒரு பெரிய சிலை எழுப்பறேன், என்ன? 165 00:13:48,976 --> 00:13:52,479 உங்க கூட பேசுறது எப்போதுமே சந்தோஷம் தான், வலீத்பாய். 166 00:14:18,964 --> 00:14:22,467 நீ முழிச்சிருக்கயா? நல்லது தான். வா. நீ பார்க்க வேண்டியது ஒண்ணு இருக்கு, பாஸ். 167 00:14:22,551 --> 00:14:24,344 சரி. ஒரு நிமிஷம் இரு, வர்றேன். 168 00:14:25,262 --> 00:14:26,596 வாயேன். 169 00:14:38,900 --> 00:14:39,901 ஹே. 170 00:14:40,861 --> 00:14:42,070 அவங்க எல்லோரும் என்ன செய்யறாங்க? 171 00:14:43,864 --> 00:14:45,115 அவங்க எல்லோரும் உன் நோயாளிங்க. 172 00:14:46,450 --> 00:14:47,701 நீ என்ன பேசுற? 173 00:14:48,702 --> 00:14:50,954 நேத்து இரவு நீ சிகிச்சை செய்ததைப் பத்தி எல்லோருக்கும் தெரியும், 174 00:14:51,038 --> 00:14:52,414 அதனால இப்போ உன்னைப் பார்க்க காத்துட்டு இருக்காங்க. 175 00:14:52,414 --> 00:14:54,499 இல்ல. இல்ல. நான் இல்ல... 176 00:14:55,334 --> 00:14:57,794 லின், காத்திருப்பாங்க... பரவாயில்ல, லின்பாபா. -என்னால முடியாது. 177 00:14:57,878 --> 00:15:00,797 ஏற்கனவே ஒரு மணி நேரமா காத்திட்டு இருக்காங்க. நீ தூங்கணும்னு சொல்லியிருந்தேன். 178 00:15:00,881 --> 00:15:01,882 பிரபு. 179 00:15:03,717 --> 00:15:06,428 நீ இங்க இல்லன்னாக்கூட காத்திட்டு இருப்பாங்க, 180 00:15:06,428 --> 00:15:08,305 ஆனால் அதுல பலன் இருக்காது. 181 00:15:08,305 --> 00:15:09,598 அது மனசுக்கு வருத்தமா இருக்கும் இல்ல. 182 00:15:09,598 --> 00:15:11,892 ஆனால் ஒரு நம்பிக்கையோட காத்திருப்பது, அது வேற, இல்ல? 183 00:15:11,892 --> 00:15:15,604 என்னால அதெல்லாம் செய்ய முடியாது. பாரு, நான் ஒரு டாக்டர் இல்ல. 184 00:15:17,272 --> 00:15:19,358 ஒரு மோசமான டாக்டர் கூட, டாக்டரே இல்லங்குறதோட ஒரு படி மேலே தானே. 185 00:15:20,067 --> 00:15:23,153 நீ மோசம்னு நான் சொல்ல வரலை, மோசமா இருந்தாலும் பரவாயில்லன்னு சொல்றேன் 186 00:15:23,153 --> 00:15:25,572 லின், பிளீஸ். 187 00:15:27,115 --> 00:15:29,785 பிரபு. -லக்ஷ்மீ எப்படியானாலும் இறந்திருப்பா. 188 00:15:30,494 --> 00:15:32,120 அது நமக்கு துக்கம் தான். 189 00:15:33,413 --> 00:15:35,332 ஆனால் சில சமயம் அப்படித்தான் நடக்கும். 190 00:15:39,628 --> 00:15:42,089 எப்படியிருக்க, பிரபு? -பரவாயில்ல. 191 00:15:42,089 --> 00:15:43,548 திரு. லின். 192 00:15:43,632 --> 00:15:47,135 பாருங்க, நேத்து இரவு நடந்ததுக்கு வருந்தறேன். நீங்க சொன்னதுதான் சரி. நான் கேட்டிருக்கணும். 193 00:15:47,219 --> 00:15:50,055 காசிம், அவர் நமக்கு உதவுவாரா? 194 00:16:04,611 --> 00:16:06,655 என்னதான் இவங்க எனக்கு உதவியெல்லாம் 195 00:16:06,655 --> 00:16:10,701 செய்திருந்தாலும், முன்னாடியோட இப்போ, கார்லாவின் பண உதவியால 196 00:16:10,701 --> 00:16:13,370 கிடைக்கும் ரெண்டாவது வாய்ப்புல, மும்பையைவிட்டே ஓடிடணும்னு தோணுச்சு. 197 00:16:13,996 --> 00:16:15,622 அது நல்லதாக இருக்கும், இல்ல. 198 00:16:15,706 --> 00:16:16,873 இறைவன் அருளால. 199 00:16:31,972 --> 00:16:34,516 இது தானம் செய்யறதுக்கு ரொம்ப அதிகம், லின்பாபா. 200 00:16:37,060 --> 00:16:39,146 ஆமாம், சரி, எனக்கு நிறைய பொருட்கள் தேவையா இருக்கும். 201 00:16:39,646 --> 00:16:40,897 ஆனால் நீங்க ஏன் இதைச் செய்யணும்? 202 00:16:41,565 --> 00:16:42,774 என் சொந்தக் காரணங்கள் இருக்கு. 203 00:16:44,151 --> 00:16:47,154 இருக்கட்டும், வாங்கிக்கோங்க. எரிஞ்ச வீடுகளை சரிசெய்யுங்க. 204 00:16:49,072 --> 00:16:50,198 பிளீஸ். 205 00:17:03,545 --> 00:17:05,963 ஒவ்வொரு பைசாவும் நல்ல வகையில செலவாகுற உறுதி செய்யறேன். 206 00:17:09,259 --> 00:17:12,386 சரி தான்! இன்னும் இரண்டே நிமிடங்கள். சரியா? 207 00:17:14,431 --> 00:17:15,473 சரி. 208 00:17:30,656 --> 00:17:32,407 இதுல சிலதை போட்டுக்கோ, சரியா? 209 00:17:32,491 --> 00:17:33,825 கண்டிப்பாக அதுதான் நான். 210 00:17:34,910 --> 00:17:39,081 என் பயிற்சியோட உள்ள எவனும் இந்த மாதிரி, சேரியில குற்றத்தினால் பலவந்தமா தள்ளப்பட்டிருக்க மாட்டாங்க. 211 00:17:42,042 --> 00:17:44,670 இன்னொரு குற்றவாளிக்கு என் பயிற்சி கடைத்திருக்காது. 212 00:17:46,338 --> 00:17:49,591 எனக்கு இதில் உள்ள வேடிக்கை புரியவில்லை, விதி என்னை சிரிக்கவும் வைக்கவில்லை. 213 00:17:50,968 --> 00:17:52,803 ஆனால் என்னால் விட்டுப் போகமுடியாது என்பது மட்டும் தெரிந்தது. 214 00:18:03,689 --> 00:18:05,649 இன்னும் 20 நோயாளிகள் பாக்கி இருக்காங்க. 215 00:18:05,649 --> 00:18:07,401 சரியா? வெளியே வா. சரி. 216 00:18:10,904 --> 00:18:12,698 விடு. விடு. 217 00:18:12,698 --> 00:18:13,782 ஹை. 218 00:18:35,721 --> 00:18:36,722 நீ சாப்பிடணும். 219 00:18:47,024 --> 00:18:48,400 சாதனையாளர்களின் பிரேக்ஃபாஸ்ட். 220 00:18:48,400 --> 00:18:51,069 சில சமயங்கள், ரொம்ப குழந்தைத்தனமா நடந்துக்குற. 221 00:18:51,570 --> 00:18:53,614 நீ போதைப் பழக்கத்தை விடுறதுக்கு உதவி செய்ததனால உனக்கு என் மேலே கோபமா? 222 00:18:56,408 --> 00:18:57,784 நீ தான் கோபமா இருக்க. 223 00:18:58,910 --> 00:19:01,747 என்னைப் பார்த்துக்கறது உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா? 224 00:19:01,747 --> 00:19:03,874 நீயே உன்னை பார்த்துக்கணும், லீசா. 225 00:19:03,874 --> 00:19:06,293 ஆனால் நீ அதை செய்ய மாட்ட, ஏன்னா உனக்கு அப்படி இருப்பதுல விருப்பம், 226 00:19:06,293 --> 00:19:09,755 ஏன்னா நீ கற்பனை செய்திருக்குற உலகத்துல அது உன்னை மையமா காட்டுது. 227 00:19:09,755 --> 00:19:11,965 சிலர் உன் மேலே அக்கறையா இருப்பது உன்னை நேசிப்பதால. 228 00:19:12,049 --> 00:19:13,425 அதுல தப்பில்ல. 229 00:19:14,885 --> 00:19:17,971 அவங்க இல்லாம போறபோது, என்ன ஆகும்? 230 00:19:19,598 --> 00:19:21,808 அவங்க விட்டுட்டு போயிட்டா, நீ வேற யாரைப் பத்தியும் அக்கறை 231 00:19:21,892 --> 00:19:22,893 இல்லாம இருக்க முடியாது. 232 00:19:22,893 --> 00:19:25,604 என்னால அப்படிச் செய்ய முடியாது, லீசா. இப்போ முடியாது. 233 00:19:27,230 --> 00:19:30,442 இவ்வளவுக்கும் நடுவுல, நான் உன்னோட சண்டைப் போட விரும்பலை. 234 00:19:34,196 --> 00:19:35,197 என்னை மன்னிச்சிடு. 235 00:19:38,992 --> 00:19:42,704 நீ சரியாத்தான் சொல்ற. நான் ஒரு சுயநலவாதியா, மோசமானவளா நடந்துக்கிட்டேன். 236 00:19:45,666 --> 00:19:46,750 இது என்ன? 237 00:19:50,712 --> 00:19:56,134 நேத்திக்கு, நாம பலவீனமா இருக்கக்கூடாதுன்னு மட்டும் தான் எனக்குத் தோணிச்சு. 238 00:19:58,428 --> 00:20:02,975 ஆனால் இப்போ, நான் கண்ணை மூடினா, ருஜுலோட இறந்த கோலம் தான் கண்ணுல நிக்குது. 239 00:20:02,975 --> 00:20:04,267 காதருக்குத் தெரியும். 240 00:20:05,686 --> 00:20:08,063 அவர் என்னை காப்பாத்த பார்த்தார், அதையே அதிகமா செய்யவும், 241 00:20:09,606 --> 00:20:12,526 தனியா சமாளிச்சு காட்டணுங்கிற வெறி எனக்கு அதிகமாயிடுச்சு. 242 00:20:14,069 --> 00:20:16,113 நீ எதையும் நிரூபிக்க வேண்டியதில்ல, கார்லா. 243 00:20:16,863 --> 00:20:18,657 நான் அதைச் செய்யலன்னா, டீல் படுத்துடும். 244 00:20:18,657 --> 00:20:20,117 அது ரொம்ப மோசமான விஷயமா? 245 00:20:22,452 --> 00:20:25,080 எப்போ நீ கடைசியா, எல்லாத்தையும் மறந்துட்டு சிரிச்சன்னு நினைவிருக்கா? 246 00:20:26,999 --> 00:20:28,208 உண்மையா சந்தோஷமா? 247 00:20:31,795 --> 00:20:33,255 நாம ரெண்டு பேரும் சேர்ந்தே கஷ்டப்படலாம். 248 00:20:35,173 --> 00:20:38,760 நான் இதை சாப்பிட்டு, உனக்குத் தொந்தரவு தராம இருப்பேன்னு வாக்குத் தரேன், 249 00:20:38,844 --> 00:20:42,723 நீ மட்டும் எங்கூட இங்கேயே இருந்து, பழைய மாதிரி நாம இசையெல்லாம் கேட்டுட்டு 250 00:20:42,723 --> 00:20:44,516 மதுவும், போதையும் தீரும் வரை ஜாலியா இருப்போம். 251 00:20:47,894 --> 00:20:48,937 சரி. 252 00:21:02,618 --> 00:21:04,953 ஓய்வு எடுக்கணுமா? அவங்கள நாளைக்கு வரச் சொல்றேன். 253 00:21:05,037 --> 00:21:06,413 இல்ல, நான் நல்லாயிருக்கேன். 254 00:21:08,790 --> 00:21:11,585 நில்லுங்க! டாக்டர். லின் ஒரு இடைவெளிக்குப் பின் பார்ப்பார். 255 00:21:15,714 --> 00:21:17,758 இது ஒரு நன்றிக் கடன், டாக்டர். லின். 256 00:21:19,009 --> 00:21:22,054 சரி, உண்மையில இது பிரபுவோட யோசனை தான். 257 00:21:22,054 --> 00:21:23,597 அது என் யோசனை. 258 00:21:24,473 --> 00:21:27,184 காசிம் அலியோட குடிசையை உபயோகிக்க அவரை சம்மதிக்க வச்சான். 259 00:21:27,184 --> 00:21:29,227 நான் தான் காசிம் அலியை சம்மதிக்க வச்சேன். 260 00:21:29,936 --> 00:21:32,648 பிரபு தான் எல்லா பொருட்களையும் ஏற்பாடு, செய்து கொடுத்தான். 261 00:21:32,648 --> 00:21:33,857 நான் பொருட்களை ஏற்பாடு செய்தேன். 262 00:21:35,776 --> 00:21:38,195 பிரபு, நீ ரொம்ப நல்ல விஷயத்தை செய்திருக்க. 263 00:21:48,497 --> 00:21:50,582 நோயாளிகளோட பேச உதவி வேணுமா? 264 00:21:51,917 --> 00:21:53,543 இல்ல, வேண்டாம். போதும்னு நினைக்கிறேன். 265 00:21:55,170 --> 00:21:56,171 ஆனால் இது ரொம்ப நல்லாயிருக்கு. 266 00:22:01,885 --> 00:22:05,347 ரொம்ப நல்லாயிருக்கு இல்ல, லின்பாபா? ரொம்ப ருசியா, மிருதுவா போச்சு, 267 00:22:05,931 --> 00:22:07,391 நீ அவள அனுப்புற வரைக்கும். பார்வதி! 268 00:22:11,603 --> 00:22:12,813 நன்றி, என்ன? 269 00:22:14,648 --> 00:22:17,985 உன் டிரேயை நான் வேணும்னா திரும்பிக் கொண்டு வர்றேன். 270 00:22:17,985 --> 00:22:19,069 டீ கடைக்கே. 271 00:22:22,239 --> 00:22:23,573 நீ அங்க இருப்பயா? 272 00:22:25,450 --> 00:22:26,910 நான் அங்க தான் இருப்பேன். 273 00:22:41,216 --> 00:22:44,594 சரிதான், எல்லோரும் என்ன வேடிக்கைப் பார்க்கறீங்க? 274 00:22:45,679 --> 00:22:46,763 வா போகலாம். 275 00:22:49,057 --> 00:22:50,517 நீ பார்த்து சிரிக்கறயா, ஹம்? 276 00:22:51,184 --> 00:22:52,602 ஆஹா, ஆஹா. 277 00:23:15,083 --> 00:23:18,170 முன் பதிவு இருந்தா தான் பேலஸுல அனுமதி. 278 00:23:18,170 --> 00:23:20,297 நாங்க அனுமதிக்கறதால தான் அந்த பேலஸே நடக்குது. 279 00:23:20,881 --> 00:23:22,633 ஃஜூகிட்ட நாங்க வந்திருக்கோம்னு சொல்லு. போ. 280 00:23:24,801 --> 00:23:28,180 உன்னோட நடவடிக்கைக்கெல்லாம் அடிபணிய நான் ஒண்ணும் ஒரு அபலை பெண் இல்ல, பத்மா. 281 00:23:28,930 --> 00:23:31,308 நீங்க எதுவும் ஆயுதங்கள் வச்சிருக்கீங்கன்னா அதை இங்கே வச்சிடணும். 282 00:23:31,892 --> 00:23:33,685 இல்ல, மாட்டேன். 283 00:23:50,994 --> 00:23:55,791 இது எனக்குக் கிடைத்த கௌரவம், காதர்பாய். நான் உங்களுக்கு சாப்பிட எதுவும் தரலாமா? 284 00:23:55,791 --> 00:23:58,794 சமீபத்துல, ருஜுல் ஆடேகரோட, முக்கியமான தருமத்துல இருந்தேன். 285 00:23:59,378 --> 00:24:02,381 இன்னிக்கு காலையில, வலீத் ஷாவோட இருந்தேன். 286 00:24:03,298 --> 00:24:04,925 இப்போ, உன்னைப் பராக்க வந்திருக்கேன். 287 00:24:05,676 --> 00:24:08,095 நீ செய்யற பிசினஸில் எனக்கு உடன்பாடு இல்ல, 288 00:24:08,095 --> 00:24:10,639 இருந்தாலும் அந்த பிசினஸை தவிர்க்க முடியாதுன்னு எனக்குப் புரியுது. 289 00:24:10,639 --> 00:24:13,141 எனவே, நீ இங்க வந்து பிழைக்க அனுமதிக்கப் பட்டிருக்க. 290 00:24:14,309 --> 00:24:18,855 ஆனால், நீ தழைக்க உனக்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. பாரபட்சம் இல்லாமை. 291 00:24:22,442 --> 00:24:24,820 நான் தவறு செய்துட்டேன், காதர்பாய். 292 00:24:26,321 --> 00:24:27,990 என்னால மன்னிப்புதான் கேட்க முடியும். 293 00:24:29,700 --> 00:24:31,994 முதல்ல, உங்களுக்குத் தெரியும்னு நினைச்சேன். 294 00:24:32,661 --> 00:24:36,081 விஷயம் அப்படியில்லைன்னு தெரிஞ்சப்போ, அது கைமீறி போயிடுச்சு. 295 00:24:38,250 --> 00:24:41,795 நீங்க சொல்லறதுப் போல, மும்பைல என் நிலை ரொம்ப பலவீனம்தான்... 296 00:24:41,795 --> 00:24:44,506 பாதிக்கப்பட்டது போல நடிப்பது உங்களுக்குப் பொருந்தல, மேடம். 297 00:24:45,924 --> 00:24:50,012 நீ வப்பாடியாவும், விபச்சாரியாவும் இருந்தப்போ இன்னும் நல்லா நடிச்சிருப்பன்னு நினைக்கிறேன். 298 00:24:51,513 --> 00:24:54,850 நான் முன்னாடி சொன்னதுப் போல, தப்பு செய்துட்டேன். 299 00:24:56,893 --> 00:24:59,104 அதுக்கான தண்டனை சாவுன்னா, 300 00:24:59,104 --> 00:25:03,317 நீங்க அதை பார்க்க இங்க வந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். 301 00:25:03,900 --> 00:25:09,531 பிணமாயிருந்தா, நீ எனக்கு பயன்படமாட்ட. உயிரோட இருந்தா தான், நீ எனக்கு உபயோகம். 302 00:25:10,782 --> 00:25:14,369 நான் இந்த இடத்தை விட்டு போறப்போ, எனக்கு நீ பட்டிருக்குற கடனுக்கு நஷ்ட ஈடா, உன் உயிரையும் 303 00:25:14,953 --> 00:25:17,372 என்னோட எடுத்துட்டுப் போவேன், புரிஞ்சிக்கோ. 304 00:25:17,456 --> 00:25:20,292 அதோட, நான் உன்னை எதுவும் செய்யச் சொன்னா, நீ செய்யணும், 305 00:25:20,292 --> 00:25:23,003 இல்லன்னா இந்த இடமே உன்னுடைய உன் ஈமத்தீயா எரியும். 306 00:25:28,800 --> 00:25:30,052 உங்களுக்கு எப்படித் தெரியும்? 307 00:25:31,094 --> 00:25:32,846 கார்லா சாரனென் மூலமா? 308 00:25:32,846 --> 00:25:33,930 யாரு? 309 00:25:34,723 --> 00:25:36,016 எனக்கு அப்படி ஒரு பேரே தெரியாது. 310 00:25:38,393 --> 00:25:40,228 ருஜுல் என்னைச் சேர்ந்தவன். 311 00:25:41,396 --> 00:25:43,440 அவனைவிட அவனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். 312 00:25:43,440 --> 00:25:47,319 எங்க போறான், என்ன செய்யறான், யாரைப் பார்க்கறான்னு அவனைப் பின்தொடர்ந்து தெரிஞ்சுகிட்டேன். 313 00:25:48,028 --> 00:25:49,696 அவன் முட்டாள், வேற மாதிரி நினைச்சான். 314 00:25:49,780 --> 00:25:52,157 அவனோட முட்டாள்தனம் தான் அவனுடைய சாவுக்குக் காரணம். 315 00:25:54,743 --> 00:25:56,578 நீங்க முட்டாளா இருக்கமாட்டீங்கன்னு நம்பறேன், மேடம். 316 00:26:34,658 --> 00:26:39,162 லின்பாபா, நாங்க இப்போ லக்ஷ்மீயோட இறுதி சடங்குக்காக சிதையைச் செய்யப்போறோம் 317 00:26:39,246 --> 00:26:40,831 நீயும் சேர்ந்துக்கலாம். 318 00:26:40,831 --> 00:26:43,750 மன்னிச்சிடு, ஜானி. நான் அங்க இருக்கறதுக்கான தகுதி இல்ல. 319 00:26:45,419 --> 00:26:47,254 நீ உன் மேலேயே பழிய சுமத்திக்கறன்னு பிரபு சொன்னான். 320 00:26:49,298 --> 00:26:50,757 பிரபு அதிகமாப் பேசுறான். 321 00:26:52,926 --> 00:26:53,927 ஆமாம். 322 00:27:35,719 --> 00:27:40,057 காதர்பாய் இன்னிக்கு உன் வாழ்வை காப்பாத்தினார். அது நல்லதுதானா? 323 00:27:40,057 --> 00:27:43,101 என் உயிரை இன்னொருத்தர் எடுக்கவோ கொடுக்கவோ முடியாது. 324 00:27:43,810 --> 00:27:46,355 அவங்களப் போலவே எனக்கும் அவங்களுடைய பிசினஸை நல்லா தெரியும். 325 00:27:46,355 --> 00:27:49,191 இந்த பாய்கள் எல்லாம்... நாசமாப் போகட்டும். 326 00:27:50,359 --> 00:27:52,611 இப்போ அக்காக்களுக்குதான் நல்ல காலம், பத்மா. 327 00:27:57,824 --> 00:27:59,826 நானும் நீயும், ஒரு டீல் போட்டிருந்தோம். 328 00:28:00,535 --> 00:28:03,288 நீ லீசாவைப் பத்தி சொல்றன்னா, என் பாகத்தை நான் செய்துட்டேன். 329 00:28:03,372 --> 00:28:04,456 லீசா போயிட்டா. 330 00:28:05,415 --> 00:28:07,125 அது எப்படி என் தவறாகும், எனக்குத் தெரியலையே. 331 00:28:07,960 --> 00:28:10,003 அப்போ நீ ஏன் பயப்படற, மரிஃஜிசோ? 332 00:28:10,754 --> 00:28:11,755 நான் பயப்படலை. 333 00:28:11,755 --> 00:28:13,256 நீ பயப்படறன்னு தான் தோணுது. 334 00:28:16,677 --> 00:28:21,765 வலுவிழந்து, பயத்தால நடுங்குறபோது மட்டும் தான் ஆண்களும் பெண்களும் 335 00:28:22,265 --> 00:28:24,476 ஒரே மாதிரி இருப்பாங்க. 336 00:28:26,019 --> 00:28:29,314 ஆனால் ஆண்களைவிட பெண்கள் அதை அதிகமா உணரவேண்டிய சூழ்நிலையில இருக்காங்க. 337 00:28:30,274 --> 00:28:32,859 வழக்கமா, ஆண்கள் தான் அதை செய்யறதும். 338 00:28:33,443 --> 00:28:34,444 நான் ஏன் இங்கே வந்திருக்கேன்? 339 00:28:36,571 --> 00:28:38,907 என் மன்னிப்பைப் பெற உனக்கு ஒரு வாய்ப்பு தரேன். 340 00:28:40,951 --> 00:28:41,952 கேட்டுட்டு இருக்கேன். 341 00:28:43,120 --> 00:28:46,123 கொலாபாவிலே நீ எனக்காக பிரௌன் சுகரை விற்கணும். 342 00:28:49,001 --> 00:28:51,086 கொலாபா காதர்பாயோட ஆதிக்கத்துல இருக்கு. 343 00:28:51,878 --> 00:28:53,672 ஆனால் அவர் அங்க ஹெராயின் விற்கறதில்லை. 344 00:28:54,256 --> 00:28:55,841 வேறு யாரும் அங்கே விற்கறதும் இல்ல. 345 00:28:55,841 --> 00:28:58,593 நான் அவருக்கு கடன்பட்டவள் இல்ல. நீ எப்படி? 346 00:28:58,677 --> 00:28:59,761 நானா? 347 00:29:01,179 --> 00:29:02,431 நான் யாருக்கும் கடன்படல. 348 00:29:03,640 --> 00:29:05,017 ஏதோ, அது நேர்மையாவாது இருக்கே. 349 00:29:06,601 --> 00:29:08,020 என் விதிகள் ரொம்ப எளிது. 350 00:29:08,603 --> 00:29:12,524 என் பெயர் வரவே கூடாது. லாபத்துல நீ 20 சதம் வச்சுக்கோ. 351 00:29:12,608 --> 00:29:14,860 நாற்பது. எனக்கு தானே எல்லா ஆபத்தும். 352 00:29:14,860 --> 00:29:17,321 உன்னோட நான் பேரம் பேச மாட்டேன். 353 00:29:22,951 --> 00:29:24,745 எவ்வளவு எடை இருக்கும்? 354 00:29:24,745 --> 00:29:28,206 உனக்கு தேவையான அளவு ஆஃப்கன் போதைப் பொருளை நான் தரேன். 355 00:29:32,669 --> 00:29:34,087 அப்போ சரி. டீல் வச்சுக்கலாம். 356 00:29:34,171 --> 00:29:36,131 அப்படின்னா நீ பயப்பட வேண்டிய அவசியம் இல்ல. 357 00:29:42,804 --> 00:29:43,847 திரு. லின்? 358 00:29:50,395 --> 00:29:51,563 என் பெயர் அப்துல்லா டஹெரி. 359 00:29:53,523 --> 00:29:55,150 உங்கள சந்திக்க ஒருத்தர் காத்திருக்கிறார். 360 00:29:56,693 --> 00:29:59,404 அப்படியா. யார் அது? 361 00:30:00,781 --> 00:30:01,782 பிளீஸ். 362 00:30:18,131 --> 00:30:19,549 திரு. லின்ட்சே ஃபோர்டு? 363 00:30:21,134 --> 00:30:22,803 வெறுமனே "லின்" போதும். 364 00:30:22,803 --> 00:30:25,472 உன்னை சந்திக்கறதுல சந்தோஷம். நிறைய நல்ல விஷயங்கள கேள்விப்பட்டிருக்கேன். 365 00:30:25,472 --> 00:30:29,267 இங்க மும்பையில, அந்நியர்களப் பத்தி நல்ல விஷயங்கள கேட்கறதுக்கு இனிமையா இருக்கு. 366 00:30:30,352 --> 00:30:34,106 நீ என்னைப் பத்தியும் கேட்டிருக்கலாம். என் பெயர் அப்துல் காதர் கான். 367 00:30:37,150 --> 00:30:39,987 எனவே, நீதான் இந்த குடிவாரியத்துல டாக்டரா, இப்போ. 368 00:30:41,571 --> 00:30:44,283 ஆனால், நான்... நான் டாக்டர் எல்லாம் இல்லை. 369 00:30:44,283 --> 00:30:46,743 ஆமாம், அதனால தான் நீ இவ்வளவு நல்ல வேலை செய்யற போலும். 370 00:30:47,494 --> 00:30:50,414 டாக்டர்கள் எல்லாம் குடிசைகளுக்கு முழு மனசோட போகமாட்டாங்க. 371 00:30:50,414 --> 00:30:52,165 மக்களை கெட்டவங்களா இருக்காதீங்கன்னு சொல்லலாம், 372 00:30:52,249 --> 00:30:55,127 ஆனால் அவங்கள நல்லவங்களா இருங்கன்னு வற்புறுத்த முடியாதே, இல்லயா? 373 00:30:56,837 --> 00:30:59,214 நான் அதைப்பத்தி எல்லாம் யோசிச்சதில்லை. 374 00:30:59,923 --> 00:31:01,883 உங்களுக்கு இதைச் செய்ய என்ன நிர்பந்தம் என யோசிக்கிறேன். 375 00:31:03,885 --> 00:31:05,595 நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்? 376 00:31:05,679 --> 00:31:07,097 எனக்கு இன்னும் தெரியலை. 377 00:31:07,973 --> 00:31:09,308 அதுக்காக தான் இங்கே உன்னை அழைக்க வந்தேன், 378 00:31:09,308 --> 00:31:12,602 என்னோடும், நண்பன் அப்துல்லாவோடும் நீ வந்து கொஞ்சம் நேரம் இருக்கலாமேன்னு. 379 00:31:17,858 --> 00:31:20,944 சரி. நான் பாதகமா இதைச் சொல்லலை, ஆனால் சொல்லியாகணும். 380 00:31:22,195 --> 00:31:24,072 உங்களுக்கு பயங்கரமான பேரு இருக்கு. 381 00:31:24,156 --> 00:31:28,035 அதனால தான், நீங்க இப்படி தீடீர்னு வந்து உங்க காருல என்னை ஏத்திக்கிட்டுப் போகவிடுவது 382 00:31:28,035 --> 00:31:31,204 என்கிற நினைப்பே, எனக்குக் கொஞ்சம் பதட்டமா தான் இருக்கு. 383 00:31:32,205 --> 00:31:35,792 நான் உனக்கு வாக்கு தரேன். உனக்கு இன்னிக்கு இரவு ஒரு தீங்கும் நேராது. 384 00:31:37,294 --> 00:31:38,462 எனக்கு வேற வழி இருக்கா என்ன? 385 00:31:38,462 --> 00:31:40,213 எந்த நேரத்திலும் தேர்வு செய்ய வழி இருக்கு. 386 00:31:41,423 --> 00:31:44,968 இறுதியில, நம்ம கையில இருக்கிறது அது ஒண்ணுதான்னு நினைக்கிறேன். 387 00:31:50,307 --> 00:31:51,308 சரி. 388 00:32:31,932 --> 00:32:33,350 கர்ஃப்யூன்னு பேரு. 389 00:32:33,350 --> 00:32:34,768 அதிகாரிங்களுக்குத் தெரியும் 390 00:32:34,768 --> 00:32:40,148 நகரங்கள்ல வசிக்கும் நாகரீகமான மக்கள், கூடி வேட்டையாட இடங்கள் தேவைன்னு தெரியும். 391 00:32:40,232 --> 00:32:45,112 எனவே, லஞ்சம் கொடுத்து அந்த ஒழுக்கத்தை நிலைநிறுத்த, சில நிறுவனங்களுக்கு அனுமதியுண்டு. 392 00:32:45,112 --> 00:32:48,073 அதிகாரப்பூர்வமாக, விதிகள் இருக்கின்றன. ஆனால் அமலாக்கப்படுவதில்லை. 393 00:32:49,700 --> 00:32:52,744 எந்த விதிகளை அமல்படுத்துணும், வேண்டாம்னு யார் தீர்மானம் செய்யறது? 394 00:32:53,745 --> 00:32:58,250 ஆட்சி முறையில் ரொம்ப மோசமானது என்னன்னா, ஊழல் ரொம்ப நல்லா வேலை செய்யறது தான்னு 395 00:32:58,250 --> 00:32:59,960 யாரோ ஒருவர் சொல்லியிருக்கார். 396 00:33:00,711 --> 00:33:01,712 ரமேஷ்! 397 00:33:12,222 --> 00:33:13,598 உங்க அப்பா எப்படி இருக்கார்? 398 00:33:13,682 --> 00:33:16,310 நல்லாயிருக்கார், காதர்பாய். நன்றி. 399 00:33:16,310 --> 00:33:18,729 ஆனால் எனக்கு தான் பிரச்சினை. 400 00:33:18,729 --> 00:33:19,855 என்னன்னு சொல்லு. 401 00:33:19,855 --> 00:33:22,357 பாய், என் வீட்டுச் சொந்தக்காரர் தான். 402 00:33:22,441 --> 00:33:24,568 ஏற்கனவே இப்போ ரெண்டு மடங்கு வாடகை கேட்கிறார். 403 00:33:24,568 --> 00:33:29,948 எங்கள காலி பண்ண வைக்க நினைக்கிறார், என்னை மட்டும் இல்ல, பில்டிங்குல எல்லோர் குடும்பத்தையும். 404 00:33:30,032 --> 00:33:33,535 அவர்கிட்ட குண்டர்கள் இருக்காங்க, அவங்க எங்கள மோசமா போட்டு அடிக்கிறாங்க. 405 00:33:33,619 --> 00:33:35,245 எங்க அப்பாவைக் கூட. 406 00:33:36,288 --> 00:33:38,665 அப்புறம் அவருக்கு உடம்பு சரியில்லாம போச்சா. 407 00:33:38,749 --> 00:33:43,045 இல்லை, சார். அவர் உங்களிடம் உதவி கேட்கக் கூச்சப்படுறார், 408 00:33:43,045 --> 00:33:45,380 அப்புறம் உங்களுக்கு தொந்தரவு தர விரும்பல. 409 00:33:45,464 --> 00:33:47,174 ஆனால் நான்... 410 00:33:47,174 --> 00:33:49,551 நீ ஒரு நல்ல மகன். 411 00:33:49,635 --> 00:33:52,012 அவருடைய கௌரவத்தை குலைக்கற மாதிரி நாங்க எதுவும் செய்ய மாட்டோம். 412 00:33:52,012 --> 00:33:54,681 உங்க அப்பாகிட்ட இதைப் பத்தி எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது 413 00:33:54,765 --> 00:33:56,850 பிரச்சினைத் தீரும் வரை, இன்ஷால்லா. 414 00:33:56,850 --> 00:33:58,810 நன்றி, மிக்க... -சரி, சரி. 415 00:34:01,730 --> 00:34:03,231 உனக்கு எவ்வளவு புரிஞ்சுது? 416 00:34:05,734 --> 00:34:09,696 ரொம்ப இல்ல. அவனுடைய வீட்டைப் பத்தியும் அவன் அப்பாவைப் பத்தியும். 417 00:34:10,447 --> 00:34:12,908 அவங்க வீட்டு சொந்தக்காரர் அவங்கள வெளியே தள்ளப் பார்க்குறார். 418 00:34:12,908 --> 00:34:14,368 தேவைப்பட்டால், வற்புறுத்தி. 419 00:34:15,577 --> 00:34:17,411 அதனால, யார் இவங்கள மிரட்டறாங்களோ, அவங்கள நீங்க மிரட்டப் போறீங்களா? 420 00:34:18,246 --> 00:34:19,246 நீ நல்லதுன்னு நினைக்கிறயா? 421 00:34:20,831 --> 00:34:22,417 என்னோட சம்மதம் உங்களுக்குத் தேவையில்லையே. 422 00:34:23,835 --> 00:34:25,337 நீங்க அப்துல் காதர் கான். 423 00:34:27,297 --> 00:34:30,926 என்னால் ஒண்ண சுலபமா செய்ய முடியுங்கிறதால நான் அதைச் செய்வேன்னு சொல்ல முடியாது. 424 00:34:30,926 --> 00:34:33,552 நீ சொல்லு. நீ என்ன செய்வ? 425 00:34:36,306 --> 00:34:39,976 எனக்கு ரமேஷை பிடிச்சிருந்து, இந்த வீட்டு சொந்தக்காரர் தவறான பாதையில இருந்தா, 426 00:34:40,060 --> 00:34:41,686 நான் என்னால முடிஞ்சதை அவனுக்காக செய்வேன். 427 00:34:41,770 --> 00:34:43,355 அது சட்டத்துக்கு விரோதமா இருந்தாலுமா? 428 00:34:44,273 --> 00:34:47,150 எந்த விதிகளை வலியுறுத்தணும், வேண்டாம்னு யார் தீர்மானிக்கறது? 429 00:34:52,864 --> 00:34:56,952 கடைசியில, எந்த விதிகளா இருந்தாலும், யார் தீர்மானித்தாலும், 430 00:34:57,869 --> 00:35:02,291 நாம எல்லோருமே, இந்த பிரபஞ்சத்துல, அண்டத்துல இருக்கிற ஒவ்வொரு அணுவும், 431 00:35:02,291 --> 00:35:04,167 இறைவனை நோக்கி தான் போகுது. 432 00:35:07,004 --> 00:35:08,297 எனக்கு இறை நம்பிக்கை இல்லை. 433 00:35:09,881 --> 00:35:13,385 அப்போ உனக்கும் எனக்கும் பேசறதுக்கு இன்னும் நிறைய இருக்கு. 434 00:35:14,469 --> 00:35:16,847 வாங்க, போகலாம். நாம இவனை கிளப்புக்குக் கூட்டிட்டுப் போகலாம். 435 00:35:31,737 --> 00:35:35,324 நீ என்னோட இருப்பேன்னு சொன்ன. -இல்ல. இருக்க மாட்டேன்னு சொல்லலை. 436 00:35:36,950 --> 00:35:38,160 உன்னோட டீல். 437 00:35:38,160 --> 00:35:40,912 நான் ரொம்ப தூரம் உள்ள போயிட்டேன், லீசா. எனக்கு வேற வழியில்ல. 438 00:35:41,997 --> 00:35:43,707 திரு. காதர் கானை ஏமாத்த முடியாது. 439 00:35:47,919 --> 00:35:50,380 இரேன். பிளீஸ். 440 00:35:52,591 --> 00:35:53,717 நம்ம ரெண்டு பேருக்காகவும். 441 00:35:54,676 --> 00:35:56,887 இதெல்லாம் உன்னை எப்படி மாத்துதுன்னு தெரியுது. உனக்கும் அது தெரியும். 442 00:35:56,887 --> 00:35:58,388 நீ அதை ஒத்துக்க மாட்டேங்கிற. 443 00:35:59,681 --> 00:36:02,517 என்னோட இருக்க முடிவெடு. 444 00:36:04,811 --> 00:36:06,313 ஏன்னா இது தான் முக்கியம். 445 00:36:09,066 --> 00:36:12,152 எனக்கு உன் மேல அக்கறை இருக்கு. உனக்கே அது தெரியும். 446 00:36:12,736 --> 00:36:14,237 ஆனாலும் நீ அவனை தான் எப்போதும் தேர்வு செய்யற. 447 00:37:11,044 --> 00:37:13,547 மும்பையில் இந்த கிளப்புல தான் மிகச் சிறந்த கஜல் பாடகர்கள் இருக்காங்க. 448 00:37:14,214 --> 00:37:15,507 கஜல்கள்னா என்ன? 449 00:37:15,507 --> 00:37:18,593 காதல் பாடல்கள். இறைவனை நோக்கிப் பாடும் காதல் பாடல்கள். 450 00:37:18,677 --> 00:37:22,389 நீ என்ன நினைச்சாலும் சரி, நான் கடவுளை நம்புறது இல்ல. 451 00:37:22,973 --> 00:37:25,517 நாம அவனை அறிவோம், இல்லன்னா அறியமாட்டோம். 452 00:37:28,061 --> 00:37:32,107 சரி, நான் கடவுளை அறியலை, ஆனால் அவனை புரிஞ்சுக்கறது முடியாதுன்னு நினைக்கிறேன். 453 00:37:32,816 --> 00:37:35,694 கடவுளை புரிஞ்சுக்கறது முடியாதுங்கிறதே, அவன் இருப்பதுக்கு ஆதாரம் தான். 454 00:37:36,862 --> 00:37:39,197 எனவே, அப்படின்னா புரிந்து கொள்ள முடியற வஸ்துக்கள் எல்லாம் இல்லைன்னு அர்த்தமா? 455 00:37:39,281 --> 00:37:41,158 உனக்கு புரிவது எனக்கு சந்தோஷமா இருக்கு. 456 00:37:41,158 --> 00:37:42,993 நிஜமா புரியலை. 457 00:37:42,993 --> 00:37:44,703 நீ இப்போ வம்பை விலைக் கொடுத்து வாங்குற, நண்பா. 458 00:37:44,703 --> 00:37:48,749 நமக்கு தெரிவது மாதிரி எதுவுமே இல்ல. நம் கண்கள் பொய்க்கின்றன. 459 00:37:49,333 --> 00:37:51,251 நிஜம்னு தோணுற எல்லாமே, மாயையின் ஒரு பகுதிதான். 460 00:37:51,335 --> 00:37:52,753 நீ, நான், இந்த அறை. 461 00:37:54,796 --> 00:37:59,968 எனவே, எல்லாமே மாயைன்னா, நாம எப்படி வாழணும்னு நமக்கு எப்படித் தெரியும்? 462 00:38:00,761 --> 00:38:01,845 நாம பொய் சொல்றோம். 463 00:38:02,929 --> 00:38:05,891 பைத்தியக்காரனைவிட, சமநிலையில இருக்குறவன் இன்னும் நல்லாவே பொய் சொல்றான். 464 00:38:06,683 --> 00:38:08,268 உன் கண்களே பொய் சொல்கின்றன. 465 00:38:08,352 --> 00:38:11,939 உனக்குத் தெரியும்னு நீ நினைக்கிறது, அப்படியில்லைன்னு சொல்லுது, ஆனால் அது உண்மை. 466 00:38:12,731 --> 00:38:16,485 ஆனால் நமக்கு பொய் சுலபமா வருது, அதனால நமக்கு அது பிடிக்குது. 467 00:38:17,903 --> 00:38:19,237 அப்படித்தானே நாம சமநிலையில இருக்கமுடியும்? 468 00:38:21,198 --> 00:38:26,036 எனக்குத் திருமணம் ஆகலை, மகன்கள் இல்ல. 469 00:38:26,745 --> 00:38:31,208 ஆனால் நீ என் மகன்னு எனக்குத் தெளிவாத் தெரியுதுன்னு சொன்னா, 470 00:38:31,708 --> 00:38:33,919 அப்துல்லா உன் சகோதரன்னு சொன்னா, நான் உங்க அப்பான்னு சொன்னா, 471 00:38:33,919 --> 00:38:35,420 அதெல்லாம் சாத்தியமே இல்லைன்னு நீ நினைப்ப. 472 00:38:35,504 --> 00:38:38,840 நீ அதை எதிர்ப்ப. எதிர்கிற. எனக்குத் தெரியுது. 473 00:38:39,675 --> 00:38:43,971 நாம எல்லோரும் அந்நியர்கள், நமக்குள்ள எந்த வித தொடர்பும் இல்ல 474 00:38:44,471 --> 00:38:46,556 என்கிற பொய்யை தான் நீ நம்ப விரும்புவ. 475 00:38:48,684 --> 00:38:49,893 எனக்கு ஒரு அப்பா இருக்கார். 476 00:38:51,311 --> 00:38:53,814 அதோட எனக்கு உங்கள தெரியாது. உங்களுக்கு என்னைத் தெரியாது. 477 00:38:54,606 --> 00:38:56,692 எனக்குத் தெரியும்னு நினைக்கிறேன். 478 00:39:00,612 --> 00:39:03,365 எதைப் பத்தி நீயே உங்கிட்ட பொய் சொல்லுவ, திரு. லின்? 479 00:39:05,951 --> 00:39:08,370 நான் பொய் சொல்லிக்கறது இல்லை. அதெல்லாம் முடிஞ்சு போச்சு. 480 00:39:10,038 --> 00:39:14,251 நான் யாருன்னும், என்ன செய்திருக்கேன்னும், என்ன கடன்பட்டிருக்கேன்னும், எனக்குத் தெரியும். 481 00:39:20,382 --> 00:39:23,010 எனக்கு லின்னைப் படிக்க தீர்மானம் செய்துட்டேன். 482 00:42:55,055 --> 00:42:56,640 இசை பிடிச்சிருந்ததா? 483 00:42:56,640 --> 00:43:00,310 அற்புதமா இருந்தது. இது போல நான் கேட்டதே இல்லை. 484 00:43:02,229 --> 00:43:03,772 நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா? 485 00:43:05,190 --> 00:43:07,818 இதெல்லாம், இந்த இரவு... என்னை ஏன் இங்கே கொண்டு வந்தீங்க? 486 00:43:08,777 --> 00:43:10,153 எங்கிட்டேர்ந்து என்ன எதிர்பார்க்கறீங்க? 487 00:43:13,782 --> 00:43:15,117 நீ இங்க என்ன செய்யற? 488 00:43:17,077 --> 00:43:19,454 கேட்டுட்டு இருக்கேன், டீ குடிக்கிறேன், 489 00:43:20,163 --> 00:43:22,749 நான் பார்க்குற இந்த உலகம், ஒரு தோற்றம்தான்னு கத்துக்கிட்டு இருக்கேன். 490 00:43:22,833 --> 00:43:24,167 நான் மயக்கத்துல இருக்கேன். 491 00:43:24,251 --> 00:43:26,086 நீ மும்பையை விட்டு போயிருக்கணும். 492 00:43:28,422 --> 00:43:30,132 உங்க நண்பர் யார், திரு லின்? 493 00:43:30,132 --> 00:43:32,259 இது கார்லா சாரனென். 494 00:43:34,052 --> 00:43:34,928 நாம நண்பர்களா? 495 00:43:35,887 --> 00:43:37,055 எனக்குத் தெரியாது. 496 00:43:37,681 --> 00:43:42,644 மும்பைக்கு வந்ததிலிருந்து, கார்லா இதுவரை என் வாழ்க்கையில மையமா இருந்திருக்காங்க. 497 00:43:42,728 --> 00:43:43,812 உண்மையோ பொய்யோ. 498 00:43:43,812 --> 00:43:45,147 அவங்க நிஜம்னு நினைக்கிறேன். 499 00:43:46,565 --> 00:43:47,733 உண்மையில, 500 00:43:49,443 --> 00:43:51,445 நான் சொல்வது சரிதான்னு கார்லா நிரூபிக்கிறாங்க. 501 00:43:51,445 --> 00:43:53,697 நான் அவங்கள கற்பனை செய்திருந்தா, அவங்க எங்கிட்ட இன்னும் இனிமையா இருந்திருப்பாங்க. 502 00:43:54,823 --> 00:43:58,285 கார்லா, உங்களுக்கு அப்துல்லா டஹெரியை அறிமுகப் படுத்தறேன், 503 00:43:58,285 --> 00:44:00,287 இன்னொரு தாய் வழி சகோதரனா இருக்கலாம், 504 00:44:00,287 --> 00:44:04,791 சமீபத்துல எனக்கு அறிமுகமான திரு. அப்துல் காதர் கானால நாங்க மீண்டும் இணைஞ்சோம். 505 00:44:04,875 --> 00:44:06,918 நீங்க இவரைப் பத்தி கேட்டிருப்பீங்க. -கண்டிப்பா. 506 00:44:07,002 --> 00:44:09,212 உங்கள சந்திக்கிறதுல மகிழ்ச்சி, மிஸ். சாரனென். 507 00:44:09,296 --> 00:44:12,257 எனக்கும் தான். எப்படி நீங்க எல்லோரும் அறிமுகமானீங்க? 508 00:44:12,341 --> 00:44:15,010 விதி எங்கள சேர்த்து வச்சிருக்கு. 509 00:44:16,303 --> 00:44:17,638 வேடிக்கையா தான் இருக்கு. 510 00:44:18,388 --> 00:44:21,558 ஆம், சரிதான், "சோகம் வினோதமானவர்களோடு நட்பு கொள்ளவைக்கும்." 511 00:44:21,642 --> 00:44:22,976 யார் இதுல பயங்கரமானவர்? 512 00:44:23,769 --> 00:44:24,936 என்ன சொல்றீங்க? 513 00:44:25,020 --> 00:44:27,522 இந்த வரியைச் சொல்வது, ஒரு பயங்கரமானவரோடு படுக்கும் ஒரு ஆள். 514 00:44:27,606 --> 00:44:29,524 மிஸ். சாரனெனுக்கு ஷேக்ஸ்பியர் அத்துப்படி போலும். 515 00:44:30,525 --> 00:44:31,610 ஒரு முறை ஒருத்தர் எங்கிட்ட சொன்னார் 516 00:44:31,610 --> 00:44:34,279 ஷேக்ஸ்பியரின் படைப்புகள்ல, வாழ்க்கையின் எல்லா கேள்விகளும், பெரும்பாலான 517 00:44:34,363 --> 00:44:35,822 விடைகளும் கிடைச்சுடும்ன்னு. 518 00:44:37,157 --> 00:44:38,784 நீங்களும் எங்களோடு சேர்ந்துக்கறீங்களா? 519 00:44:38,784 --> 00:44:41,870 முடியாது. என்னோடு விருந்தினர்கள் வந்திருக்காங்க. 520 00:44:41,954 --> 00:44:45,040 நாங்க பிசினஸ் விஷயங்களை தீர்மானிக்கணும். நான் அவங்ககிட்டப் போகணும். 521 00:44:45,040 --> 00:44:46,416 உங்க பிசினஸுக்கு எங்க நல்வவாழ்த்துகள். 522 00:44:47,376 --> 00:44:48,377 இன்ஷால்லா. 523 00:44:48,961 --> 00:44:50,963 சீமான்களே, எஞ்சியிருக்கிற மாலைப் பொழுதை நல்லா என்ஜாய் பண்ணுங்க. 524 00:46:04,661 --> 00:46:05,996 ரொம்ப சந்தோஷம், லின். 525 00:46:09,207 --> 00:46:10,626 இது ஒரு வகையான சோதனையா? 526 00:46:11,793 --> 00:46:13,629 நீ சாகர் வாடாவுல எதுக்காக உதவி செய்யற? 527 00:46:16,006 --> 00:46:17,007 அவங்களுக்குத் தேவையா இருந்தது. 528 00:46:17,591 --> 00:46:18,925 அப்படின்னா தன்னலமில்லாத செயலா அது? 529 00:46:19,509 --> 00:46:22,763 இல்ல, தன்னலம் இல்லாத எதுவும் எங்கிட்ட இல்ல. அதை தைரியமா நீங்க நம்பலாம். 530 00:46:23,513 --> 00:46:25,766 நல்ல மனுஷங்கன்னோ, கெட்ட மனுஷங்கன்னோ எதுவும் கிடையாது. 531 00:46:25,766 --> 00:46:30,395 அவங்க செய்றதும் செய்ய மறுப்பதும் தான் நல்லவங்களா கெட்டவங்களான்றத தீர்மானிக்கும். 532 00:46:32,314 --> 00:46:34,274 இந்த இடம் எனக்கு ரொம்ப முக்கியமானது. 533 00:46:38,987 --> 00:46:41,156 இந்த இரவுக்கு நன்றி, திரு. கான். 534 00:46:41,156 --> 00:46:44,451 தயவுசெய்து, என்னை காதர்பாய்ன்னு கூப்பிடு. 535 00:46:45,827 --> 00:46:46,828 காதர்பாய். 536 00:46:48,956 --> 00:46:50,040 பரவாயில்லை. 537 00:46:57,089 --> 00:47:00,759 ஒருவேளை விதி என்னை இவங்களோட சேர்த்திருக்கலாம், அப்பா, சகோதரன் என்கிறவங்களோட. 538 00:47:01,593 --> 00:47:05,639 ஆனால் அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாமே என்னுடைய விருப்பத்தினால தான் நடந்தது, 539 00:47:05,639 --> 00:47:07,265 காதர் சொன்னது போலவே. 540 00:48:30,849 --> 00:48:33,769 நீ அவங்கள எடுத்துட்டுப் போயிட்ட. நீ எங்க அம்மாவை எடுத்துட்டுப் போயிட்ட. 541 00:48:35,062 --> 00:48:36,146 எனக்கு அவங்களத் தவிர யாரும் கிடையாது. 542 00:48:38,857 --> 00:48:39,900 ஆமாம். 543 00:48:41,985 --> 00:48:43,820 நான் அதை வேணும்னு செய்யலை, ஆனால் செய்தேன். 544 00:48:48,909 --> 00:48:53,163 எனக்கும் சலிச்சு போச்சு ரவி, எப்போதும் எல்லாத்தையும் தப்பா செய்யறேன். 545 00:48:55,874 --> 00:48:57,334 நீ அதை உபயோகிக்கப் போறயா? 546 00:48:59,461 --> 00:49:00,712 ரவி! 547 00:49:02,089 --> 00:49:05,133 நீ என்ன செய்யற, ரவி? 548 00:49:08,303 --> 00:49:09,846 ரவி, என் மகனே... 549 00:49:11,473 --> 00:49:13,058 உன் தாய் போயிட்டா. 550 00:49:13,767 --> 00:49:18,146 நீ இதைச் செய்தா, உன்னயும் காலத்துக்கும் தொலைச்சிடுவ. 551 00:49:18,730 --> 00:49:20,148 புரியுதா? 552 00:49:23,610 --> 00:49:25,070 இந்த குழந்தை, நீங்கள் செய்த 553 00:49:25,070 --> 00:49:27,281 கொலையை தன் மனதிலேயே பாரமாக கொண்டிருக்க வேண்டியதில்லை, திரு.லின். 554 00:49:27,864 --> 00:49:30,033 அது கூட தெரியாத ஒரு சுயநல முட்டாளா நீங்க இருக்கீங்களே. 555 00:49:35,580 --> 00:49:39,418 என் குடிசைக்குப் போ. இனிமே என் குடும்பத்தோட தான் நீ இருப்ப. 556 00:49:39,418 --> 00:49:41,169 வேண்டாம். காசிம் மாமா, பிளீஸ். நான் அவரை காயப்படுத்த மாட்டேன், ஆனால்... 557 00:49:41,253 --> 00:49:45,340 ரவி. நான் சொல்றதச் செய். 558 00:49:45,424 --> 00:49:46,675 போ. 559 00:49:49,428 --> 00:49:50,971 அவங்கிட்ட நீங்க என்ன சொன்னீங்க? 560 00:49:51,555 --> 00:49:53,557 இனிமே அவன் என் குடும்பத்தோட இருப்பான்னு சொன்னேன். 561 00:49:56,768 --> 00:49:59,271 லக்ஷ்மீயோட குடிசையில நீங்க இருக்கலாம், திரு. லின். 562 00:50:01,523 --> 00:50:05,235 இங்க இருக்கிறவங்களுக்கு உங்க உதவி தேவையா இருக்கிறபோது, அங்கே வந்து உங்கள பார்ப்பாங்க. 563 00:50:08,113 --> 00:50:09,906 இதை நான் உங்களுக்குப் பரிசா கொடுக்கலை. 564 00:50:11,867 --> 00:50:12,868 சரி. 565 00:50:40,562 --> 00:50:42,481 Shantaram என்ற நாவலை அடிப்படையாக் கொண்டது எழுதியவர் கிரெகோரி டேவிட் ராபர்ட்ஸ் 566 00:52:02,561 --> 00:52:04,563 தமிழாக்கம் அகிலா குமார்